மஹாகும்பமேளாவிற்குச் சென்று வந்தேன் என இத்தனை பகுதிகளாகச் சொல்லிக்
கொண்டிருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே... ஆனால் விழாவினைப் பற்றிய தகவல்கள்
ஒன்றும் தரவில்லையே என உங்களில் சிலராவது நினைத்திருக்கக் கூடும். நீங்கள் நினைத்தது
டெலிபதி போல எனக்கும் தெரிந்துவிட்டதால், மஹாகும்பமேளா எனும் பிரம்மாண்டத்தினைக்
கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.
பட உதவி: கூகிள் ஆண்டவருக்கு நன்றி.
- மகரசங்கராந்தி நாளான ஜனவரி 14 ஆம் தேதி துவங்கி மஹா சிவராத்திரி நாளான மார்ச் 10 ஆம் தேதி வரை 56 நாட்கள் நடைபெற்றது மஹா கும்பமேளா.
- இந்த கும்பமேளாவில் பங்குபெற்ற மக்களின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். இதில் வெளி நாட்டவர்கள் மட்டுமே பத்து லட்சம். மௌனி அமாவாசை தினமான ஃபிப்ரவரி 10 ஆம் தேதி மட்டும் இங்கே வந்த மக்களின் தொகை மூன்று கோடி.
- மேளாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி – 1200 கோடி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களுக்கு மேளா சமயத்தில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு.
- உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு வரிகள் மூலமும் மற்ற வழிகளிலும் கிடைக்கக் கூடிய தொகை 12000 கோடி என மதிப்பிடப்பட்டது. எத்தனை கோடி அரசுக்குப் போனது மீதி எங்கே போனது என்ற விவரம் ”எல்லாம் வல்லவனுக்கே” வெளிச்சம்!
- போடப் பட்ட புதிய சாலைகள் – 156 கிலோ மீட்டர். புதிய தண்ணீர் குழாய்கள் – 575 கிலோ மீட்டர். புதிய மின்சாரக் கம்பிகள் 800 கிலோ மீட்டர். புதியதாய் திறக்கப்பட்ட மின்சார விநியோகக் கூடங்கள் – 48.
- பாதுகாப்பிற்கு பணியில் இருந்த காவல்காரர்கள் 30000 பேர். தவிர மத்திய அரசின் 72 படைகள். அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் 120.
- இத்தனை பேருக்கும் உணவு, சுகாதார வசதிகள் என அனைத்தும் செய்ய நிச்சயம் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அமைக்கப்பட்ட தற்காலிக பொது கழிப்பறைகள் மட்டுமே 35000. இருந்தும் பல மக்கள் வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்தியிருந்தது கண்கூடு!
- 24 மணி நேர மருத்துவ வசதி, எப்போதும் பணியில் 25 மருத்துவர்கள், 120 ஆம்புலன்ஸ் வண்டிகள், 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை என நிறைய ஏற்பாடுகள்.
- காணாமல் போனவர்கள், வழி தவறிப் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்ய வசதிகள்.
- பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகள் ஸ்விட்சர்லாந்து தருவிக்கப்பட்டவை. அதற்கான வாடகை மட்டுமே பல கோடிகள்....
- மஹாகும்பமேளா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு 1936 ஹெக்டேர்.
- மேளாவினைப் பற்றிய தகவல்களை நேருக்கு நேர் ஒளிபரப்பு செய்ய ஊடகங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.
இப்படிப் பட்ட பிரம்மாண்டமான கும்பமேளாவில் சில சிக்கல்களும், விபத்துகளும்
ஏற்படாமலில்லை. அலஹாபாத் ரயில் நிலையத்தில் நடந்த விபத்து உங்களுக்கும்
தெரிந்திருக்குமென்பதால் அதைப் பற்றி இங்கே அதிகம் சொல்லப் போவதில்லை.
இந்த கும்ப மேளா சமயத்தில் நாங்களும் அங்கே சென்று, கங்கை, யமுனை மற்றும்
சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் சங்கமத்தில் குளித்து விட்டு வந்தது மட்டுமல்லாது
உங்களுக்கும் அங்கிருந்து சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.
படித்த உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே....
காலையில் சங்கமத்தில் நீராடி மாலையில் அலஹாபாத் நகரில் இருக்கும் சங்கர் விமான மண்டபம், மற்றும் படே ஹனுமான் கோவில் ஆகியவற்றைப்
பார்த்துவிட்டு அன்றிரவே புது தில்லி திரும்பினோம். வழக்கம் போல பீஹாரிலிருந்து
வருகின்ற வண்டியில் வந்ததால் பீஹாரிகளின் குட்கா வாசத்தோடு தில்லி வந்து
இறங்கியபோது நாங்களும் ஒரு வித மயக்கத்தில் இருந்தோம் என்பதைச் சொல்லவும்
வேண்டுமா!
மீண்டும் சற்றே இடைவெளிக்குப் பிறகு வேறொரு பயணம் பற்றிய தகவல்களோடு உங்களைச்
சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வாவ்!!! தகவல்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅதென்ன ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வாடகைக்கு எடுப்பது?பேசாம அவைகளை வாங்கி நிரந்தரமா கெஸ்ட் ஹவுஸ்ஸா பயன்படுத்தலாமே! பயணிகளுக்கு வசதியாக இருக்குமில்லையா?
கிடைச்ச புண்ணியத்தில் எங்களுக்கெல்லாம் பங்கு உண்டா?:-)
பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் இப்படி தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வாடகைக்கு எடுத்திருக்கலாம்.... [ஒரு முறை வாங்கி வைத்தால் ஒரு முறை மட்டுமே கமிஷன் அடிக்க முடியும் என்பதும் காரணமாக இருக்கலாம்! :(]
நீக்குகிடைச்ச புண்ணியத்தில் எல்லோருக்கும் பங்கு கொடுப்பதற்குத் தானே இங்கே பகிர்ந்ததன் காரணம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
மஹா கும்பமேளாவில் பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகள் ஸ்விட்சர்லாந்து தருவிக்கப்பட்டவை. அதற்கான வாடகை மட்டுமே பல கோடிகள்.... விடுதிகளையே தருவிக்கின்றார்களா, வியப்பிற்குரிய செய்தி. தங்களின் பயணம் தொடரட்டும்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குமக்களின் எண்ணிக்கை 12 கோடி...! 35000 கழிப்பறைகள்...!!! வியக்க வைக்கும் பல தகவல்கள்... நன்றி...
பதிலளிநீக்குவாசனையே மயக்கம் ஏற்படுமோ...?
வாசனையே மயக்கம் ஏற்படுமோ..... உங்களைத் தவிர சக பயணிகள் அனைவரும் குட்கா சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கும்போது மயக்கம் வரத்தானே வரும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!
படிக்காத ஒரு சில பகுதிகளையும் படித்து விட்டு வந்து விட்டேன்.
பதிலளிநீக்குகும்ப மேளா பற்றிய தகவல்கள் அருமை. அனைத்துப் பகுதிகலயும் நீங்கள் எடுத்த படங்கள் கண்ணை விட்டு அகல மறுக்கின்றன
அனைத்து பகுதிகளையும் படித்ததில் மகிழ்ச்சி....
நீக்குபடங்களைப் பாராட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளி.
தகவல்கள் அருமை. சிறப்பான தொடர். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குகும்பமேளாபற்றி சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குபயணக்கட்டுரை அருமை. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குகும்பமேளா எத்தனை பிரம்மாண்டமான நிகழ்வு என்று செய்யப்பட்ட ஏற்பாடுகளிலிருந்து தெரிகிறது. படிக்கும்போது நாமும் ஒரு முறையாவது போய் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. அடுத்தமுறை ரொம்ப வயசாயிடுமே!
பதிலளிநீக்குஉங்கள் புகைப்படங்களைப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளுகிறேன்.
எங்களுக்கும் புண்ணியத்தில் பங்கு என்று சொல்லிவிட்டீர்கள், அப்புறம் என்ன?
நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குஉங்களது பதிவுகள் அனைத்தும் அருமை இருப்பினும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
பதிலளிநீக்குஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்
தகவலுக்கு நன்றி பாலசுப்ரமணியன்.
நீக்குகும்பமேளா கூட்டத்தில் இடிபடாமல் இருக்கும் இடத்திலிருந்து நன்கு பார்த்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குகும்பமேளா கண்டு மகிழ்ந்தோம். பயணங்கள் தொடரட்டும்....... வருகின்றோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குசென்ற கும்பமேளாவின் போது அந்தக்கோலாகலத்தை நேரில் கண்டு வியந்தவன் நான்.ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் சிறப்பாக நடந்தது அது.நான் வசித்த அலோபி பாக் ,சங்கமத்துக்கு அருகில்.பழைய நினைவுகள் அனைத்தையும் கிளறி விட்டது உங்கள் தொடர் பதிவு!அருமை வெங்கட்
பதிலளிநீக்குஉங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது எனத் தெரிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
12 கோடி..... அப்பாடி!
பதிலளிநீக்குவிவரங்கள் அனைத்தும் சுவாரஸ்யம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு