புதன், 12 மே, 2010
”ஆசையைப் பாரு!”
தில்லியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவதை தடை செய்து உள்ளதால், பல கடைகளில் நாம் வாங்கும் பொருட்களை காகிதப் பைகளில் போட்டு கொடுக்கிறார்கள். அப்படி வந்த ஒரு காகிதப் பையில் ”விண்ணப்பம்” என்று சிவப்பு நிற கொட்டை எழுத்துக்களில் எழுதி இருந்தது கண்ணைக் கவர்ந்தது. அந்த காகிதத்தில் ஹிந்தியில் எழுதி இருந்த கடிதத்தின் தமிழாக்கம் கீழே:
_____________________________________________________
என் பெயர் ராம்சிங். நான் ஒரு எண்பது வயது இளைஞன். இந்திய சுதந்திரத்திற்க்குப் பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து குடியேறியவர்களில் நானும் ஒருவன்.
இங்கு வந்த பிறகு நான் சில பல வேலைகள் செய்து வந்தேன். எனக்கென்று குடும்பமோ, குழந்தைகளோ யாரும் இப்போது இல்லை. நான் கடந்த இருபது வருடங்களாக தனியாகவே உள்ளேன்.
தனியாக இருந்த இந்த இருபது வருட காலங்களில் ஜோதிடம் மீது எனக்கு மிகுந்த நாட்டம் ஏற்பட்டு, ஜோதிடக் கலையை கற்றுக் கொண்டேன். என்னால் ஜோதிடத்தின் மூலம் எல்லோருடைய வாழ்க்கையையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நடந்தது, நடக்கப்போவது ஆகிய அனைத்தையும் என்னால் சொல்ல முடியும்.
எனக்கு இந்த வயதில் தேவை என்பது மிக மிகக் குறைவே. எனினும் இக்குறைவான தேவைகளைக் கூட பூர்த்தி செய்யும் நிலையில் நான் இல்லை. ஆகவே என்னுடைய கஷ்ட ஜீவனத்தை ஜோதிடம் மூலம் உயர்த்திக்கொள்ள உங்களது மேலான ஆதரவினையும் உதவியையும் நான் பெற்றுக் கொள்ள முடிவு செய்ததன் விளைவே இக்கடிதம்.
அப்படி ஒன்றும் பெரிதாக நான் உங்களைக் கேட்டுவிடப் போவதில்லை. எதாவது ஒரு முக்கியமான, மக்கள் அதிகம் வந்து தரிசிக்கும் கோவிலின் பக்கத்தில் தங்குவதற்கு ஒரு சிறிய வீடு ஏற்பாடு செய்து கொடுத்தால் அங்கே இருந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜோதிடம் சொல்லி அவர்கள் தரும் எந்த சிறு தொகையையும் பெற்றுக்கொண்டு என் மீதி வாழ்க்கையை ஓட்டி விடுவேன். ஜோதிடத்திலேயே அதிக நேரம் போய்விடும் என்பதால் எனக்கு உணவு சமைத்துத் தரவும், நான் கொடுக்கும் ஜோதிடக்குறிப்புகளை எழுதி வைக்கவும், என்னைப் போலவே தனியாக இருக்கும் பெண்மணியினையும் ஏற்பாடு செய்தால் நான் தன்யனாவேன்.
என்னுடைய இந்த சிறு விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும்,
உங்கள்
ராம்சிங்
பழைய தில்லி
__________________________________________
Labels:
பொது
//////அப்படி ஒன்றும் பெரிதாக நான் உங்களைக் கேட்டுவிடப் போவதில்லை. எதாவது ஒரு முக்கியமான, மக்கள் அதிகம் வந்து தரிசிக்கும் கோவிலின் பக்கத்தில் தங்குவதற்கு ஒரு சிறிய வீடு ஏற்பாடு செய்து கொடுத்தால் அங்கே இருந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜோதிடம் சொல்லி அவர்கள் தரும் எந்த சிறு தொகையையும் பெற்றுக்கொண்டு என் மீதி வாழ்க்கையை ஓட்டி விடுவேன். ஜோதிடத்திலேயே அதிக நேரம் போய்விடும் என்பதால் எனக்கு உணவு சமைத்துத் தரவும், நான் கொடுக்கும் ஜோதிடக்குறிப்புகளை எழுதி வைக்கவும், என்னைப் போலவே தனியாக இருக்கும் பெண்மணியினையும் ஏற்பாடு செய்தால் நான் தன்யனாவேன்/////////
பதிலளிநீக்குஆஹா ! அவரு எதிர் பார்ப்பது ஏதோ வேற மாதிரி இருக்கே !
ஆஹா சின்ன வீடு கூடவே பொண்ண நல்ல விண்ணப்பம்
பதிலளிநீக்குஅவர் என்ன ராம் சிங்கா அல்லது ராம் சிங்கானந்தாவா? எண்பதில் ஆசை கொஞ்சம் அதிகம் தான்.
பதிலளிநீக்குஎன்ன கொடுமை சார் இது!
பதிலளிநீக்குசாமியார் பூனை வளர்த்த கதையா இருக்கே :-))))
பதிலளிநீக்கு//ஜோதிடத்திலேயே அதிக நேரம் போய்விடும் என்பதால் எனக்கு உணவு சமைத்துத் தரவும், நான் கொடுக்கும் ஜோதிடக்குறிப்புகளை எழுதி வைக்கவும், என்னைப் போலவே தனியாக இருக்கும் பெண்மணியினையும் ஏற்பாடு செய்தால் நான் தன்யனாவேன்.//
பதிலளிநீக்குஐயோ பாவம் சார், அதிகமா ஒண்ணும் பெரிசாக் கேட்கலை! :-)) பகூத் அச்சா!
நல்ல கதையா இருக்கே :-))))
பதிலளிநீக்குஆகா இப்படியெல்லாம் கிளம்பியிருக்கீகளோ.. ம்ம் ம்ம்
பதிலளிநீக்குகலக்குறாங்கைய்யா நம்மூர்க்காரங்க... கொடுமை.
பதிலளிநீக்கு