வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 13 – பர்ஃபி ஹிந்தி சினிமா – காந்தியைக் கண்டேன்



[பட உதவி: கூகிள்]



இந்த வார செய்தி:  சென்ற வெள்ளி [14.09.2012] அன்று பர்ஃபி என்ற ஒரு ஹிந்தி படம் வெளிவந்திருக்கிறது. ரன்பீர் கபூர், ப்ரியங்கா சோப்ரா மற்று இலியானா டி’க்ரூஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரன்பீர் கபூர் படத்தில் ஒரு வாய்பேசமுடியாத, காது கேட்காத மர்ஃபி என்று பெயர்கொண்ட ஒரு நேபாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ஊரில் அனைவரும் இவரை பர்ஃபி என அழைக்கிறார்கள்.  படத்தில் இரு கதாநாயகிகள் – ப்ரியங்கா சோப்ரா மற்றும் இலியானா.  ப்ரியங்கா சோப்ரா ஒரு ஆடிசம் நோய் உள்ள பெண்ணின் கதாபாத்திரத்தில் வருகிறார்.

நாம் இந்தப் பகிர்வில் பேசப்போவது படத்தினைப் பற்றி அல்ல.  இந்தப் படத்திற்கு 10 செப்டம்பர் அன்று ஒரு இசை வெளியீடு செய்திருக்கிறார்கள்.  ”திரைக்குப் பின்னால்….” ”நடந்தது என்ன?” என்ற பாணியில் ஃபடாஃபட்டி என்று ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறார்கள்.  இங்கே தமிழில் வெளி வந்த மூன்று படத்தின் “கொலைவெறி” பாடல் உங்களுக்கு நிச்சயம் நினைவுக்கு வரும். 

10 ஆம் தேதி வெளிவந்த இந்த ஃபடாஃபட்டி பாடல் பயங்கரமான வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.  படத்தில் வெளிவராத இப்பாடல் பற்றி ஊடகங்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு எழுதுகின்றன, காண்பிக்கின்றன.  ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை.  நான்கைந்து முறை கேட்டால் நன்றாக இருக்குமா தெரியாது.  ஆனால் பார்க்க முடியவில்லை.

கொலைவெறி பாடல், நிறைய ஆங்கிலம் மற்றும் கொஞ்சம் தமிழில் இருப்பது போல இந்த பாடல் நிறைய பெங்காலியும் கொஞ்சம் ஹிந்தியும் கலந்த பாடல்.  நிறைய இடங்களில் ”பீப்” ஒலி கேட்கும்… அந்த இடங்களில் எல்லாம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.  கொலைவெறி சாங் – சூப் சாங்!  இது Burpy சாங்!  பாடல் கேட்பதை விட அது காட்சியாக்கப்பட்ட விதம் தான் மிக மிக அசிங்கமாக இருக்கிறது!

எத்தனையோ நல்ல ஹிந்தி படப்  பாடல்கள் வந்திருக்கிறது.  ஆனால் இந்த நிலைக்கு வந்து விட்டதே என்று நினைக்கத் தோன்றுகிறது! 

இந்தப் பாடலின் காணொளி பார்க்க/பாடலைக் கேட்க விரும்புவர்கள் இங்கே செல்லுங்கள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.

இந்த வார குறுஞ்செய்தி: 

If you want to Walk Fast, Walk Alone.  But if you want to Walk Far, Walk together! – Ratan Tata.

நடந்தது என்ன: இன்று 21, செப்டம்பர்.  இந்த நாள் உலக அமைதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.  அமைதி என்பது பல இடங்களில் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அமைதி நாள் கொண்டாட மட்டுமே இருக்கிறதோ எனத் தோன்றுகிறது…. 

படித்ததில் பிடித்தது: 

காந்தியைக் கண்டேன்
-     ராஜம் ஸீதாராமய்யர் [கிளிக்கண்ணிகள்]

கட்டு விலங்கறுத்து களிகொண்ட பாரதத்தின்
எட்டு திசைகளிலும் – காந்தி
இன்முகங் கண்டு கொண்டேன்

சுதந்திரம் பெற்ற மக்கள் துன்பம் விடுத்த மக்கள்
இதமுறும் புன்னகையில் – காந்தி
இளநகை கண்டு கொண்டேன்

தாழ்வு உயர்வு இல்லா ஸமத்துவ சித்தமுடன்
வாழும் மனிதர் தம்மில் – காந்தி
வள்ளலைக் கண்டு கொண்டேன்

துன்பம் தனக்கு என்றும் சுகம் பிறர்க்கு என்றும்
இன்புறும் பெரியார் தம்மில் – காந்தி
இயல்பினைக் கண்டு கொண்டேன்

சாவுக்கும் அஞ்சாமல் ஸத்தியம் பேசுகின்ற
மாபெருந் தலைவர் தம்மில் – காந்தி
மாண்பினைக் கண்டு கொண்டேன்

சொல்லுஞ் செயலுமொன்றாய் தோன்றும் அறிஞர்தம்
வல்லமை செயல்களிலே - காந்தி
வலிமையைக் கண்டு கொண்டேன்

பூதவுயிர்களுக்கெல்லாம் புண்ணியனென்று ஒரு
தீதும் செய்யாதவர் பால் – காந்தி
சித்தத்தை கண்டு கொண்டேன்

ஆருயிர் இந்தியர் தம் அடிமைத் தளை யறுத்த
வீரர் தம் முகத்திலெல்லாம் – காந்தி
விளங்கொளி வீசுதம்மா.

என்ன நண்பர்களே…  இந்த கவிதையைப் படித்து விட்டு, என்னடா இப்படியெல்லாம் ஆட்கள் இப்போது இல்லவே இல்லையே என்று நினைத்தீர்களா…  இருந்திருக்கிறார்கள் 1949-ஆம் ஆண்டில்.  இந்தக் கவிதை வெளி வந்தது 1949-ஆம் ஆண்டின் ஆனந்த விகடன் தீபாவளி மலரில்!

மீண்டும் ஃப்ரூட் சாலட்டோடு  அடுத்த வெள்ளி சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


40 கருத்துகள்:

  1. என்ன நெறைய இடத்தில ee வந்திருக்கு. பர்பி படம் நல்லாத்தான் இருக்குன்னு சொல்லறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய இடத்தில் EE :} ஸ்பேஸ் இப்படி வந்திருக்கிறது.... சரி செய்யணும்...

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

      நீக்கு
  3. \\"சாவுக்கும் அஞ்சாமல் ஸத்தியம் பேசுகின்ற
    மாபெருந் தலைவர் தம்மில் – காந்தி
    மாண்பினைக் கண்டு கொண்டேன்"//

    அருமையான வரிகள். பகிர்வுக்கு நன்றி.......


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை! பொக்கிஷங்கள் நிறைய உங்களிடம் உள்ளன போலும்! பகிர்விற்கு நன்றி!
    என்னுடைய வலைப்பூவில்
    கழிவிரக்கம்! http://www.esseshadri.blogspot.in/2012/09/blog-post_21.html
    பிறைநிலா! & அரைநிலா! http://www.esseshadri.blogspot.in/2012/09/blog-post_19.html
    தாகம்! http://www.esseshadri.blogspot.in/2012/09/blog-post_18.html
    நேரம் கிடைக்கும்போது படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்!
    நன்றி!
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பக்கத்தில் வெளியிட்ட கவிதைகளை விரைவில் படிக்கிறேன். பயணத்தில் இருப்பதால் பதிவுகள் படிக்க முடியவில்லை. தில்லி திரும்பியதும் அனைத்து பதிவுகளையும் படித்து விடுகிறேன் சேஷாத்ரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

      நீக்கு
  6. எங்கு பார்த்தாலும் பர்ஃபி பற்றிய பேச்சாகத் தான் உள்ளது.. ரத்தன் டாட்டாவரிகள் அருமை . TM 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கும் நன்றி.

      நீக்கு
  7. உங்கள் பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  9. இன்று திருச்சிக்கு பயணமாகும் நேரத்திலும் காலை பதிவை வெளியிட்ட உங்களை எப்படி பாராத்துவது என்று
    தெரிய வில்லை

    நிற்க திருச்சி சென்று விட்டு துளசி மேடம் விழா பற்றி ஒரு பாரா சேர்த்து இந்த பதிவை எழுதியிருக்கலாம் (ஒருவேளை தனியா எழுதுவீங்களோ? )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை நேரத்தில் வெளியாகும் படி Schedule செய்து வைத்திருந்தது தான்... இப்போது நிறைய பதிவுகள் இப்படித்தான் Schedule செய்து வைத்து இருக்கிறேன்.

