ஒரு மாதம்
தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பழைய வளாகத்தில் நடந்த பயிற்சியின் போது
தினமும் காலையும் மாலையும் தில்லி நகரப்
பேருந்தில் பயணம் செய்வது வாடிக்கையாகிப் போனது. ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரத்திற்கும்
அதிகமாக பயணம் செய்யும்போது நிறைய மனிதர்களைச் சந்திக்க நேர்வது நிச்சயம். இந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல மனிதர்களில்
இரண்டு மனிதர்கள் பற்றியே இப்பகிர்வில் சொல்லப் போகிறேன்.
முதலாம்
நபர்: ஒரு மாலை ராமகிருஷ்ணபுரம்
செக்டர் -1-ல் இருந்து தடம் எண்-610 பிடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு மனிதர் பேருந்தில் ஏறினார். அரையில் ஒரு தடித்த தேங்காய் பூ துண்டு. மேலுக்கு
ஒரு சட்டை, அதற்கு மேல் குளிர் காலமானதால் ஒரு பழைய கோட். கை, கழுத்து என எல்லா இடங்களிலும் வித வித அலங்காரமாய் செயற்கை நகைகள்,
மாலைகள், காலில் தண்டை, கையிலே ஒரு நீண்ட குச்சி, ஜடாமுடி, தாடி என்று இருந்தார். உற்று நோக்கியபோது கவனித்த ஒன்று - ஒரு பக்கக்
காதில் தோடு போல ஒரு சிறிய பூட்டு!
அவர் மட்டும் தனியாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து கூர்ந்து [எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத
ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது தப்போ?] கவனித்தபோது நடந்தது இது தான்.
தாடியை
தடவியபடி அவர் பேசியது “ம்ம்… சொல்லுங்க, நல்லா கேக்குது…
ஓவர் [கையில் வாக்கி டாக்கி இல்லை]. பூமியில் ரொம்ப அநியாயம் தான் நடக்குது ஓவர். மழை, வெயில், குளிர் என மாறி மாறி ரொம்ப கஷ்டப்படறாங்க மக்கள். நீங்களும் கைலாசத்தில் இருந்து கொண்டு ஒன்றுமே
கவனிக்க மாட்டேங்கறீங்க! ஓவர். என்னது சீக்கிரம் வரீங்களா? வாங்க – அது தான் நல்லது. நீங்க வருகிற வரைக்கும் நான் உங்க சார்பா எல்லாம் பார்த்துக்கிறேன்
இங்கே… ஓவர். [இடையில் பக்கத்தில்
அதிர்ந்துபோய் அமைதியாய் அமர்ந்து இருக்கும் ஒரு பெண்ணிடம், “என்ன? ஒண்ணும்
கவலைப்படாதீங்க! எல்லாம் நான் பார்த்துக்கிறேன்! என்று வீர வசனம் வேறு!] திரும்பவும் இல்லாத வாக்கி-டாக்கியில் “ம். என்ன
சொல்றீங்க, ஒழுங்கா கேட்கல… சிக்னல் சரியா இல்லை. ம். இப்ப கேட்குது. எப்ப வருவேன்னு சொல்லுங்க அடுத்த தடவை. எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு, என் இருக்கை யாருக்கோ வேணுமாம். நான்
இறங்கறேன்” என்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மறைந்து போனார். ஆனால் அவர் ஏற்படுத்திய அதிர்வு மட்டும் இன்னும்
மறையாமல் என்னுள்.
இரண்டாம்
மனிதரும் அவரது தன்னம்பிக்கையும்: பேருந்தின் ஓட்டுனருக்கு
பின்பக்க இருக்கையில் நான். தில்லிப் பேருந்துகளில்
எப்போதும் நடத்துனர் பின் பக்கம் தான் இருப்பார். ஒரு நிறுத்தத்தில் பேருந்து
நின்று கிளம்பியபின் நடத்துனர் பயணச்சீட்டு தரும் இடத்திலிருந்து “திருவிதாங்கூர்
மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க!” என்று தமிழில் ஒரு குரல் – அதுவும் தலைநகர்
தில்லியில். தமிழ்க் குரல் கேட்டவுடன் திரும்பினேன் – அங்கே, சபரிமலை
செல்லும் ஒரு வயதானவர் [60 வயதுக்கு மேல் இருக்கலாம்], கழுத்தில் மாலைகள்,
மழிக்கப்படாத தாடி, தலையில் இருமுடி, பாதணிகள் இல்லாத கால்கள் என மலைக்குப் போகத்
தயாராக இருப்பது போல இருந்தார். அவர் என்ன கேட்கிறார் எனப் புரியாத நடத்துனர்
‘க்யா, கஹா[ன்] ஜானா ஹே?” என்று வினவ, திரும்பவும் இவர் தமிழில் “திருவிதாங்கூர்
மாளிகைக்குப் போகணும், கேரளா ஹவுஸ்-ல இடம் இல்லை, அதனால, திருவிதாங்கூர்
மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க, எவ்வளவு?” என்று சொன்னார்.
சரி அவருக்கு
உதவி செய்யலாம் என்று இருப்பிடத்தினை விட்டு
எழுந்தேன் – அதற்குள் பின்னால் இருந்து இன்னுமொரு தமிழ் குரல் – அதுவும் ஒரு வட
இந்தியரிடமிருந்து. அவரிடம் பேசி
நடத்துனருக்கு விளக்கி, அந்தப் பெரியவருக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து
விட்டார்.
அவரைப்
பார்த்தால் இந்த ஊரிலேயே இருப்பவராகவும்
தெரியவில்லை. கேரளா செல்லும் முன் தில்லியில்
வந்து என்ன செய்கிறார் என்பதும் புரியாத புதிர்தான். பயணம் முழுவதும் அந்தப் பெரியவரின் தன்னம்பிக்கை பற்றியே யோசித்து
வந்தேன். சுத்தமாக ஹிந்தி மொழி
தெரியாமல் எப்படி இவர் இந்த ஊரில் பேருந்துகளிலும், ஆட்டோவிலும் பயணம் செய்கிறார்
என்று. என்னே ஒரு தன்னம்பிக்கை
இவரிடம் என்று யோசித்தபடியே வர, நான் இறங்க வேண்டிய நிறுத்தம் [அவரும் இறங்க
வேண்டிய அதே நிறுத்தம்] வரவும் இறங்கிக்கொண்டு அந்த இடத்திலிருந்து அவர் செல்லவேண்டிய இடத்திற்கு நடந்து செல்ல [பத்து நிமிடங்கள்
நடைப்பயணம்] வழி சொல்லி விட்டு நான் என் இலக்கை நோக்கி நடந்தேன்.
ஒவ்வொரு
பயணத்திலும் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறோம். எத்தனை எத்தனை அனுபவங்கள். ஒவ்வொன்றாய் ரசித்தால் நன்றாகத் தான் இருக்கிறது இல்லையா… பயணங்கள் தொடரட்டும்…
மீண்டும்
சந்திப்போம்….
வெங்கட்.
புது தில்லி.
கைலாசத்திற்கே கனெக்ஷன் வைத்திருக்கிறார். கொடுத்துவைத்தவர்தான். என்ன விநோதமான பர்சனாலிடி:)
பதிலளிநீக்குஇரண்டாமவர் நம்பிக்கையின் முழு உருவம். எந்த ஊரிலிருந்து வருகிறாரோ அந்த ஊருக்கான குணாதிசயம். நல்ல பகிர்வு வெங்கட்,.
அதிர்ச்சி மேல அதிர்ச்சியா கொடுக்கிறாங்களே..:))
பதிலளிநீக்குYes. We have`to`keep our eyes and`ears open most of`the time. Its a must for bloggers you see:-)))
பதிலளிநீக்குமுதலாம் அனுபவம் அந்த மன நிலை பிறழ்ந்த மனிதரை நினைக்கையில் பாவமாக இருந்தது. அரசியல் அல்லது சமூக சேவையில் ஈடுபட்டவராக இருந்திருக்க வேண்டும்!
பதிலளிநீக்குஇரண்டாவது அனுபவம் இங்கும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அரேபியரிடம் போய்த் தமிழில் பேசுவது இங்கும் நடக்கிறது!! மொழி தெரியவில்லையே, புது இடமாக இருக்கிறதே என்றெல்லாம் சில பேர் தயங்குவதோ, அசருவதோ கிடையாது!!
சாலை மனிதர்களில் பலவிதம்.
பதிலளிநீக்குஒவ்வொன்றாய் ரசித்தால் நன்றாகத் தான் இருக்கிறது!
பதிலளிநீக்குநாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஆசான் அவரிடம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு செய்தி இருக்கும் என்பது எத்தனை உண்மை, அருமையான பகிர்வு அன்பரே.
பதிலளிநீக்குBoth were interesting.
பதிலளிநீக்கு//எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது //
Same blood :))
[எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது தப்போ?]
பதிலளிநீக்குபதிவர் என்றொரு இனம்
தனியே அவர்க்கொரு குண்மோ..!!!!
பயணங்கள் சில நல்ல மனிதர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது உண்மைதான் நானும் அனுபவபட்டு இருக்கேன்....!
பதிலளிநீக்குமனிதர்கள் பலவிதம்.. ஒவ்வொருவரும் ஒரு விதம்..
பதிலளிநீக்குநீங்கள் ஒரு நல்ல சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குதில்லி வந்து தெரியாத ஹிந்தியை விட்டு தெரிந்த தமிழில் பேசியவரின் தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும். நானெல்லாம் தமிழ்நாட்டுக்கு போனால் தெரிந்த தமிழை விட்டு விட்டு தெரியாத ஆங்கிலத்தில்தான் பேசுவேன். அப்பத்தான் தமிழன்னு மதிக்கிறான்யா!
(//தில்லிப் பேருந்துகளில் எப்போதும் நடத்துனர் பின் பக்கம் தான் இருப்பார்.//
ஓட்டுனர் பின்பக்கம் இருந்தால்தான் சிக்கல்)
சிவனுடன் எஸ்.டி.டி.யில் பேசிய மனிதரும், தன்னம்பிக்கை மனிதரும் ரொம்பவே வியக்க வைத்தார்கள். அருமை.
பதிலளிநீக்குபதிவு எழுத கண்ணையும், காதையும் திறந்து வைத்து இருந்தால் போதும் வெங்கட்.
பதிலளிநீக்குபலவித மனிதர்களின் குணா அதியங்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
கடவுளிடம் பேசும் மனிதர், எங்கும் தமிழ் என்று தன்னம்பிக்கையுடன் இருக்கும் மனிதர் என்று நல்ல அனுபவம்.
[எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது தப்போ
பதிலளிநீக்குஇது எப்படி தவறாக இருக்கமுடியும். நமக்கு கிடைக்கும் அனுபவத்தை எல்லாருடனும் பகிர்ந்து கொள் வதால் மத்தவங்களுக்கும் நல்ல ஒரு படிப்பு அனுபவம் கிடைக்குதே,
பயண அனுபவங்கள் + தாங்கள் சந்தித்த விசித்திர நபர்கள் பற்றி அழகாகவே சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஎத்தனை மனிதர்கள்! எத்தனை குணாதிசியங்கள்! .நல்ல பதிவு
பதிலளிநீக்குGood experience..
பதிலளிநீக்குNice sharing
மனிதர்கள் எப்போழுதுமே சுவாரஸ்யமானவர்கள்தான்...
பதிலளிநீக்குநட்புடன்
கவிதை காதலன்
super.....
பதிலளிநீக்குஅன்பு நண்பருக்கு
பதிலளிநீக்குதங்களின் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' பகுதியில் பஸ்சில் தாங்கள் சந்தித்த இரண்டு வெவ்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டீர்கள். மிக அருமை. இதனை படிக்கும் போது 1983ம் ஆண்டு டெல்லி வந்த புதிதில் பஸ்சில் சென்ற அனுபவம் ஞாபகம் வருகிறது. கண்டக்டர் என்னிடம் கேட்டார் கியா தியா? (நீ எவ்வளவு பணம் கொடுத்தாய்?)எனக்கு ஹிந்தியில் பதில் சொல்ல தெரியாததால் சிறிது நேரம் யோசித்து ஒன் ருபீ என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். அதற்கு கண்டக்டர் என்ன பதில் சொன்னார் தெரியுமா .................
அந்த பதிலை கேட்டால் ஒவ்வொரு தமிழனும் புளகாங்கிதம் அடைவான். யோசிக்க முடிந்ததா?????
