மூக்குக்குக் கீழே இருப்பது மீசை. இது தாடியில் சேராது. கிருதாவில் ஆரம்பித்து
தாடை, கழுத்து வரை பரவி இருக்கும் தாடியை அப்படியே தடவி விடுவதில் எவ்வளவு சுகம்…. தாடி வைத்துக் கொண்டு பாருங்கள்…. அப்போது தானே
அதன் சுகம் புரியும்.
இது நாள் வரை ட்வின் பிளேட் மழுங்கும் வரை இழு இழு என இழுத்து அனுதினமும் ஷேவிங்
செய்து கொள்ளும் எனக்கு சில நாட்களுக்கு முன் திடீரென ஞானோதயம் – தாடி மேலே ஒரு காதல்.
அதுவும் குறுந்தாடி மேல் ஒரு காதல் – அதாங்க French Beard என நாகரீகமாய் சொல்வார்களே
அதுதான். சரி என பத்து நாட்கள் முகச்சவரம் செய்யாமல் தாடி வளர்த்து, பின்னர் French
Beard வைத்துக் கொண்டேன்.
இத்தனை நாள் ”வழவழ” வெனப் பார்த்த அலுவலக நண்பர்களுக்கு இந்த மாறுதல் கொஞ்சம்
பிடித்திருந்தது போலும். ‘பகுத் அச்சா லக்தா ஹே” என ஹிந்தியில் சொல்லி ”இப்படியே வைத்துக்கொள்ளுங்கள்”
எனவும் சொல்லிவிடவே உச்சந்தலையில் ஒரு ஐஸ்பெட்டியை வைத்தாற்போல இருந்தது. ஆனாலும் ஏதோ
ஒன்று என்னைப் பார்த்து இளிப்பது அப்போது புரியவில்லை.
French Beard என நாகரீகமாகச் சொன்னாலும் இதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு. அது
ஒரு தனிக்கதை. அதையும் இப்போதே சொல்லி விடலாம். எனது அலுவலகத்தில் ஐந்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாகவே சுற்றுபவர்கள். ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தைகள் போல, இவர்கள் ஒட்டிப் பிறந்த ஐவர்கள். எதையும் சேர்ந்தே செய்வார்கள்.
பாத்ரூம் போனா கூட ஐந்து பேரும் சேர்ந்து தான் போவாங்கன்னா பார்த்துக்கோங்களேன்! ஒரு நாள் அவர்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு French
Beard வளர்த்துக் கொண்டார்கள் – ஒருவரைத் தவிர.
என்னாப்பா, இதுல மட்டும் ஏன் இப்படி உங்களுக்குள்ள ஒத்துமை இல்லாம போயிட்டுதே
எனக் கேட்டபோது அந்த French Beard வைத்துக்கொள்ளாதவர் சொன்ன பதில் – “எனக்கு வாய்க்கு
ஜட்டி போடப் பிடிக்காது!” இதைக் கேட்டதற்குப் பிறகும் எனக்கும் இப்படி தாடி வளர்த்துக்
கொள்ளும் ஆசை வந்துவிட்டதே….. என்ன செய்வது.
”அட நல்லா இருக்குப்பா…. நீ ஒரு திறமைசாலி. ஆனா இதுவரைக்கும் தெரியாம இருந்தது.
இப்ப குறுந்தாடி வைச்ச உடனே ஒரு Intellectual Look வந்தாச்சு. அதுவும் குறுந்தாடியை
தடவிக்கிட்டே நீ பார்க்குற பார்வையிலே ஒரு அறிவாளி களை வந்துடுச்சு!” அப்படின்னு எல்லாம்
சொல்லி பலரும் ஏத்தி விடவே நானும் தரையில கால் பாவாம பறந்துட்டு இருந்தேன். எல்லாம்
இம்முறை ஊருக்கு வரும் வரை தான்! காத்து போன பலூன் மாதிரி கீழே விழுந்துட்டேன்!
வீட்டுக்குள்ள நுழையும்போதே என் மேல் தொடுக்கப்பட்ட கூர்மையான கணைகள்…..
