செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

Bபிரஜா தேவி - விரஜா க்ஷேத்திரம் – நாபி கயா - ஜாஜ்பூர்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 23

பகுதி 22 படிக்காதவர்கள் படிக்க.....

ராம் மந்திர் – ராஜா ராணி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


Bபிரஜா தேவி - முக தரிசனம்
ஜாஜ்பூர், ஒடிஷா.


Bபிரஜா தேவி - முழு அலங்காரத்தில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

ஒடிஷாவின் தலைநகரான புவனேஷ்வரிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கோவில் தான் எங்களுடைய அடுத்த இலக்காக இருந்தது.  ஒடிஷாவில் அமைந்திருக்கும் இந்த ஷக்தி பீடக் கோவில் மிகவும் பழமையானது. தற்போது அமைந்திருக்கும் கோவில் 13-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்று சொன்னாலும், அதனினும் பழமையான கோவில் என்றும் பல புராணங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உண்டு என்றும் தெரிகிறது. ஷக்தி பீடம் என்பதைத் தவிர இக்கோவிலை நா[B]பி [G]கயா என்றும் அழைக்கிறார்கள்.  வாருங்கள் கோவிலுக்குச் செல்வோம், கூடவே சில கதைகளையும் பார்க்கலாம்! வழக்கம் போல நான் எடுத்த புகைப்படங்களும் ஆங்காங்கே பார்க்கக் கிடைக்கும்!


Bபிரஜா தேவி கோவில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் Bபிரஜா தேவியின் கதையைக் கொஞ்சம் பார்க்கலாம். இப்பகுதியில் அமைந்திருக்கும் வைதாரணி நதிக்கரையில், ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்மா, வேதாகமத்தில் சொல்லி இருக்கும்படி யாகம் வளர்த்து கொண்டிருந்த போது, அக்னி குண்டத்திலிருந்து தோன்றிய பார்வதி தேவி, பிரம்மாவிற்கு வரம் அளித்தாள். கூடவே இந்த க்ஷேத்திரத்தில் Bபிரஜா   தேவி என்ற பெயருடன் கோவில் கொண்டாள் – மஹிஷாசுரமர்த்தனி ரூபத்தில், இரண்டு கைகளுடன் - ஒரு கையில் சூலாயுதத்தினால் எருமை வேடத்தில் இருந்த மஹிஷாசுரனின் நெஞ்சைத் துளைத்தபடியும், மற்றொரு கையில் மஹிஷனின் வாலைப் பிடித்தபடியும் தோன்றிய பார்வதியை அதே ரூபத்தில் இங்கே Bபிரஜா  தேவி என்ற பெயரில் வழிபடத் தொடங்கினார்கள். 


Bபிரஜா தேவி கோவில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

Bபிரஜா   தேவியின் மனசிலிருந்து தோன்றிய நவ துர்க்கைகள், அஷ்ட சண்டிகைகள் மற்றும் அறுபத்தி நான்கு யோகினிகள் கோவில் அமைந்திருக்கும் ஜாஜ்பூர் பகுதியில் குடி கொண்டிருக்கிறார்கள் என்பதால் மற்ற ஷக்தி க்ஷேத்திரங்களிலிருந்து இப்பகுதியை வேறுபடுத்துகிறது போன்ற தகவல்கள் பல தாமிரயேட்டுக் குறிப்புகளில் காணக் கிடைக்கின்றன. தாந்த்ரீக முறையில் கடவுளை வழிபடுபவர்கள், இப்பகுதியை Bபிரஜா   Pபீடா என்றும் அழைக்கிறார்கள். சதி தேவியின் நாபிப் பகுதி இந்த இடத்தில் விழுந்ததால் இவ்விடத்தினை நாபி Pபீட், நாபி Gகயா என்றும் அழைக்கிறார்கள். இவ்விடம் நாபி Gகயா என்று ஏன் அழைக்கப்படுகிறது என்பதற்கு வேரு ஒரு கதையும் உண்டு. அக்கதை பற்றிய மேலதிகத் தகவல்களையும் பார்க்கலாம்.



