தனியார் பள்ளி
மாணவர்களையும் ஈர்க்கும் அதிசயம்: தரமான கல்வியால் வளரும் செல்வநாயகபுரம் அரசுப் பள்ளி:
ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளி தலைமை
ஆசிரியருக்கான விருது (2014), சிறந்த அரசுப் பள்ளிக்கான காமராசர் விருது (2015) என
பல விருதுகளையும், பரிசுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது ராமநாதபுரம் மாவட்டத்தின்
முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப்
பரிசுகளையெல்லாம் விட மேலாக, சிறந்த பள்ளிக்கூடம் என்று கிராம மக்கள் மனதார இப்பள்ளியை
அங்கீகரித்துள்ளனர். அதனாலேயே தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்கள் குழந்தைகளை பல
பெற்றோரும் இந்த அரசுப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வரவால் மற்ற ஊர்களில்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததுபோல, இந்தப் பள்ளியிலும் கணிசமாகக் குறைந்தது.
2010-ல் 54 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த ஆண்டில் 117 மாணவர்கள் படிக்கிறார்கள்.
பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காலகட்டத்தில், குறைந்து போன
மாணவர் எண்ணிக்கை இந்தப் பள்ளியில் மட்டும் உயர்ந்துகொண்டே வருகிறது. 1 முதல் 5-ம்
வகுப்பு வரை ஆங்கிலவழி வகுப்புகள் செயல்படுகின்றன.
மேலும் படிக்க – தினமணி செய்தி….
இந்த வாரத்தின் குறுஞ்செய்தி:
வாழ்வில் சில நேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்….அவற்றை நம்பிக்கையுடன்
சந்தியுங்கள். மனம் தளராதீர்கள்… அவை தான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்….
இந்த
வார காணொளி – ஒரு மலையாள சினிமா பாடல்!
லைலாகமே என்று தொடங்கும் ஒரு இனிமையான பாடல். பிரித்விராஜ் மற்றும்
ப்ரியா ஆனந்த் நடிப்பில், சுகமான ஒரு பாடல்! காட்சிகளைப் பார்க்காமல் பாட்டு கேட்டு
ரசித்தேன் – இரண்டு முறை. காட்சிகளும் சில இடங்கள் ரொம்பவே அழகாய் படம் பிடிக்கப்பட்டுள்ளது
– குறிப்பாக சூரியன் மறையும் காட்சி! கேட்டு ரசிக்கலாமே…
இந்த வார ரசித்த குறும்படம்:
யார் வேணா என்ன வேணா சொல்லட்டும்.
நமக்கு எது நல்லதுன்னு யோசிச்சு செய்! நல்லா வருவே! அதைச் சொல்லும் ஒரு குறும்படம்!
கல்யாணம் ஆன புது ஜோடி - இவ்வளவு நகையும் போட்டுக்கிட்டு போகுமா புது பொண்ணு? என்று
கேட்கக்கூடாது!
இந்த
வார முகப்புத்தக
இற்றை:
Successful
people always have two things on their lips, "silence & smile"
Smile to solve the problem. And silence to avoid the problem.
இந்த வார WhatsApp:
வார்த்தை விளையாட்டு:
சென்ற வாரத்தில் வெளியிட்ட வார்த்தை விளையாட்டு
பகிர்வில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த வாரம் வேறு சில எழுத்துகள். எத்தனை வார்த்தைகள் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்
பார்க்கலாம்! நான் பதினெட்டு வார்த்தைகள் வரை கண்டுபிடித்தேன்.
நாளைய பதிவில் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இந்து (தமிழ்) செய்தித் தாளில் சிறப்பான அரச பள்ளிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் வரிசையாகப் பள்ளிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தது. நீங்கள் சொல்லியிருக்கும் பள்ளியையும் பாராட்டுவோம்.
பதிலளிநீக்குசிறப்பான அரசுப் பள்ளிகள் பற்றிய கண்ணோட்டம் - நல்ல விஷயம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தினமணி இணையப் பக்கத்தைப் பிரித்துப் படிப்பதே ஒரு தொல்லை. ஏகப்பட்ட பாப்பப்ஸ்.. நழுவி நழுவி ஓடிக்கொண்டே இருக்கும்.
பதிலளிநீக்குநம் தளங்களில் "பகிர்வை ரசித்தேன்" என்று பின்னூட்டம் இட்டு சுட்டி கொடுத்துச் செல்கிறார், விஜய்... அவர் தினமணி பக்கத்துக்குத்தான் சுட்டி தருகிறார். ஒருமுறை என் பதிவொன்றில் அவருக்கு இந்தத் தகவலையும் கொடுத்திருந்தேன். அவர் பதிவையே படிப்பதில்லை. பின்னூட்டத்தையா படிக்கப் போகிறார்!!!
தினமணி - பாப் அப்ஸ்! பெரிய தொல்லை தான்.
நீக்குபதிவையே படிப்பதில்லை! பின்னூட்டத்தையா படிக்கப் போகிறார்! ஹாஹா... நான் அவரது கருத்துகளை வெளியிடுவதே இல்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
விஜய் திணமனியின் செய்திகளை பகிரவே கருத்துக்கள் இடுகிறார்...அதனால் அவர் கருத்துகளை ஸ்பேமில் தள்ளிவிடுவேன்
நீக்குhttps://chrome.google.com/webstore/detail/adblock/gighmmpiobklfepjocnamgkkbiglidom
நீக்குபகிர்வை ரசித்தேன்" ? ஸ்ரீராம் அவர் தகவலுக்கு நன்றி என்றல்லாவா சொல்லிவிட்டுப் போவார்.!!!?அல்லது பகிர்விற்கு நன்றி என்று..ஹஹஹ்
நீக்குகீதா
ஸ்பேமில் தள்ளிவிடுவேன். தினம் தினம் வருகிறது! படுத்தல் தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
Adblock = தகவலுக்கு நன்றி தனபாலன். இணைக்க முயற்சி செய்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குவார்த்தை விளையாட்டில் அலை, தலை, காதம், காலை, மாலை, மான் என்று ஏகப்பட்ட வார்த்தைகளுக்கு வாய்ப்புகள்.
பதிலளிநீக்குஏகப்பட்ட வார்த்தைகளுக்கு வாய்ப்புகள்... உண்மை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கதம்பம் நன்று குறுக்கெழுத்து இதோ வருகிறேன் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்கு1.அலை
பதிலளிநீக்கு2.தலை
3.வலை
4.காலை
5.கலை
6.மாலை
7.மாவலை
8.காமாலை
9.காதலை
10.மாடு
11.காடு
12.வடு
13.தடு
14.தலமாடு
15.தவம்
16.வதம்
17.அம்மா
18.மாதம்
19.மான்
20.அம்மான்
21.காமாடு
22.மாதவன்
23.மாதவம்
24.அவன்
25.வன்
26.தன்
27.அதன்
28.மாவடு
இம்புட்டுதேன் முடிஞ்சது ஜி
மாவலை, தலமாடு, கால்மாடு.... இவை எனக்கு புதியவை. அர்த்தமும் எதற்கு பயன்படுத்துவார்கள் என்பதையும் சொன்னால் புரியும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
மாவிலை, மாவலை என்றும் சொல்வார்கள் (மா சொல்வார்கள்)
பதிலளிநீக்குஉறங்கும் பொழுது பிறரின் தலைப்பாகத்தில் காலையோ, கால்பாகத்தில் தலையையோ வைத்து படுக்ககூடாது என்பதற்காக உபயோகப்படுத்துவார்கள் ஜி
தலைமாடு, கால் மாடு கேள்விப்பட்டதுண்டு!
நீக்குவிளக்கம் தந்தமைக்கு நன்றி கில்லர்ஜி!
அரசுப் பள்ளிகள் ஆசிரியர் முயன்றால!!!!!!!! த ம 5
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குஅனைத்தும் அருமை ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவார்த்தை விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் பிசி அப்பாலிக்கா வந்து பார்க்குறேண்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குஅரசுப்பள்ளியைப் பாராட்டுவோம். பாசிட்டிவ் ந்யூஸ்..
பதிலளிநீக்குஇற்றையும், குறுஞ்செய்தியும் அருமை....குறுஞ்செய்திக்கான தொடர்ச்சி இற்றை என்றும் எடுத்துக் கொள்ளலாமோ?!!!
