சில நாட்களுக்கு முன் வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் பற்றிய பதிவு எழுதி இருந்தேன். இன்னுமொரு அனுபவம் பற்றி இங்கே…
ஹஜ் சென்று வந்த இஸ்லாமியர்களில் ஆண்களை ஹாஜி என்றும் பெண்களை ஹாஜ்னி என்றும் அழைப்பார்கள் என படித்து இருக்கிறேன். அப்படி ஹஜ் சென்று வந்த ஒரு ஹாஜிக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுப்பதற்காக சென்றிருந்தேன்.
அவருடைய முகவரி தர்கா, மதர் தெரசா க்ரெசண்ட், புது தில்லி என்று கொடுக்கப்பட்டு இருந்தது. நான் முழுதாக இரண்டு முறை மதர் தெரசா க்ரெசண்ட்
தெருவில் அலைந்த பிறகும் ஒரு தர்காவையும் காண முடியவில்லை.
அந்த தெருவில் நடந்து போகிற ஒருவரும் இல்லை, எல்லாம் கார்களிலும் பேருந்துகளிலும் செல்கின்ற மக்களே. பாதுகாப்பு காரணமாக அங்கே எந்தவித கடைகளும் கிடையாது. எப்போதாவது வரும் ஒரு சிலரை விசாரித்தபோது அவர்களுக்கும் இந்த ஹாஜியின் முகவரி தெரியவில்லை.
குடியரசுத் தலைவர் எஸ்டேட்டில் அப்படி ஒரு தர்கா இருப்பதாக தகவல் கிடைக்க, அதன் உள்ளே செல்ல அங்குள்ள காவலாளியிடம் நானும் என்னுடன் வந்தவரும் எங்களுடைய அடையாள அட்டை, முகவரி, தொலைபேசி எண், தந்தையார் பெயர் போன்ற பல விவரங்களைக் கொடுத்த பிறகு இருவரையும் உள்ளே செல்ல அனுமதித்தார். அந்த ஹாஜியின் புண்ணியத்தில், எனக்கும் என்னுடன் வந்த நண்பருக்கும் குடியரசு தலைவரின் எஸ்டேட்டினுள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பலபேரிடம் கேட்ட பிறகுதான் அங்கும் தர்கா இல்லாதது தெரிய வந்தது.
மாளிகையிலிருந்து வெளியே வர இன்னொரு வாயில் வழியாக வரும்போது அங்கே இருந்த காவல்காரர் இஸ்லாமியராக இருந்தது எங்களுக்கு நல்லதாகப் போயிற்று. அவரிடம் அந்த அடையாள அட்டையைக் காண்பித்து விசாரித்ததும், அவர் சரியான வழியைச் சொன்னார்.
குடியரசுத்தலைவர் மாளிகைக்குப் பின் புறம் ஒரு அடர்ந்த காடு இருக்கிறது. இவ்விடத்தில் ”கியாரா மூர்த்தி” என்ற ஒரு இடம் இருக்கிறது. அதைப் பற்றிய விவரங்கள் என் அடுத்த "தலை நகரிலிருந்து " பகுதியில் எழுதுகிறேன். அதற்கு முன் இருக்கும் சிறு சந்து வழியே காட்டுக்குள் சென்றால் அந்த தர்காவும், ஹாஜியும் கிடைப்பார்கள் என அந்த காவல்காரர் சொல்ல அதன்படி அடர்ந்த காட்டுக்குள் சுமார் இரண்டு கிலோமீட்டர் சென்ற பிறகு ஒரு சிறிய தர்காவில் அந்த ஹாஜி இருந்தார்.
அந்தக்காட்டுக்குள் தனியே இருந்த அவருக்கு அடையாள அட்டை கொடுத்ததும் அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம், அவரை கண்டுபிடிப்பதில் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கடிக்கச் செய்தது. இதுவும் ஒரு அனுபவம் என நினைத்துக்கொண்டு இருவரும் சந்தோஷமாக திரும்பினோம்.
வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.
வெங்கட்
உங்கள் கடமை உணர்ச்சிக்கு பாராட்டுகள் ...
பதிலளிநீக்குகாட்டுக்குள் தர்காவா?!வித்தியாசமான அனுபவங்கள்தான்!
பதிலளிநீக்குஇந்தியாவின் தலைநகர் டெல்லி. அங்கே இந்தியாவின் மூத்தகுடிமக(னி/ளி)ன், மாளிகை, அதன் பின் ஒரு அடர்ந்த காடு, காட்டினுள் 2 கிலோமீட்டர் நடந்தே பயணம். அதன் பின் அந்தக்காட்டினுள் ஒரு தர்கா. அங்கு ஒரே ஒருவர், அவருக்கு ஒரு அடையாள அட்டை. அதை கொண்டு சேர்க்க ஆயிரம் பிரச்சனைகளை சந்தித்தபடி 2 நபர்கள்.
பதிலளிநீக்குஇந்தியா வெகு விரைவில் வல்லரசாகும் என்பதையும் நம்பத்தான் நம்புகிறேன்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும், பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும், பிறந்த முதல் நாளே கையில் ஒரு 40 ஸ்தான நம்பர் பச்சைகுத்தப்பட வேண்டும், கம்யூட்டரில் அடுத்தடுத்த நம்பர் ரிபீட் ஆகாத வண்ணம் அகில இந்திய அளவில் தரப்பட வேண்டும்.
பிறப்பு சான்றிதழ் முதல், பள்ளியில் சேர்ப்பது, வோட்டளிக்க, ஜனத்தொகை கணக்கிட, ஆளை அடையாளம் காண, ரேஷன் பெற, குடியுரிமை பெற, வோட்டு அளிக்க, விமானம் ரயில் பஸ்ஸில் பயண முன்பதிவு செய்ய, சொத்துக்கள் வாங்க, பணம் முதலீடு செய்ய, வேலையில் அமர்த்த, பாஸ்போர்ட் விசா அளிக்க என ஆரம்பித்து, இறந்து விட்டால் அடக்கம் செய்வது வரை இந்த நம்பரை நெட்வொர்க்கில் போட்டு பயன்படுத்தபட வேண்டும். ந்ம்பர் கையில் குத்தப்படாமல் நடமாடும் ஆள் யாராக இருந்தாலும் கடலில் மூழ்கடிக்கப்பட வேண்டும்.
ஆள் பெயரோ ஜாதிப்பெயரோ எங்குமே குறிப்பிடக்கூடாது. இன்ன நம்பரின் பையன் அல்லது பெண் இந்த நம்பர், இந்த விலாசத்தில் உள்ளார், இந்த நிமிடம் இந்த இடத்தில் உள்ளார் என நெட்வொர்க்கைப்பார்த்தால் உடனே தெரிய வேண்டும்.
அது போல சிஸ்டம் டெவெலப் செய்யப்பட்டாலே ஒழிய, எந்த வேறு வழிமுறைகளும் நடைமுறை சாத்யமே இல்லாததும் உருப்படவே உருப்படாததும் ஆகும்.
இதுபோல மாறுபட்ட வழிமுறைகளை சிந்தித்து செயல்படாவிட்டால், சென்ஸஸ் எடுப்பது, ஜனத்தொகை கணக்கெடுப்பு, இலவச அளிப்பு, ரேஷன் கார்டு அளிப்பது எல்லாமே வேஸ்டும் ஊழலுக்கு வழிவகுப்பதும் தவிர உறுப்படியாக ஒன்றும் நடக்க வழியே இல்லை.
தற்சமயம் நடக்கும் கூத்துக்கள் யாவும் பணவிரயம் & மனித நேர விரயம் போன்ற வழுவட்டையான திட்டங்களேயாகும்.
அந்தக்காட்டுக்குள் தனியே இருந்த அவருக்கு அடையாள அட்டை கொடுத்ததும் அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம், அவரை கண்டுபிடிப்பதில் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கடிக்கச் செய்தது. இதுவும் ஒரு அனுபவம் என நினைத்துக்கொண்டு இருவரும் சந்தோஷமாக திரும்பினோம்.
பதிலளிநீக்கு....மறக்க முடியாத அனுபவம் தான்... நல்லா தொகுத்து எழுதுறீங்க. பாராட்டுக்கள்!
அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம், அவரை கண்டுபிடிப்பதில் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கடிக்கச் செய்தது. //
பதிலளிநீக்குசிறப்பான சேவை.
இரண்டு பொறுப்பான அரசு ஊழியர்களைக் கண்டுவிட்டேன்
பதிலளிநீக்குvery very sincere !
பதிலளிநீக்குவித்தியாசமான அனுபவம் தான்.
பதிலளிநீக்குவித்தியாசமான அனுபவமே. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குநல்ல முயற்சி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
It is great of you to take all the trouble to find that elderly person... Hats off...:)
பதிலளிநீக்குநல்ல அனுபவம்.
பதிலளிநீக்குநண்பரே, உங்கள் பிளாக்கில் எழுத்துகள் மங்கிய கருப்பு நிறத்தில் இருக்கின்றன. அதை அடர்த்தியாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
ஹஜ்ஜுக்கு போய் வந்தவர் தர்காவிலா...!! ஹ்ம்ம்... என்ன சொல்ல!!
