அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
காலை நேர நடை அனுபவங்கள் - முகநூலில் எழுதிய சில இற்றைகள் இன்றைக்கு ஒரு தொகுப்பாக இங்கே - எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் என்னை தொடராத நண்பர்களின் வசதிக்காகவும்!
அதிகாலை சுப வேளை - 16 நவம்பர் 2025:
இன்றைக்கு காலை வழக்கமாகச் செல்லும் உத்திர வீதியைத் தவிர்த்து மேலூர் கிராமம் செல்லும் பாதையில் நடை... குளிர்ந்த காற்று, சுற்றிலும் பச்சைப் பசேலென இயற்கை, விதம் விதமான செடிகள், பூக்கள் என கண்களுக்கு மென்மை.....
நடைப்பயிற்சியில் எடுத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.....
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
24 நவம்பர் 2025

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இயற்கை நிறைந்த பாதையும், படங்களும் கண்களை கவர்கின்றன ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு, வாசகம், பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் - அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நான், நினைவு தெரிந்து 1990ல் ஶ்ரீரங்கம் வந்திருந்தேன், வைகுண்ட ஏகாதசியின்போது. பச்சைப் பசேலென்ற ஶ்ரீரங்கமும், வயல்களும் தோப்புகளும் நினைவுக்கு வருகின்றன. கோயிலின் உள்ளே இடுப்பு உயரத்துக்கு புற்கள் அடர்ந்து நெல் வயலைப்கோல ஒரு பகுதியில் காட்சியளித்தது.
பதிலளிநீக்குஇப்போ மேலூர் பகுதி பச்சைப் பசேலென இருக்கிறது எனச் சொல்கிறீர்கள். எத்தனை நாளைக்கோ.
எனக்கு நினைவு தெரிந்து பார்த்த திருவரங்கம் இப்போது இல்லை. நிறையவே மாற்றங்கள். மேலூர் செல்லும் சாலையில் மாலை நேரங்கள் இல்லை சாதாரணமாகவே செல்ல பயந்த காலங்கள் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
திருவரங்கம், கமர்ஷியல் சென்டராகி பலப் பல வருடங்களாகிவிட்டன.
பதிலளிநீக்குகமர்ஷியல் சென்டர் - ஆமாம். பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு இங்கே நிறையவே மாற்றங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான படங்கள்.
பதிலளிநீக்குநிழற்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குவாவ்! சூப்பர் படங்கள், வெங்கட்ஜி. பச்சையும் பூக்களும் பார்க்கவே மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் தரும். அருமையான பாதை.
பதிலளிநீக்குபடங்களை மிகவும் ரசித்தேன், கடைசிப்படம் பாதை மிக அழகு. நடக்கத் தூண்டும் பாதை.
கீதா
பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குவாசகம் சூப்பர்.
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குசெவ்வாழைப் பூ யார் கண்ணிலேயும் படவில்லையா? ஒருத்தரும் குறிப்பிடலையே
பதிலளிநீக்குயாரேனும் செவ்வாழைப் பூ குறித்து சொல்வார்கள் எனப் பார்த்தேன். நீங்களாவது சொன்னீர்களே! மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
வாசகம் அருமை. செவ்வாழைப்பூ பார்த்தேன் நெல்லை அருமை.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அருமை.காலை நேர நடைபயிற்சி தரும் புத்துணர்ச்சி.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு