திங்கள், 21 ஜூன், 2010
விருந்து!
வேலை கிடைத்து தில்லி வந்து கரோல் பாக் பகுதியில் மூன்று நண்பர்களோடு இருந்த போது தினமும் சாப்பாடு வெளியில் தான். சமையல் செய்யத் தெரிந்திருந்தும் மற்ற நண்பர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் ["டேய் டேய்... சமையல் செய்ய உனக்கு சோம்பேறித்தனம்னு ஒத்துக்கோடா!” அப்படின்னு பசங்க கத்தறது கேட்குது. ஹிஹி…] கரோல் பாக்கில் உள்ள ஒவ்வொரு உணவகங்களுக்கும் ஓவ்வொரு நாள் விசிட்.
தாபா, ஹோட்டல்களில் தான் எங்க மூணு வேளை சாப்பாடும்னு இருக்கும் போது, கல்யாணம் ஆன நண்பர்களின் வீடுகளில் எதாவது விசேஷம்னு சாப்பிடக் கூப்பிட்டாங்கன்னு வையுங்க முதல் நாள் ராத்திரியிலிருந்தே பட்டினி கிடந்து அடுத்த நாள் போய் ஒரு கட்டு கட்டிடுவோம்ல. அதுக்கும் வேட்டு வைக்கிற மாதிரி சில சமயங்கள்ல ஒரு விசேஷமும் இருக்காது.
ஒரு சமயம் யார் சாப்பாடு போடப்போறாங்கன்னு காய்ஞ்சு இருந்தப்ப, சமீபத்தில் கல்யாணம் ஆன நண்பர் ஒருத்தர் அவரோட மனைவியோட எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அவங்களோட பேசிட்டு இருந்தப்ப, ”சாப்பாடு எல்லாம் எப்படி? சமைச்சு சாப்பிடுவீங்களா?ன்னு அவங்க கேட்க, நண்பரோ, “அட சமையலா, இவங்க எங்க சமைக்கிறாங்க, அடுத்தவங்க சமைச்சா, நல்லா சாப்பிடுவாங்க!” ன்னு நம்மளைப் பத்தி புட்டு வைச்சுட்டாரு.
”எப்பவும் ஹோட்டல் சாப்பாடுதானா? நாக்கு செத்துப் போயிருக்குமே, அய்யோ பாவம்!" னுட்டு அவங்களும் ”இந்த ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுக்கு வாங்க, நான் சமைச்சு போடறேன்”ன்னு கூப்பிட, நாங்களெல்லாம் சனிக்கிழமையிலிருந்தே நாக்க தொங்கப் போட்டுட்டு காத்திருந்தோம். ஞாயிற்றுக்கிழமை காலை பத்தரை மணிக்கே, பக்கத்துத் தெருவிலிருந்த நண்பரின் வீட்டுக்கு சென்று விட்டோம்.
”வாங்க வாங்க”ன்னு வாய் நிறைய எங்களுக்கு வரவேற்பு. தேனீர், பிஸ்கெட் எல்லாம் வந்தது. ”பிஸ்கெட்ட தின்னு வயத்த ரொப்பாதடா”ன்னு பக்கத்துல இருந்து ஒரு வாய்ஸ். சரின்னு அடக்கி வாசிச்சோம். நண்பரோட மனைவி ”தோ இருங்க! குக்கர் வைச்சுட்டேன், அரை மணி நேரத்துல சமைச்சுடுவேன்”னு சொல்லிட்டு, எங்களோட பேசினபடியே காய்கறி நறுக்கிட்டு இருந்தார். பத்து நிமிஷம் ஆச்சு, குக்கர்ல இருந்து ஒண்ணும் சத்தத்தையே காணோம். சரின்னு உள்ள போய்ட்டு வந்த நண்பரின் மனைவி, “தோ இப்ப சாதம் ஆகிடும்!”ன்னு சொல்லிட்டு திரும்ப காய் நறுக்க ஆரம்பிச்சார்.
அடுத்த பத்து நிமிஷம் கழிச்சு, உள்ள போனாங்க, நாங்க உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். திடீர்னு “டமால்”னு ஒரு சத்தம். கூடவே ஒரு அலறல் சத்தமும்…..
என்ன ஆச்சோன்னு பதறியபடி நாங்களும் சமையலறைக்கு ஓடினா, சமையலறைக் கதவைப் பிடித்தபடி நின்னுட்டு அழுதுட்டு இருந்தாங்க.. சமையலறை முழுவதும் சாதமும் பருப்பும் இறைந்து கிடக்கிறது. கீழே மட்டும் இல்லாம, அந்த அறையோட சீலிங் முழுதும் சாதம் ஒரு டிசைன் போட்ட மாதிரி ஒட்டிட்டு இருக்கு. குக்கர் வெடிச்சு விழுந்ததுல காஸ் அடுப்பு நசுங்கிக் கிடக்கு. பக்கத்துல இவங்க அழுதுட்டு இருக்காங்க. நல்ல வேளை அவங்களுக்கு ஒண்ணும் அடிபடல.
”சரி பரவாயில்லை! இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்கன்”னு சொல்லிட்டு, எல்லோரும் சேர்ந்து சமையலறையை சுத்தம் செய்தோம்.