பதிலளிநீக்குஇந்தியாவில் கூகுள் மேப் ஆரம்பித்தால் தில்லிக்கு நீங்க கேரண்டி போலிருக்கே...ஹெ ஹெ .. கலக்குங்ண்ணா!!
:))
@@ பத்மநாபன்: கடமை உணர்ச்சி! ம்… வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.
பதிலளிநீக்கு## சென்னை பித்தன்: ஆம் காட்டுக்குள்ளே தான்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா.
@@ வை. கோபாலகிருஷ்ணன்: நல்ல கருத்துக்கள். இவையெல்லாம் நடக்க வேண்டுமெனில் இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்! சுஜாதா நாவல்களில் தான் இது சாத்தியம்!!! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
## சித்ரா: தங்கள் பாராட்டுகள் என்னை மகிழ்வித்தன சகோ. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@@ இராஜராஜேஸ்வரி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
## எல்.கே: அரசிலும் பொறுப்பான ஊழியர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள் – பொறுப்பில்லாதார் கூட்டத்தில் இவர்கள் தெரியாமல் போய் விடுகிறார்கள்!! :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக்.
@@ தென்றல் சரவணன்: :) தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
## அமுதா கிருஷ்ணா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@@ உயிரோடை: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
## ரத்னவேல்: மிக்க நன்றி ஐயா.
@@ அப்பாவி தங்கமணி: Thanks Bhuvana!
## DrPKandaswamyPhD: எழுத்துருவை மாற்றிவிட்டேன். இப்போது சரியாக உள்ளதா? தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
@@ அன்னு: :) தில்லியில் நான் பார்க்காத இடங்கள் மிக அதிகம்!! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!
அரசாங்க குடியிருப்பு சென்ற பிறகு ஒரு புதிய வேகத்தோடும் புத்துணர்ச்சியோடும் கடமை உணர்ச்சியோடும் செயல்பட்டு ஒரு கடினமான வேலையே செய்து முடித்திட்ட திரு வெங்கட் அவர்களுக்கும் அவர்களின் சக ஊழியருக்கும் , 2010--2011 வருடத்திற்கான "சேவா ரத்னா" என்ற உயரிய விருதுக்கு சிபாரிசு செய்வதில் பெருமை படுகிறேன்.
பதிலளிநீக்குதிரு வை கோ அவர்களின் கனவு மெய்பட வாழ்த்துக்கள்.
மந்தவெளி நடராஜன்.
நல்ல அனுபவமாக இருந்திருக்கும் உங்களுக்கு. இதுபோன்ற நிலையில் வேறு யாரேனும் இருந்தால் திரும்பிப் போயிருப்பார்கள். நீங்க தேடிக்கண்டுபிடித்து கொடுத்திருக்கீர்கள்.பாராட்டுகள்...உங்கள் அலுவலால் உங்களுக்கு டெல்லியில் நிறைய இடங்கள் தெரிந்திருக்கும் போல.
பதிலளிநீக்குஉங்கள் கடமை உணர்வுக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஹாஜ்னியா.. இப்பதான் தெரிஞ்சுது..
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
பதிலளிநீக்குஉங்க கடமை உணர்ச்சிக்கு பாராட்டுகள்..
பதிலளிநீக்குரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க! பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு@@ வி.கே. நடராஜன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு## ஜிஜி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@@ லக்ஷ்மி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா!
## ரிஷபன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.
@@ புதுகைத்தென்றல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
## அமைதிச்சாரல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@@ மோகன்ஜி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்ஜி.
//அந்தக்காட்டுக்குள் தனியே இருந்த அவருக்கு அடையாள அட்டை கொடுத்ததும் அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம், அவரை கண்டுபிடிப்பதில் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கடிக்கச் செய்தது.//
பதிலளிநீக்குநாம் எடுத்துக்கொண்ட வேலை வெற்றிகரமாய் முடிந்தால் , அதனால் பிறர் பயன் அடையும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை வெங்கட்.
@@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.
பதிலளிநீக்குஏயப்பா, இப்படிலாம் அலைஞ்சு கண்டுபிடிச்சீங்களா? பேசாம “கண்டுபிடிக்க முடியலை”ன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டா என்ன ஆகும்? :-))))
பதிலளிநீக்கு@@ ஹுசைனம்மா: திரும்பிக் கொடுத்தா, இன்னும் ஒரு முறை அனுப்புவாங்க! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
பதிலளிநீக்கு