இம்முறை பூத் ஸ்லிப் முன்பே கிடைத்து விட்டதால் அங்கே தேடிக் கொண்டிருக்காமல் அம்மாவும் மகளும் நேராக பூத்துக்கே சென்று விட்டோம்! மகளுக்கு இது முதல் தேர்தல்! வாக்களிப்பதில் அவளுக்கு மிகுந்த உற்சாகம்! சென்ற முறையே அடுத்த தடவை நானும் உங்கூட வந்து ஓட்டு போடுவேன் இல்லம்மா! என்றாள்…:)
எங்கள் பகுதி அரசுப் பள்ளியில் இரண்டு பூத்துகள்! ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியே வரிசைகள்! நாங்கள் வரிசையில் முக்கால் மணிநேரம் நின்று வாக்களித்தோம்!
கைக்குழந்தைகளை கைகளிலும், இடுப்பிலும் சுமந்து வந்த தாய்மார்கள்! ‘மாமா’ டா! எதுக்கு அழற! அழக்கூடாது!!
சிறுபிள்ளைகளை கைப்பிடித்து அழைத்து வந்து போலீஸ்காரரிடம் கொஞ்சம் பார்த்துக்கோங்க! என்று விட்டுச் சென்று வாக்களித்த பெண்மணிகள்!
கோல் ஊன்றி வந்த முதியவர்கள்! போட்டாச்சு! போட்டாச்சு! கொய்ங் கொய்ங் சத்தம் வந்ததே! என்று மற்றொரு முதியவரிடம் சந்தோஷமாகச் சொன்னவர்!
தினமும் தான் கடை திறக்கறோம்! இன்னிக்கு லீவு விட்டாச்சு! என்று குடும்பத்துடன் வாக்களிக்க வந்த மளிகைக் கடைக்காரர்!
குடும்பத்தில் உள்ள எல்லாரோட பூத் ஸ்லிப்பும் எங்கிட்ட தான் இருக்கு! இப்ப எங்கம்மா வந்திருக்காங்க! அவங்களோட சீட்டு இது! அவங்க ஓட்டு போடட்டும் சார்! அடுத்து அப்பாவ கூட்டிட்டு வாரேன்! என்ற மகன்!
இப்படி தன்னுடைய வேலைகளையும், கடமைகளையும் விட்டுவிட்டு, ‘வாக்களிப்பது என் உரிமை! அதை எக்காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் விட்டுத் தர மாட்டேன்’! என்று கடமையுணர்வோடும், உற்சாகத்தோடும் வந்த மக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்வாக இருந்தது!
இம்முறை எத்தனையோ விதங்களில் மக்களிடையே நூறு சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்! ஒருவர் எடுத்துச் சொல்லித் தான் செய்ய வேண்டும் என்பதில்லை! ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது என்பது ஒவ்வொரு இந்தியனின் உரிமை! கடமை!
இப்போதே உங்கள் பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்குச் சென்று, உரிய ஆவணங்களை காண்பித்து உங்கள் கடமையை நிறைவேற்றி விட்டு வாருங்கள்! சமுதாயத்தில் நல்லதொரு பிரஜையாக உங்களை காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள்! இளைய தலைமுறைக்கு நாம் ஒரு உதாரணமாக இருக்கலாம்!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
19/4/24
#தேர்தல்
போட்டாச்சு! போட்டாச்சு! ஏழு மணிக்கே போட்டாச்சு. எனக்கும் 'கொய்ங்' என்றுதான் சத்தம் வந்தது.
பதிலளிநீக்குஅருமை சார். நாங்கள் 8.30 மணிக்கு வரிசையில் நின்றோம். உங்களுக்கும் கொய்ங் என்று தான் ஒலித்ததா!!...:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்து சார்.
அருமையான பதிவு. எல்லோரும் நமது ஐனநாயக கடமையை தவறாமல் செய்யவேண்டும்.
பதிலளிநீக்குஆமாம் சார். எதற்காகவும் நம் உரிமையை விட்டுத் தரக்கூடாது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.
ஓட்டு போட்டதோடு நிற்காமல், அதைப் பற்றி அழகான வரணனை. சரி, அதுக்குதானே போட்டீர்கள்?
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி ஜி.
நீக்குஏழு மணிக்கு சென்றோம். ஆளே இல்லை. சட்டெனெ வாக்களித்து திரும்பினோம்! என்ன, வழியில் ஹோட்டலில் சாப்பிட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம். ஒரு கடை கூட திறந்திருக்கவில்லை.
பதிலளிநீக்குஅடடா! சாப்பிட வாய்ப்பு அமையலையே! நாங்கள் இங்கு 8:30மணி போலச் சென்று வரிசையில் காத்திருந்தோம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஅடடா! வெளியில் சாப்பிடுவதற்கு வாய்ப்பு அமையாமல் போய்விட்டதே சார்! நாங்கள் இங்கு 8:30 மணி போல சென்று வரிசையில் நின்றோம்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.