      துளசி டீச்சர் மணி விழா நிகழ்வில் கலந்து கொண்டது பற்றி எழுதணும்... பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  10. ஆஹா... காந்தியைக் கண்டேன் கவிதை படித்ததும் மனதில் பதிந்து விட்டது. பொக்கிஷங்களின் மதிப்பே தனிதான். இற்றையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  11. நான் புதிய ஹிந்திப்படங்களில் ஆமீர்கான் படங்கள் மட்டும் பார்ப்பேன்.... கிடைத்தால்! தற்போதைய பாட்டுகளும் கேட்பதில்லை! சமீபத்தில் கேட்டதில் ரசித்த 'புதுப் பாட்டு, ஹிந்தியில், ஆக்கோமே தேரி' ஓ ஸா ஓம் பாடல்தான்!!

    இற்றை ஓகே... சூப்பர் ஸ்டார் சொல்லும் பன்ச் டயலாக் போல இருக்கு!

    டாடாவின் மெசேஜ் சொல்லும் குறுஞ்செய்தி தலையாட்டி ஆமோதிக்க வைக்கிறது!

    காந்தி கவிதை.... அதானே பார்த்தேன்... பழசா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே நானும் ஹிந்திப் பாடல்கள் தற்போது அதிகம் கேட்பதில்லை. இந்தப் பாடல் பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் கேட்டேன்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  13. ஃப்ரூட் சாலட் அருமை...

    மிகவும் பிடித்தது : "படித்ததில் பிடித்தது" (TM 9)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. பர்ஃபி பார்த்துட்டு என் மகன் ஆஹா ஓஹோ என்று சொல்லிட்டே இருக்கான்.என்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இருக்கான். போகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் மேலே சொன்ன பாடல் கிடையாது. பார்த்துட்டு சொல்லுங்க....

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      நீக்கு
  15. காந்தி கவிதை எனக்குப் புதிது. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. என்ன ஒரு அற்புதமான காந்தி பாடல் இது !!
    பார்த்த உடனே பாடிட மனம் தூண்டுகிறது.

    பாடி, மகிழ்வேன்.
    பின்னும் அப்பாட்டினை
    பிதாவின் பிறந்த நாளன்று
    வலை நண்பர்
    வெங்கட நாகராஜுவின்
    அன்புக்கு
    அர்ப்பணிப்பேன்.

    சுப்பு தாத்தா.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! உங்கள் குரலில் இப்பாடலைக் கேட்க இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா....

      உங்கள் பக்கத்தில் பகிருங்கள். பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

      நீக்கு
  17. //இது Burpy சாங்! பாடல் கேட்பதை விட அது காட்சியாக்கப்பட்ட விதம் தான் மிக மிக அசிங்கமாக இருக்கிறது!//

    காட்சியாக்கப்பட்ட விதம் மட்டுமல்ல, பாடலின் பொருளும் அபத்தம். அசிங்கம்.
    இதை வெளியிட்டதற்குத் தான் பிராயச்சித்தமாக‌
    காந்தி கவிதை வெளியிட்டீர்களோ !!

    மீனாட்சி
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதை வெளியிட்டதற்குத் தான் பிராயச்சித்தமாக‌
      காந்தி கவிதை வெளியிட்டீர்களோ !!//

      அப்படியும் சொல்லலாம்! :))

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீனாட்சி பாட்டி!

      நீக்கு
  18. பர்ஃபி நல்லாத்தான் இருக்குதுன்னு கேள்வி. டைட்டில் சாங்கை விடுங்க. நல்லதை மட்டுமே நாம் கவனிப்போமே.

    காந்தி பாடல் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்லதை மட்டுமே நாம் கவனிப்போமே.//

      நிச்சயம்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  19. ருசியான ஃப்ரூட் சாலட்.

    பாராட்டுக்கள் வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....