[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 2]
சென்ற பகுதியில் தில்லி – ஜபல்பூர் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது என்றும் அது என்ன என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன் எனவும் சொல்லி முடித்திருந்தேன். அது என்னவாக இருக்கும் என்று ஊகித்தீர்களா?
ரயில்
பயணங்களில் நிறைய பேர் அவர்களின் பெட்டி மற்றும் பொருட்களை தொலைப்பதை – தூங்கிக்கொண்டிருக்கும்
போது வழியில் வரும் ரயில் நிலையங்களில் உடைமைகள் களவு போவதைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்த வரிசையில் நான் இரண்டாவது விஷயத்தில் அனுபவம் பெற்றேன்.
[பட உதவி: கூகிள்]
வண்டியில்
ஏறியவுடனே ஷூவினை கழற்றிவிட்டு சாதாரண காலணிகளை அணிந்து கொண்டேன். பயண முடிவில் பார்த்தால்
ஷூவினைக் காணவில்லை. தொலைந்ததைத் தேடினால் எங்கே கிடைக்கும்? 20 மணி நேரப் பயணத்தில்
பல ஊர்களில் நின்று சென்றது வண்டி. எங்கே யார் எடுத்தார்களோ? சே! இதைக்கூடவா திருடுவார்கள்
என்று நினைத்தேன். பெட்டிகளுக்கு சங்கிலி போட்டு பூட்டி விடுவதைப் போல இதற்கும் போட்டிருக்க
வேண்டும் போல!
[தங்குமிடம் - வெளித் தோற்றம்]
இரவு
ஏழு மணிக்குத்தான் ஜபல்பூர் போய் சேர்ந்தோம். நிலையத்திற்கு மிக அருகிலேயே மத்தியப்
பிரதேச சுற்றுலாத்துறையின் ”கல்சூரி ரெசிடென்சி” என்ற இடத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இங்கு மொத்தம் 30 அறைகள் இருக்கின்றன. AC Deluxe அறைக்கு ரூபாய் 2590/-, AC அறைக்கு
ரூபாய் 2290/- என்றும் கட்டணம் வசூலிக்கிறார்கள். வரிகள் தனி என்பதை நினைவில் கொள்க.
தங்கும்
விடுதியில் உணவகம், அருந்தகம் [இது என்னன்னு கேட்பவர்களுக்கு ஒரு கோப்பை இலவசம்!],
கூட்டம் நடத்த வசதி என எல்லாம் இருக்கிறது. இதன் தொலைபேசி எண்: (0761) 2678491 / 92,
3269000. மின்னஞ்சல் முகவரி : kalchuri@mptourism.com.
மொத்த
பயணத்தில் ஒரு நாள் வீணானதால் நாங்கள் ஜபல்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் குறைந்து
விட்டது.
இரவாகிவிட்டதால் உணவு உண்டு அடுத்த நாள் காலையில் சீக்கிரம் கிளம்ப உத்தேசித்து ஓய்வெடுக்கச்
சென்றோம்.
[உணவகம்]
[வரவேற்கும் ஓவியம்...]
காலையில்
எழுந்து உணவு முடித்து கிளம்ப வேண்டும். காலை உணவாக பால்-சோள ஓடுகள் [அட அதாம்பா
Corn Flakes], இட்லி-வடை, சட்னி-சாம்பார், பராட்டா-ஊறுகாய், பிரட்-ஆம்லெட், காபி/தேநீர்
எல்லாம் வைத்திருந்தார்கள். யாருக்கு எது வேண்டுமோ அதைச் சாப்பிடலாம். தேவையான அளவு
சாப்பிட்டுவிட்டு எட்டரை மணிக்கு தங்கும் விடுதியில் இருந்து கிளம்பினோம். நாங்கள்
முதலில் சென்ற இடம் எது எனக் கேட்பவர்களுக்கு…
இந்தியா
சுதந்திரம் அடைந்த பிறகு சுமார் இருபத்தி இரண்டு வருடங்கள் வரை ராணுவத்திற்குத் தேவையான
வாகனங்களை வெளிநாடுகளிலிருந்தே வாங்கிக் கொண்டிருந்தனர். இந்தியாவின் வாகனத்தேவைகளை
இங்கேயே பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்து 1969-ஆம் வருடம் தொடங்கப்பட்டது
தான் ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை.
[என்னைப் படம் பிடிங்களேன்!]
இந்த
தொழிற்சாலை ஜபல்பூர் நகரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தின் வெளியே இருக்கிறது. தொழிற்சாலை வாயிலிலேயே ஒரு வட்ட வடிவ மேடையில்
ஒரு பழைய ஜீப் நின்று நம்மை வரவேற்கிறது. இந்த தொழிற்சாலைக்கு உள்ளே சென்று பார்ப்பது
கடினம் – நிறைய வழிமுறைகள் – அதனால் பொதுமக்களால் பார்க்க முடிவதில்லை. இந்த தொழிற்சாலையில்
தயாராகும் வாகனங்கள் என்னென்ன, என்பதைப் பார்த்து வந்த நான் பகிர்ந்து கொள்ள ரெடி.
தெரிந்து
கொள்ள நீங்க ரெடியா? அதுக்கு அடுத்த பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.பின் குறிப்பு: 27.04.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.
ரயில் பயண அனுபவங்களும் , தங்குமிட குறிப்புகளும் , ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை படமும் சிறப்பாக பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.
நீக்குதெரிந்து கொள்ள நாங்கள் ரெடி
பதிலளிநீக்குசெருப்புக்கு பூட்டுப் படம் அருமை
ஆனால் அதை வேறு எதனுடனாவது இணைத்துப் பூட்டவேண்டுமே
இல்லையெனில் பூட்டோடு அல்லவா காணாமல் போகும்
மனம் கவர்ந்த பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார். பூட்டி இருக்கும் செருப்புகள் படம் இணையத்திலிருந்து எடுத்தது.... :)
நீக்குTha.ma 2
பதிலளிநீக்குதமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி சார்.
நீக்குஷூ தொலைஞ்சா சனியன் விட்டதும்பாங்க. (காசு குடுத்து புது ஷூ யார் வாங்குறது?).
பதிலளிநீக்குஎன்னிக்கு சென்னை கிளம்புறீங்க?
//ஷூ தொலைஞ்சா சனியன் விட்டதும்பாங்க.// :)) அது சரி....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்....
சிறப்பான ரயில் பயண அனுபவங்கள், படங்கள், தங்குமிடம் போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது நல்லாயிருக்கு. தொடருங்கள்.
பதிலளிநீக்குஜபல்பூருக்கு அருகே இந்தத் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் பெயர்: ”கமேரியா” என நினைக்கிறேன். நானும் அங்கு என் குடும்பத்துடன் போய் வந்துள்ளேன்.
ஓ... நீங்களும் இந்த இடத்திற்கு சென்று இருக்கீங்களா? மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.
சப்பலுக்கு பூட்டு போட்டிருப்பதைப்பார்த்ததும் சிரிப்பு தன்னாலே வந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா...
நீக்குதெரிந்து கொள்ள ரெடி, அடுத்த பதிவில் சந்திப்போம். சந்திக்கின்ற ரசிகிட்ற விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது கூடுதல் சிறப்பு. நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.....
நீக்குWhat happened to Shoes?
பதிலளிநீக்குGone with the wind! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மூவார் முத்தே.
ezhuthunga!
பதிலளிநீக்குpadikka naan ready!
நிச்சயம் எழுதிடுவோம் சீனி.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
செப்பலுக்கு பூட்டு ஐடியா நல்லா இருக்கே.
பதிலளிநீக்குஇரயில் பயணங்களின் போது நான் செருப்புக்களை ஒரு கவரில் போட்டு
பெட்டிகளுக்கு இடையே வைத்துவிடுவேன். :))
பெரும்பாலும் தொலைந்ததில்லை... இந்த முறை... :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.
பால் சோள ஓடுகள்....! :))
பதிலளிநீக்குசெருப்புக்குப் பூட்டு படமும் :))))
தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....
நீக்குதொடர்வண்டிப் பயண அனுபவம் கதை பேசுகிறது நண்பரே..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
நீக்குஅன்பு நண்பரே
பதிலளிநீக்குதங்களின்
தொலைந்ததைத் தேடினேன்...
அருமை. தொடரட்டும் உங்கள் பணி
அன்புடன்
விஜய்
தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை.
பதிலளிநீக்குகாலணிகளை லக்கேஜுகளுக்கு நடுவே ஒளித்து வைத்து விட வேண்டும், ஒவ்வொன்றையும் ஓரிடமென:)! கோவில் வாசலில் 3 முறை செருப்பு தொலைத்த அனுபவத்தில் எடுக்கிற கவனம்.
படங்களை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு//காலணிகளை லக்கேஜுகளுக்கு நடுவே ஒளித்து வைத்து விட வேண்டும், ஒவ்வொன்றையும் ஓரிடமென:)! கோவில் வாசலில் 3 முறை செருப்பு தொலைத்த அனுபவத்தில் எடுக்கிற கவனம்.//
அனுபவம் தந்த பாடம்... நல்ல விஷயம். அதனால் கடைபிடிக்கலாம்.... பிடிக்கிறேன்.
