ஒரு
துடப்பத்தால் என்ன செய்துவிட முடியும்? வீட்டைப் பெருக்க பயன்படும் என்று மட்டும்
தானே யோசித்து இருப்பீங்க! கொஞ்சம் கோபம் வந்தால் பெண்களுக்கு இவை ஆயுதமாகவும்
பயன்படும் என்பதும் சில அனுபவஸ்தர்களுக்கு தெரிந்த விஷயம்! பல உணவகங்களில்
தோசைக்கல்லை நடுநடுவே தண்ணீர் விட்டு துடப்பத்தால் தட்டி சுத்தம் செய்வதும்
பார்த்திருக்கிறோம்.
கட்சி
ஆரம்பித்து வெகு சீக்கிரமாக அவர்களது சின்னமான துடப்பத்தினால் மற்ற பழம்பெரும்
கட்சிகளையும் பெருக்கித் தள்ளிவிட்டார்களே! இப்படி ஒரு துடப்பக்கட்டையை வைத்து வேறு என்ன செய்துவிடமுடியும்?
இப்படித்
தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்! சென்ற ஞாயிறன்று சூரஜ்குண்ட் மேளாவிற்குச்
செல்லும் வரை! NCT என்று சொல்லப்படும் National
Capital Territory பகுதிகளில் ஒன்றான ஃபரிதாபாத் அருகே
இருக்கும் ஒரு சிறு கிராமம் சூரஜ்குண்ட். ஒவ்வொரு வருடமும் ஹரியானா சுற்றுலாத்துறை
இந்த சூரஜ்குண்ட்-இல் ஒரு மேளா நடத்துவார்கள். பதினைந்து நாட்கள் நடக்கும் இம்மேளா
ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.
இங்கே
ஒவ்வொரு மரத்திலும் துடப்பம் வைத்து அலங்கரித்து இருந்தார்கள். ஆஹா என்ன ஒரு யோசனை! துடப்பக்கட்டை தானே என்று
நினைத்தாலும் அந்த அலங்காரமும் பார்க்க நன்றாகத் தான் இருந்தது! இந்த மேளாவில்
எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி....
High Heels போட்டு சாதாரணமா நடக்க தடுமாறும் பலர் இருக்க, இரண்டு குச்சிகளில் சர்வசாதாரணமாக நடக்கும் கலைஞர்கள்!
ஏனுங்க்ணா, இது என்ன?
இது அமர்ந்து கொள்ள ஓர் இருக்கை!
ஆமை தன்னைப் பாதுகாக்க ஒரு ஓடு கேட்க,
அது மேலேயே உட்கார வசதி செய்துட்டாங்களே!
ஹரியானாக் காரர்கள் பால், தயிர், வெண்ணை போன்றவற்றை அதிகம் உண்பவர்கள். அதனால் கொஞ்ச பலசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் உறங்கும் கட்டில் அவர்களைத் தாங்க வேண்டாமா? இது கட்டிலின் ஒரு கால் மட்டும்! யானைக் கால் மாதிரி இருக்குங்கோ! கட்டில் அளவும் 7 அடிக்கு 5 அடி!
ஹூக்கா புகைக்கும் ஹரியானா மாநிலத்தவர். ஹூக்கா புகைப்பது இவர்களது மிகவும் முக்கியமான பொழுதுபோக்கு!
அப்படிக்கா போய் ஃபுட் கோர்ட்-ல சாப்பிட்டா நிச்சயம் மற்றதும் தேவைன்னு சொல்லாம சொல்றாங்களோ!
அலங்கார விளக்குத் தோரணங்கள்
மேளா என்றால் நடனம் இல்லாமலா? சில கலைஞர்கள் ஆடிக்கொண்டிருக்க, களத்தில் குதித்தது இந்தச் சிங்கம்! ஒரே ஆட்டம் தான்!
ஹரியானா மாநிலப் பெண்மணி - அவரது பாரம்பரிய உடையில்...
சத்தீஸ்கர் மாநில நாட்டிய மங்கைகள் - நடந்து செல்லும்போது கூட ஒரு வரிசையில் தான் செல்கிறார்கள்!
சத்தீஸ்கர் நாட்டு பாரம்பரிய நடன உடையில் ஒரு மூதாட்டி - அவரது அனுபவம் - அவரது முகச் சுருக்கங்களில் தெரிகிறதோ!
பாரு பாரு நல்லா பாரு..... பயாஸ்கோப்பு படத்த பாரு.....
தனது இசைக்கருவியுடன் ஒரு இசை விற்பன்னர் - சிலையாக!
துடப்பக்கட்டை அலங்காரம்! மரங்களில்....
மின்விளக்குகள் பொருத்த ஒரு அழகிய கலைப்பொருள்! அதிலே தொங்கும் கயிற்றுப் பொம்மைகள்.
முறம் அலங்கரிக்கவும் பயன்படும் என்று சொல்லாமல் சொல்லும் படம்
இச்சிலை ”தலா” எனும் இடத்தில் [சத்தீஸ்கர்] அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த ”ருத்ர சிவா” வின் பிரதி.... தனக்குள் எல்லாம் அடக்கம் எனச் சொல்கிறாரோ சிவபெருமான்!
சத்தீஸ்கர் மாநில நடனக் கலைஞர்
என்ன
நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
டிஸ்கி-1: இரண்டு வருடங்களுக்கு முன்னர்
சூரஜ்குண்ட் மேளாவில் எடுத்த சில படங்கள், மேளா பற்றிய மேலதிக தகவல்கள் எனது
மூன்று பதிவுகளில் உண்டு.
அப்பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே...
சூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க! – முதல் பகுதி
ஹொளிகே – செய்ய ஒரு சுலப வழி
டிஸ்கி-2: இங்கேயும் நிறைய பிள்ளையார் சிலைகள் இருந்தன. அவற்றின் புகைப்படங்கள் அடுத்த ஞாயிறில் தனிப்பதிவாக!
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
உங்கள் படங்களையே தொகுத்து வெளியிடலாம்.. அவ்வளவு அழகு..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
நீக்குரொம்ப நல்லா இருக்கு. நம்மாளு நாம் பார்த்தரியாத, வாய்ப்பில்லாத வட இந்தியாவைப் பற்றிப் படத்துடன் எழுதுவது, அவர்களின் 'நாகரீகத்தையும் பழக்கத்தையும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது. ம்.ம்... எனக்கு ஹிந்தி தெரியலையே.
பதிலளிநீக்குஹிந்தி அப்படி ஒன்றும் கஷ்டமில்லை நண்பரே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
படங்கள் மிக அழகு. துடப்ப அலங்காரம் கூட பார்க நன்றாகத்தான் இருக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குஅதிகம் ரசித்தோம். ஒட்டுமொத்தமாக நூல்களிலும் படிக்கமுடியாதனவற்றை, நேரில் சென்றாலும் இந்த அளவு காணமுடியாதனவற்றைத் தாங்கள் பகிர்ந்து சிறப்பான பணியை நிறைவேற்றியுள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபாரதத்தின் பிற பகுதிகளில் மிளிரும் கலாச்சாரங்களை அறிய முடிகின்றது.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு.. இனிய பதிவு!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குபடங்கள் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குஅந்த //சில அனுபவஸ்தர்கள் //யார் ? நண்பரே...
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அருமை
தமிழ் மணம் - நால்வர் அணி.
பல அனுபவஸ்தர்கள் உண்டே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் அழகு! அந்த மாநில பாரம்பரியம் கலை நேர்த்தியை உணர வைத்தன! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஸ்வச்ச பாரத் என்று ஆளும் கட்சியே துடைப்பத்துக்கு தனி விளம்பரம் தந்து 'ஏத்தி' விட்டு விட்டதே...!!
பதிலளிநீக்குஆமை மேல் நின்று போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்!
ஹரியானா பெண்மணியின் பாக்கெட்டை யாரோ பிக்பாக்கெட் செய்கிறார்களே...!
எல்லாப் படங்களையும் ரசித்தேன்.
விளம்பரம் - நாங்களும் அதைத் தான் அங்கே பேசினோம்!
நீக்குஹரியானா பெண்மணியின் தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஒரு பெண்மணி! அவரை தவிர்த்து புகைப்படம் எடுத்தாலும், அவரது கையைத் தவிர்க்க முடியவில்லை! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
உங்கள் கேமராவுக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறதே ,சூரஜ் குண்ட் மேளா:)
பதிலளிநீக்குத ம 9
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்கு
பதிலளிநீக்குவார இதழ்கள் நாளிதழ்கள் மற்றும் எந்த இதழ்களிலும் பார்க்க படிக்க இயலாத அறிய செய்திகளை இந்த வலைதளங்களின் மூலம்தான் பார்க்க படிக்க இயல்கிறது. அப்படிபட்ட அறிய மற்றும் தரமான செய்திகளை அள்ளித்தருவதில் நீங்கள் முன்மாதிரியாக செயல்படுகின்றீர்கள் வெங்கட் காசு கொடுத்து வாங்கும் இதழ்களில் கூட இப்படி தரமான செய்திகள் போட்டோக்கள் கிடைப்பதில்லை ..இது போன்றே தொடர்ந்து பதிவுகளை தாருங்கள்
தங்களது பாராட்டிற்கு நன்றி மதுரைத் தமிழன். முடிந்தவரை பகிர்ந்து கொள்ளத் தான் எனக்கும் விருப்பம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்களுடன் அருமையான பகிர்வு. நாட்டிய மங்கைகள் வரிசையாக நடந்து வருவது, குறிப்பாக அந்த வயதான பெண்மணியை அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள்!
பதிலளிநீக்குதேர்ந்த புகைப்பட கலைஞரான உங்களிடமிருந்து பாராட்டு.... மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
எல்லா படங்களையும் இரசித்தேன்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் படங்கள் ஒவ்வொன்றும் அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபலருக்கும் பார்க்கக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்! அருமையான புகைப்படங்கள் வெங்கட் ஜி! பாராட்டுக்கள்! உங்களுக்கு. நல்ல கலை நயம் தங்களுக்கு. மிக நேர்த்தியாக இருக்கின்றன....தகவல்கள் பல அறிய முடிகின்றது. மிக்க நன்றி நண்பரே! மிகவும் ரசித்தோம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குபடங்கள் அழகு...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி அண்ணா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே குமார்.
நீக்கு