அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 19
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
அன்னவரத்திலிருந்து திரும்பிய நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் விசாகப்பட்டினம் நகரின் புருஜுபேடா எனும் இடத்தில் இருக்கும் ஒரு கோவில். வரும் வழியில் தான் விசாகப்பட்டினம் நகரத்தின் பிரதான தொழிற்சாலையான SAIL. அதன் வழியே பயணிக்கும்போது மீண்டும் விசாகப்பட்டினம் பதிவர் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் நினைவுக்கு வந்தார். அவருக்கு இருந்த பணிச்சுமைகளுக்கு நடுவே, எங்களால்
அவரைச் சந்திக்க இயலவில்லை! ஆனாலும் இரண்டு மூன்று முறை அவருடன் அங்கிருந்தபோது பேசினேன். அன்னவரத்தில்
சத்யநாராயண ஸ்வாமியை தரிசனம் செய்து கொண்ட நாங்கள் அடுத்ததாய் தரிசனம் செய்தது கனக மஹாலக்ஷ்மி அம்மவாரியை!
குறுகிய சாலையில் அமைந்துள்ள இக்கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. தற்போது இருக்கும் கோவில் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது.
ஆனால் இங்கே வைக்கப்பட்டிருக்கும் சிலை மிகவும் பழமையானது என்றும்
விசாகப்பட்டினத்தினை ஆண்ட மன்னவர்கள் பூஜித்த சிலை என்றும் சொல்கிறார்கள்.
இப்பகுதியை ஆண்ட விசாகா மன்னர்களின் ஆட்சியின் பொது, இச்சிலை கோட்டைக்குள் அமைந்த
கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்தது என்றும், படையெடுத்து வந்த எதிரிகள், கோட்டை,
கோவில் ஆகிய இரண்டையும் அழித்து, சிலையையும் பின்னம் செய்து, அருகே இருந்த
கிணற்றுக்குள் வீசி விட்டதாகவும், பின்னர், ஏதோ ஒரு பக்தரின் கனவில் தோன்றி தன்
இருப்பிடத்தைத் தெரிவிக்க, சிலையை கிணற்றிலிருந்து எடுத்து கோவில் அமைக்கப்பட்டதாகவும்
சொல்கிறார்கள்.
கோவில் அமைக்கும்போது, மேற்கூரை
இல்லாமல் அமைக்கும்படியும் உத்தரவு கிடைத்ததால், கனக மகாலக்ஷ்மி அம்மனின் சிலை
இருக்கும் இடத்தின் மேலே இப்போதும் கூரை கிடையாது. சிலை கிடைத்த கிணற்றைச் சுற்றி
அஷ்டலக்ஷ்மி சிலைகள் அமைத்திருகிறார்கள். பின்னமான சிலையும் [ஒரு கை உடைந்த
நிலையில்] அப்படியே இருக்கிறது. லக்ஷ்மி தேவியின் ரூபமாக வழிபடப்படும் இந்த கனக
மஹாலக்ஷ்மி புருஜுபேடா பகுதியில் பெரும்பாலான மக்களால் வழிபடப்படும் தேவி. புருஜு
எனும் தெலுங்கு வார்த்தைக்கு கோட்டை என்ற பொருள், கோட்டை இருந்த பகுதி என்பதால்,
இப்போது இப்பகுதி புருஜுபேடா என்றே அழைக்கப்படுகிறது. இக்கோவில்
விசாகப்பட்டினத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தளங்களில் ஒன்றாக இருக்கிறது.
இன்னுமொரு கதையும் இங்கே
சொல்லப்படுகிறது. 1912-ஆம் ஆண்டு, கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட தேவியின் சிலை
சாலைக்கு நடுவே அமைக்கப்பட்ட மண்டபத்தில் வைக்கப்பட்டதாகவும், சாலையை
அகலப்படுத்தும் நோக்கத்தில் சிலையை அகற்றி ஒரு ஓரத்தில் வைக்க, அப்பகுதியில்
"பிளேக்" நோய் பரவி பல உயரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதற்குக் காரணம்,
சிலை அகற்றப்பட்டதே என நம்பிய மக்கள் மீண்டும் சிலையை சாலை நடுவே
வைத்திருக்கிறார்கள். அப்படி வைக்கப்பட்ட பிறகு பிளேக் நோய் அப்பகுதியில்
முற்றிலும் அழிக்கப்பட்டது என்றும்
சொல்கிறார்கள். அதன் பிறகு இக்கோவிலின் புகழ் இன்னும் அதிகமாக பரவி இங்கே
இருக்கும் மக்கள் அனைவரும் தேவியை வழிபட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கனக மகாலக்ஷ்மி தேவியை உண்மையின்
ஸ்வரூபமாக வணங்குவதால் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை
இங்கே உள்ள மக்களுக்கு இருக்கிறது. போலவே, தேவியை வணங்கும் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்றும்,
குழந்தைகள் பிறக்கும்போது, தேவியின் காலடியில் வைத்து ஆசீர்வாதம் பெறுவது நல்லது
என்றும் நம்புகிறார்கள். எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும்
என்றாலும், மிருகசீர்ஷ மாதம் என அழைக்கப்படும் மாதத்தில் [நவம்பர்-டிசம்பர்] ஒரு
மாத காலம் நடக்கும் திருவிழா சமயத்தில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கலாம்.
அச்சமயத்தில் தினம் தினம் அன்னதானமும் கொடுப்பார்கள். லக்ஷகுங்குமார்ச்சனை,
வெள்ளி/தங்கக் காப்பு என கோலாகலமான கொண்டாட்டங்கள் இருக்கும் என்று தகவல் தந்தார்
அங்கே இருந்த கோவில் சிப்பந்தி ஒருவர்.
இக்கோவிலில் சிறிது நேரம் இருந்த பிறகு,
அங்கிருந்து புறப்பட்டோம். அதன் பிறகு எங்கே சென்றோம், என்ன செய்தோம் என்பதை
அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்!
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
எத்தனை கதைகள்! தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதொடர்வோம் த ம 4
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குசுவாரஸ்யம்தான் உங்கள் பயானத்தைத் தொடர்கிறோம்...
பதிலளிநீக்குகீதா: இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை.....அருமையாக இருக்கிறது படங்கள்....தொடர்கிறோம் ஜி
அடுத்த பயணத்தில் முடிந்தால் சென்று வாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
புருஜுபேடா கனக மஹாலஷ்மியத் தரிசனம் செய்துகொண்டோம். (திருப்பித் திருப்பி மாதவன் னு படித்த உடனேயே, மாதவன் ராஜகோபாலன் என்றுதான் அவர் பெயர் நினைவுக்கு வருகிறது. "மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்" என்ற அவர் பெயர் மனசில் இன்னும் பதியலை. அந்த அளவு அவர் ஊர் மன்னார்குடி அவருடைய பெயரோடு என் மனசுல செட் ஆகிடுத்து.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஅருமையான பயணம்.
பதிலளிநீக்குகனக மகாலக்ஷ்மி தேவி தரிசனம் செய்தேன் காலையில்.
நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குஒரு சாமிக்கு இரு கதை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குகதைகளில்லாக் கோவில்களே இல்லை போல் இருக்கிறது/ திருச்சியில் வெஃகாளி அம்மன் கோவிலும் கூரையிடப்படாமல் இருக்கிறது
பதிலளிநீக்குவெக்காளி அம்மன் கோவிலிலும் மேற்கூரை கிடையாது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஒற்றைக் கை அம்மன் சரிதம் அறிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு