திங்கள், 21 பிப்ரவரி, 2011

நானொரு மழை ரசிகன்!



இப்போது என்னைத் தொடர்பவர்கள் நூறு பேர்கள் என்ற சந்தோஷத்தில் மழையில் நனையப் போகிறேன்!

சிறு சிறு துளிகளுடன் ஆரம்பித்து சாரலாய் பரிணாமம் கொண்டு ஆரவாரமாய் தாரை தாரையாய்ப் பெய்யும் மழையினை யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் மழை நம்மை முத்தமிடுவது போல வலிக்காமல் நம் மேல் விழும்போது போது அதில் நனைய எனக்குப் பிடிக்கும். இந்த மழையில் நனைய நாம் எல்லோருமே ஆசைப்பட்டிருப்போம்! அம்மா திட்டுவார்களே என்ற எண்ணம் கூட அப்போது நமக்கு வந்திருக்காது. திட்டு வாங்கினாலும் பரவாயில்லையென பலமுறை நனைந்து கொண்டே வீடு சென்றிருக்கிறேன், கையில் குடை இருந்தும்!

இப்போதும் அந்த பழக்கத்தினை விட்டுவிடவில்லை. பல சமயங்களில் மழையில் நனைந்து கொண்டே யானையைப் போல அசைந்தபடி வருகிறேன். தில்லிக் காரர்கள் மழை ரசிகர்கள்! ஏனெனில் எப்போதாவது தானே மழை பொழிகிறது இங்கே! அதனால் மழை பெய்யும்போது குடும்பத்துடன் மொட்டை மாடிக்கு வந்து மழையில் நனைந்து குதூகலிப்பார்கள்.

எனக்கும் மழைக்கும் அப்படி ஒரு ராசி! முதன் முதலில் மனைவியுடன் இந்தியா கேட் சென்ற போது அடித்துப் பெய்தது மழை! எங்கேயும் கூரை கூடக் கிடையாது மழையிலிருது தப்பிக்க! அதனால் மழையில் நன்றாக நனைந்தோம்! அதன் பிறகு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன் மனைவியுடன் – கூடவே சொல்லி வைத்த மாதிரி மழையும்!

இப்படிப்பட்ட மழையை ரசிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். “சனியன் பிடிச்ச மழை, எப்பப் பார்த்தாலும் நசநசன்னு பேஞ்சுகிட்டேஇருக்கு!” என்று எரிச்சல் அடைபவர்களை கண்டிருக்கிறேன்.

மழையை ரசிப்பவர்களுக்கும், ரசிக்காதவர்களுக்கும் இப்படி ஒரு மழையை ரசிக்க கீழே உள்ள காணொளியைப் பாருங்கள். முதல் காணொளியைப் பார்க்கும்போது “ப்ளே” வை அழுத்திய பிறகு கண்களை மூடிக்கொண்டு விடுங்கள்! கண்களை மூடிக் கொண்டு எப்படி காணொளி என்பவர்களுக்கு, அப்பொழுதுதான், சிறு துளியாய் ஆரம்பித்து சாரலாய் பரிணாமம் கொண்டு இடி, மின்னலோடு பெய்யும் மழையினை நீங்கள் பூரணமாக உணர்ந்து ரசிக்க முடியும். இந்த மழை ஒரு இசைக்குழு வெறும் கைகளைக் கொண்டே உருவாக்கியது!

வெறும் மழை மட்டும்


மழைக்குப் பின் பாடலும் இருக்கிறது. மேலே கொடுத்த காணொளியில் மழை மட்டுமே இருக்கிறது. முழு பாடல் பார்க்க இங்கே சொடுக்குக!

மழையை ரசித்தீர்களா மழை ரசிகரே!

மீண்டும் சந்திப்போம்.

