தலை நகரிலிருந்து – பகுதி 8 பதிவிற்கு தங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்து தமிலிஷ்-ல் 23 வாக்குகளை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இனி இந்த வாரம்….
பார்க்க வேண்டிய ஒரு இடம்: செங்கோட்டை – பதினேழாம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டுவிக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு UNESCO-வினால் உலக புராதன இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் தில்லியின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் இன்றியமையாத ஒன்று. முகலாய பேரரசர் ஷாஜஹான் தனது பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து மாற்றி தில்லியை தலை நகராக அறிவித்த போது இங்கிருந்துதான் தனது பேரரசை வழிநடத்தினார். ஷாஜஹானால் கட்டுவிக்கப்பட்டாலும், ஔரங்கசீப் போன்ற பல முகலாய அரசர்களாலும், ஆங்கிலேயர்களாலும் இதில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தியா சுதந்திர நாடான பின்பும் செங்கோட்டையின் பெரும்பகுதி இந்திய ராணுவத்தின் வசம் இருந்தது. 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் செங்கோட்டையின் முழு அழகினை பொது மக்கள் ரசிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதம மந்திரி அவர்களால் செங்கோட்டையில்தான் இந்தியாவின் தேசியக்கொடி பட்டொளி வீச பறக்க விடப்படுகிறது. நாம் பொறுமையாக சுற்றி பார்க்க வேண்டிய இடம் இந்த செங்கோட்டை. இங்கு சுற்றுலா வரும் இந்தியர்களிடமிருந்து நுழைவுக் கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. இப்பொழுதெல்லாம் தில்லி Local Site Seeing அழைத்துச்செல்லும் பல சுற்றுலா நிறுவனங்கள் தில்லி செங்கோட்டையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான வசதி இல்லாததால் தொலைவிலிருந்தே இது தான் செங்கோட்டை என்று காண்பித்து விடுகிறார்கள். ஆகவே முடிந்தால் செங்கோட்டையின் முழு அழகை ரசிக்க தில்லி நகர பேருந்தினை பயன்படுத்தி செங்கோட்டை அருகில் இறங்கி உள்ளே சென்று பாருங்களேன்.
சாப்பிட வாங்க: ஒரு வாரமா தில்லியில அனல் வாட்டி எடுக்குது மக்களே. என்னதான் தண்ணிய சில்லுன்னு குடிச்சாலும் உடம்பு சூடு தாங்கமுடியல. தயிர்ல நிறைய தண்ணி ஊத்தி கடைந்து கருவேப்பிலையெல்லாம் போட்டு மோர் குடிச்சா நல்லா இருக்கும். நம்ம ஊர் கடைகள்ல கூட நீர்மோர் கிடைக்கும், ஆனா இங்கே அதெல்லாம் கிடைக்காது. இங்கே இந்த சீசன்ல ஒரு ஜூஸ் கிடைக்குதுங்க. அது என்ன தெரியுமா? வில்வ மரத்தில கிடைக்கிற காயை பழுக்க வைச்சு அதுல ஜூஸ் செய்து தருவாங்க. கொஞ்சம் சுவை அப்படி இப்படின்னு இருந்தாலும், வெய்யிலுக்கு நல்லதுன்னு இந்த ஊர்க்காரங்க சொல்றாங்க.
இந்த வார ஹிந்தி சொல்: மெக்ஸிகோ நாட்டில இருந்து இந்தியா வந்த “சப்போட்டா” பழத்துக்கு ஹிந்தில என்னன்னு சொல்வாங்க தெரியுமா? புரதம், நார், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு போன்ற பலவித சத்துக்கள் இருக்கும் இப்பழத்தை ஹிந்தில ”சிக்கூ” [CHIKOO, चीकू ] ன்னு சொல்வாங்க.
இன்னும் வரும்…

ஐயா, புது தில்லிக்கு வந்து கரோல்பாக் ஹோட்டல் ராமானுஜத்துலே தங்கி, பணிக்கர் ட்ரேவல்ஸ் வண்டி புடிச்சு, ஊரைச் சுத்திப் பார்த்த நாளெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க! பிரமாதம்!
பதிலளிநீக்குவாங்க சேட்டை, ராமானுஜம் மெஸ் நினைவுகளே ஒரு சுகம். இப்போதைய வருத்தமான விஷயம் என்னவெனில், அங்கே இப்போது தங்குமிடம் மட்டுமே உள்ளது, சுவையான சிற்றுண்டி அளித்து வந்ததை நிறுத்தி விட்டார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குதமிலிஷ்-ல் வந்த ரங்கராஜனின் கருத்து:
பதிலளிநீக்கு//வில்வ பழத்துக்கு இவ்வளவு சிறப்பா? இனிமேல் டெல்லியில் வில்வ பழத்தை தேட வேண்டியது தான். செங்கோட்டை பற்றிய விவரம் நல்லாக இருந்தது. //
வாங்க ரங்கராஜன்,
வில்வத்திற்கு உள்ள பல சிறப்புகளில் இதுவும் ஒன்று. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கோவில்களில் வில்வம்.. துளசி என்று தருவதெல்லாம் இதனால்தானோ? நல்ல பதிவு..
பதிலளிநீக்குஅந்த ஜூஸுக்கு பேரு என்னங்க வெங்கட்?
பதிலளிநீக்குவாங்க ரிஷபன் சார்,
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல வில்வத்திற்கும், துளசிக்கும் உள்ள பல குணங்களினால் கோவிலில் இவற்றைக் கொடுக்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வெங்கட் நாகராஜ்
வாங்க முத்துலெட்சுமி,
பதிலளிநீக்குITO பாலம், நிஜாமுதீன் பாலம் போன்ற இடங்களில் வில்வ பழத்தின் [“பேல் கா ஜூஸ்”] கிடைப்பதை நீங்கள் பார்க்கலாம்.
வெங்கட் நாகராஜ்
அண்ணாச்சி! தமிழ் நாட்டுல ரொம்பப் பேரு வெள்ளை வேட்டியும், அழுக்கு கையுமா "நான் செங்கோட்டைக்கு போறேன்! நான் செங்கோட்டைக்கு போறேன்!" அப்படின்னு திரியுறாங்களே, அது இந்த செங்கோட்டைதானா!
பதிலளிநீக்குவாங்க பத்மனாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி, அதே செங்கோட்டை தான்..
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ்
nalla irukunga,. koodiay seekiram aluval visyama angitu varuven
பதிலளிநீக்குவாங்க கார்திக் லக்ஷ்மி நாராயணன் [LK]. எப்ப தில்லி பயணம்? முன்னாடியே தகவல் சொல்லுங்க - முடிந்தால் சந்திப்போம்.
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ்
தொடருங்கள்..
பதிலளிநீக்குவேலை இல்லாத திண்டாத்தை போக்குவேன், வறுமையை ஒழிப்பேன், சாதியற்ற சமுதாயத்தை
பதிலளிநீக்குஉருவாக்குவேன் மற்றும் பெண்களுக்கு சமஉரிமையை பெற்றுத்தருவேன் என்று சொல்லித் திரியும் "வாய்சொல்லின் வீரர்கள்" அடிக்கடி சொல்லித் திரிவது இந்தமாதிரி கோட்டைகளை பிடிப்பதற்குதானோ!!
வில்வபழத்தின் பெருமையை ஊரறிய சொன்னதற்கு நன்றி. எங்கள் சம்பந்தியின் வீட்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் கோடையில் ஒரு பாட்டில் வில்வபழத்தின் சாறு எங்களுக்கு வரும் என்பது கூடுதல் தகவல்.நன்றி, வாழ்த்துக்கள்.
மந்தவெளி நடராஜன்.
வாங்க மலர், தொடரவே எண்ணி இருக்கிறேன். வருகைக்கும், உங்களது கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ்
வாங்க சித்தப்பா,
பதிலளிநீக்குஉங்களது வரவும், கருத்துரைகளும் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. நன்றி.
வெங்கட் நாகராஜ்
என் அப்பா என்ன பண்ணார்? அவர் பேர இப்படி மத்திருகீங்க ? கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன் . அநேகமா வரும் திங்கள் காலை தலைநகரத்தில் இருப்பேன். நான் நினைத்ததை விட மிக விரைவில் வர வேண்டியசூழ்நிலை
பதிலளிநீக்கு