வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கோனார்க் – சூரியனார் கோவில் – அற்புதச் சிற்பங்கள் - அழிவின் விளிம்பில்….



அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 24

பகுதி 23 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!




கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

Bபிரஜா தேவி கோவில் தரிசனம் முடித்த பிறகு, கோவில் அமைந்திருக்கும் ஜாஜ்பூரிலிருந்து நாங்கள் தங்கியிருந்த புவனேஷ்வர் நகருக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு நல்ல ஓய்வு. நாள் முழுவதும் பயணமும், அலைச்சலும் இருக்கும் போது, இரவு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். அப்போது தான் அடுத்த நாள் பயணிக்கவும், இன்னும் சில இடங்கள் பார்க்கவும் நமக்கு உடல் ஒத்துழைக்கும்.  பெரும்பால பயணிகள் இரவு வெகு நேரம் உறங்காமல் இருந்து அடுத்த நாள் திண்டாடுவார்கள் – பல குழுக்களில் பயணித்திருப்பதால் அப்படி அவதிப்படும் சிலரைப் பார்த்த அனுபவம் உண்டு! நல்ல உறக்கத்திற்குப் பிறகு நாங்கள் அடுத்த நாள் தங்க முக்கோணம் என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் [புவனேஷ்வர், கோனார்க், பூரி] இரண்டாம் நகரமான கோனார்க் நோக்கி பயணித்தோம்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

Bபிரஜா தேவி - விரஜா க்ஷேத்திரம் – நாபி கயா - ஜாஜ்பூர்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 23

பகுதி 22 படிக்காதவர்கள் படிக்க.....

ராம் மந்திர் – ராஜா ராணி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


Bபிரஜா தேவி - முக தரிசனம்
ஜாஜ்பூர், ஒடிஷா.


Bபிரஜா தேவி - முழு அலங்காரத்தில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

ஒடிஷாவின் தலைநகரான புவனேஷ்வரிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கோவில் தான் எங்களுடைய அடுத்த இலக்காக இருந்தது.  ஒடிஷாவில் அமைந்திருக்கும் இந்த ஷக்தி பீடக் கோவில் மிகவும் பழமையானது. தற்போது அமைந்திருக்கும் கோவில் 13-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்று சொன்னாலும், அதனினும் பழமையான கோவில் என்றும் பல புராணங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உண்டு என்றும் தெரிகிறது. ஷக்தி பீடம் என்பதைத் தவிர இக்கோவிலை நா[B]பி [G]கயா என்றும் அழைக்கிறார்கள்.  வாருங்கள் கோவிலுக்குச் செல்வோம், கூடவே சில கதைகளையும் பார்க்கலாம்! வழக்கம் போல நான் எடுத்த புகைப்படங்களும் ஆங்காங்கே பார்க்கக் கிடைக்கும்!

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மோதகம் வேணுமே....

அன்பின் நண்பர்களுக்கு,

இனிய காலை வணக்கம்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். தமிழகத்தில் அனைவரும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன்..... மோதகம் பிள்ளையாருக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிக்கும்.... தருவார் தான் யாருமில்லை....

எங்கும் "கணபதி  Bபப்பா மோரியா" எனும் குரல்களைக் கேட்க முடிகிறது..... நானும் குரல் கொடுக்கிறேன்......


கணபதி  Bபப்பா மோரியா....
மோதகம் ஒன்றை தாரீயா....

மீண்டும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

மகள் வரைந்த விநாயகர் ஓவியம் கீழே....


நட்புடன்...

வெங்கட்
புது தில்லி.


வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ராம் மந்திர் – ராஜா ராணி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 22

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


படம்: ராஜா ராணி கோவில், புவனேஷ்வர்

ஒடிஷா மாநிலத்தில் பல பழமையான கோவில்கள் உண்டு. கொஞ்சம் வித்தியாசமான கட்டிடக் கலை, நிறையவே சிற்பங்கள் என கோவில்கள் அதிகம். புவனேஷ்வர் நகரத்தின் உண்மையான பெயர் திரிபுவனேஷ்வர் – அதாவது மூன்று புவனங்களையும் [லோகங்களையும்] ஆண்ட ஈஸ்வரன் பெயரிலிருந்து உருவானது. 600-க்கும் மேற்பட்ட கோவில்கள் புவனேஷ்வர் நகரில் இருப்பதால் ”கோவில் நகரம்” என்ற பெயராலும் அழைக்கிறார்கள். கலிங்கத்து பாணி என்று சொல்லப்படும் பாணியில் தான் கோவில்கள் அமைத்திருக்கிறார்கள். ஸ்வர்ண த்ரிபுஜா என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் புவனேஷ்வர் நகரமும் ஒன்று – மற்ற இரண்டு நகரங்கள் – பூரி மற்றும் கோனார்க். மூன்றுமே அருகருகே தான் இருக்கின்றன. நாங்களும் ஒடிஷா மாநிலத்தில் ஒரு சில கோவில்கள் பார்த்தோம்.

புதன், 23 ஆகஸ்ட், 2017

நேரம் பொன்னானது – ராஜ பரம்பரை கடிகாரங்கள்


நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஜூனியர் ஜேசீஸ் என அழைக்கப்படும் Junior Chamber of India கழகத்தின் மாணவர் பிரிவில் இரண்டு வருடங்கள் இருந்தேன் – அதுவும் Chairman பொறுப்பில். சில நிகழ்வுகளை நடத்தியதில் பங்கு வகித்து இருக்கிறேன். கூடவே ஒன்றிரண்டு நாடகங்களில் பங்கு பெற்றதோடு, எங்கள் கல்லூரி சார்பாக திருச்சி REC-ல் நடந்த ஒரு விழாவிற்கும் நண்பர்களுடன் சென்றதுண்டு.  ஜூனியர் ஜேசீஸ்-ல் இருந்தபோது நிறைய வகுப்புகள் – நேரக் கட்டுப்பாடு, பொது சேவை போன்ற தலைப்புகளில் வகுப்புகள் எடுப்பார்கள்.  அதில் நேரக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு வகுப்பு இன்றளவும் நினைவில் இருக்கிறது. அதற்குக் காரணம் உண்டு. அந்த வகுப்பில் காட்டப்பட்ட ஒரு வரைபடமும், அதன் கதையும் தான் காரணம்.