புதன், 4 ஆகஸ்ட், 2010

அவதியோ அவதி



நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர தில்லி போன்ற சில நகரங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள பள்ளி ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் என்று பலரையும் தேர்தல் ஆணையம் அவர்களது நிரந்தர பணியைத் தவிர இதையும் கூடுதலாக செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இந்தப் பணிக்கு ஆண், பெண் இருபாலர்களையும் அமர்த்தியுள்ள அரசு அவர்களுக்கு உண்டாகும் அவதிகளைப் பற்றி சற்றும் சிந்திப்பதில்லை.

உதாரணத்துக்கு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வீடாகச் சென்று அந்த வீட்டில் உள்ளவர்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், அவரின் அப்பா பெயர், வீட்டில் உள்ள பொருள்கள், வாகன வசதிகள், தொலைபேசி வசதிகள் போன்ற பல விவரங்களை சேகரிக்க வேண்டும். மொத்தமாக பத்து பதினைந்து பக்கங்கள் கொண்ட அந்த படிவத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக நிரப்பியாக வேண்டும். இதற்கு ஒவ்வொரு வீட்டிற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஆகும்.

ஆனால் பெரும்பாலான வீடுகளுக்குச் செல்லும்போது இப்பணியாளர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதுகூட இல்லை. கதவைத் திறக்காமலே அவர்கள் கேட்கும் விவரங்களை சொல்லி அனுப்பி விடுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டிலுள்ளவர்களை குற்றம் சொல்லமுடியாதெனினும் இந்த அவதிகளைப் படும் பணியாளர்களாக நம்மை வைத்துப் பார்க்கும் போதுதான் அதன் கொடுமை நமக்கு விளங்கும்.

சென்ற மாதத்தில் கூட தில்லியில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஒரு வீட்டுக்குச் சென்ற ஒரு ஆசிரியரை தொந்தரவு செய்கிறார் என்று சொல்லி வீட்டில் உள்ளவர்கள் அவரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது என்பது வருந்தத்தக்க விஷயம். தாக்கப்பட்ட அந்த ஆசிரியர் காவல்துறையில் புகாரளித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தாலும், அவர் அடிவாங்கியது வாங்கியதுதானே.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீடாகச்சென்று தகவல் சேகரிக்க வேண்டிய அவசியமென்ன? எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கணினி மூலம் மக்களாகவே தங்களது விவரங்களை அளிக்க ஏற்பாடு செய்யலாமே! படிக்காத மக்கள், கணினி இயக்கத் தெரியாதவர்கள் அந்தந்த ஊரில் உள்ள அஞ்சல் துறை அலுவலகத்திலோ வேறு அரசாங்க அலுவலகத்திலோ விவரங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்தால் இந்த பணி சீக்கிரமாகவும் தொல்லையின்றியும் முடியுமே.

தில்லியில் இப்போது வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்க்கவும், திருத்தங்களைச் செய்யவும் வீடுவீடாக ஆசிரியர்களும், அரசு அலுவலகர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் சந்திக்கும் அவதிகள் கணக்கிலடங்கா. அதிலும் பெண் பணியாளர்கள் சந்திக்கும் அவதிகள் சொல்லமுடியாது. அவர்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளக் கூட வழி தெரியாமல் நிற்கிறார்கள்.

தில்லி போன்ற பெரிய நகரில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது வாக்காளர் அட்டை கிடைப்பதற்காக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களைக் கொடுத்து அவர்கள் அதை நிரப்பிக்கொடுத்ததும் அடையாள அட்டை தயாரித்து அவர்களது வீடுகளிலேயே சென்று கொடுக்கும் ஏற்பாட்டை அரசு செய்துள்ளது.

அதுவும் குறிப்பிட்ட தினங்களுக்குள் நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகளை ஒவ்வொரு பணியாளர்களும் வீடு வீடாகச் சென்று கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் வேறு. வேண்டியவர்களே வந்து தேர்தல் அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாமே!

உங்கள் வீட்டிற்கும் வேர்த்து விறுவிறுத்து ஒரு பணியாளர், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கோ வாக்காளர் அட்டை சம்பந்தமாகவோ வரலாம் – அவர்களை வீட்டிற்குள் அழைக்கிறீர்களோ இல்லையோ – அவர்களது தாகம் தீர அவர்களுக்கு குறைந்தபட்சம் தண்ணீராவது கொடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.

அதெல்லாம் சரி, திடீரென இவர்கள் மேல் உனக்கெதற்கு இவ்வளவு அக்கறை என கேட்கிறீர்களா? சென்ற மாதம் நானும் இந்த அவதிகளைச் சந்தித்ததால் தான்.

அதெல்லாம் விடுங்க! உங்க வீட்டுக்கு வரும் அந்த முகம் தெரியா நண்பருக்கு டீ கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை பச்சைத் தண்ணீராவது கொடுப்பீங்கதானே!

19 கருத்துகள்:

  1. //சென்ற மாதம் நானும் இந்த அவதிகளைச் சந்தித்ததால் தான்.
    ///

    athane paarthen

    பதிலளிநீக்கு
  2. அரசாங்கத்திலிர்ந்துன்னா நாங்க நல்லா மதிச்சு உக்காரவச்சி பதில் சொல்வமாக்கும்.. தில்லியிலும் அப்படித்தான் .. ஊருலயும் அப்படித்தான்.. இப்ப சென்னையில் ஒருத்தர் எங்க பெரியப்பாவீட்டில் வ்ந்திருந்தார் .. உங்க ஊரென்ன பேரென்னன்னு அவரையும் நாங்க பேட்டி எடுத்துத்தானே அனுப்பிவச்சோம்.. ;)

    பதிலளிநீக்கு
  3. வெளியில் இருந்து சாதரணமாக தெரிந்தாலும் இது போன்ற வேலைகள் கடுமையானவை தான். நீங்கள் சொல்வதில் மிக முக்கியமான கருத்து இந்த பணிகளை செம்மனே நடத்த எவ்வளவோ வழிகள் இருக்க இப்படி சிரமப்பட்டு செய்ய வேண்டி இருக்கிறது என்பது. பெண்களின் நிலை உண்மையில் மோசம் தான்.. அரசின் காதுகளுக்கு தனி மனிதனின் (அரசாங்க ஊழியன் என்றாலும்) விசும்பல்கள் கேட்பதே இல்லை..
    நல்ல பதிவு வெங்கட்..

    பதிலளிநீக்கு
  4. //அதெல்லாம் விடுங்க! உங்க வீட்டுக்கு வரும் அந்த முகம் தெரியா நண்பருக்கு டீ கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை பச்சைத் தண்ணீராவது கொடுப்பீங்கதானே//
    உங்கள் வேண்டுகோள் எத்தனை ஆழமாய் ஒலிக்கிறது அனுபவ அடியின் காரணமாக.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப கஷ்டமான பணி தான்.. கண்ணார கண்டேன்... இங்க வந்தப்போ நாங்க நிறைய உதவி பண்ணோமுங்க

    பதிலளிநீக்கு
  6. "விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீடாகச்சென்று தகவல் சேகரிக்க வேண்டிய அவசியமென்ன? எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கணினி மூலம் மக்களாகவே தங்களது விவரங்களை அளிக்க ஏற்பாடு செய்யலாமே! படிக்காத மக்கள், கணினி இயக்கத் தெரியாதவர்கள் அந்தந்த ஊரில் உள்ள அஞ்சல் துறை அலுவலகத்திலோ வேறு அரசாங்க அலுவலகத்திலோ விவரங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்தால் இந்த பணி சீக்கிரமாகவும் தொல்லையின்றியும் முடியுமே."



    வெங்கட் இது நல்ல ஐடியா தான் ..அரசு இது கவனிச்சா நல்லா இருக்கும் .



    "அதெல்லாம் விடுங்க! உங்க வீட்டுக்கு வரும் அந்த முகம் தெரியா நண்பருக்கு டீ கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை பச்சைத் தண்ணீராவது கொடுப்பீங்கதானே!

    சரி சார் நீங்க சொன்னது இனிமேலாவது பின்பற்றுகிறேன்..பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. தாகம் தீர அவர்களுக்கு குறைந்தபட்சம் தண்ணீராவது கொடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.//

    நாங்கள் இதை செய்து கொண்டு இருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  8. Here they gave a rough copy to fill the details and next day they came and filled the original form and gave receipt in minutes.

    பதிலளிநீக்கு
  9. நல்ல யோசனைதான் நண்பரே...
    அவர்களின் பணிகள் கொஞ்சம் கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  10. வெங்கட் அண்ணாச்சி,

    "அதை ஏன் கேட்கறீங்க, எங்கள் இல்லத்திலும், சென்றமாதம் பொதுநல மருத்துவ சேவை மையத்திலிருந்து இரண்டு செவிலியர்கள் வந்து ஒரு அரைமணிநேரம் ,'சந்தித்தவேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் ' தேவை இல்லாத கேள்விகளுக்கான பதிலையும் பொறுமையாக!! அதேசமயம். அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கும் மறக்கவில்லை!! அந்த நல்லிதயம் படைத்தவர்கள் எங்களுக்காக படிவத்தினை பூர்த்தி செய்து எங்களை கையொப்பமிடச் சொல்லி, உடனே ரசீதும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்!!

    உழைக்கும் வர்க்கத்தினரின் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த உங்களின் சேவை, பாராட்டுக்கு உரியது. வாழ்க, வளர்க..

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  11. எங்க வீட்டுக்கு வந்தப்ப உள்ளார கூப்பிட்டு உக்காரவெச்சு டீயெல்லாம் கொடுத்தோமாக்கும். ஆனாலும், பெருநகரங்களில் யாரையும் நம்பமுடியாத சூழ்நிலை நிலவத்தான் செய்யுது. யாரைக்குற்றம் சொல்வது! :-(

    பதிலளிநீக்கு
  12. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    பதிலளிநீக்கு
  13. பாதிக்கப்பட்டோர் பார்வையில் இருந்து பார்த்து குமுறு குமுறு என்று குமுறி விட்டீர்கள். நிச்சயம் அரசு பரிசீலைனை செய்ய வேண்டிய விக்ஷயம்.

    ”குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்” கடுமையாக செயல் படுத்தப் பட்ட பொழுது எங்கள் கிராமத்திற்கு வரும் இரண்டு செவிலியர்கள் எங்கள் இல்லத்தில் வந்து ஓய்வெடுப்பர். அப்போது அதில் ஒருவர் அற்புதமாக பாடுவார். அவர் பாடும் “அச்சம் என்பது மடமையடா” பாடல் இன்னும் என்காதில் ஒலிக்கிறது. அந்தப் பாடலை கேட்கக் கூடும் பெண்களிடம் தங்கள் பாதி வேலையை முடித்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  14. @ LK: அதான், அதான், அதேதான்! :))

    @ முத்துலெட்சுமி: நல்ல உள்ளம். :)

    @ சந்திரமோகன்: ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். நிறைய விஷயங்கள் அரசின் காதில் விழுவதில்லை.

    @ KBJ: வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    @ ரிஷபன்: நிஜம்தான். :))

    @ மங்கை: எனது வலைப்பூவில் உங்களது முதல் வருகை. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @ சந்த்யா: நன்றி சகோதரி.

    @ சௌந்தர்: நன்றி நண்பரே.

    @ கலாநேசன்: நல்ல யோசனை. நன்றி நண்பரே.

    @ கமலேஷ்: நன்றி நண்பரே.

    @ VKN: வருகைக்கும், தங்களது கருத்துக்களுக்கும் நன்றி!


    @ அமைதிச்சாரல்: உண்மை சகோதரி. வருகைக்கு நன்றி!

    @ ஸ்வேதா: நன்றி!

    @ ஈஸ்வரன்: உங்கள் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது போலும் இந்த இடுகை! நன்றி அண்ணாச்சி!!

    இண்ட்லி [தமிலிஷ்] - இல் வாக்கு அளித்து இவ்விடுகையை பிரபலப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. கண்டிப்பா தண்ணியாவது குடுப்போமுங்க, ஏனுங்க சரிதானுங்களா!

    பதிலளிநீக்கு
  17. @ சிந்தனைச் சிதறல்கள்: சரிதானுங்க அம்மணி. நீங்க கோயம்புத்தூருங்களா?

    பதிலளிநீக்கு
  18. குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....