”ஓ, அப்பறம் என்ன சாப்பிட்டீங்க?”ன்னு கேட்கறீங்களா?" ஆபத் பாந்தவானா எங்களுக்கு இருக்கவே இருக்கு “வைஷ்ணவ் தாபா!” எல்லோரும் சேர்ந்து அங்க போய், எப்பவும் போல, “ரொட்டி-சப்ஜி” தான்!
Labels:
அனுபவம்
hahahaha
பதிலளிநீக்குமனதை படுத்தும் சோக முடிவுக் காமெடிக் கதை!
பதிலளிநீக்கு:) நல்ல கதை..
பதிலளிநீக்குஇப்படி ஒரு முறை பூரி செய்த பாத்திரத்தை எரிச்சிட்டேன்.. வீட்டுக்கு வந்த நண்பர் தான் அதை இறக்கி , தீயை அணைச்சார்.. ;)
New template looks good Venkat.
பதிலளிநீக்குகைக்கெட்டினது வாய்க்கு எட்டலை....
பதிலளிநீக்குபுது டெம்ப்ளேட் குளுமையா இருக்கு.
நானும் இப்படி ஒரு நிகழ்வை பத்தி கொசுவத்தி சுத்தியிருக்கேன். குக்கர் வெடிக்கலை. சோறு பத்தாம..... குக்கர் வெச்சு வெச்சு இறக்கினேன். :))
பதிலளிநீக்குநல்ல காமெடி..
பதிலளிநீக்குவெங்கட் அண்ணா,
பதிலளிநீக்குஎனக்கு இதைப்படித்ததும், "உடம்ப்பில் என்னதான் எண்ணையை தடவிக்கொண்டு பிரண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்," என்ற முது மொழி ஞாபகத்திற்கு வந்தது. எனக்கு என்னவோ, நண்பனை,கஷ்ட காலத்தில், அம்போ என்று விட்டு விட்டு வராமல், நீங்கள் ஒன்று சமைத்து போட்டிருக்கலாம் அல்லது வைஷ்ணவ தபாவிலிருந்து அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்து, தமிழரின் விருந்தோம்பும் பண்பை நிருபித்திருக்கலாம் என்று தோன்றுகிறது!!
மந்தவெளி நடராஜன்.
இனிமேல் சாப்பிடப் போகுமுன் அவங்க வீட்டில குக்கர் இருக்கானு கேக்க மறக்காதீங்க
பதிலளிநீக்கு• வாங்க LK! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. : )
பதிலளிநீக்கு• வாங்க KBJ சார்! சோகமான முடிவுதான். : )
• வாங்க முத்துலெட்சுமி! அங்கேயும் அதை கதை தானா! : )
• வாங்க மோகன்குமார்! வரவுக்கும் தங்களது ஆதரவுக்கும் நன்றி.
• வாங்க அமைதிச்சாரல்! கைக்குக் கூட எட்டல! அதுதான் சோகம் : ( ஆதரவுக்கு நன்றி. : )
• வாங்க புதுகைத்தென்றல்! வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி! : )
• வாங்க ரிஷபன் சார்! நல்ல காமெடிதான் போங்க! : )
• வாங்க VKN சார்! ’எல்லோரும் சேர்ந்து அங்க போய், எப்பவும் போல, “ரொட்டி-சப்ஜி” தான்!’ – அவங்களையும் கூட்டிட்டு போய், எங்க செலவுல வாங்கி கொடுத்தோம்! : )
• வாங்க பனித்துளி சங்கர்! நல்ல யோசனை! அமல்படுத்திட வேண்டியதுதான்! : )
• தமிலிஷ் தளத்தில் வாக்கு அளித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி! : )
//சரி பரவாயில்லை! இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்கன்”னு சொல்லிட்டு, எல்லோரும் சேர்ந்து சமையலறையை சுத்தம் செய்தோம்.//
பதிலளிநீக்குஇதுக்கு அப்புறம் நீங்க கோதல எறங்கி இருபீங்கனு நெனச்சேன் வெங்கட்..
என்ன கொடுமை சார்....
பதிலளிநீக்குவாங்க மோகன் [World of Photography], வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. :)
பதிலளிநீக்குவாங்க சௌந்தர், கொடுமைதான் :(
இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி? நாங்கெல்லாம் தண்ணி இல்லாம அரிசி வெக்கற பரம்பரை பாஸ்... ஹி ஹி ஹி... பாவம் அந்த பொண்ணு... எவ்ளோ டென்ஷன் ஆகி இருப்பாங்கன்னு புரியுது... எனக்கு இப்படி ஒரு கொடுமை அனுபவம் உண்டு ... ஹி ஹி ஹி
பதிலளிநீக்குவாங்க அப்பாவி [!], வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு”எனக்கு இப்படி ஒரு கொடுமை அனுபவம் உண்டு ... ஹி ஹி ஹி”
எழுதுங்க, படிச்சுட்டா போச்சு!
ஹாஹா, நம்ம வீட்டிலே பறந்தே போயிடுச்சுல்ல! :) நல்ல அனுபவம் தான். பாவம் அந்தப் பெண்! ஆனால் வெடிக்கிற குக்கர் எல்லாமும் ப்ரெஸ்டிஜாகத் தான் இருக்கும். தயாரிப்பில் குறை! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஅச்சச்சோ.....
பதிலளிநீக்குநல்ல வேளை தப்பித்தார்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.