பொண்ணு: “என்னப்பா இது,
இப்படி அசிங்கமா வந்து இருக்கயே?”.
அம்மா: “நீ என் பையனே
இல்ல! முதல்ல இந்த கண்ட்ராவியை ஷேவ் பண்ணித் தொலை!”
தங்கை: “எதுக்கு இந்த
வேண்டாத வேலை…. மகா கோரமா இருக்கு!”
மனைவி: ஷேவிங் கிட் கையில்
கொடுத்தபடியே….. “ஷேவ் பண்றீங்களா? இல்லையா! சொல்லுங்க! அதைப் பொறுத்து தான் நான் உங்களோட
இருக்கணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணனும்!”
இத்தனைக்கும் நடுவே எனக்கு ஒரே ஒரு துணை அப்பாதான்!
அப்பா: ”நல்லா இருக்குப்பா… வைச்சுக்கோ! அது ஒண்ணு தானே நாம சொல்றத கேட்குது!”
அட ஆசைப்பட்டு ஒரு French Beard வச்சிக்கிட்டது தப்பா! வாழ்க்கையையே புரட்டிப்
போட்டுடும் போல இருக்கேன்னு கண்ணீர் சிந்திக்கொண்டே எனது குறுந்தாடியை ஒரு முறை ஆசை
தீர தடவி விட்டு பின்னர் ஷேவ் செய்தேன். சரி இந்தச் சோகக் கதையைக் கேட்டு நீங்கல்லாம்
சோகமா போனா மனசு தாங்காது. அதனால “தாடிகள்” அப்படின்ற தலைப்பில் திரு தேவன் அவர்கள்
எழுதிய கதையிலிருந்து சில தாடி மஹாத்மியங்கள் உங்களுக்காக!
”ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்குத் தாடி வேண்டுமா?
வேண்டாமா? இருதயத்தைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள். [’இருதயத்தைத் தொட்டுப் பாருங்கள்’
என்று சொன்னது ‘அலங்காரமாகத் தான். தாடி முளைக்கும் இடம் அது அல்ல என்று நமக்கு தெரியும்]”
மீசை தைரியத்துக்கு அறிகுறி; தாடி புத்திசாலித்தனம், ஞானம்
இவற்றுக்கு அறிகுறி. எந்த ரிஷியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தாடி
வளர்க்கவில்லை என்று சொல்லுங்கள். பெரிய ஞானிகளைப் பாருங்கள். தாடியில்லாமல் எவ்வளவு
ஞானம் பொதிந்த வார்த்தைகளைப் பேசினாலும், ஜனங்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. தாடியின்
வழியாக வந்த வார்த்தைக்குத் தான் மதிப்பு.
எனக்குப் பரிச்சயமுள்ள ஒரு தாடிக்காரர் இருக்கிறார். காற்றடிக்கிறதா,
நின்று விட்டதா என்று பார்க்க வேண்டுமானால், அவர் முகத்தைப் பார்ப்பேன். தாடி காற்றில்
ஆடுவது தெரியும்.
தாடிக்காரரை சமுத்திரக் கரை – ஆற்றங்கரையில் உட்கார வைத்துவிட்டால்
எவ்வளவு நன்மை. யாராவது தவறி விழுந்து விட்டால் அவர் தாடியைப் பிடித்துக் கொண்டு கரையேறி
விடலாம் அல்லவா?
தாடி அலங்காரமாயிருப்பது மட்டுமல்ல; அதனால் வேறு பல உபயோகங்களும்
இருக்கின்றன. – நண்பர் ஒருவருக்கு தாடி உண்டு. அவர் வீட்டில் வர்ணம் பூசுவதெல்லாம்
அவர் மீசையால். பூட்ஸ் பாலிஷ் போடுவது அவரது தாடியால் தான். சட்டைக்குப் பொத்தானே தேவையில்லை.
