அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கடலோரக் குருவிகள் - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முதல் பகுதிக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் திருவரங்கம் இரயில் நிலையம் வந்து முன்பதிவு செய்திருந்த பல்லவன் விரைவு இரயில் வரக் காத்திருந்தேன். எத்தனை எத்தனை பயணங்களில் இப்படியான காத்திருப்பு பல பகிர்வுக்கான விஷயங்களைத் தந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். இந்தப் பயணத்திலும் பகிர்வுக்கான விஷயங்கள் நிறையவே கிடைத்தன. அப்படிக் கிடைத்த ஒரு சில விஷயங்களுடன் பதிவினைத் தொடர்கிறேன்.
அடாவடி:
ஜன்னல் சீட்டு தான் எப்போதும் முன்பதிவு செய்வேன். என்னவோ அது அப்படியே எனக்கே கிடைத்து விடும் என்று ஒரு நினைப்பு. எப்படியும் “நாங்க family ஆக வந்து இருக்கோம். நீங்க அந்தப் பக்கம் இருக்க aisle சீட் எடுத்துக்கோங்க!” என்று ஒருவர் வரப் போகிறார்…. அது தெரிந்தே இருந்தாலும் ஏனோ ஒவ்வொரு முறையும் ஜன்னல் சீட்டு முன்பு செய்கிறேன் - அது இரயிலாக இருந்தாலும் சரி விமானப் பயணமாக இருந்தாலும் சரி.
இதோ பல்லவன் விரைவு ரயிலில் சென்னை நோக்கி பயணம்…. வழக்கம் போல ஜன்னல் சீட்டு தான் முன்பதிவு செய்து இருந்தேன். திருவரங்கம் இரயில் நிலையத்தில் வண்டி வந்ததும் ஏறி உள்ளே வந்தால் என் இருக்கையில் ஒரு பெண் - நல்ல உறக்கத்தில்…. பக்கத்தில் இருந்த ஆணும் உறக்கத்தில். இந்தப் பக்கம் இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர் சொன்னார் - “நீங்க ஓரத்துல இருக்க சீட்ல உட்காருங்க!” Request லாம் கிடையாது. நேரடியா order தான்… இரயில் முழுக்க அவர்களுக்கே சொந்தம் என்பது போல நிறைய பேர் வந்து இருந்தார்கள். மூடர்களிடம் பேசி பலன் இல்லை என்பதால் ஓர இருக்கையில் அமர்ந்து பயணித்தேன்.
பல சமயங்களில் பேசாமல் இருப்பதே நல்லது. நம் மன அமைதியை நாமே கெடுத்துக் கொள்வானேன்?
ஊடகங்கள் செய்யும் மாயம்:
இரயிலில் அடாவடி குடும்பத்தினர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தனர். Non Stop Nonsense :)
ஏதோ இவர்களைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தான் இன்றைய முதல்வர் எல்லா வேலைகளையும் செய்கிறார் என்பது போல தகவல்களை பகிர்ந்தார் அவர்களில் ஒரு பெண்…. எல்லா செய்திகளும் ஏதோ ஒரு YouTube, Instagram பக்கத்தில் வெளிவந்த விஷயங்கள்… வெளியிட்டவர்களும் நிச்சயம் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அல்ல. ஆனால் அதைப் பார்த்த இந்தப் பெண்மணி, தானே அந்த இடத்தில் இருந்து பார்த்தது போல தகவல்களை அள்ளி வீசினார்…
ஆனாலும் இவர்களைப் போல இருப்பவர்களுக்கும் கேட்பது அனைத்தும் உண்மை தான் என்று நம்பும் கூட்டமும் இருக்கிறது என்பது தான் வேதனையான உண்மை. அரசியல் தளத்தில் நடப்பவை அனைத்திற்கும் பல காரணங்கள், பல உள்குத்து விஷயங்கள் இருக்கும் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்வதில்லை என்பதை எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறார்கள் நம் மக்கள்…
லேட் லத்தீஃப்:
வடக்கில் அலுவலகம், பொது இடம் என எல்லா இடங்களுக்கும் எப்போதும் Late ஆக வருபவர்களை லேட் லத்தீஃப் என்று அழைப்பது வழக்கம். இன்றைக்கு நான் வந்த பல்லவன் விரைவு (?) வண்டி அப்படி லேட் லத்தீஃப் ஆக வந்தது. 11.30 மணிக்கு தாம்பரம் வர வேண்டிய வண்டி அங்கே வந்து சேர்ந்தது 12.30 மணி சுமாருக்கு தான். வெளியே புதிதாக கட்டுமானங்கள் நடக்கிறது போலும் - இரண்டு கிலோ மீட்டர் நடந்தது போல தெரிந்தது - அதுவும் ட்ரெக்கிங் bag உடன்! வியர்வை மழை… Red Taxi App வழி பதிவு செய்ய போக வேண்டிய இடத்திற்கு 236-257 என்று காட்டியது. துரை என்ற பெயர் கொண்ட ஓட்டுநர் வந்தார்…
வந்து இறங்கும்போது Gpay தானே என்று கேட்டு, 553 ரூபாய் என்றார்… என்னது 553/- ஆ என்றால், பிறகு சொல்கிறார்…… இல்லை இல்லை 253 தான் என்று! கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால் அவர் கேட்ட தொகையை அனுப்பி இருப்பேன். வழி முழுக்க தனக்குத் தானே புலம்பல்… எல்லோரையும் ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே தான் இருந்தார்… சில நேரங்களில் சில மனிதர்கள். வேறென்ன சொல்ல?