பாடல் அருமை. (படமும் பார்த்திருக்கிறேன் - துளசி) (கீதா: ஏற்கனவே கேட்டிருக்கிறேன். மீண்டும் கேட்டேன் காட்சியுடன். அந்த சூரியன் மறையும் காட்சியுடன் கேட்டேன் பல ஷாட்ஸ் மிக மிக அழகாக இருக்கிறது.)
துளசி : மொபைலில் பார்க்க முடியவில்லை...இங்கு நெட் மிகவும் ஸ்லோவாக இருப்பதால்..(கீதா: குறும்படம் இரவு பார்க்கிறேன்...)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குவார்த்தை விளையாட்டு
பதிலளிநீக்குஅலை, தலை, வலை, மாலை, காலை, தடு, தன், தம், மான், மாடு,காடு, வடு, அடு, தவம், மாதவம், வதம், தவலை, அம்மா, தலைவன், மாதம், மாவடு, அதன், அம்மான், அவன், காமாலை, கான்(காடு), காதம் (தூரம்), அவலை, தகா....
இன்னும் இருக்கலாம்...ஜி!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குதனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்கள் குழந்தைகளை பல பெற்றோர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள் என அறிந்து மகிழ்ச்சி.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு பர்ராட்டுகள்!
பதிலளிநீக்குநீங்கள் தினமணிக்கு தந்திருக்கும் இணைப்பை சொடுக்கினால் தி இந்து’ நாளிதழுக்கு செல்கிறதே.
பழக்கலவையை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குகாணொளியில்..... புது பொண்ணா அது :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஅலை, தலை, மான், அம்மா, காடு, அதன், வலை, அம்மான், காலை, மாலை,தடு, மாடு
பதிலளிநீக்குதேவகோட்டை ஜி சொல்வது போல் கிராமத்தில் தலமாடுகாலமாடு படுக்காதே என்பார்கள்
ஒருவன், தலை பக்கம் இன்னொருவர் கால் பக்கம் மாற்றி படுக்க கூடாது என்பார்கள்.
அப்புறம் புதிதாக பண்ம் வந்தால் தலமாடு, கால்மாடு புரியாமல் ஆடுகிறான் என்பார்கள். தலையும் புரியலை, காலும் புரியலை என்பதின் அர்த்தம்.
மற்றபகிர்வுகள் அருமை.
குறுஞ்செய்தி அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குவாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் வையகம் இதுதானடா!
பதிலளிநீக்குபாட்டு சொல்வது போல் இருக்கிறது. குறுபடம்.
அவர் அவர் மனதுக்கு பிடித்ததை செய்து கொண்டு போய் கிட்டே இருக்க வேண்டியதுதான் என்று சொல்கிறது. நன்றாக இருக்கிறது.
தாத்தா, பேரன், கோவேறு கழுதை கதை போலும் இருக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குசில அரசுப் பள்ளிகள் நன்றாகவே இயங்குகின்றன . அசோக் நகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியும் அதில் ஒன்று . நுங்கம்பாக்கம் ஆண்கள் பள்ளியும் அப்படியே என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . கில்லர்ஜீ அவரகள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டதால் ..........
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
நீக்குதமிழோடு விளையாடு என்று ஒரு நிகழ்ச்சி ஜேம்ஸ் வசந்தன் நடத்திக் கொண்டிருந்தார் பள்ளிப்பிள்ளைகளின் தமிழ் அறிவை உரசிப்பார்க்கும் நிகழ்ச்சி/ அதில் ஒரு சிறுவன் ஏதோ கிராமத்திலிருந்து ( பெயர் நினைவுக்கு வரவில்லை ) வந்து அசத்தினான் மேலதிக செய்தியாக அந்தப் பள்ளிக்கு சொற்ப மாண வர்களே சுற்றுப் புற கிராமங்களில் இருந்து ஆசிரியரின் ஆர்வத்தால் வந்துபடித்துக் கொண்டிருகிறார்கள் அதைப்பார்த்தபின் எல்லா அரசுப்பள்ளிகளுமிப்படி இருக்கக் கூடாதா என்று நினைக்கத் தோன்றியது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
நீக்குலைலாகமே என்றால் என்ன
பதிலளிநீக்குமலையாளம் தெரிந்தவர்கள் சொல்லலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.