வெள்ளி, 4 டிசம்பர், 2009
அலை பேசிகள் ஓய்வதில்லை
செய்தி-1: அக்டோபர் மாத இறுதி வரை இந்தியாவில் உள்ள அலைபேசி இணைப்புகள் எண்ணிக்கை 488.80 மில்லியன். நவம்பர் மாதம் மட்டுமே மேலும் பத்து மில்லியன் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணிப்பு உள்ளது.
செய்தி-2: 2010 ஜனவரி மாதம் முதல் இப்போது உள்ள பத்து இலக்க அலைபேசி எண்களில் மேலும் ஒரு இலக்கத்தை [9] முன்னாலே சேர்க்க இருக்கிறார்கள். (பத்தோட பதினொண்ணு அத்தோட இது ஒண்ணு - என்பது இது தானோ?)
இந்த அலைபேசி என்ற ஒன்று வந்தாலும் வந்தது, பல சமயங்களில் இதன் பலன்களை விட பாதகங்களே அதிகமாக உள்ளன. அதில் சிலவற்றை வரிசைப்படுத்தி பார்க்கலாம்.
1.ஒருவித தொந்தரவும் இல்லாமல் தனிமையிலே இருக்க ஒரே வழி உங்கள் அலைபேசியை அணைத்து வைப்பதுதான். இது ஒரு சில சமயங்களில் உங்களுக்கு வரவேண்டிய முக்கியமான அழைப்புகளை தடுக்கும் - உதாரணமாக உங்கள் மனைவி ஏதேனும் அவசரம் எனில் உங்களை அழைக்க முடியாது. [ஒரு சில சமயங்களில் வராமல் இருந்தாலும் நல்லது தான் என்பது வேறு விஷயம்!]
2.முன்பெல்லாம் நமக்கு குறைந்தது 100 தொலைபேசி எண்களாவது நினைவில் இருக்கும். இப்போதெல்லாம் 10 எண்கள் கூட நினைவில் இருப்பது இல்லை. அதான் அலைபேசியின் மெமரி-யில் இருக்கே எதுக்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மெத்தனம். [சில சமயங்களில் மனைவியின் அலைபேசி எண்ணே நினைவுக்கு வருவதில்லை! அதற்கு தனியாக திட்டும் வாங்குகிறோம்!]
3.தில்லி, மும்பை , சென்னை போன்ற மாநகரங்களில் வாகனம் செலுத்திக்கொண்டே அலைபேசியில் பேசுவதால் ஏற்படுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு சிலராவது இந்த விபத்துகளில் மடிகிறார்கள். இதற்கு ஒரு முடிவுதான் என்ன?
4.நேற்று கீழ் வீட்டில் வசிக்கும் ஒரு கிருத்துவ பெரியவர் இறந்து விட்டார். அவரது உடல் அடக்கத்திற்கு சென்றிருந்தேன். அடக்கத்திற்கு முன் பாதிரியார் முன்னர் எல்லோரும் அமைதியாக இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து ஒருவரின் அலைபேசி திடீரென அலறியது - ஒரு டண்டணக்கா பஞ்சாபி பாடல் மெட்டில். எவருக்கும் நேரம் காலமே தெரிவதில்லை. இது போன்ற இடங்களுக்கு வரும் போதாவது அலை பேசியை அணைத்துவிடலாம் அல்லது வைப்ரேடர் மோடில் வைக்கலாமே!
5.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது பலரும் செவிட்டு மெஷின் போல காதில் ஒரு ஒயரை மாட்டிக்கொண்டு தனியாக பேசுகிறார்கள். அதுவும் இந்த நீலப்பல்லு [அதாங்க இந்த Bluetooth - Bluetooth-றான்களே அதுதான்] வந்ததில் இருந்து இன்னும் தொல்லை தாங்க முடியல! அன்னிக்கு இப்படித்தான் என் பக்கத்தில் இருந்த ஒருத்தன் என்னைப் பார்த்து பேசிட்டு இருக்கான் - "நான் சரியான பைத்தியம் தெரியுமா? அலைபேசியை பையில் வச்சுக்கிட்டு வீடெல்லாம் தேடினேன் கிடைக்கவில்லை" என்று. பயத்தோடு அவனை பார்த்துட்டு இருந்தேன் - அப்புறம் அவன் தன் தலை முடியை ஒதுக்கிவிடும் போது பார்த்தா - நீலபல்லு என்னை பார்த்து இளிக்குது - நீதாண்டா பைத்தியம்னு!
6.இப்போ அலைபேசியில பாட்டு கேட்கிற வசதி இருக்கறதால பொது இடங்களில் கூட சத்தமாக பாட்டு கேட்கிறார்கள். அடுத்தவர்களுக்கு தொல்லையாக இருக்கும் என நினைப்பதில்லை. அதுவும் எல்லாமே குத்துப் பாட்டு!
7.சில நண்பர்களை பார்த்தா என்னவோ இந்த அலைபேசி இல்லன்னா உயிரே போன மாதிரி பேசுவாங்க - இந்த வசதி இல்லாதபோது என்ன செய்தார்கள் என்று நினைப்பதே இல்லை.
பின் குறிப்பு: இத்தனை எழுதினாலும் எங்கிட்டேயும் இரண்டு அலைபேசி இருக்கு! தொல்லை தாங்கவில்லை ஆனாலும் வச்சிட்டு இருக்கேன் - இதுக்கு என்ன சொல்றீங்க?
Labels:
பொது
தொழில் நுட்பம் வளரும் போது அதன் காரணாமாய் பிரச்னையும் வரவே செய்கிறது. Use செய்பவர் தான் பார்த்து செய்ய வேண்டும். Personally I speak from land line whenever possible.
பதிலளிநீக்குஇதுக்கு ஒன்னும் சொல்ல முடியாது... எங்க வீட்டில ஆளுக்கு ஒன்னுன்னு மொத்தம் 6 கைபேசி இருக்குது....
பதிலளிநீக்குஏனுங் செல் போன் கண்டுபுச்சவனே வந்து சொன்னாலும்,
பதிலளிநீக்குநம்மள மாதிரி ஆளுங்க (என்னையும் சேர்த்துதான் )
செல் போன யூஸ் பண்ணிட்டு தான் இருப்பாங்க....
படிக்க ஜாலியா இருக்கு ஆனா எந்த தொழில் நுட்ப முன்னேற்றமுமே நம்ம கையிலதானே சாமி இருக்கு ஒழுங்கா வச்சுகிட்டா எதுவுமே சுகம்தான். வசதியை பட்டியல் போடலாம்.. எதுக்கு.. அதான் நமக்கே தெரியுமே
பதிலளிநீக்கு"Neela Pallu" migavum rasithen. Idhu pattri thriyatha pothu nanum ippadithan ninaithen. Piragu, nandhan "Paithiyam" enrunarnthen. "What cannot be cured must be endured."Pirarurku naam thondhiravu kodukkamal irunthal adhuve nanru!!
பதிலளிநீக்குMandaveli Natarajan.
பயன் படுத்துவதில் தவறு எதுவும் இல்லையே?
பதிலளிநீக்குஆனால் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதுதான் இங்கு விடை.