ஒரு வழியாக சென்னை விமான நிலையத்தினை அடைந்து அடுத்த பயணத்திற்காக - அதாவது சென்னையிலிருந்து சண்டிகர் வரையிலான விமானப் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலை அணுகினேன். அங்கேயும், விமானத்திலும் கிடைத்த அனுபவங்கள் அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
3 ஜுன் 2026



அருமையான வாசகம்.
பதிலளிநீக்குபயணத்தில் கிடைத்த அனுபவங்களோடேயே பதிவைக் கொண்டு செல்வது சிறப்பு. சுவாரஸ்யமாய் இருக்கும். சுவாரஸ்யம் கூடும். அப்புறம் தனியாக பகிர்வோம் என்று தள்ளிப்போட்டால் சமயங்களில் பகிராமலேயே கூட போவோம்!
ஆமாம்..வேறு பதிவில் வெளியிடலாம் என்று நினைத்து வெளியிடாத விஷயங்கள் நிறையவே உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
ரயிலில் அடாவடி.. அநியாயம். வேலைமெனக்கெட்டு ஜன்னல் ஸீட் என்று பதிவு செய்பவர்கள் ஏமாளிகளா, கோமாளிகளா... அந்நியன் அல்லது இந்தியன்தான் இவர்களுக்கெல்லாம் தண்டனை தரவேண்டும்!!
பதிலளிநீக்குஅந்நியன் அல்லது இந்தியன் தண்டனை தர வேண்டும்..... ஹாஹா...... அப்படித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது. வேறு வழியில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
நீங்கள் தாம்பரத்தில் அப்படியே நடைமேடை மாறி மின்சார ரயிலிலேயே மீனம்பாக்கம் அடைந்திருக்கலாமே...
பதிலளிநீக்குமாறலாம். பொதுவாக அப்படிச் செய்வதே வழக்கம். சுமை அதிகம் என்பதால் காரில் செல்ல நினைத்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
இந்த மாதிரி வாடகை வண்டி ஓட்டுனர்கள் எங்கே ஏமாற்றலாம் என்று காத்திருக்கிறார்கள். அவர்கள் கதை மட்டும்தான் சோகம் என்று புலம்புகிறார்கள். எப்போது பார்த்தாலும் காசு பத்தலை பத்தலை பத்தலைதான்! நாமும் அதே உலகத்தில்தான் வாழ்கிறோம் என்பது உணர மாட்டார்கள்.
பதிலளிநீக்குஉண்மை. பலருக்கும் தான் மட்டுமே கஷ்டத்தில் இருப்பதாக, தமக்கு மட்டுமே பிரச்சனைகள் இருப்பதாக நினைப்பு. பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. பிரச்சனைகளின் அளவுகோல் மாறலாமே தவிர அது இல்லாதவர்கள் யாருமில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
வாசகம் செம வாசகம்.
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குநானும் ஜன்னல் சீட் தான் பதிவு செய்வேன்!!! அதாவது முதலில் என்றால், கடைசில பதிவு செய்தால் இருப்பதுதான் கிடைக்கும்.
பதிலளிநீக்கு“நீங்க ஓரத்துல இருக்க சீட்ல உட்காருங்க!” //
இப்படி எனக்கும் நடந்திருக்கு. நான் கடுப்பாகிடுவேன். உங்க பாலிசிதான்....ஆனாலும் சில சமயம் நம் உரிமையை நான் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற ஒரு சுயமரியாதை தலைதூக்கிவிடும் எனக்கு. அப்ப சொல்லிப் பார்ப்பேன். அதற்கும் மீறி அடம் பிடித்தால் வேறு என்ன செய்ய முடியும்? புஸ்னு மனதிற்குள்.... கிடைக்கும் சீட்டில் உட்கார்ந்துவிடுவதுதான்!!
கீதா
உண்மை தான். பல சமயங்களில் கடுப்பு வரும். சில சமயங்களில் Strict No No தான் என்றாலும் அப்படி எல்லா சமயத்திலும் இருக்க முடிவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
பயண அனுபவங்கள் from the scratch நல்லாருக்கு.
பதிலளிநீக்குகீதா
இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குபுலம்பல் அனுபவம் உண்டு. அதை எழுத வைத்திருக்கிறேன் சின்ன பயண தூரம் தான் அதிலேயே அந்த ஓட்டுநர் புலம்பி என்னைத் திட்டிக் கொண்டே வேறு!!!!! ஹாஹாஹா...அவர் செய்த தவறு அது.
பதிலளிநீக்குகீதா
இப்படியும் சிலர். ஒன்றும் செய்வதற்கு இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
நம் சீட்டை பிறர் எடுத்துக்கொள்வது எனக்குப் பிடிக்காது. நிர்தாட்சண்யமாக மறுத்துவிடுவேன்.
பதிலளிநீக்குபொது வெளியில் அரசியல் பேசுவதும் பிடிக்காது. காரணம் இரண்டு. ஒன்று தேவையில்லாத வம்பு. இரண்டு, அரசியலில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும். எதற்கு தேவையில்லாமல் டென்ஷன், இருக்கும் பிபி ஐ அதிகப்படுத்திக்கணும்?
சரியான விஷயம். அடுத்தவர்களுக்காக நாம் ஏன் நம் டென்ஷன், பிபி அதிகரிக்க வைக்கணும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
பயணம் நல்லதுதான். ஆனா பாருங்க, தினமும் 10K Steps நடக்கணும், விட்டுப்போயிடக் கூடாது என்பது என் டென்ஷன்.
பதிலளிநீக்குதினமும் 10K - என்னால் தொடர்ந்து நடக்க முடிவதில்லை. ஏதேனும் ஒரு தடை வந்து விடுகிறது. இதோ இன்றைக்கு அவசரமாக காலையிலேயே கோவை வரை பயணம்.
நீக்குபெரும்பாலும் பயணம் செல்லும் இடங்களில் கூட நடை உண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
பொய் பெரும்பாலும் தவறை மறைக்க, அல்லது தன்னைப் பற்றிப் பீத்திக்கொள்ள அல்லது தன்னைச் சார்ந்தவர்களை விட்டுக்கொடுக்காமல் புகழ. அதன் விளைவு தன்னை ஏமாற்றிக்கொள்வது என்பது ஐண்மை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்கு//இவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான்// நடிகைகள் மற்றும் பல தலைவர்கள் பற்றிய தகவல்களை, ஆபாசமாகப் பேசுபவர்கள், அரசியல் திட்டங்கள் பற்றிப் பேசுபவர்கள், மெய் போலும்மே மெய் போலும்மே என்று பேசுகிறார்கள். அவங்க வீட்டுக் கதைகளை யார் பேசப் போகிறார்களோ
பதிலளிநீக்குஆமாம் எத்தனை பேரின் கதைகளை பேசுகிறார்கள்.... அவர்களின் கதையை யார் பேசுவார்கள்? நிச்சயம் ஒரு நாள் பேசக்கூடும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
பயணங்களில் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் சுவாரசியம்தான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இந்த மாதிரி பொதுவெளி பயணங்களில் நாம் கடுப்பாகும் வண்ணம் மக்கள் செய்கையும் பேச்சும் இருப்பது சகஜமாகத்தான் உள்ளது. உங்களுக்கு பலமுறை இந்த மாதிரி அனுபவங்கள் கிடைத்துள்ளதை நீங்கள் அவ்வப்போது பகிர்ந்ததை படித்துள்ளேன். மக்களின் மனப்போக்குகள் புரியாத புதிர்தான்.!
நமக்கென்று ஒதுக்கப்பட்ட இருப்பிடத்தை அவர்கள் சுதந்திரமாக எடுத்துக் கொள்வது எவ்வளவு பெரிய தவறென்பதை அவர்கள் உணர மாட்டார்களா.? என்ன மனிதர்களோ .?
உங்களுடைய இந்தப் பயணத்துடன் தொடர்ந்து வருகிறேன். தங்களது இரண்டொரு பயண கட்டுரைகளை படிக்க தவற விட்டு விட்டேன். மன்னிக்கவும். இத்தொடரிலிருந்து இனித் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி.
ஆனந்ந்த விகடனில் மணியன் எழுதிய பயணக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகளுக்கே ஒரு bench Mark. அந்த காலங்களில் அமைந்தது. அவருக்கு ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தியது. மணியனை மிஞ்சுகிறீர்கள்!
பதிலளிநீக்குமணியன் பயணக் கட்டுரைகள் மிகவும் பிடித்த விஷயம் எனக்கு. முடிந்தவரை எழுதுகிறேன். அவர் மலை... நான் ஒரு சிறு கல்....
நீக்குஎனது பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஸ்வநாதன் ஜி.