ஆமா காலணிகள் தொலைத்தால் நல்லது. ஆனால், என் அம்மா அடிக்கடி தொலைத்து விடுவார்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்குபகிர்ந்து கொள்ள ரெடி.
பதிலளிநீக்குதெரிந்து கொள்ள நீங்க ரெடியா?
//
இல்லைன்னு சொன்னா அடிக்க வருவீங்களா வெங்கட்...-:)
அடடா... அடிக்க வருவேனா? அடின்னா என்ன ரெவெரி! :)
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.
பால்-சோள ஓடுகள் .. ஆகா.. நல்லா இருக்கு பேரு..
பதிலளிநீக்குஇடம் கிடைச்ச சந்தோசத்துல ஷூவை விட்டுட்டீங்களே..:)
சோள ஓடுகள் - நெஜமாவே நல்லா இருந்தது! :)
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.
உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html
வலைச்சரத்தில் உங்கள் மூலம் மீண்டுமொரு அறிமுகம்.
நீக்குமிக்க மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியும் கணேஷ்.
தங்களின் பயணக் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது.படங்களும் அழகாக உள்ளன. படிக்கவும் பார்க்கவும் சுவாரசியமாக உள்ளன.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமின்னஞ்சல் மூலம் கருத்தினைப் பகிர்ந்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ருக்மணி அம்மா.
நீக்குசெப்பல் + பூட்டு = திருடனுக்கு கொண்டாட்டம். சேர்த்து எடுத்துட்டுப் போய் பூட்டை எடைக்குப் போட்டால் செப்பலைவிட அதிகமா காசு கிடைக்கும் போல இருக்கே.
பதிலளிநீக்குவாங்க அண்ணாச்சி... நல்ல கொடுக்குரீங்களே ஐடியா!.....
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.
சிறப்பான படங்களுடன் தகவல்களுடனும் பகுதி 2 ஆரம்பித்திருக்கீங்க.
பதிலளிநீக்குநாங்கள் ரெயிலில் இரவு நேரப் பயணங்களில் ஷு,செருப்புகளை பெட்டி பைகளுக்கு அடியில் மறைத்து வைத்துவிடுவோம்.
//பால்-சோள ஓடுகள் [அட அதாம்பா Corn Flakes],//ஹா..ஹா.. நல்ல மொழி பெயர்ப்பு.
தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமாரவி.
நீக்குசோள ஓடுகள் மொழிபெயர்ப்பு செய்தது நான் அல்ல! :) தங்களது பாராட்டுகளை செய்தவருக்கே அர்ப்பணிக்கிறேன் :))))
ஜபல்பூர் பெருமாள் கோவில் பார்க்கலியா.. நான் போன அன்று அவருக்கு திருமஞசனம். வந்தவர்களை எல்லாம் நாணயங்கள் தரச் சொன்னார்கள்.. திருமஞ்சனத்தில் சேர்த்துக் கொண்டு ஆளுக்கு ஒரு நாணயம் கொடுத்தார்கள். அலுவலக வேலையாய்ப் போனதில் அதிகம் சுற்ற முடியவில்லை.
பதிலளிநீக்குநேரப் பற்றாக்குறை காரணமாக பல இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. நேரம் இருந்திருந்தால் செல்ல நினைத்திருந்த இடங்களில் ஒன்று.
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
சுவாரசியமாய்த் தொடரும் பயண அனுபவங்கள் அருமை. ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை தயாரிக்கும் வாகனங்களைப் பற்றிப் பகிரவிருக்கும் தங்களுக்கு முன்கூட்டிய பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
நீக்குபால் சோள ஓடுகள்:)
பதிலளிநீக்குபூட்டும் செருப்புமா தொலைஞ்சு போஒனால் என்ன செய்யறது. அப்புறம்
கீதா(சாம்பசிவம்) நீங்கள் ஸ்ரீரங்கம் வந்தாச்சா என்று கேட்டிருந்தார்கள்.:)
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஸ்ரீரங்கத்தில் சென்று கீதாம்மாவினை சந்தித்தோம்.....
மூன்று வாரங்கள் இணையத்தின் பக்கமே வராததால் இப்போது தான் ஒவ்வொரு பதிவுகளாகப் பார்த்து கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்.
ஹா..ஹா...
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குபூட்ஸ்களை கவரில் போட்டு பையில் வைக்க வேண்டும்.
பதிலளிநீக்குதிருவிழா, மற்றும் விழாக்குகளுக்கு சென்றால் ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு செருப்பாய் போடவேண்டும்.
நல்ல பகிர்வு.
தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு