இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஒருவர் வீட்டில் சிறுமிக்கு பிறந்த நாள். மகளின் பிறந்த நாளுக்காக அம்மா கேசரி செய்து தந்தாராம். அதை எங்களுக்கும் கொடுத்தார்.
சிறிய பாத்திரத்தில் ஒரு மூடி போட்டு கேசரி என்று சொல்லிக் கொடுத்தார்.
பாத்திரத்தின் மூடியை விலக்கிப் பார்த்தேன்.
கேசரி இப்படித்தான் இருந்தது!
அடடா, இது என்ன பச்சை நிறத்தில் இருக்கிறதே? என்று யோசித்தேன். கேசரி என்று சொன்னார்களே, ஒரு வேளை பிஸ்தா பருப்புகளை அரைத்துச் சேர்த்து செய்திருப்பார்களோ, அதான் பச்சை வண்ணமோ என்று நினைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லை கீரை ஏதாவது சேர்த்திருப்பார்களோ?
ஏற்கனவே இந்த மாதிரி கேசரி உண்டு பழக்கப்பட்ட எனது மனைவி, சாப்பிட்டு பாருங்க “நல்லாவே” இருக்கும், என அந்த நல்லாவை கொஞ்சம் அழுத்தியே சொன்னார். சரி என்று கொஞ்சம் பச்சை கேசரியை எடுத்து வாயில் போட்டேன். பச்சைக் கலரில் ரவா உப்புமா சாப்பிட்ட ஒரு உணர்வு! என்ன இது? என்று குழப்பத்துடன் மனைவியைப் பார்க்க அவர் சொன்னார் – “ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று சிரித்தபடியே கேட்டு, ஒரு கதையும் சொன்னார்.
அச்சிறுமியின் தாய்க்கு நெய் அறவே பிடிக்காதாம். அதனால் நெய் வீட்டில் வாங்கவே மாட்டாராம். அவருக்குப் பிடிக்காது என்பதால், வீட்டில் உள்ளவர் எவருக்கும் பிடிக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு இட்டு விட்டார் போல! அதனால் கேசரி கூட நெய் சேர்க்காது ரிஃபைண்ட் எண்ணை தான் உபயோகிப்பாராம் – முந்திரியை வறுக்கவும் எண்ணை தான்!
போலவே கேசரிக்கு சாதாரணமாக பயன்படுத்தும் கேசரி பவுடர் தாய்க்குப் பிடிக்காது. அதனால் அவருக்கு மிகவும் பிடித்த பச்சை வண்ணத்தில்
Food color சேர்த்து தான் கேசரி செய்வாராம். இப்படி கேசரியின் எந்த குணங்களும் இல்லாது இருக்கும் பச்சை கேசரியைத் தான் செய்வாராம். தனக்குப் பிடிக்காது என்று இப்படி ஒரு கேசரி செய்து, அது தான் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்றும் சொல்கிறார்.
முந்திரி போடாமல், சிறிது கடுகு தாளித்து, கருவேப்பிலை சேர்த்திருந்தால் நிச்சயம் உப்புமாவாகத் தான் இருந்திருக்கும்.
இப்படி ஒரு கேசரி சாப்பிட்டு ஓடாத குறையாக மீதி இருந்த பச்சை கேசரியிடமிருந்து தப்பினேன். இல்லையெனில் நான் தான் சாப்பிட்டு தீர்க்க வேண்டுமாம்! எதற்கு இந்த வீண் வம்பு!
இப்படி இந்த பெண்மணியிடம் நிறைய சரக்கு இருக்கிறது! தேங்காய் பர்ஃபி, நெய் விடாது தேங்காய் எண்ணை விட்டு செய்வார்களாம். சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவினை நெய்யில் வறுக்காது, சேமியாவை அப்படியே தண்ணீரில் போட்டு வேக வைத்து, சர்க்கரை, பால் சேர்த்தால் பாயசம். மைசூர் பாகு நெய் விடாது செய்ய முடியுமா என்று இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். டால்டாவும் பிடிக்காது!
அதனால் செய்யும் சில இனிப்புகளும் எண்ணை விட்டு தான் செய்வார்கள். இது போலவே ஒரு சில காய்கறிகள் தனக்குப் பிடிக்காது என்பதால் அந்த காய்கறிகளை வாங்குவதும் இல்லை, சமைப்பதும் இல்லை!
