வியாழன், 31 மே, 2012

நீர்வீழ்ச்சியா – புகை மூட்டமா?


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 6]
பகுதி-5 பகுதி-4 பகுதி-3 பகுதி-2 பகுதி-1





நர்மதை நதி ஓடிக்கொண்டிருக்கும் ஜபல்பூரில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு தான் நாங்கள் அடுத்து சென்றது. இதன் பெயர் “[D]துவாந்[Dh]தார் ஃபால்ஸ்”. ஹிந்தியில் ”[D]துவான்” என்றால் புகை. நர்மதா நதியிலிருந்து விழும் தண்ணீரின் நீர்த்திவலைகள் புகை போன்றதோர் தோற்றத்தினை ஏற்படுத்துவதால் தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு “துவாந்தார்” எனக் காரணப் பெயர் வந்திருக்கிறது. 

ஜபல்பூரிலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் எங்களை இறக்கியதும் நீர்வீழ்ச்சி இருக்குமிடத்தை அடைய அனைவரும் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்க ஆரம்பித்தோம். 

வழி நெடுகிலும் பாதையின் இரு மருங்கிலும் நிறைய கடைகள். மார்பிளால் செய்யப்பட்ட பொம்மைகள், விதவிதமான வண்ணமயமான தொப்பிகள் என திருவிழாக் கால கடைகளைப் போல இருந்தது. பக்கத்திலிருந்த கிராமங்களில் இருந்து வந்த மக்கள் நிறைய பழங்கள், கிழங்குகள் போன்றவற்றையும் விற்றுக் கொண்டிருந்தனர். 

ஒரு வயதான பாட்டி ஒரு சிறிய மூங்கில் தட்டில் அவர்களின் சுருங்கிய தோலைப் போன்ற தோற்றத்தையுடைய  பழத்தினை விற்றுக் கொண்டிருந்தார். “இது என்ன பழம் பாட்டி?” என்று நான் கேட்க, "बेटाएह उबला हुआ बेर हेஎனச் சொன்னார். ’என்னய்யா இது திடீர்னு ஹிந்திக்குத் தாவினா, மறத்தமிழர்களான எங்களுக்கு எப்படிப் புரியும்?’ என்று கேட்பவர்களுக்கு, “அவித்த இலந்தைப் பழம்!’.

பொடிநடையாக நடந்து சென்று கொண்டு இருக்கும்போதே தூரத்தில் நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.  அருகே நெருங்க நெருங்க, சில்லென்ற காற்று நம்மைத் தழுவ, ஆர்வத்தில் நடையை வேகமாக போட்டோம். நீர்வீழ்ச்சியே கண்டிராத தில்லி நண்பர்களின் அதிக ஆர்வத்தால் இருபதே நிமிடத்தில் நீர்வீழ்ச்சியை சென்றடைந்தோம். 



யார் மேல் உள்ள கோபமோ, பேரிரைச்சலோடு நர்மதா, நீர்வீழ்ச்சியாக மாறி கொட்டிக் கொண்டிருந்தாள். இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மட்டும் அவள் கையில் கிடைத்தால் உருட்டி எடுத்துக் கொண்டு போய் கடலில் தள்ளியிருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது.

அமைதியாக இருக்கும் நதி ஆக்ரோஷமாக குதித்தோடியதை பார்த்து ரசித்துக் கொண்டும் ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுமிருந்தோம். நமது குற்றால நீர்வீழ்ச்சி போல இங்கே குளிக்க வசதி இல்லை. நின்று நீர்வீழ்ச்சியை ரசித்து வர வேண்டியது தான். எப்படி அது ஆக்ரோஷத்துடன் குதித்தோடியது என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா? அதனால் உங்களுக்காகவே அங்கே எடுத்த ஒரு காணொளி இங்கே!



நீர்வீழ்ச்சி விழும் உயரம் சுமார் முப்பது அடியாம். அரை மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்று இயற்கையின் அழகை ரசித்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மேலே போகும் போது நிறைய பேர் மூச்சு வாங்கியபடி போய்ச்  சேர்ந்தோம். ஆனால் கஷ்டமில்லாமல் சீக்கிரமே இறங்கிவிட்ட மாதிரி தோன்றியது. 

நீர்வீழ்ச்சியும் பார்த்தாயிற்று! அடுத்தது? பெரிய படகில் ஒரு உல்லாசப் பயணம் போக வேண்டியதுதான். லைஃப் ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராக இருங்க. சரியா?

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.
புது தில்லி.

பின் குறிப்பு: 25.05.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.



58 கருத்துகள்:

  1. ஆக்ரோஷத்துடன் குதித்தோடிய நீர்வீழ்ச்சி -சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      நீக்கு
  2. நர்மதையின் பிரவாகம் அழகுக் காட்சி.. யார் மேல் உள்ள கோபமோ.. வரிகளில் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கவிதை வெளிப்பட்டுவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கவிதை வெளிப்பட்டுவிட்டது// அடாடா... இப்படி எல்லாம் சொல்லி என்னை ஓட்டாதீங்க சார். :)))

      தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்து பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  3. நீர்வீழ்ச்சி காணொளி அருமை!

