அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட CGV நவராத்திரி விழா 2026 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
எங்கிட்டயும் bag இருக்கு, கணேசன் மாதிரி சட்டையும் போட்டுக்கிட்டிருக்கேன்.
அதனால எனக்கும் கிரீடம் வெச்சு விடுவாங்க....
ரொம்ப ஆசப்படாத மூஞ்சூறு bro.... அப்புறம் உள்ளதும் போயிறப் போவுது....
சே சே எனக்கு எப்பவும் simple ஆ இருக்கதான் பிடிக்கும்.... எங்க அதை வெச்சு விட்டிருவாங்களோ கனக்குமேன்னு நெனச்சு பயந்துக்கிட்டிருந்தேன்… ஹி ஹி..
ஓம் ஶ்ரீ விநாயகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
எப்போ வருவாரோ எந்தன் கலி தீர....
என்ன கிருஷ்ணா வழியற வெண்ணையைக் கூடத் தொடாம அப்படி என்ன யோசனை,பாட்டு?... (நீ இருக்கும்போது) யார் வரணும்? யார் கலி தீர்க்க??? எப்போ? எப்படி? ஏன்? எதுக்காக?????
மிச்ச கேள்வி ஏதாவது இருந்தா அதையும் கேட்டு முடிச்சுடு... ப்ப்பப்பப்பா… நவராத்திரிக்கு program க்காக நிம்மதியா பாடி practice பண்ண முடியுதா இங்க!
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன முருகா இடுப்புல வேலை சொருகிக்கிட்டு கைல பிடிச்சிட்டிருக்கிற மாதிரி pose கொடுக்கற? மறந்துட்டியா..😁
எல்லாம் தெரியும்.. நான் ருத்ராக்ஷ மாலையை சரி பண்ணிக்கிட்டிருக்கேன், வள வளன்னு பேசாம தலைய இப்படியும் அப்படியும் திருப்பாம நில்லு, கொஞ்ச நேரம்....
(அதை வாயால சொல்லலாமே, தலையைப் பிடிச்சு இப்பிடி அமுக்கணுமா.... கேட்டது கோவமோ?... என் வாய வெச்சுக்கிட்டு.......😕)
ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
********
என்ன தேவி நவராத்திரில ஜொலிக்க கிளம்பிட்ட போல இருக்கு. ஆமா luggage கொஞ்சம் ஜாஸ்தியோ?
இல்ல நாதா இந்த தடவை ஒரு நாளைக்கு 2 புடவைதான் change பண்ணுகிறேன். பாவம் சிம்மா, அவனுக்கு எதுக்கு அதிக சுமை! அதனால்தான் ஒரு bag ஐ நான் எடுத்துக்கிட்டேன் பாருங்க..
(🦁ஆஹா.... பாவம் சிம்மாவா, சர்தான்… இதுக்கே நாக்கு தள்ளுது🥴)
ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
தேவி உனக்காக கண்ணாடி வளையல்கள் வாங்கிண்டு வந்திருக்கேன், பிடிச்சிருக்கா? அளவுக்கு உன்கிட்ட இருந்த வளையலை எடுத்துண்டு போய் வாங்கினேன்… உனக்கு அதிகமா ஜரிகை வெச்ச வளை பிடிக்காதில்ல? அதான் இப்படி.
நவராத்திரியாச்சே, போட்டுக்கோ. இந்தா.. நல்லாயிருக்கா?
Thanks நாதா. ரொம்ப சிரமப் பட்டிருக்கீங்க… பாவம்.
ஆனா ஒன்பது நாளும் ஒன்பது கலர்ல வளை வேணும்கிறத மட்டும் தெரிஞ்சுக்கல.. பரவாயில்ல, எப்படியும் பச்சையும் ஒருநாள் போட்டுக்கணுமே… use ஆகும்....
ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
இப்படி எனக்கு அழகா நெத்திச்சுட்டி நெக்லஸ் எல்லாம் போட்டு விட்டிருக்காங்களேன்னு, தேவி உங்களை சுமக்க நான் ஒரு ஜென்மம் இல்ல ஒன்பது ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணும்னு சும்மா சொல்லி வெச்சேன். அதுக்காக இப்படி ஒன்பது உருவத்தோட என்மேல உக்காருவாங்கன்னு நான் நெனச்சுக் கூட பாக்கல..... ஹ்ம்ம்ம்..😟
சிம்மா, சும்மா முணு முணுக்காம நட பாப்போம்..
Good boy...
ஓம் வசுதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன தேவி இன்னும் கிளம்பலையா? எத்தன நேரம்???
உங்க பிள்ளை இன்னும் pack பண்ணி முடியல.... இந்த பூ, தாம்பாளம், மணியெல்லாம் அங்க கிடைக்காதா? படுத்தறான்.... இவன் பண்ற delay ல நந்தி பாருங்க settle ஆயிட்டான் ..
ஓம் கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதாயை
நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
25 அக்டோபர் 2026








கணவர் கடவுளே ஆனாலும் பெண்கள் குறை சொல்லுவது, "ஒன்பது நாளும் ஒன்பது கலர்ல வளை வேணும்கிறத மட்டும் தெரிஞ்சுக்கல"..
பதிலளிநீக்குஎன்று சொல்வது போல் கற்பனை கதைகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் 🙏
ரெங்கராஜன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதை நினைவுபடுத்தும் வாசகத்தை ரசித்தேன்.
இன்றும் வழக்கம் போல அழகான படங்களும் அதற்கேற்ற வாசகங்களும் மிக அருமையாக உள்ளது. ஒன்பது தேவிகளை ஒருசேர தரிசித்துக் கொண்டேன்.அதற்கேற்ற வாசகமும் அருமை. சிம்மத்திற்கு கிடைத்த பாக்கியம்
தேவியின் நவராத்திரி சுற்றுலா பயணம், அலங்கார வளையல்கள் என அனைத்தும் அழகான படங்கள் சூப்பராக இருக்கிறது. சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள் நன்றியும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.