Bபிரஜா தேவி கோவில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

ஒரு சமயம் Gகயா எனும் அசுரன் விஷ்ணு பகவானை மனதில் நினைத்துக் கடும் தவம் புரிந்தான் – அவனுக்குத் தேவையான வரம் நிர்மலமான மனதும் உடலும். பல ஆண்டுகள் தொடர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த தேவர்களும் பிரம்மாவும் நடுங்கினர். விஷ்ணுபகவானிடம் அவன் யாகத்தினை தடுக்க வேண்டிக்கொள்ள, விஷ்ணுபகவான் அசுரன் முன்னர் பிரத்யக்ஷமாக தரிசனம் கொடுத்து அவன் வேண்டிய வரத்தினை அளித்தார். அது தவிர யார் அவனைத் தொட்டாலும், அவர்களும் தங்களது பாபங்கள் நீங்கி விஷ்ணுவின் பாதாரவிந்தங்களில், விஷ்ணு லோகத்தில் இடம் பெற முடியும் என்ற வரத்தினைப் பெற்றான். Gகயாவைத் தொட்ட அனைவரும் விஷ்ணு லோகத்தில் இடம் பெற ஆரம்பித்தார்கள். யம்ராஜ்-ன் கட்டுக்குள் இருந்த யமலோகம் முழுவதுமாக காலியாக, ”ஆஹா நமக்கு வேலை இல்லாமல் போனதே என பிரம்மாவிடம் முறையிடுகிறார் யமதர்மராஜா!

Bபிரஜா தேவி கோவில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

வேறு வழி, வரம் கொடுத்த விஷ்ணுவையே பார்க்கலாம் வா, என யமதர்மனையும் அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் செல்கிறார்கள். வரம் கொடுத்த விஷ்ணுவே அதற்கு வழியும் சொல்கிறார் – அதன் படி பிரம்மா, Gகயாவிடம் சென்று தான் செய்யப்போகும் யாகத்திற்கு அவன் உடல்/உதவி தேவை என்பதைச் சொல்ல, அவனும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறான். நெடுஞ்சாண் கிடையாக கீழே படுக்க, Gகயாவின் தலைப்பகுதி, மகத் என அழைக்கப்பட்ட இன்றைய பீஹாரின் ஃபல்குனி ஆற்றங்கரையிலும், நாபிப் பகுதி வைதாரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் Bபிரஜா க்ஷேத்திரத்திலும், பாதம் கோதாவரி நதிக்கரையில் பீடபுரத்திலும் இருக்கும்படி படுக்க, பிரம்மா Gகயாவின் நாபிப் பகுதியில் யாகம் வளர்க்கிறார்.    

Bபிரஜா தேவி கோவில் வளாகத்தில் ஒரு விநாயகர் சிலை....
ஜாஜ்பூர், ஒடிஷா.

யாகத்தின் போது Gகயாவின் உடல் நிலையாக இல்லாமல் அசைவது தடங்கலாக இருக்க, தன்னுடைய Gகதையால் ஓங்கி ஒரு அடி கொடுத்து நிலைப்படுத்துகிறார். அவனுக்கு ஒரு வரமும் அளிக்கிறார் – அந்த வரத்தின் படி, Gகயாவின் மூன்று பகுதிகள் விழுந்த இடங்களான Gகயா, Bபிரஜா மற்றும் Pபீடபுரம் ஆகிய மூன்று இடங்களும் பித்ரு க்ஷேத்திரங்களாக அமைய வேண்டும் என்றும், பூமி, மலைகள், சூர்யன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும் வரையில் அப்பகுதிகளில் விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய மூவரும் பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் வரம் கேட்கிறான் Gகயா! அதன் படி அந்த மூன்று இடங்களும், Gகயா, நாபி Gகயா மற்றும் பாத Gகயா என்று அழைக்கப்பட, மூன்று இடங்களிலும் விஷ்ணு, பிரம்மா மற்றும் சிவன் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள் என்றும், கதை!

Bபிரஜா தேவி கோவில் வளாகத்தில் நான்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

சரி புராணக் கதையை விட்டு நம்ம கதைக்கு வருவோம்! அங்கே சென்ற போது, நண்பர் ஒருவர் மூலமாக இக்கோவிலில் பூஜை செய்பவரின் தொடர்பு எண் கிடைத்தது. அவரை அழைத்து அங்கே வருவதைச் சொல்ல, அவர் ஜாஜ்பூர் நகரின் வெளியிலிருந்து எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலில் திவ்யமான தரிசனம் செய்து வைத்து, பிரசாதங்கள் கொடுத்ததோடு கோவில் மரியாதைகளும் செய்து வைத்தார். நெற்றியில் சந்தனம், குங்குமம் பூசி, தலையில் சிவப்புத் துணி கட்டி, Bபிரஜா தேவிக்கு சாற்றிய ஒரு புடவையை நண்பரின் மனைவிக்குத் தந்து இப்படி நிறைய விஷயங்கள் நடந்தது. அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க, இன்னும் கொஞ்சம் தேவை என்று கேட்க, இன்னும் கொடுத்தார் நண்பர்! கோவிலில் படங்கள் எடுப்பதைப் பார்த்தவர், தேவியின் சிலையையும் படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.


