வியாழன், 2 நவம்பர், 2017

டும் டும் டும் கல்யாணம் – ஒரு புகைப்பட உலா!


மூன்று நாட்கள் முன்னர் ஒரு அழைப்பு – ”எங்கள் வீட்டில் கல்யாணம், நீங்க கண்டிப்பா வரணும்” என்று சொல்ல, கூப்பிட்டா வராம இருப்பேனா? நிச்சயம் வந்துடறேன் என்று சொல்லி விட்டேன். என்னிக்கு கல்யாணம்? மூன்று நாட்கள் கழிச்சு – அதாவது நவம்பர் 1-ஆம் தேதி! அட இவ்வளவு லேட்டா கூப்பிட்டா எப்படி? என்று சொல்ல முடியாது! கல்யாணம் நண்பரோட வீட்டிலாச்சே…. நேத்திக்கு கல்யாண வீட்டுக்கு போய் வந்தாச்சு! நம்ம போனா ஒரு வேலை இருக்கவே இருக்கு – புகைப்படம் எடுப்பது! அலுவலகத்திலிருந்து நேராக அங்கே சென்றதால் கையில் கேமரா கிடையாது! அலைபேசி கேமரா! அதில் எடுத்த படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!




























அதெல்லாம் சரி, கல்யாணத்துல புகைப்படம் எடுத்தேன் என்று சொல்லி, பொண்ணு, மாப்பிள்ளையை கண்ணுல காமிக்கவே இல்லையே என்று சொல்பவர்களுக்கு…  இதோ அவர்கள் படம்!



என்ன ஏமாந்துட்டீங்களா? கல்யாணம் நடத்தப்பட்டது துளசிதேவிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் [கிருஷ்ணருக்கும்]! கார்த்திகை மாதம் வளர்பிறையில் பன்னிரெண்டாம் நாள் துளசி விவாஹம் என்று விமரிசையாகக் கொண்டாடுவார்கள் சிலர். நண்பர் வீட்டில் இப்படி கொண்டாடியதற்கு தான் நான் சென்றிருந்தேன். துளசிக்கும் நெல்லிக்கும் [விஷ்ணுவின் ரூபமாக] திருமணம். கல்யாணம் காலையிலேயே முடிந்து விட்டது என்றாலும், மாலையில் வீடு முழுவதும் திருக்கார்த்திகைக்கு விளக்கு ஏற்றுவது போல, விளக்குகள் ஏற்றி வழிபாடுவார்கள். அப்போது எடுத்த படங்களே இவை. துளசி விவாகம், ஏன் எதற்கு என்பதற்கான கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

27 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஸ்ரீராம்.
      08:28 (12 hours ago)

      to me
      ஸ்ரீராம். has left a new comment on your post "டும் டும் டும் கல்யாணம் – ஒரு புகைப்பட உலா!":

      வல்லவருக்கு அலைபேசியும் கேமிரா! தரத்தில் குறைவதுண்டோ! என்ன அலைபேசி? எத்தனை எம்பி கேமிரா?!!

      இப்படி ஒரு விவாகம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!

      நீக்கு
    2. எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

      அலைபேசி LeTV. 16 MP Camera with 8 MP front camera.

      துளசி விவாகம் மத்வர்கள் பழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. விளக்குகள் படத்தைவிட லட்டு, பிரசாதப் படங்கள் அதிகமாக இருப்பதுபோல் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரசாத படங்கள் அதிகம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. படங்கள் நன்றாக இருக்கிறது. படங்களைப்பார்த்ததும் கல்யாணமா என்ற ஒரு சிறு சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்தக் கல்யாணம் பற்றி முதன் முறையாகக் கேட்கிறோம். இங்கு ராதா கல்யாணம் நடத்தப்படுவது போல் இல்லையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது போல என்று சொல்ல முடியாது. துளசி விவாகம் பற்றிய கதைகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. மணமக்கள் பல்லாண்டு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  5. வாவ்..ஒவ்வொன்னும் அழகு...

    இதழ் இதழா விளக்கு ரொம்ப அருமையாய் இருக்கு...

    அது என்ன நெல்லிகாயில் விளக்கா...


    பிரகாசமான படங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதழ் இதழா விளக்கு! தில்லியை அடுத்த மொராதாபாத் நகரம் வெண்கலம்/பித்தளைக்கு பெயர் போன இடம். அங்கே வாங்கியது! நிறைய டிசைன்களின் விளக்குகள் கிடைக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  6. துளசி விவாஹம் மதுரையில் நாங்க குடியிருந்த வீட்டுத் துளசி அத்தை (மாத்வர்கள் என்றாலும் நெருங்கிப் பழகியதால் அத்தை என்றே அழைப்போம்.) வீட்டில் சின்ன வயசில் இருந்தே பார்த்திருக்கேன். அதுக்கப்புறமாக் கல்யாணம் ஆகி வந்து ராஜஸ்தான், குஜராத், சிகந்திராபாத் ஆகிய இடங்களில்! அம்பத்தூர் வந்ததும் எங்க வீட்டுத் துளசி மாடத்தில் பக்கத்து விட்டு மாத்வர்கள் வந்து துளசிக்கு விவாஹம் செய்து வைத்துச் செல்வார்கள். நேற்று இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாத்வ மாமி துளசி விவாஹம் முடிந்து வெற்றிலை, பாக்குக்கு அழைத்துக் கொடுத்தார்கள். கடந்த 3 வருஷங்களாகக் கொடுத்து வருகிறார்கள். பிருந்தாவன ஏகாதசி அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி என்றே துளசியின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஏகாதசியும், துவாதசியும்! அம்பத்தூரில் எங்கள் காலனியில் இருக்கும் ராகவேந்திரா கோயிலில் விமரிசையாக நடைபெறும். வனபோஜனமும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிருந்தாவன துவாதசி - ஆமாம். மேலதிகத் தகவல்களுக்கு நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. நான் கேள்வி பட்டதே இல்லை இந்த திருக்கல்யாணத்தை பற்றி அதுவும் நெல்லிக்காயிலா? விளக்கு வைத்திருக்கிறார்கள் இல்லை மெழுகிலா? பார்க்க மிகவும் அழகா இருந்தது கிருஷ்ணரும் துளசியும் இருக்கும் படம் மிக அருமை மொபைலில் எடுத்த படமென்றாலும் எல்லாம் தெளிவா வந்து இருக்கே பளிச்சென்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லிக்காயில் விளக்கு - ஆரத்தி அந்த விளக்கு வைத்து தான் சுற்றுவார்கள்! அழகாய் இருக்கிறது இல்லையா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  8. என்னவோ கல்யாணம் என்று நினைத்தால் இப்படிச் செய்து விட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. துளசி கல்யாண வைபோகம்..
    இனிய தரிசனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  10. திரு ஸ்ரீராம் அவர்கள் சொன்னதுபோல் அலைபேசியும் உங்களுக்கு காமிராதான். படங்கள் அருமை. கடைசியில் சஸ்பென்ஸும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  12. தங்களின் கேமிரா மட்டுமல்ல,அலைபேசியும் அசத்துகிறது ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. குத்துவிளக்கு சூப்பரா இருக்கு.. நெல்லிக்காய் விளக்கு புதுசா இருக்கு. வீட்டில் செஞ்சு பார்த்திடனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குத்து விளக்கு - உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் வாங்கியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....