பச்சை கேசரி கொடுத்து விட்டு இப்படி ஒரு யோசனையும் சொல்வார்களாம் – அந்த யோசனை – “வேணும்னா நீங்க மேலே கொஞ்சம் நெய் விட்டு சாப்பிடுங்க!” அடடா என்னவொரு யோசனை!
அது சரி, கேசரி சுவையாகச் செய்வது எப்படி என எனக்குத் தெரியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் விதமாய் இங்கே குறிப்பு தருகிறேன்!
கேசரி செய்வதற்கு முக்கியமான தேவை ரவை, சர்க்கரை, கேசரி கலர், ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் நெய். சரி தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டாயிற்று. அப்படியே எடுத்து வைத்துவிட்டால் கேசரி தானாக வந்து விடுமா? கொஞ்சம் உழைக்கத் தான் வேண்டும்!
ஒரு சின்ன வாணலியில் [இப்போது ஹிந்தி தெரியாத மறத்தமிழர்கள் கூட கடாய் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!]
2 தேக்கரண்டி நெய் விட்டு, உலர் திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை பொன் [அதாங்க தங்கம்!] நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியாக எடுத்து கைக்கு எட்டாத தூரத்தில்கொஞ்சம் தள்ளி வைத்த பின் [இல்லை என்றால் நம் கை சும்மா இருக்காது! கேசரில போட்டு தான் சாப்பிட வேண்டும் என எதுவும் ஆணை இருக்கா என்ன? சும்மாவே சாப்பிட்டு விடுவோமே!], வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு கப் ரவையைப் போட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். ரவை நன்கு வெந்ததும் ஒண்ணே முக்கால் கப் சர்க்கரை, சிறிதளவு கேசரி கலர் ஆகியவற்றை சேர்த்துக் கிளற வேண்டும். ஒட்டாமல் சேர்ந்து வரும் வரை இடையிடையே சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலியோடு இருக்கும் கேசரியை கொஞ்சம் நெய் சேர்த்து, ஏலப்பொடி தூவி இறக்கி வைத்து வறுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை, முந்திரியைக் கலந்தால் கமகமக்கும் சுவையான கேசரி ரெடி!
ரவையைச் பொன்னிறமாக
வறுப்பதிலும் நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான்
சூட்சமம் உள்ளது. போலவே, மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும் கேசரி
நிறமூட்டியை சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும்.
என்ன நண்பர்களே இன்றைக்கு உங்கள் வீட்டில் கேசரி உண்டா? இல்லை நீங்களும் பச்சை கேசரி செய்து பார்க்கப் போகிறீர்களா?
மீண்டும் சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து……
கூடிய வரையில் food color சேர்க்காமல் இருப்பதே நல்லதென்கிறார்கள். இதில் பல வண்ணங்களில் கேசரியா? பகிர்வும் உங்கள் குறிப்பும் அருமை.
பதிலளிநீக்குfood color சேர்க்காமல் இருப்பது தான் நல்லது. ஆனாலும் சிலர் சேர்த்துத் தான் செய்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
பச்சை நிறமே... பச்சை நிறமே...
பதிலளிநீக்குஇன்றே செய்து பார்க்கிறோம்...
பச்சை கேசரியா இல்லை நல்ல கேசரியா எதை செய்து பார்க்கப் போறீங்க தனபாலன்?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லவேளை... அந்த அம்மையாருக்கு சர்க்கரை என்றாலே பிடிக்காது என்று உப்பைப் போட்டு கேசரி(?) செய்யாமல் போனார்களே... அந்த மட்டும் நீர் பிழைத்தீர்... ஹா... ஹா... ஹா...
பதிலளிநீக்குஉப்பைப் போட்டு கேசரி.... டெரரான ஐடியாவா இருக்கே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.
ஓட வைத்த கேசரி! தலைப்பை பார்த்ததும் ஸ்ரீரங்கத்திலும் கேசரி வந்துவிட்டதோ என்று நினைத்தேன். இப்போதெல்லம் ஊருக்குள் சிறுத்தை வந்தது, புலி வந்தது என்று அடிக்கடி செய்தி வருகின்றதே! (ஆனாலும் பாயும் கேசரியை விட பச்சை கேசரி பயங்கரம்தான்)
பதிலளிநீக்குபாயும் கேசரியை விட பச்சை கேசரி பயங்கரம்தான் - அதே தான்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....
உப்பைப்போட்டால் உப்புமா ஆகிவிட்டுப் போகிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குபச்சை நிற கேசரி பயமுறித்திய விதம் கலகலகல....
பதிலளிநீக்குசெய்முறைவிளக்கம் ...சபாஷ்
பாலகணேஷ்...சார் கமண்ட் சூப்பர்....!!! உப்பு...நினைத்தாலே முழி பிதுங்குதே.....ஹஹஹா...!!!
தம 5.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
நீக்குஅடுத்தது சிவப்புப்பாயசமோ!
நீக்குசிகப்பு பாயசம் - நான் வரல இந்த விளையாட்டுக்கு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
கவுனி அரிசி தான் சிவப்பரிசினு நினைக்கிறேன். அதிலே பாயசம் உண்டு வெங்கட்! :) எதுக்கும் தேனம்மை கிட்டே கேட்டுக்கணும். செட்டிநாட்டில் கவுனி அரிசிப் பாயசம் ரொம்பவே பிரபலம். :)
நீக்குதிருவன்ந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோயிலில் கேரள சிவப்பு அரிசியில் பால் பாயசம், அம்பலப்பிழையிலும் இந்தப் பாயாசம் தான். அம்பலப்புழை பாயாசம் வெகு பிரசித்தி. மிக மிக சுவையுடன் இருக்கும். வற்றி குறுக்கிய பாலின் சுவை. வீட்டிலும் செய்வதுண்டு. எங்கள் இருவர் வீட்டிலுமே....கீதா நன்றாகச் செய்வார்...
நீக்குகவுனி அரிசி கருப்பு நிறத்தில் இருக்கும் கீதாம்மா...சிவப்பரிசி வேற.... கேரளத்தில் இந்த சிவப்பரிசி சாதம் தான் பல உணவகங்களில்.....
நீக்குகேரளத்தில் முக்கிய உணவே இந்த சிவப்பரிசி சாதம் தானே. அதனால் பாயசமும் இதில் தான் போல. நானும் இந்த சிவப்பரிசி பாயசம் சாப்பிட்டதுண்டு - கேரள நண்பர் வீட்டில்.
நீக்குஅட? நேத்துத் தான் வந்திருந்த விருந்தினர்களுக்குக் கேசரி செய்தேன். அவங்க யாரும் வெளியிலே செய்த உணவைச் சாப்பிட மாட்டாங்க என்பதால் வீட்டிலேயே கேசரி, இட்லி, சாம்பார், சட்னி, காஃபியோடு உபசரித்தோம். படம் எடுக்கணும்னு இருந்தேன். ஆனால் கேசரி பண்ணிட்டு இருக்கும்போதே வந்துட்டாங்க. அப்புறமா எடுக்கக் கூடாதுனு விட்டுட்டேன். :))
பதிலளிநீக்குஎப்பவும் போல படம் எடுக்க விட்டுப் போச்சுன்னு சொல்லுங்க! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
ரவை வறுக்கும்போதே கேசரிக்குத் தேவைப்படும் நெய்யை முழுதும் ஊற்றி வறுத்துக் கொண்டு, சர்க்கரை, கேசரிக் கலர் சேர்ந்துக் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கிளறினால் சீக்கிரம் ஆகும். ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்தால் சர்க்கரை கரைந்து பாகாகி மீண்டும் சேர நேரம் எடுக்கும். :)))) ஒரு தரம் இப்படிப் பண்ணிப் பாருங்க. அப்புறமா விட மாட்டீங்க. ரவை வறுக்கையிலேயே வேறொரு பாத்திரத்தில் தேவையான நீரைக் கொதிக்க வைத்துத் தயாராக இருக்கணும். :))))
பதிலளிநீக்குகூடுதல் குறிப்புகளுக்கு நன்றி கீதாம்மா....
நீக்குpine apple kesari or pudding செய்யறபடி செய்தால் சூப்பரா இருக்கும். :))))
பதிலளிநீக்குThanks Geethammaa.....
நீக்குஅன்பின் பாலகணேஷ் அவர்களுடைய கருத்துரை கண்டு சிரிப்பொலி தான் மிச்சம்!..
பதிலளிநீக்குநிஜமாகவே நீங்கள் தப்பித்தீர்கள்..
அன்பின் பத்மநாபன் அவர்களின் - பாயும் கேசரி என்று சிலேடை வேறு!..
நல்லவேளை - பச்சை கேசரியால் கைகலப்பு வராமல் கலகலப்பு வந்தது!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குஅடுத்தது சிவப்புப்பாயசமோ!
பதிலளிநீக்குஆஹா இரண்டு முறை சிவப்பு பாயசம்! :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
உங்கள் மனைவி "நல்லாவே" என்று அழுத்தி சொல்லும்போதே கேசரி எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க வேணாம்.
பதிலளிநீக்குஆமா நெய் இல்லாத கேசரி உடம்புக்கு ரொம்ப நல்லதாமே, அப்படியா?
நெய் இல்லாத கேசரி உடம்புக்கு நல்லது.... ஒரு கிலோ ஆஸ்திரேலியாவுக்கு பார்சல் அனுப்பிடறேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
இந்தியாவில் இருக்கிறவர்களுக்குத் தான், நெய் இல்லாத கேசரி உடம்புக்கு நல்லதாம், அதனால எனக்கு அனுப்ப நினைச்சதை நீங்களே சாப்பிடுங்க, எனக்கு நல்லா நெய்விட்டு,நெய்யிலேயே முந்தரிப் பருப்பை வறுத்து போட்ட கேசரியை ரெண்டு கிலோவா அனுப்பிவையுங்க
நீக்குஆஹா அங்க கொஞ்சம் அனுப்பலாம்னு பார்த்தா தப்பிச்சுக்கறீங்களே! :))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
பச்சைக் கேசரி - 'நல்லாவே' இருக்கும்ன்னு உங்களுக்கு தகவல் கொடுத்ததும் யோசிச்சிருகணுமே அண்ணா...
பதிலளிநீக்குரொம்ப தங்கமான மனுஷி போல... தான் விரும்புவதையே மற்றவர்கள் சாப்பிட நினைக்கிறார்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஇனிப்புகள்பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குஹா....ஹா...ஹா...
பதிலளிநீக்குநல்ல அனுபவம்தான்! "கேசரி - பலகாரத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை!"
ஹா...ஹா...ஹா...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமிகவும் அழகாக நகைச்சுவை கலந்த பதிவு பகிர்வுக்கு நன்றி செய்து பார்க்கிறோம்... த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குகேசரி தானே, சரி சரி, பண்ணிட்டா போச்சு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குவண்ணங்களில் கவனம் தேவை என்பதை தங்களுடைய கேசரிப்பதிவு உணர்த்திவிட்டது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபச்சை எனக்கு பிடிச்ச நிறம் என்றாலும் இந்த பச்சைக் கேஸரி பார்க்கவே பயங்கரமா இருக்கே!
பதிலளிநீக்குஇது இது இந்த நிறத்துலே'தான்' இருக்கணுமுன்னு மனசுக்குப் பழகிப்போச்சோ என்னவோ!!!!
பழகிப் போயிருக்கும்.... இருக்கலாம் டீச்சர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
ஹஹஹ்ஹ முதல் தடவை பச்சைக் கேசரி கேள்விப் பட்டது. அதுவும் எண்ணையில்....பாவம் நீங்கள்.....அந்த அம்மாவைப் பார்த்தாலே ஓடுவீர்களே இனி...?!!! அஹஹ்ஹ்ஹ ஒன்று மஞ்சள் நிறம், இல்லை ஒருவித மான ஆரஞ்சு நிறம் இல்லையென்றால் கலர் எதுவும் சேர்க்காதது. கோயம்பத்தூர் ஆனைக்கட்டி தயானந்த ஸரஸ்வதி ஆஸ்ரம்த்தின் உணவில் கலர் சேர்க்காமல் தான் கேசரி வழங்கப்படும். அருமையாக இருக்கும்...ஆஸ்ரம்த்து சூழலே அருமையாக இருக்கும்...
பதிலளிநீக்குனமக்கெல்லாம் ஆஸ்ரமம் சென்றாலும் சாப்பாட்டின் மீதுதான் கண் இருக்கும்...அஹ்ஹா
கேசரி செய்யும் போது ரவை வறுக்கும் போது, மற்றொரு அடுப்பில் வெநீர் கொத்திக்கவைத்து அல்லது ரவை வறுத்து எடுத்துக் கொண்டு , தண்னீரைக் கொதிக்கவைத்து அதில் ரவையைச் சேர்த்து, அது முற்றிலும் கெட்டியாகும் முன், அதே சமயம் ரவை வெந்திருக்கும் பருவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து....கிளறுவதுண்டு....
விரிவான கருத்துரைக்கு நன்றி துளசிதரன் ஜி!
நீக்குநல்லாவே" எப்படி உங்களுக்குப் புரியாமல் போச்சு வெங்கட் ஜி...அஹஹஹ்..
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் டயட் கேசரி என்று கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது....அதென்ன டயட் கேசரி தெரியவில்லை.....ஒரு வேளை இந்த அம்மா ஏதாவது கான்ட்ராக்ட் எடுத்துருப்பாங்களோ....ஏதாவது கல்யாணத்தில் டயட் கேசரின்னா பாத்துக்கங்க....
சில சமயங்களில் ட்யூப் லைட்டாக இருந்து விடுகிறோம் துளசிதரன் ஜி!
நீக்குமுதலில் தலைப்பைப் பார்த்ததும், ஹனுமாரின் தந்தை கேசரி ஏதாவது எதிரியை ஓட வைத்தக் கதையாக இருக்குமோ என்று எண்ணி வந்தால்...ஹஹஹஹ் செம....
பதிலளிநீக்குஅட உங்கள் எதிர்பார்ப்பு வித்தியாசமா இருந்திருக்கே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
பச்சைக் கேசரி பார்க்க அருமையாத்தான் இருக்கு.. ஆனா சாப்பிட்ட உங்க நிலைமையை நினாச்சாத்தான் பாவமாக இருக்குறது... :-) கேசரி செய்வது எப்படி என்கிற விளக்கம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணிமாறன்.
நீக்கு
பதிலளிநீக்குகேசரி என்றால் சிங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இனிமேல் அந்த அம்மணி வீட்டு விசேஷத்தில் கேசரி என்றால், எல்லோரும் தப்பித்து ஓடப் பார்ப்பார்கள்.
த.ம.8
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குஆஹா, படம் ஒரு தரம் எடுக்கலைனா எடுக்கவே இல்லைனு அர்த்தமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதோ பாருங்க, இங்கே பாருங்க, படமும், செய்முறையும்! http://geetha-sambasivam.blogspot.in/2014/10/blog-post.html
பதிலளிநீக்குபடம் பேஸ்ட் ஆகலை! ஆனால் அந்தச் சுட்டியிலே போய்ப் பார்த்துக்கலாம். :)))))
ம்ம்ம்.... :)) நிறைய தடவை இப்படி எழுதி இருக்கீங்க கீதாம்மா! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எல்லாம் சரி நண்பரே பச்சை கலர்தான் பிடிக்கும் என்பதற்காக பட்டை அரிசியில்தான் சோறு வடிப்பார்களோ....
பதிலளிநீக்குதமிழ் மணம் - நவரத்தினம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஅந்த பச்சை கலர் தான் என்னவோ ஏதோ என்று என்னையும் இழுத்து வந்துவிட்டது. :-))
பதிலளிநீக்குநகைசுவையாக கேசரி செய்முறை சொன்னது ரொம்ப பிடிச்சது... வந்திருக்கும் கமெண்ட்ஸ் அத்தனையும் படிச்சேன் , அருமை. கீதாமா சொன்ன குறிப்பை நானும் மனசுல குறிச்சுகிட்டேன் .
வாழ்த்துகள் வெங்கட்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா.
நீக்குgo green kesari !
பதிலளிநீக்குஹா ஹா ! இப்படித்தான் சமைக்க ஆரம்பித்த புதிதில் கேசரியும்(தண்ணீராய்) ஓடும், கேசரியை சாப்பிட வருபவர்களும் ஓடுவார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குபச்சை கலர் கேசரி முதன்முறை கேள்வி படுகிறேன்.
பதிலளிநீக்குஇனி ஆதியின் குறிப்பை கவனிக்க வேண்டும் வெங்கட்.
அருமையான கேசரி செய்முறை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குபச்சைக்கலர் கேசரி பார்வைக்கு பசுமைதான் வயிற்றுக்குத்தான் கெடுதல்! விவரித்த விதம் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!
நீக்குஹா ஹா ஹா வந்ததும் அது சிவன் தந்ததும் அது என்பார்கள்.... எங்கு போனாலும் உங்க நிலைமை இப்பூடி ஆகிடுதே... ஆனாலும் கேசரி நல்லாத்தானே இருக்கு, மீயும் ட்றை பண்ணப்போறேன்ன்ன்ன்:).
பதிலளிநீக்குஓ நீங்களும் ட்ரை பண்ணப் போறீங்களா... நான் வரல இந்த விபரீத வ்விளையாட்டுக்கு...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.