வெங்கட் நாகராஜ்

36 கருத்துகள்:

  1. ஆஹா மழை மெதுவாய் ஆரம்பித்து சடசடன்னு பெய்யும் பொழுதும் மழை வேகமாய் கொட்டி தீர்ப்பது அருமை.மழையை உணரச் செய்தமைக்கு மகிழ்ச்சி.ம்ம்,,,இங்கு மழையை பார்ப்பதே அபூர்வம்.இதை அப்ப கேட்டு ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. யாருக்குத்தான் மழையும், மழைக்கு முன்னோட்டமாய் வருகிற மண்வாசனையும் பிடிக்காது? அதிலும் உங்களது வலைப்பூவுக்கு வருவது குற்றாலச்சாரலில் நனைவதுபோல மகிழ்ச்சி தருகிற அனுபவம். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  4. நன்கு அனைவரையும் மழையில் நனைய விட்டு மகிழ்ச்சியூட்டியுள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நூறுதொடர் நண்பர்கள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..நூறு பெருகி ஆயிரமாக வாழ்த்துகள்..

    தொடர்மழையூரில் பிறந்த எனக்கு இப்பொழுது சொட்டுமழை இல்லாத பாலைவனம். இங்கு கருமேகம் கட்டினாலே மக்களிடம் ஆர்ப்பரிப்பு பொங்கும்..

    சைக்கிள் காலங்களில் மழையோடு மழையாக நனைந்து வரும் சுகமே சுகம்...

    பதிலளிநீக்கு
  6. மழை அருமை...

    வாழ்த்துக்கள் 100 நண்பர்களுக்கு...

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் மழையில் நனைவது என்றால் மிகவும் பிடிக்கும்.

    காணொளி அருமை. கண்மூடி ரசித்தேன்.

    நன்றி வெங்கட்.

    நூறு பேருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சதத்திற்கு வாழ்த்துக்கள்.
    காதுகளில் மழை பொழியக் கண்டேன்! ;-)

    பதிலளிநீக்கு
  9. அழகான மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் நண்பா

    பதிலளிநீக்கு
  10. இடி முழக்கம் மத்தளம் வாசிக்க , காற்று பின்னணி பாட , வரும் மழை தரும் ஆனந்தமே தனி


    நன்றி வெங்கட். நூறு பேர் ஆயிரம் ஆகா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. எனக்கு இப்பொழுதெல்லாம் மழையில் நனைந்தால் ரொம்ப குளிர் வந்துவிடுகிறது. பசங்க நனைவதை ஆசையுடன் பார்த்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல மழை. 100 க்கு வாழ்ந்துகளும்.

    பதிலளிநீக்கு
  13. சிறு பூவினிலே விழுந்தால்
    ஒரு தேன்துளியாய் வருவாய்
    சிறு சிப்பியிலே விழுந்தால்
    ஒரு முத்தெனவே மலர்வாய்
    பயிர் வேரினிலே விழுந்தால்
    நவதானியமாய் விளைவாய்
    என் கண்விழிக்குள் விழுந்ததனால்
    கவிதையாக மலர்ந்தாய்.

    மழை கவிதை கொண்டு வருது
    யாரும் கதவடைக்க வேண்டாம்
    ஒரு கறுப்புக் கொடி காட்டி
    யாரும் குடை பிடிக்க வேண்டாம்
    இது தேவதையின் பரிசு
    யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
    நெடுஞ்சாலையிலே நனைய
    ஒருவர் சம்மதமும் வேண்டாம்

    அந்த மேகம் சுரந்த பாலில்
    ஏன் நனைய மறுக்கிறாய்
    நீ வாழ வந்த வாழ்வில்
    ஒரு பகுதி இழக்கிறாய்

    நீ கண்கள் மூடிக் கரையும் போது
    மண்ணில் சொர்க்கம் எய்துவாய்
    நீ கண்கள் மூடிக் கரையும் போது
    மண்ணில் சொர்க்கம் மீளுவாய்.

    வெங்கட்.இந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்தபோது பாண்டிச்சேரியில் மஞ்சள்வியிலும் மழையுமாய் என் காலை புலர்ந்துகொண்டிருக்கிறது.

