திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் செல்லும்
1-ஆம்
நம்பர் பேருந்தில்
சென்று கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையின் வலப்பக்கத்தில் திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் பெயர்ப்பலகை வித்தியாசமாக இருந்தது -
MR AND MRS IDLY. சென்னையை தலைமையகமாக் கொண்டு இயங்கும் இந்த ஊர்
Franchise இது.
அட இட்லி மாதிரி குண்டான தம்பதிகளுக்கு மட்டும் தான் அனுமதியோ இல்லை, இட்லியில் பல வெரைட்டி கிடைக்குமோ என நினைத்து, ”எதுக்கு இந்த யோசனை, சென்றுதான் பார்ப்போமே” [”சாப்பாட்டு ராமன்” என்று குரல் கொடுப்பது யாரோ?] என மனைவி-மகளுடன் சென்றேன். திரு பத்மநாபன் என்பவரால் நடத்தப்படும் திருச்சி கிளை தான் இது. உணவகத்தின் உள்ளே சென்றவுடன் நம் கண்ணெதிரே தோன்றுவது “சங்ககால உணவு” என்ற பெயர்ப் பலகை தான்.
பின்பக்கத்தில் உணவகத்தின் பெயர் போட்ட கருப்புச் சட்டை அணிந்தவர் வந்து “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டபடியே மெனு கார்டு தந்தார். Hot Idlies, Casual Dining, Dosas, Rava Dosas, Spongy Uthapams, Lunch, Starters, Tandoori Breads, Indian Cuisine, Chinese Cuisine, Chinese Dishes, Fresh Juices, Hotties, Icecream Scoops, milk shakes என்ற தலைப்புகளில் பலவித உணவு வகைகள் கண்ணைப் பறிக்கிறது.
முதலில் சாம்பாருடன் இரண்டு ப்ளேட் மினி இட்லி, ஒரு பேப்பர் தோசை ஆர்டர் செய்தோம். நானும் மனைவியும் மினி இட்லி சாப்பிட, மகள் பேப்பர் தோசையை ஒரு கை பார்த்தாள். பிறகு ஒரு மசாலா தோசையும் ஒரு ரவா தோசையும் ஆர்டர் செய்ய, இரண்டும் சுடச்சுட வந்தது. அவற்றையும் ருசித்துச் சுவைத்தோம். எல்லாம் நன்றாகவே இருந்தது.
விலையும் அவ்வளவு அதிகமில்லை. சாம்பார் இட்லி ஒரு ப்ளேட் 30 ரூபாய், மசாலா, பேப்பர் தோசை, ரவா தோசை போன்றவை ஒரு ப்ளேட் 35 ரூபாய். நான்கு வித சட்னிகள், சாம்பாருடன் கொடுத்தார்கள். நல்ல சுவையோடு இருக்கின்றன. பெரும்பாலும் தென்னிந்திய உணவகங்களில் வட இந்திய உணவு வகைகளான தந்தூரி ரொட்டி நன்றாக இருக்காது. அதனால் வீண் வம்பு வேண்டாமென அதைச் சுவைக்கவில்லை!
[ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் - 1800களில்....]
[படம் ரிஷபன் அவர்களின் வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது]
”சங்க காலத்தில் ராஜாக்களின் ஒரு வேளை உணவுக்காக 145 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் 40 வகையாவது இனிப்புப் பண்டங்கள் இருக்கும். அரண்மணையில் உணவு தயாரிக்க 80க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் இருந்தார்கள். மதிய உணவிற்குத் தயாரிக்கப்பட்ட ஒரு பதார்த்தம் இரவு உணவிற்கு நிச்சயம் தயாரிக்கப்படமாட்டாது.
ராஜாக்கள் சீரக சம்பா அரிசி போன்ற உயர்தர அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட புலாவ், பிரியாணி போன்றவற்றை உண்டார்கள். உணவில் கீரை, முருங்கைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காய், பீர்க்கங்காய் போன்றவை சேர்க்கப்பட்டது. மந்திரிகளும், பொது மக்களும் சாதாரண அரிசியான சிவப்பரிசி [அ] நெல்லரிசி கொண்டு சமைத்த உணவினை உண்டார்கள்.
ராஜாக்கள் சீரக சம்பா அரிசி போன்ற உயர்தர அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட புலாவ், பிரியாணி போன்றவற்றை உண்டார்கள். உணவில் கீரை, முருங்கைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காய், பீர்க்கங்காய் போன்றவை சேர்க்கப்பட்டது. மந்திரிகளும், பொது மக்களும் சாதாரண அரிசியான சிவப்பரிசி [அ] நெல்லரிசி கொண்டு சமைத்த உணவினை உண்டார்கள்.
இட்டரிகா என்று அழைக்கப்பட்ட இட்லி 17-ஆம் நூற்றாண்டிலிருந்தே தயாரிக்கப்பட்டது. உளுந்து மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட இட்டரிகா எண்ணையில் பொரித்து எடுக்கப்பட்டதாம்! இந்தோனேஷியர்களின் வருகைக்குப் பிறகுதான் உளுந்தும் அரிசியும் சேர்த்து அரைத்த மாவில் அவித்து எடுக்கும் இட்லிகள் தயாரிக்கப்பட்டனவாம். தோசை 15-ஆம் நூற்றாண்டிலேயே தயாரித்துவிட்டார்கள். மெதுவடை முதலாம் நூற்றாண்டிலேயே தயாரித்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்”.
உணவகத்தின் திருச்சி கிளை நிறுவனரான திரு பத்மநாபன் அவர்களை சிறப்பான உணவுக்காகவும், Ambience-க்காகவும் பாராட்டிவிட்டு ”வயிறும் நிரம்பியது, பர்சுக்கும் [நாங்கள் சாப்பிட்டதற்கு 165/- மட்டுமே] வேட்டு வைக்கவில்லை” என்ற மனத்திருப்தியோடு, வெளிவந்தோம்.
திருச்சி வந்தால் இங்கு சாப்பிடலாம்!
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இட்லி வேலை அதிகம்னு நினைக்கிறேன்
பதிலளிநீக்குஆனா, இட்லி உடம்புக்கு நல்லது, ஈசியா செரிமானம் ஆகும்.
நீக்கு//இட்லி வேலை அதிகம்//
நீக்குஉடம்புக்கு நல்லதுன்னு நான் சொல்ல நினைச்சதை ராஜி சொல்லிட்டாங்க!
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கார்த்திக்.
நம்ம சார்புல பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி ராஜி!:)
நீக்குஆஹா! மிகவும் ருசியான பகிர்வு, நகைச்சுவையும் கலந்து ... பாராட்டுக்கள் ... வெங்கட்ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குWill try when I go to Trichy. Thanks
பதிலளிநீக்குYes. Mohan. I can expect a more detailed post from you if you go there....
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
சிந்திப்பவர்கள் சிந்திக்கப்படுகிறார்கள்.
பதிலளிநீக்குஅறிமுகம் அருமை அன்பரே.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குணசீலன்.
நீக்குநல்ல அறிமுகத்திற்கு இனிய் பாராட்டுக்கள் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
நீக்குபத்மநாபன் என்று பெயருள்ளவர்கள் எதைச் செய்தாலும் நல்லாச் செய்வாங்க.
பதிலளிநீக்குசங்ககால ராஜாக்களின் உணவு பற்றிய குறிப்பு வயிற்றுப் புகைச்சலை கிளப்பினாலும் நல்ல தகவல்கள்.
//திருச்சி வந்தால் இங்கு சாப்பிடலாம்!//
திருச்சி வந்தால் ஸ்ரீரங்கத்தில் சாப்பிடலாம்னு பிளான் வச்சிருந்தால் நல்லா கை காட்டுறீங்களய்யா!
பத்மநாபன் பெயர் கொண்டவர்கள் - சரி ரைட்டு... ஒத்துக்கறேன்... :)))
நீக்குதிருச்சி வந்தால் ஸ்ரீரங்கத்தில் சாப்பிடலாம்னு - சாப்பிட்டா போச்சு!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.
திரு திருமதி இட்லி உணவகத்தைப் பற்றிய பதிவுக்கு வந்த மொத ஆளு நான்தானா?
பதிலளிநீக்குஎங்கள் ஊரிலும் இந்த உணவகம் இருக்கிறது. இன்னும் போய் சாப்பிட்டு வரவில்லை.
ஆரம்பத்தில் எல்லா உணவகங்களும் நன்றாக இருக்கின்றன. பிறகு மெள்ள மெள்ள தரம் குறைந்து விடுகிறது.
இட்லியின் பூர்வீகம் பற்றிய குறிப்பு நன்றாக உள்ளது. வடை, தோசை பிறகுதான் இட்லி வந்தது என்பது புதிய செய்தி.
பாராட்டுக்கள்!
ஓ உங்கள் ஊரிலும் இதன் கிளை இருக்கிறதா... மகிழ்ச்சி. முடிந்த போது சென்று வாங்க!
நீக்கு//ஆரம்பத்தில் எல்லாம் நல்லாத் தான் இருக்கும்.//
பார்க்கலாம் - இவங்க என்ன பண்றாங்கன்னு...
