வியாழன், 10 டிசம்பர், 2009

மௌனத்தின் பரிபாஷைகள்




குழந்தை பிறந்து வளர வளர கொஞ்சம் கொஞ்சமாய் அது பேசுவதை கேட்டு எவ்வளவு ஆனந்தம் அடைகின்றனர் அக்குழந்தையின் பெற்றோர்?. ம்மா..., ப்பா... என்று அந்த குழந்தை மழலை சிந்துவதைக் கேட்டுப் பூரித்து போகின்றனர்.

ஆனால் பிறவியிலேயே பேச முடியாமல் பிறக்கின்ற குழந்தைகளும், பிறந்து பின்னர் பேசும் திறமை இழந்தவர்களும் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நாமெல்லாம் நினைக்கிறோம். எனினும் வேறொரு கோணத்தில் இதை பார்த்தால் அவர்களெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

வளர்ந்து நாம் பேசும்போது ஒரு சிலருக்கு ஆனந்தத்தையும் சிலருக்கு கஷ்டத்தையும் தரும்படி நமது வாயில் இருந்து வார்த்தைகள் விழுகின்றன. சொல்லும் சொல்லால் எத்தனையோ பேருடைய மனதை நோகடிக்கிறோம். அது தெரிந்தாலும் நமக்கு மனதில் கிஞ்சித்தாவது சலனம் ஏற்படுவதில்லை. மாறாக ஒரு அல்ப சந்தோஷம் - அடுத்தவனை புண்படுத்தினோம் என்று!

எனது அலுவலகத்தின் அருகில் உள்ள இந்தியா கேட் திடலில் வாரம் ஒரு முறை சில பேச முடியாத நண்பர்கள் ஒன்றாகக் கூடி ஒரு வட்டமாக அமர்ந்து அவர்களது சங்கேத பாஷையில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவர்களுக்குள் நடக்கும் பரிபாஷை நம் போல வாயால் பேசுபவர்களுக்கு புரியாது எனினும் அவர்களது சைகைகளில் இருந்து எனக்கு தோன்றியது "என்ன ஒரு சந்தோஷம் அவர்களின் முகத்தில்? வாய் பேச முடிந்த நாமெல்லாம் இப்படி கூடினால் யாரையாவது நோகடித்துப் பேசி சந்தோஷம் அடைவோம் - ஆனால் இவர்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது எனினும் அடுத்தவரை காயப்படுத்தாமல் எவ்வளவு சந்தோஷமாக சம்பாஷணை செய்து கொண்டு இருக்கிறார்கள்?" என்று.

இதை தான் ஆங்கிலத்தில் "SILENCE IS GOLDEN" என்று சொல்கிறார்களோ?

4 கருத்துகள்:

  1. "If you help somebody it is PUNYAM if you hurt somebody it is PAPAM"
    Sri Sri Sringeri Swamigal.

    The present position is that there are many who derive immense pleasure by annoying his fellow human beings by his words and deeds.

    Mandaveli Natarajan.

    பதிலளிநீக்கு
  2. மௌனம் அற்புதமானது என்பதை அனுபவித்தவர்கள் உணர முடியும்.. நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  3. Though your perception of words being hurtful is valid, i am not sure if people who are unable to speak vocally , do not use words,(FOR THEIR MEANING..) They too seem to be as emotional as we are and i have seen them on continuous fights. A particular bus that i use to take for few years ,use to have a bunch of children from the school for children with such challenges.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க.. முடிந்தவரை காயப்படுத்தாம பேசப்பழகவேண்டியதுஅவசியம் தான்.
    ஆனா எங்கள் கட்டிடத்தில் இரண்டு வீட்டில் வாய்பேசமுடியாத காது கேக்காத இரண்டு கணவன் மனைவி . பார்த்தவரை அவர்கள் மிக எமோசனலாகத் தான் தெரிகிறார்கள். கோவம் வந்தால் அவர்களின் சத்தம் நம்மை பீதியாக்கும் அளவுக்கு இருக்கும்.. ஒரு கணவன் மனைவி அரசாஙகத்தில் சிறந்த உத்த்யோகத்திலும் இனோருவர் படிக்காத சாதாரணமானவர்களாகவும் வேறுபாடு..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....