    ஆர்.வி.எஸ். சொன்னது போல காதுகளுக்கு நல்ல மழை.

    பதிலளிநீக்கு
  14. மழைச்சாரல் எனக்கும் ரொம்ப பிடிக்கும் :-)

    பதிலளிநீக்கு
  15. மழை என்றாலே அது தரும் குதூகலமும், எங்கள் ஆப்த சிநேஹிதியின் சாரல் கவிதைகளும் நினைவுத் தடத்தின் மேலெழும்பி மனம் நிறைக்கும். இப்போது உங்கள் பதிவும் அப்படியான மகிழ்வை அளித்தது வெங்கட்... காணொளியை மறுபடி வருகையில் காண்பேன்... அல்லது மழை வேண்டியிருக்கும் போதெல்லாம்... அட... இந்த நேரம் இங்கும் மழை தொடக்கம்... அதிகாலையிலிருந்தே வருண பகவான் தன் கடைக்கண் பார்வையை எம் பக்கம் திருப்பியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  16. congrats for 100 followers

    நானும் ஒரு மழை ரசிகையே.இப்பவும் கூட
    மழையில் நனைவதுண்டு

    கண் மூடி காணொளி மழை ரசித்தேன்.
    உங்கள் பதிவையும் ரசித்தேன்
    பகிர்வுக்கு நன்றி

    சுந்தர்ஜி தந்திருக்கும் அந்த மழைப் பாடல்
    எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

    எனக்கும் அரவிந்த்சாமி மாதிரி மழையில் நனைந்து பாடல் பாட
    கொள்ளை ஆசை.ஆனால் ரோட்டில் கட்டாயம் என்னை வேறு
    பார்வை பார்ப்பார்களே என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  17. தம்பி! ராசா! நம்பி நூறு பேரு தொடர்ந்து வாரோம்பா!
    நல்ல நல்ல பூந்தோட்டங்களுக்கு அழைத்துச் சென்றும், நல்ல மழையில் நனைய வைத்தும் மகிழ்விக்கிறீர்கள்! நன்று!

    பதிலளிநீக்கு
  18. . திட்டு வாங்கினாலும் பரவாயில்லையென பலமுறை நனைந்து கொண்டே வீடு சென்றிருக்கிறேன், கையில் குடை இருந்தும்!//
    குடை ந்னைஞ்சிடும்னா??
    மழையில் ந்னைந்த மாதிரி ந்ல்லா ஜில்லுன்னு ஒரு பதிவு!
    நூறுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    வாழ்க வளமுடன்.!!

    பதிலளிநீக்கு
  19. ஒரு நல்ல வெய்யில் நாள்தான்
    ஆனாலும் உங்களால்
    எனக்குப் பிடித்த
    மழையின் சுகத்தை
    என்னால் அருமையாக
    அனுபவிக்க முடிந்தது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. திரு வெங்கட் அவர்களே,

    ''அந்த நூறு பேருக்கு நன்றி", கை ஒலிகளைக்கொண்டு, மழை சொட்டு ஆரம்பித்தலில் தொடங்கி, ஜோ என்ற சத்தமிட்டு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்து முடிவில் படிப்படியாக நிற்கும் வரை அழைத்துச்சென்று , எங்களின் கண்களை மூடி ஒரு ஆனந்த சாகரத்தில் மூழ்கடித்த கலைஞர்களுக்கும் அதை வழங்கிய உங்களுக்கும்,எங்கள் அன்பு கலந்த நன்றி. வாழ்க, வளர்க.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  21. wow, enge irunthungnna thedi pidikkareenga ippadi videosai??? superb. ippadippatta kalainargalai paarkkupoothu ezunthu niru kai thatta thonrugirathu. nanri, pagirvirku.

    பதிலளிநீக்கு
  22. அழகான மழை..மழையற்ற பூமி யாருக்கு உகப்பு?
    நூறு ஆயிரமாகும் வல்லமை உங்கள் எழுத்திற்கு உண்டு..
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. @@ ஆசியா உமர்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. மழை இல்லாத நேரத்தில் இதைக் கேட்டு ரசியுங்கள்…

    ## மோகன்குமார். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே.

    @@ சேட்டைக்காரன்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. உங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு பிடியுங்கள் ஒரு பூங்கொத்தினை!

    ## வேடந்தாங்கல் கருண்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பார்த்துவிட்டேன்..

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ## பத்மநாபன்: காற்றுடன் நல்ல மழை பெய்யும்போது, அந்த காற்றினை எதிர்த்து மழையில் நனைந்தபடி சைக்கிளை ஓட்டுவது ஒரு சுகானுபவம். ஒரு முறை அப்படிச் செல்லும் போது எதிரே வந்த வண்டி மோதி கைவிரலில் தையல் போட்டு இருக்கிறேன். ஆனாலும் அந்த மழையும் சைக்கிள் ஓட்டுவதும் பிடிக்கத்தான் செய்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

    @@ அன்புடன் அருணா: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், பூங்கொத்திற்கும் நன்றி.

    ## சங்கவி: வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே.

    @@ கோமதி அரசு: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா. காணொளியை ரசித்தமைக்கும்….

    ## ஆர்.வி.எஸ்.: காதுகளில் மழை பொழியக்கண்டேன்… அருமை…. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

    @@ கவிதை காதலன்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

    ## எல்.கே.: வாழ்த்தியமைக்கு நன்றி கார்த்திக். மழை ஒரு வரம்…. அதில் நனைவது ஒரு சுகம்…

    @@ அமுதா கிருஷ்ணா: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. ஏதோ ஒரு விதத்தில் ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்…

    ## உயிரோடை: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    @@ கலாநேசன்: நன்றி நண்பரே….

    ## சுந்தர்ஜி: ஆஹா, கவிதை கவிதை… ஒரு நீண்ட கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    @@ அமைதிச்சாரல்: சாரலுக்குப் பிடிக்கும் சாரல்… :) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ## நிலாமகள்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. தேவையான போதெல்லாம் இந்த மழையை ரசியுங்கள். நெய்வேலியில் தான் அடிக்கடி மழை பொழியுமே!!!

    @@ குறிஞ்சி: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ## ராஜி: மழையை ரசிப்பதில்/நனைவதில் நம்மில் பலருக்கு ஒரே எண்ணம் இருக்கிறது என்பது மகிழ்ச்சியாய் உள்ளது. மழையில் நனைந்தபடி பாடி ஆட ஆசைதான்! ஆனால் முடியவில்லை…. :) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    @@ சித்ரா: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ## ஈஸ்வரன்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாச்சி.

    @@ சே. குமார்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

    ## இராஜராஜேஸ்வரி: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

    @@ ரமணி: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

    ## DrKandaswamyPhD: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
    @@ முத்துலெட்சுமி: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ## கனாக்காதலன்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே…

    @@ வி.கே. நடராஜன்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ## அன்னு: இந்த காணொளி பல நாட்களுக்கு முன் என் நண்பர் எனக்கு அனுப்பியது…. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

    @@ லக்ஷ்மிநாராயணன்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. ரசித்தமைக்கும்….

    இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டு அளித்த எல்லா நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @@ ரிஷபன்: இரண்டு மூன்று பதிவுகளுக்குப் பிறகு உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியூட்டியது. நீங்கள் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. தொடர் நண்பர்கள் நூறிலிருந்து பொங்கும் பால் போல ஆயிரமாய் விரைவில் பெருக என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
    மழையைப் பற்றிய பகிர்வு மனதில் சிறு சிறு துளிகளாய் சாரலடித்தது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  26. @@ மனோ சாமிநாதன்: தங்கள் வாழ்த்துகளுக்கும், காணொளியை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....