வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மலையிலிருந்து கடல் காட்சி - கைலாசகிரி


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 20

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


கைலாசகிரி மலையுச்சியிலிருந்து கடல்....

ஒற்றைக் கை அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு உணவகம் – வேறெங்கு – தஸபல்லா தான்! – மதிய உணவு சாப்பிட்ட பிறகு எங்கள் அடுத்த இலக்கு நோக்கி பயணித்தோம் – அந்த இடம் – விசாகப்பட்டினம் கடலருகே அமைந்திருக்கும் கைலாச கிரி!  360 அடி மலை உச்சியிலிருந்து கடற்கரை, விசாகப்பட்டினம் நகரம் ஆகிய இரண்டையும் கழுகுப் பார்வையில் பார்க்க ஒரு சிறப்பான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க இந்த கைலாச கிரி மலைக்குச் செல்லலாம். விசாகப்பட்டினம் வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் தவிர, பெரும்பாலான விசாகப்பட்டின நகரவாசிகளும் தங்களது மாலைப் பொழுதுகளை இனிமையாகக் கழிக்க தேர்ந்தெடுக்கும் இடம் இந்த கைலாச கிரி. அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு வசதிகள், பாரா கிளைடிங், மலையைச் சுற்றிவர ஒரு சிறு இரயில் வண்டி, என பல விஷயங்கள் இங்கே மக்களை மகிழ்ச்சிப்படுத்த அமைத்திருக்கிறார்கள். குதிரை சவாரி செய்யவும் இங்கே வசதிகள் உண்டு.  



கைலாசகிரி மலையுச்சியில் சிவனும் பார்வதியும்....

இந்த மலையில் அமைத்திருக்கும் இன்னுமொரு விஷயம் இரண்டு சிலைகள்! – சிவன் மற்றும் பார்வதி தேவியின் பெரிய அளவு சிலைகள் அங்கே வைத்திருக்கிறார்கள்! கைலாச பர்வதத்தில் இப்படித்தான் அமர்ந்திருப்பார்களோ! – இந்த மலைக்குக் கூட கைலாச கிரி என்ற பெயர்தானே வைத்திருக்கிறார்கள்! இந்த மலையுச்சிப் பூங்காவிற்கு வருவதற்கு ஒரு சாலையும் உண்டு. சாலை வழியாக பயணிக்க முடியும் என்பது தவிர, கேபிள் கார் மூலமாகவும் நாம் மலையுச்சியை அடையலாம்! நாங்கள் சாலை வழியே பயணித்தோம். கேபிள் கார் கட்டணம், நுழைவுக்கட்டணம், நிறுத்துமிடக் கட்டணம் என அனைத்தும் வசூலிக்கிறார்கள்.




கைலாசகிரி - பூக்கள் ஊர்வலம்....

பூங்கா என்றாலே காதலர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்! இங்கேயும் ஜோடி ஜோடியாக நிறைய காதலர்கள்! அவர்கள் மெய்மறந்த நிலையில் இயற்கையோடு ஒன்றியிருக்க, நாம் நம் வேலையைப் பார்க்கலாம் வாங்க! அழகிய இயற்கைக் காட்சிகளுக்கு குறைவில்லாத போது இந்த செயற்கைக் காட்சி நமக்கெதற்கு! பூக்கள், இயற்கைக் காட்சிகள், அசராது, அலுக்காது வந்து திரும்பும் கடல் அலைகள் என பலவும் ஒருசேர இங்கே பார்க்கக் கிடைக்கும். கூடவே இதமான காற்று நம் உடலைத் தொட்டுத் தழுவிச் செல்ல, பூங்கா முழுவதும் ஒரு உலா வந்து கடலைப் பார்த்த படி அமைத்திருக்கும் இருக்கைகளில் உட்கார்ந்து அழகை ரசிக்கலாம்! மலையின் மேலேயே சில கடைகளும் உண்டு என்பதால் இங்கே வந்து இயற்கையை ரசிப்பதோடு, உண்டு களிக்கவும் வழியுண்டு.



கைலாசகிரி - மாலை நேரச் சூரியன்....

இப்படி காட்சிகள் பலவும் பார்த்ததோடு இல்லாமல், அங்கே நிறைய புகைப்படங்களும் எடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. சில படங்கள் மட்டும் இங்கே இணைத்திருக்கிறேன். விசாகப்பட்டினம் சென்றால் தவற விடக்கூடாத இடம் இந்த கைலாச கிரி. மலையுச்சியில் உள்ள பூங்கா தவிர, வரும் வழியெங்கும் சாலையோரத்தில் தங்களது இருசக்கர வாகனத்தினை நிறுத்தி தடுப்புச் சுவரில் அமர்ந்தபடி, கடற்கரையைப் பார்த்துகொண்டு, இயற்கையான காற்றைச் சுவாசிக்கும் பலரை நீங்கள் காண முடியும். என்ன ஒரு வசதி! இங்கே தலைநகரில் எங்கே பார்த்தாலும் நச்சுக் காற்று! வாகனங்களின் புகை, அழுக்கு, புழுதி என இருக்க, இப்படி ஒரு இடம் எங்களுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது!


கைலாசகிரி - விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமி....








கைலாசகிரி மலையுச்சியிலிருந்து கடல் காட்சிகள்....

கைலாசகிரியிலிருந்து கடற்கரைக்கு வந்து சிறிது நேரம் கடல் அலைகளோடு உற்சாக பேச்சுவார்த்தை நடத்த, எங்கள் காலடியை நனைத்து மகிழ்ந்தது கடலும்….. கடற்கரையில் ஒரு கப்பல் கண்காட்சியும் உண்டு. நாங்கள் அங்கே செல்ல வில்லை. கடற்கரை என்றாலே நிறைய நொறுக்ஸ் தீனியும் கிடைக்குமே. அப்படி கிடைத்த சிலவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தோம்.  அன்றைய நாள் விசாகப்பட்டினத்தில் எங்களது கடைசி நாள். அன்று இரவே விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட வேண்டும் என்பதால், கடற்கரையை விட்டு விலக மனதில்லாவிட்டாலும் புறப்பட்டோம். போகும் வழியில் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்குமிடம் சென்று அறையைக் காலி செய்த பிறகு Bye Bye விசாகா! ஆந்திரப் பிரதேசத்திலிருந்து அடுத்து ஒடிசா! போலாம் வாங்க!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


28 கருத்துகள்:

  1. அழகான புகைப்படங்கள்! கைலாசகிரியும் அழகுதான் போலும்...சிவன் பார்வதி அழகாக இருக்கிறார்கள்...தொடர்கிறோம்..

    கீதா: நாங்களும் இந்த இடம் சென்றோம் ஜி!! அருமையான இடம்.நான் மிக மிக ரசித்தேன்..சொல்லப் போனால் திரும்பி வர மனதே இல்லை. இயற்கையும் காற்றும்...அங்கு குழந்தைகள் விளையாடுவதையும், மக்கள் எல்லோரும் எஞ்சாய் செய்வதையும், மலர்களையும், அங்கிருந்து கடலையும் காணக் கண் கொள்ளாக் காட்சி மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்வைக் கொடுத்தது...ரசித்தேன் மிகவும். எனக்குச் சாலை வழி செல்ல வேண்டும் என்ற ஆசை. அப்போதுதான் கடலை அங்கிருந்து தெரியும் வளைவுகளைப் படம் எடுக்க முடியும் என்று....ஆனால் உடன் வந்தவர்கள் கேபிள் கார் பயணித்ததில்லை என்று கேபிளில் சென்றோம். எனவே கடலை மலையிலிருந்து பார்க்கும் வியூ பாயிண்டிலிருந்து மட்டுமே எடுக்க முடிந்தது. அதுவும் அந்தி மயங்கி விட்டதால் எனது கேமராவில் அவ்வளவு நன்றாக வரவில்லை.

    இந்த இடத்தின் உங்கள் புகைப்படங்களக் காண ஆவலுடன் இருந்தேன்! அருமையாக இருக்கிறது ஜி!! ரசித்தேன் மிகவும்...அதுவும் நிறைய படகுகள் இருக்கும் அந்தப் புகைப்படம் செம...டாப் ஆங்கிளில்..வளைவுகள் அலைகளின் நுரை கரையில் என்று உங்களின் படங்கள் அசத்தல்...

    நீங்கள் சொல்லுவது போல் லைக் மைண்டட் பீப்பிளுடன் பயணித்தால் தான் பயணம் இனிமையாக இருக்கும்!! சுதந்திகமாக நிறைய ரசிக்கலாம்..புகைப்படங்களும் எடுக்கலாம்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி....

      நீக்கு
  2. அந்த மஞ்சள் நிறம் கட்டிய மற்றும் தூரத்தில் வெள்ளை நிற துணி கட்டிய படகுகள் படமும் செம....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி....

      நீக்கு
  3. பெயருக்கு ஏற்றது போலஅழகிய இடம் தான். படங்கள் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....

      நீக்கு
  4. படங்கள் அத்தனையும் அருமை..

    அழகான இடத்துல அமர்ந்து அம்மையும் அப்பனும் என்ன பேசிக்கிட்டிருப்பாங்க?! நம்மை பத்தியா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பேசி இருப்பாங்க.... அதானே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.....

      நீக்கு
  5. படங்கள் நல்லாருக்கு. இந்த இடம் சிங்கம் 3ல பார்த்தமாதிரி இருக்கே. த ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கம் 3-ல் பார்த்த மாதிரி இருக்கே..... இருக்கலாம். இங்கே நிறைய படப்பிடிப்புகள் நடக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. கடல் காட்சிகள் ரசிக்க வைய்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. இந்த மாதிரி இடங்களில் வளர்வதுதான் தெய்வீகக் காதலோ?!! ஓரிரண்டு படங்கள் போட்டிருக்கக் கூடாதோ!

    படங்களை ரசித்தேன். மற்ற படங்கள் ஞாயிறு அன்று... சரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரண்டு படங்கள் போட்டிருக்கக் கூடாதோ.... :) நல்ல ஆசை. எடுத்திருந்தால் அடி கிடைத்திருக்குமே! அதை யார் வாங்குவது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. மாலைச்சூரியன் அழகு..
    அருமையான படங்கள்.. கண் கவர்கின்றன..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. நான் பார்த்த கைலாஷ் கிரி நிறையவே மாறி இருக்கிறதே அங்கே டைடானிக் கப்பலை நினைவு படுத்திய இடம் இருந்ததே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய மாற்றங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  10. கைலாசகிரியில் எடுத்துள்ள படங்கள் அருமை. அதுவும் அந்த மாலைநேர சூரியன் மிக அருமை! நானும் அங்கு போயிருக்கிறேன். ஆனால் அப்போது காரில் செல்லும் வசதி மட்டும் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வின்ச் வசதி பின்னர் ஏற்படுத்தி இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. அழகான இடம். கைலாசகிரி மலையுச்சியிலிருந்து எடுத்த காட்சிகள் அழகு.
    சிவன் , பார்வதி அழகு.
    பயணம் இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. கடற்காட்சிகள்அருமை
    அழகு
    நன்றி ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. கைலாசகிரி பதிவைப் பார்த்ததும் கைலாசத்தில் இறைவனையும், உமையம்மையையும் பார்த்த உணர்வு.அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....