 Bபிரஜா தேவி கோவில் அருங்காட்சியகம்....

ஜாஜ்பூர், ஒடிஷா.


Bபிரஜா தேவி கோவில் அருங்காட்சியகம்....

ஜாஜ்பூர், ஒடிஷா.

கோவில் வாசலில் ஒரு அருங்காட்சியகமும் அமைத்திருக்கிறார்கள். புராணக் கதைகள், சிலாரூபமாக வடித்திருக்கிறார்கள் அங்கே. அங்கேயும் படங்கள் எடுத்துக் கொண்டு, எங்களுக்கு தரிசனம் செய்து வைத்தவருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம். எங்கே புவனேஷ்வர் நகரத்திற்கு தான்! அடுத்த நாள் வேறு சில இடங்களுக்குச் செல்ல வேண்டும். எங்கே உங்களை அழைத்துப் போகப் போகிறேன் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

29 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அழகிய புகைப்படங்களுடன் விரிவான விளக்கம் தலைப்பாக்கட்டு ஸூப்பராக இருக்கிறது ஜி
      தொடர்கிறேன்.

      நீக்கு
    2. முடிந்த போது படியுங்கள் என எழுத ஆரம்பித்தேன் காலையில். இப்போது வீடு வந்து பார்த்தால் படித்து கருத்தும் எழுதி இருக்கிறீர்கள்.... நன்றி.

      தலைப்பாகையாக அல்லாமல் இது ரிப்பன் மட்டும்தான்! அதுவும் ஜிகினா ரிப்பன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  3. சதி தேவியின் நாபிப் பகுதி - சக்தி தேவியா அல்லது 'சதி தேவி'தானா?

    "ஆஹா நமக்கு வேலை இல்லாமல் போனதே என பிரம்மாவிடம் முறையிடுகிறார் யமதர்மராஜா!" - ஒரு வேளை கான்சருக்கும் டயபாடீசுக்கும் முழுமையா குணமாகிற மாதிரி ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், இந்த நோய்களுக்கான படிப்பு படித்துள்ள மருத்துவர்கள் யாரிடம் முறையிடுவர் என்று தோன்றியது.

    கோவில் வளாகத்தில் உங்கள் போட்டோ, "நான்தான் முன் ஜென்மத்தில் அவர்" என்று சொல்வதுபோல் உள்ளது.

    தொடர்கிறேன், த ம வுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன் ஜென்மத்தில் எவர்? :)

      சதி தேவி தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. மிக மிக அழகான புகைப்படங்கள். பிரஜா கோயில் பற்றிய தகவல்கள் மற்றும் கோயிலின் அழகு மனதைக் கவர்கிறது. அருமையான கலைவடிவம். தேவியும் அழகோ அழகு! அடுத்து நீங்கள் அழைத்துச் செல்ல இருக்கும் இடங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. தொடர்கிறேன்...
    படங்கள் அழகு.
    (கருத்து அலுவலக கணிப்பொறி மூலமாக)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  6. அந்த ஊர்க்காரர் மாதிரியே மாறி விட்டீர்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஊர்க்காரர் என்றால் வேறு உடையில் இருந்திருக்க வேண்டும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. தேவர்களுக்கு தங்களை விட உசத்தியாக ஒருவன் வந்து விடக் கூடாது!!!!!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவர்கள், மனிதர்கள் என அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்று தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. படங்கள் அத்தனையும் அழகு.. பழங்காலத்துப் பிள்ளையார் சிலையும் அழகு.. வோட் போட்டு டமில் மனத்தில்:) ஏத்திட்டேன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  9. வழக்கம்போல் வண்ணமயமான படங்களுடன் பதிவு அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

      நீக்கு
  10. பயணங்கள் அதை பகிரும் விதங்கள் அனைத்துமே அழகு, புகைப்படங்கள் வெகு நேர்த்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  11. பிரஜாதேவி கோயில் பற்றிய செய்திகளும் தொடர்புடைய கதைகளும் மிக அருமை. வழக்கம்போல் புகைப்படங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. படங்களும் செய்திகளும் அருமை.
    கோவில் மாலை மரியாதையுடன் உங்கள் படமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. கொடுப்பது கொடுத்தால் தேவியின் சிலையையே படமெடுக்கலாம் தாட்சாயணியின் உடலை வெட்டி வீசிய தன் ஒரு பகுதி இந்த நாபி கயா வோ என்று முதலில் நினைத்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. படங்களும் விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....