ரொம்ப சிம்பிள் "சாலா பாரத் தேஷ்மே அங்கிராஜி கும்ராஹா ஹை(ம்) ( இந்தியாவில் ஆங்கிலேயர்கள் உலாவுகிறார்கள் ).
தமிழனுக்கு எவ்வளவு பெருமை / சந்தோஷம்.
வாழ்க தமிழ் !!!!!
இதைப்போல இன்னும் நிறைய உள்ளது உங்களிடம் சொல்வதற்கு.
விஜயராகவன்/ டெல்லி
கைலாசத்துக்கு கால் போட்டு பேசிய நபர் கலக்குகிறார்:))!
பதிலளிநீக்குதன்னம்பிக்கை கொண்ட பெரியவர் பாராட்டுக்குரியவர்.
நல்ல பகிர்வு.
@ வல்லிசிம்ஹன்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ முத்துலெட்சுமி: :)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.
@ துளசி கோபால்: அட ஆமாம் டீச்சர்.... எப்பப் பார்த்தாலும், எங்கப் பார்த்தாலும் பிளாக் மேட்டரா தெரியுதே!!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. பாவம் முதல் மனிதர்....
பதிலளிநீக்கு@ விச்சு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்கு@ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி......
பதிலளிநீக்கு@ A.R. ராஜகோபாலன்: //நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஆசான் அவரிடம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு செய்தி இருக்கும் // ஆமாம் நண்பரே.... ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதாவது நல்ல விஷயம் கற்றுக்கொள்ள இருக்கும்.....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
@ மோகன்குமார்: சேம் பிளட்.... :))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்....
@ இராஜராஜேஸ்வரி: //பதிவர் என்றொரு இனம்
பதிலளிநீக்குதனியே அவர்க்கொரு குணமோ..!!!!// ம்ம்ம்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரொம்ப நன்றி.
@ MANO நாஞ்சில் மனோ: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.......
பதிலளிநீக்குபயணம் நல்ல அனுபவங்களைத் தந்து கொண்டே இருக்கிறது மனோ....
@ ஜி. ஆரோக்கியதாஸ்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...
பதிலளிநீக்கு@ ஈஸ்வரன்: //ஓட்டுனர் பின்பக்கம் இருந்தால்தான் சிக்கல்)// ஆமாம் அண்ணாச்சி....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி.
@ கணேஷ்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.....
பதிலளிநீக்கு@ லக்ஷ்மி: //இது எப்படி தவறாக இருக்கமுடியும். நமக்கு கிடைக்கும் அனுபவத்தை எல்லாருடனும் பகிர்ந்து கொள் வதால் மத்தவங்களுக்கும் நல்ல ஒரு படிப்பு அனுபவம் கிடைக்குதே,// தங்களது ஆதரவிற்கு மிக்க நன்றிம்மா....
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா......
@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்கு@ ஷைலஜா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்....
பதிலளிநீக்கு@ கவிதை காதலன்: //மனிதர்கள் எப்போழுதுமே சுவாரஸ்யமானவர்கள்தான்...// உண்மை நண்பரே....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ அமுதா கிருஷ்ணா: ரசித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ விஜயராகவன்: நிறைய அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்கும்.... என்னை விட எட்டு வருட சீனியர் ஆச்சே..... சந்திக்கும்போது பேசுவோம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குபயணம் தரும் பாடங்கள் ஏராளம்!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
@ சேஷாத்ரி.ஈ.எஸ்.: உண்மை நண்பரே. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குமுதலாமவர் - படித்ததும் சோகம்.
பதிலளிநீக்குஇப்பொழுது நவநாகரீகமாக அணிய ஒருகாதுக்கு பூட்டும் மறுகாதுக்கு திறப்பும் போட்ட தொங்கட்டான்கள் வருகின்றனவே :)
மற்றவர் - தன்னம்பிக்கை அசர வைக்கின்றது.
@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாசிக்க கொஞ்சம் பயமாவும் இருந்திச்சு.நமக்கும் பிற்காலம் எப்பிடியாகுமோன்னு !
பதிலளிநீக்கு@ ஹேமா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
பதிலளிநீக்கு