அது என்னப்பா, புதன் கிழமையான இல்லத்தரசியோட பதிவு தானா என்று
யாரும் கேட்டுவிடக்கூடாது! அது மட்டும் இல்லாம, அவங்க எழுதுன போஸ்ட்ல எதுக்கு
உன்னோட உள்ளீடு முதல் பாராவா? என்றும் யாரும் கேட்கக்கூடாது சொல்லிட்டேன்! ஜஸ்ட்
ஒரு இண்ட்ரோ… அவ்வளவு தான்! இதுக்கு பெரிய காரணம் எல்லாம் கிடையாது! சரியா, இன்னிக்கு
பதிவுக்கு முன்னாடி ஒரு இண்ட்ரோ!
கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி, கரைத்த தோசை [ரவை கலந்தது] தவிர
வேறு எதுவும் செய்ய முடியும்னு தெரியவே தெரியாது – நெய்வேலில இருந்த வரை. இங்கே
வந்த பிறகு தான் கோதுமை மாவு வச்சு விதம் விதமா “வச்சு செய்வாங்க!” என்று புரிந்தது!
பராட்டா கூட கோதுமை மாவில் தான் செய்யறாங்க என்று புரிந்தபோது அட பரவாயில்லையே
என்று நினைத்தேன். முழு கோதுமைல பால்
எடுத்து கோதுமை ஹல்வா செய்வாங்க என்று தெரிந்ததே இங்கே வந்த பிறகு தான். கூடவே
ஹல்திராம், பிகானேர்வாலா போன்ற கடைகளில் ஆட்டா கா லட்டு, ஆட்டே கி பின்னி
என்றெல்லாம் பார்க்கும்போது அட ஆட்டா லட்டு கூட உண்டா? என்றும் அது என்ன பின்னி
என்றும் கேள்வி எழுந்தது.
ஆட்டே கி பின்னி… நல்லா
படிங்க… பின்னி! கொஞ்சம் மாத்தி படிச்சா பன்னி! தமிழ்ல பன்னின்னா கவுண்டமணி செந்தில
திட்டறது நினைவுக்கு வரும். ஆனா, தில்லில கடைக்கு போய் எதையாவது வாங்கினா “பன்னி”ல
தான் போட்டு தருவாங்க! இங்கே பிளாஸ்டிக் கவரை ”பன்னி”ன்னு தான் சொல்வாங்க! என்ன
பாஷையோ! முதல் முதலா, “பன்னி மே தேதூன்?” அதாங்க ‘பன்னி’ ல குடுக்கவா என ஒரு
கடைக்காரர் கேட்டபோது, மனதுக்குள் அவனைத் திட்டினேன் – “போடா பன்னி, நீதான் பன்னி,
உங்க குடும்பமே பன்னிக்குடும்பம்” என்று திட்டிக்கொண்டிருக்க – மனதுக்குள் தாங்க,
அவர் பிளாஸ்டிக் கவரை எடுத்து “பன்னி, பன்னி” என்று இருமுறை சொல்லி, பொருளைப்
போட்டுக்கொடுக்க, திட்டியபடி வாங்கிக்கொண்டேன்! பிறகு தான் தெரிந்தது – இந்த பன்னி
விவகாரம்!
ஆட்டே கி பின்னி கூட கோதுமை மாவை நெய்யில் வறுத்து,
முந்திரிபருப்பு, திராட்சை, பாதாம் கலந்து பால் தெளித்து பிடிக்கப்படும் லட்டு
மாதிரி ஒரு ஸ்வீட் தான்! ஒரு நாள் செஞ்சு, அதைப் படம் பிடித்து, போஸ்டும் போடறேன். சரியா.
இன்னிக்கு, அம்மணி செஞ்ச லட்டுகள் எப்படின்னு பாருங்க!
நாளைய பதிவில் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
Over to Adhi Venkat!
மாலாடு!
இது எங்கள் குடும்பங்களில் கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் கட்டாயம்
இடம்பெற்றிருக்கும். பொட்டுக்கடலையுடன், சர்க்கரை சேர்த்து அரைத்து காய்ச்சிய
நெய்யுடன் முந்திரி சேர்த்து கைப்பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடிக்க வேண்டியது தான்.
[ரொம்பவே
ஈசியா இருக்கே! – வெங்கட்]
ஆட்டா லாடு!
வடக்கில் ஆட்டா என்றால் கோதுமை மாவு. கோதுமை மாவும், பாலும்
இல்லாமல் அவர்களின் வாழ்வு ஸ்தம்பித்து தான் போகும். அவர்களின் வாழ்வோடு ஒன்றிப் போன இந்த கோதுமை மாவில் லட்டு செய்து
பெளர்ணமியன்று செய்யும் சத்யநாராயண பூஜைக்கு பிரசாதமாக கொடுத்து
சாப்பிட்டிருக்கிறேன். முன்பொருமுறை டெல்லியிலும் செய்து பார்த்திருக்கிறேன்.
கோதுமை மாவை நன்கு நெய்யில் வறுத்து, சர்க்கரையை பொடித்து இதனுடன்
சேர்த்து காய்ச்சிய நெய்யும் முந்திரியும் சேர்த்து இதுவும் உருண்டை பிடிக்க
வேண்டியது தான்..
வீட்டிலேயே வெண்ணை எடுத்து நெய் காய்ச்சியதில், நெய் நிறைய
இருந்ததால் இரண்டையும் செய்து உங்களின் கண்களுக்கு விருந்து படைத்தாயிற்று. என்ன!
ருசியா இருக்கா??
நட்புடன்
மாலாடு எனக்கு ரொம்.....பப் பிடிக்குமாக்கும்...
பதிலளிநீக்குகோதுமை மாவில் லட்டுபோலச் சேய்த்தொல்லை. ஆனால் நெய் காய்ச்சிய உடன் அதில் கோதுமை மாவிப் போட்டுப் புரட்டி, சர்க்கரை சேர்த்து ஸ்பூனில் எடுத்துச் சாப்பிடும் வழக்கம் உண்டு! தம இரண்டாம் வாக்கு என்னுதாக்கும்!
/சேய்த்தொல்லை//
நீக்குசெய்ததில்லை!
நெய் காய்ச்சிய பாத்திரத்தில் கோதுமை மாவு - நானும் அப்படிச் செய்து சாப்பிட்டதுண்டு! :) இனிய நினைவுகள். காய்ச்சும்போது சில முருங்கை தளிர் இலைகளைப் போட்டு அதையும் சாப்பிட்டதுண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//சேய்த்தொல்லை//// இந்த Auto correction பெரும் தொல்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆட்டா லாடு! இதை லாடாகப் பிடிக்காமல்அப்படியே ஒரு ட்ரேயில் அமுக்கிட்டு ஸ்லைஸ் போட்டுக்கலாம் :-) சூடாக் கை வைக்கும் வேலை மிச்சம் :-)
பதிலளிநீக்குஸ்லைஸ் போட்டுக்கலாம்! இது கூட நல்ல ஐடியா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
/அப்படியே ஒரு ட்ரேயில் அமுக்கிட்டு/ சூப்பர் டிப்ஸ்!
நீக்குஆமாம் துளசிக்கா....சின்ன சின்னக் கிண்ணங்கள் விதவிதமான ஷேப் கிண்ணங்கள்ல போட்டு அழுத்தித் தட்டினாலும் சரி இல்லை வித விதமான ஷேப் கட்டர் இருக்குமே பிஸ்கட் கட்டர்....அத வைச்சுக் கட் பண்ணினாலும் குழந்தைகலுக்கு நாவல்டி!!
நீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குவிதம் விதமான ஷேப் கட்டர்... இதுவும் நல்ல ஐடியா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
மாலாடு, அதிலும் பயத்தமாலாடு எனக்கு மிகவும் பிடிக்கும். பொட்டுக்கடலைல செய்வதும் கோதுமைல செய்வதும் நல்லா இருக்கும். ஆனா, நான் பயத்தமாலாடும் பொரிவிளங்கா உருண்டையும்தான் விரும்பி சாப்பிடுவேன். மாலாடுகளின் செய்முறை பார்த்தபின், நெய் சேர்க்கும் அளவு பார்த்தபின் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இதை ஒருமுறை செய்துபார்க்கிறேன்.
பதிலளிநீக்குமாலாடு எனக்கும் பிடிக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
மேட்டர் funnyயாக இருக்கும் போலயே ஜி
பதிலளிநீக்குதலைப்பு புதுமையாக இருக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅருமை
பதிலளிநீக்குதம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகண்களுக்கு விருந்து கொடுத்த நீங்க வாய்க்கு விருந்து கொடுக்க போவது எப்போது? நாக்க்கில் எச்சில் ஊற காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குஅடுத்த இந்தியப் பயணத்தில் சொல்லுங்கள் மதுரைத் தமிழன். சந்திப்போம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை.
பதிலளிநீக்கு/ முழு கோதுமைல பால் எடுத்து கோதுமை ஹல்வா செய்வாங்க என்று தெரிந்ததே இங்கே வந்த பிறகு தான்./ அது சரி. திருநெல்வேலி அல்வா கோதுமைப்பால் எடுத்து செய்யப்படுவதே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குமும்பையில் மலாடு என்று ஒரு ஏரியா இருக்கே ,அங்கே உள்ளவர்கள் இந்த மாலாடுநிறைய தின்பார்களோ :)
பதிலளிநீக்குநல்ல சந்தேகம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
மாலாடுவை நாங்கள் நெய் உருண்டை என்று சொல்வோம். செய்ய எளிது சத்துக்கள் நிறைந்தவை. குழந்தைகள் பள்ளி விட்டு வந்தால் எங்கள் வீடுகளில் மாலை தின்பண்டம் அதுதான், கூட கைமுறுக்கு, தேன்குழல் கடையில் வாங்கி தின்பண்டங்களை கொடுக்காத காலம்.
பதிலளிநீக்குகோதுமை மாவு சீடை, கோதுமை உருண்டை எல்லாம் செய்வோம்.
வ்றுத்த கோதுமை மாவை பூரி மாவு போல் பிசைந்து அதை பூரியாக செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் போட்டு வெந்து மேலே வந்தவுடன் எடுத்து தேங்க்காய்பூ, வெல்லத்தூள் போட்டும்
இனிப்பு போடாமலும் சாப்பிடுவார்கள் நன்றாக இருக்கும். (சம்பா கோதுமையில் செய்வார்கள்)
முன்பே படித்து விட்டேன் ஆதியின் மாலாடுவை.
உங்கள் இண்ட்ரோ!வும் நன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குகோதுமை மாவில் லட்டா?! புதுசா இருக்கே! செஞ்சு பார்த்துட வேண்டியதுதான். நானும் இன்னிக்குதான் நெய் காய்ச்சப்போறேன்
பதிலளிநீக்குசெய்து பாருங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
அருமை...
பதிலளிநீக்குநன்றி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஎனக்கு ஆகாது! த ம 10
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குபொட்டுக்கடலை மாவுக்குப் பதில் கடலை மாவில் செய்து அதை பேசின் லட்டு என்று சுவைத்து சாப்பிட்டு இருக்கிறேன்
பதிலளிநீக்குகடலை மாவு - Bபேசன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
ஆஹா!! மிகவும் பிடித்த ஸ்வீட்டுகள். வீட்டில் எல்லாம் செய்வதில்லை. கடையில் வாங்கிச் சாப்பிட்டதுண்டு. கோதுமை லட்டுவைத் தவிர....பொட்டுக்கடலைமாவு லட்டு, ரவை லட்டு எல்லாம் சாப்பிட்டதுண்டு.
பதிலளிநீக்குகீதா: என் மகனுக்கு (எனக்கும் தான் ரொம்பப் பிடிக்கும்) ரொம்பப் பிடித்த லட்டுகள்! வீட்டில் செய்வதுண்டு. மாலாடு மற்றும் ஆட்டா லட்டு. அதுவும் வெண்ணைக் காய்ச்சியதும் கொஞ்சூண்டு கடைசில வைத்து அதுல கோதுமை மாவு போட்டு வறுத்து அதில் சர்க்கரை சேர்த்து...ஆஹா சின்ன வயதில் ரொம்பவே சுவைத்திருக்கிறேன். மகனுக்கும் பிடிக்கும்...அதையே ஆதி அவர்கள் செய்திருப்பது போல செய்து ஒரு சின்னக் கிண்ணத்தில் போட்டு நன்கு அழுத்தித் தட்டினால் அப்படியே ஷேப் கிடைக்கும் இல்லையா...அதில் முந்திரி திராட்சை எல்லாம் போட்டுத்தான்... மகனுக்குச் சின்ன வயதில் அப்படி வித விதமான ஷேப்பாகச் செய்து கொடுத்தால் ரொமப்ப் பிடிக்கும். லட்டுவாகவும். சில சமயம் லட்டு பிடிக்கச் சோம்பேறித்தனமாக இருந்தால் இப்படிச் ஷேப் செய்து கொடுத்துவிடுவேன்.
ஆதியிடம் சொல்லுங்கள் பார்க்கவே அப்படியே எடுத்துச் சாப்பிட வேண்டும் போல் உள்ளது என்று....எடுக்க முந்திருந்தால் எடுத்திருப்பேன் ஹஹஹ்
எடுக்க முடிந்திருந்தால் எடுத்திருப்பேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!