அவர் நெக்டை வாங்குவதே கிடையாது. ஞாபக மறதி ஏற்படாமலிருப்பதற்கு தாடியில் முடிச்சுப்
போட்டுக் கொள்வார்.வெயிலுக்குத் தலை மேல் போட்டுக் கொண்டு போகிறார். குளிருக்குப் போர்த்துக்
கொண்டு விடலாம்.
தாடியினால் இத்தனை சௌகரியங்கள். இருந்தாலும், தாடி தானாகவே வளர்ந்தாலும் அதை
வளர்க்கவிடாது எத்தனை தடங்கல்கள்! தாடி நீண்ட தாத்தா என பாடல் கூட இருக்கிறதே எனச்
சொன்னால் எங்கே புரிகிறது இவர்களுக்கு!
சரி நான் கொஞ்சம் நேரம் இல்லாத தாடியை தடவிக்கொண்டு இருக்கிறேன்.
அடுத்த பதிவினில் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…….
//”நல்லா இருக்குப்பா… வைச்சுக்கோ! அது ஒண்ணு தானே நாம சொல்றத கேட்குது!”//
பதிலளிநீக்குசூப்பர் ! ;))))) தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குதாடி பற்றி அருமையாக சொல்லிவிட்டீர்கள், நமக்கும் தாடி வைக்க ஆசைதான் ஆனால் வேலை அப்படி...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குதாடி வைத்துக் கொண்டால் தத்துவங்கள் கூட வரலாம்... ஹிஹி... பஞ்ச தந்திரம் படம் நினைவில் வந்து போனது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஒரு நாள் அவர்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு French Beard வளர்த்துக் கொண்டார்கள் – ஒருவரைத் தவிர.
பதிலளிநீக்குபஞ்சதந்திரம் தான் நினைக்கு வந்தது ..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஇனிய வணக்கம் நண்பரே.
பதிலளிநீக்குதாடிக்கு இவ்வளவு பெரிய கதை இருக்குதா...
விரும்பினாலும் சிலருக்கு தாடி வைத்துக்கொள்ள
வாய்ப்பே கிடைப்பதில்லை...
விரும்பாவிட்டாலும் சிலருக்கு தாடியுடன்
இருக்க வேண்டிய நிலைமையே உண்டாகிறது...
==
மிகவும் சுவாரஸ்யமான பதிவு நண்பரே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
நீக்குதேவன் அவர்களின் தாடி மஹாத்மியங்கள் பகிர்வுஅருமை.
பதிலளிநீக்கு//தாடியினால் இத்தனை சௌகரியங்கள். இருந்தாலும், தாடி தானாகவே வளர்ந்தாலும் அதை வளர்க்கவிடாது எத்தனை தடங்கல்கள்!//
பெரிய தடங்கல் அல்லவா! ஆதி சொல்வது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குநிச்சயமாய் பெரிய தடங்கல் தான்!
அந்தக் குறுந்தாடியுடன் ஒரு புகைப்படம் தரப்படாதா எங்களுக்கு...?! ஆதி மிரட்டியவுடன் பாதியிலே போயிடுத்தே அது. வட்ட முகவாகு உள்ளவர்களை விட நீண்ட முகவாகு உள்ளவர்களுக்கு தாடி பொருந்துமோ என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குதேவனின் தாடி வர்ணனை சிரிப்பூட்டியது சகோ...
படம் போட்டு உங்களையெல்லாம் பயமுறுத்தக்கூடாதுன்னு உத்தரவு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
தாடிக்கதை நன்றாகத்தான் இருக்கிறது. இதற்கு இப்படி வேற ஒரு பெயரா...! தேவனின் எழுத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதாடி...தாடி... ஓ மை தாடின்னு பாட்டு பாடிகிட்டிருக்கீங்களா?
பதிலளிநீக்குபாடினாலும் பிரச்சனை தான் மைனரே..... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மன்னை மைனரே....
சில நேரங்களில் நாட்டும் அல்ல, பல நேரங்களிலும் மற்றவருக்காக தான் வாழ வேண்டியிருக்கிறது .அனுபவம் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.
நீக்குhahahahaha
பதிலளிநீக்குஹிஹிஹி.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.
சம்பந்தமில்லாத பதிவாக தோன்றினாலும் சுவாரசியம் காரணமாக படித்தேன்...அப்பா: ”நல்லா இருக்குப்பா… வைச்சுக்கோ! அது ஒண்ணு தானே நாம சொல்றத கேட்குது!”---அனுபவப்பட்டவர் நல்லாச் சொன்னார்...
பதிலளிநீக்குஇருந்தாலும் தாடியுடன் யாரைப் பார்த்தாலும் ஒரு சோம்பேறித்தனமான மனப்பான்மை அதன் பின்னே ஒளிந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது...
தாடி வைத்தவர் = சோம்பேறி.... அட இப்படி ஒரு யோசனையா......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
அதென்னவோ, எல்லா வீடுகளிலும் பிள்ளை தாடி வார்ப்பதும், அம்மாவும், மனைவியும் தடை செய்வதும் வழக்கமாக நடைபெறும் சம்பவம் போலிருக்கிறது!
பதிலளிநீக்குதாடிக்குத் தான் எத்தனை எத்தனை பயன்கள்! வெயிலுக்கு தலைக்கு மேல் போட்டுக் கொள்ளலாம்; குளிருக்குப் போர்த்திக்கொள்ளலாம்... சிரிப்பு தாங்க முடியவில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குமீசை தைரியத்துக்கு அறிகுறி; தாடி புத்திசாலித்தனம், ஞானம் இவற்றுக்கு அறிகுறி.
பதிலளிநீக்குஹா ஹா ஹா....
எனக்கு தாடி என்றதும் ஆட்டுக்கடா தான் ஞாபகம் வந்தது நண்பரே.
அதுவும் பலி ஆடு தான் நினைவுக்கு வந்ததா?..... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.
nalla pakirvu anne!
பதிலளிநீக்குsirithe vitren!
muthalil!
piraku -
sinthithen..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குதாடிக்கு ஒரு பதிவா?
பதிலளிநீக்குஉங்கள் கடைசி பத்தி சிரிப்பை வரவழைத்தாது. அதான் தாடியின் பயன்கள் சொல்லியிருக்கிறீர்களே
அதற்கு மார்க் போட்டு டிக் அடித்து விடலாம் போல் தோன்றுகிறது.
நல்ல நகைச்சுவை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஆசையோடு வைத்த தாடியைப் பந்தாடி விட்டாங்களே?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குதாடி வாய்த்த போட்டோ போட்டிருக்கலாமே?
பதிலளிநீக்குபடம் போட்டு உங்களையெல்லாம் பயமுறுத்தக்கூடாதுன்னு உத்தரவு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!
' ஹை தாடி டாடி'ன்னு ரோஷ்ணி சொல்லி இருக்கலாம் இல்லே?
பதிலளிநீக்குபோகட்டும். தாடியோடு எடுத்த படம் ஒன்னு சேர்த்துருக்கலாம் இந்த இடுகையில்.
நாங்களும் பார்த்துருப்போமில்லெ?
எங்கூட்டுலேயும் ஒரு தாடி மாமா இருந்தார்.தாடியில் முடிச்சுக்கூட போட்டுக்குவார்:-)ட்
படம் போட்டு உங்களையெல்லாம் பயமுறுத்தக்கூடாதுன்னு உத்தரவு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
அட உங்க வீட்டுலயும் ஒரு தாடி மாமாவா?
ஒரு தாடிக்கு இவ்வளவு எதிர்ப்பா? தாடியுடன் கூடிய புகைப்படத்தினையும் வெளியிட்டிருப்பீர்களேயானால் நாங்களும் கருத்து கூறியிருப்போம்
பதிலளிநீக்குபடம் போட்டு உங்களையெல்லாம் பயமுறுத்தக்கூடாதுன்னு உத்தரவு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
தாடியா! நீங்களா வெங்கட்!!!அடப் பாவமே இதென்ன ஆதிக்கு வந்த சோதனை.
பதிலளிநீக்குஒரு போட்டோ போட்டிருந்தால் ஐடியா கிடைக்கும்.
எங்கள் சிங்கம் தாடி வைக்கும் போதெல்லாம் வீட்ல சண்டைதான். தலைமுடியை வேற வளர்த்துக் கொண்டு ரிஷி மாதிரி இருக்கப் போகிறேன் என்று வேறு பயமுறுத்துவார்.:)
தேவனின் எழுத்துக்குக் கேட்பானேன். இதமான நகைச்சுவை. நன்றி வெங்கட்.
படம் போட்டு உங்களையெல்லாம் பயமுறுத்தக்கூடாதுன்னு உத்தரவு! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
//ரிஷி மாதிரி இருக்கப் போறேன்.... // அட நானும் இது மாதிரி அவ்வப்போது சொல்வதுண்டு.... :)
தேவனின் எழுத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்.. ஒரு தாடி வைப்பதற்கு இவ்வளவு எதிர்ப்பா? நல்லா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.
நீக்குநம்ப மாமா இங்கே:-)
பதிலளிநீக்குhttp://thulasidhalam.blogspot.com/2006/05/3.html
http://www.tamiloviam.com/unicode/05110603.asp
தங்களது வருகைக்கும் ஸ்வாரசியமானதோர் பதிவின் சுட்டிக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். அங்கே சென்று படித்தேன். ரசித்தேன்.
நீக்குதாடியுடன் கூடிய புகைப்படத்தினையும் வெளியிட்டிருப்பீர்களேயானால்...
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
படம் போட்டு எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைக்கக் கூடாதென தடை உத்தரவு. :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!
ஹா...ஹா .......தாடி ஆசை கருகிவிட்டதே :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குசுவாரஸ்யமான பகிர்வு:)!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குBODY க்கு தாடி தானே அழகு!
பதிலளிநீக்குஅதானே.... உங்களுக்குப் புரியுது.... இவங்க யாருக்கும் புரியலையே!.... :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மூவார் முத்தே.
தாடி சில மனிதர்களுக்கு ட்ரேட் மார்க் மாதிரி ! கிறிஸ்மஸ் தாத்தா, பெர்னாட்ஷா , இவங்கள தாடி இல்லாம கற்பனை பண்ண முடியுமா ?
பதிலளிநீக்குதாகூர் படத்தை ரோஷனிகிட்ட காட்டுங்க ...அவங்க " டாடி, இந்த
தாடி யாரு?"ன்னு உங்களயே கேட்பாங்க !
நல்ல ஐடியா மூவார் முத்தே.... இன்னிக்கே கேட்டுடறேன்
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அய்யா
பதிலளிநீக்குதங்களின் குறுந்தாடி கதையும் அருமை தேவனின் தாடிகதையும் மிக மிக அருமை. உங்களின் அப்பா வாழ்க மற்ற opposite parties பல்லாண்டு வாழ்க.
அன்புடன்
விஜய்
//opposite parties பல்லாண்டு வாழ்க....// அட அப்ப நீங்களும் அதே கட்சி தானா... ம்ம்ம்ம்ம்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
ஆத்’தாடி’! அவங்கதான் செயிச்சாங்களா!
பதிலளிநீக்குஎப்பவுமே அவங்க தான் ஜெயிக்கணும் அண்ணாச்சி...... :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].
தேவன் பெயரைப் பார்த்துட்டு ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை நீங்கள். நல்ல தாடிக் கதை. :))))
பதிலளிநீக்குரசித்தீர்களா.... நன்றிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
தாடின்னாலே டீ ஆர் தான் ஞாபகத்துக்கு வருவார். :)) இனி உங்க ஞாபகமும் வரலாம் சகோ
பதிலளிநீக்குபதிவை ரசித்தேன்
டி.ஆர். தாடி வேற..... நம்ம தாடி வெறும் குறுந்தாடி! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.மிக சுவாரஸ்யம்.நன்றி பகிர்வுக்கு.
பதிலளிநீக்குவலைச்சரத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆசியா உமர்.
நீக்கு