    நலமா! நண்பரே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....

      //நலமா! நண்பரே!// நலமே.... மூன்று வாரத்திற்கு தில்லியிலிருந்து தமிழகம் வந்திருந்ததால் பதிவுலகம் பக்கம் அவ்வளவாக வர இயலவில்லை....

      நீக்கு
  4. ஹைய்யோ!!!!!

    நீர்வீழ்ச்சியும் கடலும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் கண் நிறையாது!

    காணொளிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீர்வீழ்ச்சியும் கடலும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் கண் நிறையாது!//

      ஆமாம். இதுங்களுக்கு ஓய்வே இல்லையா என்று யோசித்துக் கொண்டு இருப்பேன் அவற்றினைப் பார்க்கும்போது.

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி டீச்சர்.

      நீக்கு
  5. நீர் வீழ்ச்சியின் நீர்த்துளிகள் எங்க மேலும் தெரிக்குது.படங்கள் எல்லாமே தத்ரூபமா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் முன்பே பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது.... நீர்த்துளிகள் உங்கள் மேல் படும்படி இருந்ததா! :) ரசித்தேன்..

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா....

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  7. நீர்வீழ்ச்சியும் அதன் கோபமும் அருமை.

    நாங்கள் ஜபல்பூர் சென்றதும், நர்மதை ஆற்றில் ஸ்நானம் செய்ததும் ஞாபகம் வந்தது.

    பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவலைகளை எனது பகிர்வு தூண்டியதில் எனக்கும் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

      நீக்கு
  8. நீர் வீழ்ச்சிகள் எப்போதுமே மகிழ்ச்சி தர வல்லவை. உங்களின் சரளமான வார்த்தைகளில் படிக்க சுவாரஸ்யம். படகுப் பயணத்துக்கு நான் இப்பவே ரெடி வெங்கட். (ஹிந்தி டைப்பிங் கூட தெரியுமா நண்பா... அசத்தறீங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீர் வீழ்ச்சிகள் எப்போதுமே மகிழ்ச்சி தர வல்லவை.// உண்மை கணேஷ். பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

      ஹிந்தி தெரியும். டைப்பிங், கூகிள் புண்ணியத்தில் இப்பல்லாம் ரொம்ப ஈஸி நண்பரே..

      நீக்கு
  9. Dear Venkat
    Wonderful article about Dhuaandahar falls. Thank u. Have you come back to Delhi???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.

      நீக்கு
  10. நீர் வீழ்ச்சிப் பக்கம் போனாலே நான் சின்னக் குழந்தையாய்டுவேன். (இப்ப என்ன நீ பெரிய மனுஷியான்னுலலாம் கேக்கக் கூடாது) படத்தையும் வீடியோவையும் பாக்கறப்ப ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணினேன். அவளது தோல் போலவே சுருங்கிய பழத்தை விற்றுக் கொண்டிருந்தாள் -இதுபோல பல இடங்கள்ல உங்களள் வார்த்தைப் பிரயோகத்தை ரசித்தேன். தொடர்ந்து வருவேன் நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீர் வீழ்ச்சிப் பக்கம் போனாலே நான் சின்னக் குழந்தையாய்டுவேன்.// அதில் கடலையும் சேர்த்துக்கலாம்... :)) பார்த்த உடனே அதில் நனைய மாட்டோமா எனத் தோன்றும் எனக்கும்.

      பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி நிரஞ்சனா.

      நீக்கு
  11. மக்கள் மட்டும் அவள் கையில் கிடைத்தால் உருட்டி எடுத்துக் கொண்டு போய் கடலில் தள்ளியிருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது.// வர்ணனை அழகு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  12. நீர்வீழ்ச்சி காணொளி அழகுக் காட்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டோமொபைல் தமிழன் - உங்களது முதல் வருகை என்னை மகிழ்வுறச் செய்தது நண்பரே.

      தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நீர்த்திவலைகள் என் மீது தெறித்தன!நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  14. குறிப்புகள் அருமை! நம்மஊர் ஹோகநேக்கலை நினைவுப் படுத்தியது தங்கள்
    இடுகை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்.

      நீக்கு
  15. //யார் மேல் உள்ள கோபமோ, பேரிரைச்சலோடு நர்மதா, நீர்வீழ்ச்சியாக மாறி கொட்டிக் கொண்டிருந்தாள். இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மட்டும் அவள் கையில் கிடைத்தால் உருட்டி எடுத்துக் கொண்டு போய் கடலில் தள்ளியிருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது.// ஆஹா! அழகான வரிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி கே.பி.ஜே. சார்.

      நீக்கு
  16. பெயரில்லா31 மே, 2012 அன்று 7:51 PM

    வெறும் படத்தை மட்டும் பார்த்திருந்தால் நயாகரா அருவின்னு தான் நினைத்திருப்பேன்...

    அழகு...

    ஹிந்தி...நமக்கு அந்தக்கால கிரிக்கட் கமெண்டரி மட்டும் கேட்ட அனுபவம்...சொல்லித்தாங்களேன் வெங்கட்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரெவெரி.

      //ஹிந்தி... சொல்லித்தாங்களேன் வெங்கட்...// பார்க்கலாம்... நேரம் ஒத்துவந்தால் செய்துவிடலாம் ரெவெரி.

      நீக்கு
  17. கோடைக்கேற்ற குளிர்பதிவு. நீர்வீழ்ச்சி என்று சொல்வதைவிட அருவி எனும் போது கொஞ்சம் தமிழும் சாரலாய் தெளிக்கும் அன்றோ?. தலைநகர் திரும்பி விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோடைக்கேற்ற குளிர்பதிவு. நீர்வீழ்ச்சி என்று சொல்வதைவிட அருவி எனும் போது கொஞ்சம் தமிழும் சாரலாய் தெளிக்கும் அன்றோ?.// ஆமாம். நீர்வீழ்ச்சி என்பதை விட அருவி நன்றாக இருந்திருக்கும்தான். ஏனோ தோன்றவில்லை... :(

      தலை நகர் இந்த திங்களன்று திரும்பினேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி.

      நீக்கு
  18. விடியோ தத்ரூபமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  19. பெருசா விழுதே தண்ணி. குளிக்க முடியாது போல !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்று பார்க்க ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள். குளிப்பதற்கு வசதி இல்லை மோகன்.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. //அருகே நெருங்க நெருங்க (அருவியினால்) சில்லென்ற காற்று...//
    சென்னைக்கு இப்போது இதுதான் மிக அதிகத் தேவை! அருவியின் உற்சாக தொடர் பாய்ச்சல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைக்கு மட்டுமல்ல, தில்லிக்கும் தேவை. நேற்று தில்லியின் அதிகபட்ச வெட்பம் 47.8 டிகிரி!... சுட்டெரிக்கிறது.... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  21. வல்லமையில் வந்ததற்கு வாழ்த்துகள். விடியோ சூப்பர். இனி தொடர்கிறேன். ந்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நன்றி ஆர்.வி.எஸ்.....

      தொடர்வதற்கு நன்றி.

      நீக்கு
  22. இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மட்டும் அவள் கையில் கிடைத்தால் உருட்டி எடுத்துக் கொண்டு போய் கடலில் தள்ளியிருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது.

    -அருமை! மனம் கவர்ந்த பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர் சேஷாத்ரி.

      நீக்கு
  23. அருவியின் சாரல் தங்கள் வழியாக எங்கள் மீதும் தெறிக்கச் செய்தீர்கள். நன்றி. வல்லமையில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ஆதிரா...

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ.... வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி முருகேசன்.

      நீக்கு
  25. அருவியின் அபார வர்ணனையும் சாட்சியாய் அழகிய காணொளியும் அருமை. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது. அப்புறம் அந்த அவித்த இலந்தைப்பழம் எப்படி? இலந்தையை நினைத்தாலே... ஸ்... நாவூறுகிறது. வல்லமை வெளியீட்டுக்குப் பாராட்டுகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரணமாய் சாப்பிட்ட இலந்தைப் பழத்தினை இப்படி வேகவைத்து சாப்பிடவும் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது..... :)

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்குக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  26. காணொளி பிரமாதம்.இத்தனை அழகான இடங்கள் நம்மூரில் இருப்பதை
    இந்தப் பதிவில் தான் பார்க்கிறேன். உங்களது தென்னிந்தியப் பயணமும் நன்றாக அமைந்தது என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்னிந்தியப் பயணமும் இனிதே அமைந்தது. சில பதிவுலக நண்பர்களை சென்னையிலும் திருச்சியிலும் சந்தித்ததில் மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  27. ஊருக்குப்போய்ப்பதிவுகளும் போட ஆரம்பிச்சாச்சா? ம.பி. முழுசும் படிக்கணும், நாங்க ம.பி. போனதில்லை. பிலாய் தவிர. அதனால் படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகப்போகுதே.... :)

      ம.பி. முழுதும் படிங்க.... பொறுமையா உங்க கருத்தையும் சொல்லுங்க கீதாம்மா....

      நீக்கு
  28. ஐ குற்றால நீர்வீழ்ச்சி பத்தி சொல்லி என் ஊற நியாபகப் படுத்திடீங்க, ஆனா ந இனிக்கு ஊருக்குப் போறேனே. சென்னை டு தென்காசி இரண்டு நாள் பயணம். குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் சுகமே சுகம் தான்.

    சரி சரி பதிவுக்கு வருகிறேன். நர்மதையை நீங்கள் புகைப் படமாக காட்டிய விதமே அருமை. இப்போதே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நான் மத்திய பிரதேசம் வந்தால் நீங்கள் தான் என் ஆசான்.

    பதிலளிநீக்கு
  29. குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்து விட்டது இன்றுதான் நாளிதழில் வாசித்தேன்.... உங்களுக்கு ஜாலிதான்....

    // நான் மத்திய பிரதேசம் வந்தால்....//

    வாருங்களேன், சென்றால் போயிற்று...

    பதிலளிநீக்கு
  30. நீர்வீழ்ச்சி காணொளி மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....