புதன், 24 பிப்ரவரி, 2021

கதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின்னூல் விமர்சனம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சாப்பிட வாங்க: பனீர் பராட்டா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இனிய அமைதி மக்களுக்கு ஏற்றது; கொடுமையான கோபம் விலங்குகளுக்குரியது - லத்தீன் பழமொழி.


******




ரோஷ்ணி கார்னர் - 20 ஃபிப்ரவரி 2021:


மாலை பள்ளியிலிருந்து வந்த மகள் அங்கு நடந்த கதைகளை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். பத்தாவது அல்லவா! பெரும்பாலும் புலம்பலாகத் தான் இருக்கும்..:)) கிளாஸ் டெஸ்ட், ஹோம் டெஸ்ட், கிளாஸ் வொர்க் என்று சொல்லிக் கொண்டிருப்பாள்...🙂 


அடுத்து என்னிடமும் 'நீ இன்னிக்கு என்ன பண்ணம்மா' என்பாள். நானும் பகலில் செய்த வேலைகள், எடிட்டிங், டைப்பிங், தலைவலி, தூக்கம், வாசிப்பு என்று எல்லாவற்றையும் சொல்வேன்...🙂


நேற்று அப்படியொரு விஷயமாக வெயில் வந்துவிட்டது கண்ணா! வடாம் போட ஆரம்பிக்கணும். உனக்கு வாரத்தில ஒரே ஒருநாள் தான் லீவு கிடைக்குது. அதனால சண்டே தான் போடணும். ஏதாவது ஹெல்ப் பண்ணினா ஈஸியா இருக்கும்னு சொல்லிக் கொண்டிருந்தேன்.


அப்போது தான் சென்ற வருடம் நான் வடாம் போட்டதை நினைத்து கண்ணில் நீர் வர சிரித்துக் கொண்டிருந்தோம்..🙂 ஏன் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு நாட்கள் தான் வடாம் போட்டேன்.  அதன் பிறகு....ஊரடங்கு வந்துவிட்டதே!!!


ஊர்ல எல்லாரும் மாஸ்க் கூட போடாமல் சுற்றிக் கொண்டிருந்தார்கள்..ஆனால்! நான் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வடாம் போட  தடை போட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்திருக்கிறேன்...:)) நினைத்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய மடத்தனம் என்று தோன்றியது...:))))


அரிநெல்லிக்காய் - 20 ஃபிப்ரவரி 2021:





அரிநெல்லிக்காய் என்றால் உப்பும், மிளகாய்த்தூளும் சேர்த்து சாப்பிடாதோரும் கூட  இருப்பார்களா! நினைத்தாலே வாயில் நீர் சுரக்க வைக்கும். 


நெய்வேலியில் தன் சிறுவயதில் என் கணவர் அவருடைய அப்பா அடிக்க வருகிறார் என்றால் வீட்டு வாசலில் இருக்கும் நெல்லிக்காய் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வாராம்...🙂 அரிநெல்லிக்காய் என்றால் அவருக்கு அது தான் நினைவுக்கு வரும்.


அரிநெல்லிக்காய் ஊறுகாய் - காணொளி - 20 ஃபிப்ரவரி 2021:





இந்த வாரம் Adhi's kitchen சேனலில் அரிநெல்லிக்காய் ஊறுகாய் தான் செய்து காண்பித்திருக்கிறேன். பார்த்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.


How to make Instant Gooseberry pickle at home/Arinellikai pickle/உடனடி அரிநெல்லிக்காய் ஊறுகாய்!!


Adhi’s Kitchen Recipes - மின்னூலுக்கான விமர்சனம்:





சென்ற மாதம் வெளியிட்ட எனது மின்னூல் - Adhi’s Kitchen Recipes. அதற்கு முகநூலில் சுபாஷிணி பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய விமர்சனம் கீழே! விமர்சித்த அவருக்கு மனம் நிறைந்த நன்றி.


இனிப்பு வகைகள்,  சிற்றுண்டி வகைகள், டிபன் வகைகள், கேக், பிஸ்கட் மற்றும் கொத்தமல்லி பொடி என பல வகைகளையும் சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதனை நன்றாக விளக்கியிருக்கிறார்.


ஓவன் இருந்தால் மட்டுமே பிஸ்கட் மற்றும் கேக் செய்ய முடியும் என நினைப்பவர்களுக்கு குக்கரிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று அளித்துள்ள விபரங்கள் உண்மையாகவே பயனுள்ளதாக அமையும்.


"சம்பாரைப்புளி" என்னும் கொத்தமல்லி பொடி எப்பொழுதுமே எங்கள் வீட்டு ஃபேவரிட் பொடி.


எதற்கெடுத்தாலும் வெளியில் வாங்கி சாப்பிடலாம்,  ரெடி மிக்ஸ் வாங்கி செய்து கொள்ளலாம் என்பதை விட்டு, எல்லா டிபன் வகைகளையும் சுலபமாக வீட்டில் நினைப்பவர்கள் ரவா இட்லியும், காஞ்சிபுரம் இட்லி போன்றவற்றை செய்து சாப்பிட்டால் உண்மையான சுவையில் அடிமையாகி, கடையில் வாங்கி உண்பதை தானாகவே குறைத்துக் கொள்வார்கள்.


நாங்கள் சாப்பிடுவதற்காக வாழும் குடும்பம் தான் என்று, நான் எப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்வேன்.


அன்பைக் கலந்து அடுக்களையில் சமைத்து,  குடும்பத்தினர் எல்லோரும் வட்டம்கட்டி சாப்பிட்டால் உலகத்தின் அத்தனை சந்தோஷங்களும் அங்கே கூடி வந்துவிடும்.


எனவே எல்லோரும், ஆசிரியர் கொடுத்திருக்கும் சமையல் குறிப்பினை பின்பற்றி சுவையாக சமைத்து, சேர்ந்து சாப்பிட்டு அன்பை பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை.


மொத்தத்தில் எளிதான எல்லா வகையான ரெசிபிகள் அடங்கிய புத்தகம்.

ஆசிரியர் Amazon # pentopublish4  போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்றும் அன்புடன்,


சுபாஷினி பாலகிருஷ்ணன்.


*****


என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்ததா? பதிவு குறித்த எண்ணங்களை, பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…



நட்புடன்,


ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. ஊரடங்கில் மொட்டை மாடி கூட செல்லக்கூடாது என்று நினைத்தது புன்னகைக்க வைத்தது.  சென்ற ஏப்ரலிலோ மே மாதத்திலோ  நாங்கள் வீட்டுக்குள் இருந்தாலும் சாதாரணமாக இருந்தோம்.  இரண்டு தெரு தள்ளி ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று தகவல் வந்த உடன் என் இளைய மகன் வேகமாகச் சென்று ஒவ்வொரு அறையிலும் திறந்திருந்த ஜன்னல்களை மூடியது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      //திறந்திருந்த ஜன்னல்களை மூடியது நினைவுக்கு வருகிறது// - ஹாஹா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நாங்கள் அரைநெல்லிக்காய் என்போம்.  அது அரிநெல்லிக்காயா?  அலலது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொருமாதிரி சொல்வார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரை நெல்லிக்காய், அரி நெல்லிக்காய் - ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதிரி - அதே தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருமை. முகநூலிலும் படித்தேன். சுபாஷிணி அவர்களின் விமரிசனமும் அருமை. எல்லா மின்னூல்களும் நன்கு விற்பனை ஆகி மேலும் மேலும் வெளியிடவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வடாம் மகிமை தெரிந்து கொண்டேன். அப்போது அத்தனை ஜாக்கிரதையும் அனுசரித்தோம்.
    இப்போது யார் மாஸ்க் போடுகிறார்கள் என்றே தெரிவதில்லை.

    தாய்க்கும் மகளுக்கும் பேசிக்கொள்ள விஷயங்களா இல்லை?
    மிக மிகச் சுவை.
    உங்கள் நூலை விமரிசனம் செய்திருக்கும் திருமதி பாலகிருஷ்ணனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாய்க்கும் மகளுக்கும் பேசிக்கொள்ள விஷயங்களா இல்லை?// ஹாஹா... ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறதே வல்லிம்மா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ரோஷ்ணியும் நீங்களும் பேசியது நன்றாக இருக்கிறது ஆதி.
    சுபாஷினி பாலகிருஷ்ணன் மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  7. சுவையான பதிவு மேடம்.
    படாம் காயப் போடுவதில் வைட்டமின் டி கூட கிடைக்கும் சாத்தியக்கூறு குறித்து இரு நாள் முன் படித்து வியந்தேன்.
    சுபாஶினி அவர்களின் நூல் விமர்சனம் சூப்பர்.
    நூலை தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன்.
    விரைவில் வாசித்து பரிட்சித்து பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....