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நல்ல அறிமுகம்
பதிலளிநீக்குஅவசியம் திருச்சி வரும்போது
ஒரு கைபார்த்துவிடவேண்டியதுதான்
படங்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குவெங்கட் அந்த கடையில் இட்லி நல்லா இல்லை. நான் சாப்பிட்டு பாத்திருகேன். என் வீட்டு பக்கத்துல தான் அந்த கடை
பதிலளிநீக்குநாங்க மினி இட்லி சாப்பிட்டோம். நல்லாத்தான் இருந்தது. அடுத்த முறை இட்லி சாப்பிட்டு பார்க்கிறேன் ஜெய்சங்கர் ஜகன்னாதன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇட்லிசுவையோடு உங்கள் எழுத்தின் சுவையும் நன்று!
தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குவெங்கட்ஸ் ஃபோட்டோகிராஃபி உணவகத்திற்கே இட்டுச் சென்றது. ஒரு பிடி பிடிச்சிருக்கீங்க போல.. :-)
பதிலளிநீக்குஆஹா... ஆர்.வி.எஸ்-ஐ இட்லி இழுத்துடுச்சு போல நம்ம பக்கத்துக்கு....
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.
ரத்னா கபே இட்லி சாம்பார் சாப்பிட்ட மாதிரி இருக்கு!
பதிலளிநீக்குத.ம.7
இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன். உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
நீக்குநம்ம ஊருல ஒன்று ஆரம்பிக்கச்சொல்லிட்டு வந்தீங்களா..?
பதிலளிநீக்குஅட இது தோணலையே முத்துலெட்சுமி.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அட வெங்கட்....முருகன் இட்லி கடை கேள்விப்பட்டிருக்கேன். இது புதுசா இருக்கே... பேரும் நல்லா இருக்கு. புதுசா எதாவது ஆரம்பித்தால் பெயர் இப்படி மக்களை கவர்வது போல் புதுமையாக வைப்பது நல்லாவும் இருக்கு. அப்படி இருந்ததால் தான் வெங்கட், மனைவி மகளுடன் போய் இருக்கீங்க...
பதிலளிநீக்குபோயிட்டு சும்மா இருக்காம (எழுத்தாளராச்சே...) உடனே போட்டோ பிடிச்சாச்சு... இங்க எங்களுக்கு ரசிக்கும்படி பகிர்வும் தந்தாச்சு. ஆனா இட்லி மட்டும் எங்களுக்கு தரவே இல்லையே... மினி இட்லி, ரவ தோசா, மசாலா தோசா... ம்ம்ம்ம்... அட இன்னொரு சாப்பாட்டு ராமரா?? :)
இட்லி தோன்றிய நூற்றாண்டு பற்றிய விவரம் ஆச்சர்யமாக இருக்கிறது. அட இந்தோனேஷியா வந்தப்பின் தான் இட்லி அரிசி கலந்து செய்தோமா.. அட இப்ப தான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. என்னுடன் வேலை செய்த பிலிப்பைன்ஸ் ஸ்டாஃப் பிட்டு என்று சொல்லி ஒரு உணவு எனக்கு கொண்டு வந்து கொடுப்பார்.... அது இட்லி போலவே இருக்கும் கலர் கலரா.... நான் அப்ப சொன்னேன், இது இந்தியாவில் இட்லிப்பா என்று....
தோசை வடை இது ரெண்டும் இட்லி தோன்றும்முன்னாடியே வந்த விவரம் அறிந்தேன்.
என்னது ராஜாக்கு 145 வெரைட்டி உணவா... அதிலும் அதில் ஒரு பதார்த்தம் கூட நைட்டுக்கு வைக்க மாட்டாங்களா? அடேங்கப்பா.. மீதி ஆன உணவை என்ன செய்வாங்க ஒவ்வொரு வேளையும்??
ராஜாக்கு மட்டும் சீரக சம்பா மத்தவங்களுக்கு நெல் குத்தும் அரிசியா...
மிஸ்டர் அண்ட் மிசஸ் இட்லில ஆரம்பிச்சு அருமையா நிறைய ஆச்சர்ய விவரங்கள் கொடுத்திருக்கீங்கப்பா...
இட்லி எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்த உணவு...
அட இத்தனை விலை கம்மியா இருக்கா? அப்டின்னா அடுத்த முறை கண்டிப்பா போகணும்.
அன்பு நன்றிகள் வெங்கட் பகிர்வுக்கு... அழகிய படப்பகிர்வும் அருமை...
//போயிட்டு சும்மா இருக்காம (எழுத்தாளராச்சே...) உடனே போட்டோ பிடிச்சாச்சு... இங்க எங்களுக்கு ரசிக்கும்படி பகிர்வும் தந்தாச்சு. ஆனா இட்லி மட்டும் எங்களுக்கு தரவே இல்லையே... மினி இட்லி, ரவ தோசா, மசாலா தோசா... ம்ம்ம்ம்... அட இன்னொரு சாப்பாட்டு ராமரா?? :) // ஆஹா குரல் குடுத்தது நீங்க தானா...
நீக்குவிரிவான கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி மஞ்சுபாஷினி.
ஸ்ரீரங்க ராஜகோபுரம் 1800 ல ஏற்கனவே ரிஷபன் வலைப்பூவில் பார்த்த நினைவு இருக்கிறதேன்னு பார்த்தேன்.. நீங்களும் அங்கிருந்து தான் எடுத்ததா போட்டிருக்கீங்க... அருமைப்பா...
பதிலளிநீக்குத.ம 8
இன்னும் சில படங்கள் பார்த்தேன். ரிஷபன் சார் வலைப்பூவில் இருந்த படம்தான் மிகவும் பிடித்தது.
நீக்குதங்களது வருகைக்கும் தமிழ்மணம் எட்டாம் வாக்கிற்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.
இட்லி பற்றிய தகால்கள் அருமை.நல்ல உணவகத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குநல்ல பகிர்வு ....நல்ல தகவல் தொடருங்கள் நண்பரே....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பதஞ்சலி ராஜா.
நீக்குதங்களது திரு அண்டு திருமதி இட்லி பகிர்வு நன்றாக ரசிக்க முடிந்தது. இட்லியைபற்றி அருமையான தகவல். ஆனால் அந்த கடையின் முழுமையான விலாசம் மற்றும் போன் நம்பர் முதலியன கொடுத்தால் இன்னும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிஜய்
முழுமையான விலாசம் தருகிறேன் உங்களுக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி.
இட்லிக்குள்ளே இட்நீ விஷயம் இருக்கா? பேஷ்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்..
நீக்குஎன் கண்வர் போன்ற இட்லி பிரியர்களுக்கு நல்ல செய்தி. திருச்சி போனால் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குசுவையான் இட்லி பற்றிய செய்திகள் சுவையோ சுவை.
ஆஹா... அவர் இட்லி ப்ரியரா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா
உணவும் வரலாறுகளும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஅந்த மெயின் ரோடு பக்கம் போகும்போது அந்த இட்லிக் கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்து இருக்கிறேன். உள்ளே போய் சாப்பிட்டதில்லை. நீங்கள் சுவையைப் பற்றிச் சொல்லி விட்டீர்கள. போய் ஒரு பிடி பிடித்து விட வேண்டியதுதான். போய் வந்ததும் சொல்லுகிறேன்.
பதிலளிநீக்குபோய் ஒரு பிடி பிடிச்சுட்டு சொல்லுங்க தமிழ் இளங்கோ ஜி!
நீக்குஸ்ரீரங்கம் வரப்போ இந்த ஹோட்டல் போயிடவேண்டியதுதான். அதென்னவோ திருச்சி பத்தி எந்த நியூஸ் வந்தாலும் நான் தேடிப்படிச்சிடறேன் (பொறந்த ஊர் பாசம்:)
பதிலளிநீக்குஅதானே.... சொந்த ஊர்னா கரெக்டா அங்க வந்துடறோம் இல்லையா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.
ஸ்ரீரங்கம் காஃபி சாப்பிடணும். இப்போ இட்லி கடை வேற. வெங்கட் போட்டோ வேற போட்டு பசியைக் கிளப்புகிறீர்கள்:)
பதிலளிநீக்குநெக்ஸ்ட் ஸ்டாப் ஸ்ரீரங்கம் தான். பல அரிய தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள். ஸ்ரீரங்க ராஜ கோபுரம் இப்படி இருந்ததா. என்ன ஒரு பழமை. அருமை. மிகவும் நன்றி உங்களுக்கும் ரிஷ்பன் சாருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஇந்த ஊர்ல இப்போதும் இதே விலைதானே (பெங்களூர்ல). திருச்சில இப்போ அதே இட்லி விலை என்ன என்று யாராவது சொன்னால்தான் தெரியும். வாய்ப்பு இருக்கும்போது போய்ப்பார்க்கிறேன் (ஸ்ரீரங்கம் தரிசனத்துக்கு வரும்போது)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஇந்த உணவகம் தற்போது இல்லை - மூடி விட்டார்கள் என்பதைச் சொல்லி இருக்கிறேன் - சுட்டி கொடுத்த சமீபத்திய பதிவில்!