”தலைநகரிலிருந்து” தொடரில் வெளியே செல்ல முடியாத சூழல்களினால் இடைவெளி விழுந்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை. இதில் சில மாற்றங்களோடு இனி தொடரலாம் என்ற ஒரு எண்ணம். இதுவரை பார்க்க வேண்டிய இடம், உணவு வகை, ஹிந்தி என்று எழுதிக் கொண்டு இருந்ததிலிருந்து மாறுபட்டு நான் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள், பலதரப்பட்ட நிகழ்வுகள், வித்தியாசமான சில விஷயங்கள் என்று ஒரு கலவையாகத் தரலாம் என எண்ணியிருக்கிறேன். தலைநகரிலிருந்து தொடருக்கு தந்த ஆதரவு இப்பவும் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு.
பெயர் தெரியாத பூ: இப்போது இருக்கும் வீட்டின் அருகே நிறைய பூ மரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு மரத்தில் உள்ள பூவின் வாசனை தெரு முழுவதும் காற்றிலே தவழ்ந்து வந்து நமது நாசியை முத்தமிட்டுச் செல்கிறது. கொத்துக்கொத்தாக மரம் முழுவதும் பூத்துக் குலுங்குகிறது. சிகப்பு வண்ணத்தில் இருக்கும் பூக்களின் நடுநடுவே அதே கொத்தில் சில வெள்ளைப் பூக்களும் இருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்? ஒரே மரத்தில் இரு வித நிறங்களில் பூக்கள். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது இது. அந்தப் பூக்களின் சில புகைப்படங்கள் கீழே...
ஆலும் வேலும் பல்லுக்குறுதி: இந்தியாவின் தலைநகர், மாநகரம் என்று அழைக்கப்பட்டாலும் இங்கே இன்னும் சில மனிதர்கள் தங்களுடைய வேர்களை மறந்து விடாமல் இப்போதும் காலையில் பல் துலக்குவது வேப்பங்குச்சியில்தான் என்று இருக்கிறார்கள். நான் இங்கே சொல்லப்போவது அதை பயன்படுத்துவர்களைப் பற்றியோ அல்லது அதன் லாப-நஷ்டங்களைப் பற்றியோ அல்ல. இது வேப்பங்குச்சிகளை எடுத்து, 1/2 அடி அளவுக் குச்சிகளாக வெட்டி, தினமும் நடைபாதையில் வைத்து விற்றுக் கொண்டு இருக்கும் ஒரு பெரியவரைப் பற்றியது.
நான் பால் வாங்க "Mother Dairy" செல்லும்போது அதன் அருகே உள்ள நடைபாதையில் இந்த பெரியவரை தினமும் காலையில் பார்க்கிறேன். அவரின் கடையே ஒரு கிழிந்த சாக்குப் பைதான். அதன் மேல் குச்சிகளை அடுக்கி வைத்து, கேட்போருக்குக் கொடுத்து காசு பெறுகிறார். வயதான காலத்திலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருப்பதற்காகவே பாராட்டலாம். சென்ற மூன்று மாதங்களாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அங்கு இல்லாத நாள் இல்லை. அத்தனை கடமை உணர்வு. ”பாபுவும் அப்பாவும்” சினிமா நட்சத்திர விளம்பரங்கள் ஏதும் இல்லாத, உழைப்பினால் தொடரும் வியாபாரம். நான் உபயோகிக்கிறேனோ இல்லையோ, அவருக்கு உதவி செய்த மாதிரி இருக்குமே என்று அவரிடம் வாங்க தினமும் தோன்றும். ஆனாலும் இது வரை வாங்கவில்லை. நாளையாவது வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். [23.07.2011 - இன்று அவரிடம் இரண்டு வேப்பங்குச்சிகள் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டேன். மனதிற்கும் அவருக்கு உதவிய ஒரு நிம்மதி].

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கலாம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி