சனி, 4 ஜூன், 2011

தில்லியிலிருந்து தினமணி நாளிதழ்



தலைநகர் தில்லியில் 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கென கட்சி சாரா தமிழ் நாளிதழ்கள் இல்லை. இந்தக் குறை தீர்க்க நேற்றிலிருந்து [03.06.2011] மகாகவி பாரதியின் 13-ஆம் நினைவு நாளான செப்டம்பர் 11, 1934 அன்றிலிருந்து தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தினமணி நாளிதழ் தனது 8-வது பதிப்பினை வெளியிடுகிறது.

ஆசிரியர் திரு வைத்தியலிங்கம் ”இனி தில்லியிலிருந்தும்…” என்ற தனது தலையங்கத்தில் தினமணி நாளிதழின் தில்லி பதிப்பு எதற்கு என்பதற்கு நான்கு காரணங்களை எழுதி இருக்கிறார். அதில் முதலாவது காரணமாய் கூறியிருப்பது தில்லி வாழ் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்மொழியாம் தமிழில் பேசுவதையே விட்டுவிட்ட தமிழ் குழந்தைகளுக்குத் தாய்தமிழை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு செல்வது என்பது தான்.

நேற்று மாலை தில்லியில் “Constitution Club” வளாகத்தில் மாலை 06.00 மணிக்கு, தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் தலைமையில் நடந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் எஸ்.ஒய். குரேஷி அவர்கள் வெளியிட, தில்லியின் மூத்த தமிழர் திரு எஸ். பட்டாபிராமன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

வெளியீட்டு விழாவில் நமது தமிழ் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையாவும் கலந்து சிறப்பித்தார். அவரது சிறப்பு பட்டிமன்றம் இன்று நடைபெறும்.

தில்லியில் வெளிவரும் தினமணி 32 பக்க சிறப்பு மலரும் வெளியிட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன், என்னுடைய வலைப்பூவில் தில்லி பற்றி நான் எழுதி இருந்த சில பகிர்வுகளையும் இந்த சிறப்பு மலரில் பதிவேற்றலாமா என்று கேட்டு இருந்தனர். தவிர தில்லியில் இருந்து வலைப்பூக்களில் எழுதும் மற்ற தமிழ் நண்பர்களைப் பற்றிய ஒரு அறிமுகமும் கேட்டு இருந்தனர்.

இந்த சிறப்பு மலரில் என்னுடைய வலைப்பூவில் இருந்து தேசிய ரயில் அருங்காட்சியகம், ஃபட்-ஃபட்டி போன்றவற்றையும் உபயோகித்து இருக்கிறார்கள். இது தவிர தில்லி தமிழ் வலைப்பூ நண்பர்கள் பற்றிய அறிமுகமும் வெளியிட்டு இருக்கிறார்கள். எனது சுய அறிமுகம் தேவையில்லை என நினைத்தார்களோ என்னமோ தெரியவில்லை, அந்த அறிமுகங்களிலிருந்து என்னுடைய பெயரையும், வலைப்பூ முகவரியையும் குறிக்காமல் விட்டுவிட்டார்கள். மேலும் நண்பர் சந்திரமோகன் அவர்களின் வலைப்பூ பற்றிய குறிப்பினையும் வெளியிடவில்லை.

இணையத்தில் இந்த சிறப்பு மலரை பார்க்க முடியாது என்பதால், நான் எழுதி அனுப்பிய அறிமுகக் குறிப்புகளை தனிப் பதிவாய் வெளியிடுகிறேன்.

சிறப்பு மலரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அவர்களின் “வைகையிலிருந்து யமுனைக்கு” என்ற கட்டுரையும், பதிவர் ஜிஜி அவர்களின் வலைப்பூவில் இருந்து ”மெட்ரோ ரயில்” பற்றிய பகிர்வும், பதிவர் விக்னேஷ்வரி அவர்களின் வலைப்பூவில் இருந்து ”புதிய விமான முனையம்” பற்றிய பகிர்வும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இன்று நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்கும் செல்லலாம் என இருக்கிறேன். சென்றால் அதைப் பற்றியும் பகிர்கிறேன்.

மீண்டும் சந்திக்கும்வரை…..

அன்புடன்

வெங்கட்.

22 கருத்துகள்:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட்.
    தங்கள் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும். இதுபோலவே எனக்கும் ஒரு அனுபவம் சென்ற ஆண்டு ஏற்பட்டுள்ளது.

    Voted 0 to 1 in Tamilmanam
    Voted 1 to 2 in Indli

    படைப்புகள் வெளியிடப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பட்டிமன்றம் சென்று வாருங்கள். செய்தி தாருங்கள்.

    முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் பெயர்கள் வெளியிட்டிருக்கலாமே என்பதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  2. எங்கள் வீட்டில் சுமார் நான்கு வருடங்களாக தினமணிதான்..இதற்கு காரணம் அவர்களது கருணாநிதி அரசுக்கெதிரான அச்சமற்ற செய்திகள். தமிழ்நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும் ஒன்று மிரட்டப்பட்டன அல்லது அடிபணிந்தன. குறிப்பாக மதுரையில் தினகரன் நாளேட்டின் கொலைகளுக்கு பிறகு தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் வாயை மூடிக்கொண்டன. ஆனால் தினமணி மட்டும் தான் துணிவோடு கேலி சித்திரங்கள் தலையங்கங்கள் மூலம் கருணாநிதிக்கெதிரான கருத்துக்களை கூறிவந்தது. இதனால் அவர்களுக்கு அரசின் விளம்பரங்கள் மறுக்கப்பட்டன. திரு வைத்யநாதன் அவர்கள் மிகவும் பாராட்டுதற்குரியவர்.

    பதிலளிநீக்கு
  3. தினமணியில் இடம் பெற்றதற்கு மிக்க சந்தோஷம் தல... வாழ்த்துக்கள். ;-)

    பதிலளிநீக்கு
  4. தொகுத்து அனுப்பிய உங்கள் பெயர் விட்டுப் போனதா..அடடா...

    நாளிதழ் வாங்க தொடர்பு எண் ஏதேனும் உள்ளதா...

    "தில்லியில் இருந்தும்" என்ற தலையங்கத் தலைப்பே தில்லி பற்றிய உங்கள் பதிவுகளான "தலைநகரிலிருந்து" என்பதோடு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது பாருங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் வெங்கட். அறிமுகம் வராததற்கெல்லாம் கவலை படாதீங்க. அடிச்சு தூள் கிளப்புங்க

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் வெங்கட்!தொடர்ந்து வரப்போகும் பதிவுக்குக் காத்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  7. தில்லி வாழ் தமிழர்களில் எண்ணிக்கை 15 லட்சம். அவர்களுள் எத்தனை பேர் தமிழ்ப்பார்ப்ப்னர்கள் என்பதைப் பொறுத்தே தின‌மணியின் தில்லிப் பதிப்பின் வெற்றி நிர்ணயிக்கப்படும் என்பது என் தாழ்மையான கருத்து.

    தின‌மணியின் வெற்றி தமிழ்ப்பார்ப்பனரல்லா பிறமக்களைப்போய் சேர்ந்தால் மட்டுமே சாத்தியம்.

    தின‌மணி கட்சி சாரா நாளிதழ் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கட்சி சாரா நாளிதழ்கள் தமிழ்நாட்டில் இன்று கிடையா.

    Dinamani s not found to b encouraging new thoughts. As expected from a Tamil brahmin dominated daily - editor himself is one such - we find only writers from the right. The list of bloggers like Susheela, Vigneshwari and others, are all old fashioned thinkers who never even think of questioning estbalished traditions.

    Now they r going to appear in the new edition. Dismayed !

    Please remember here that Dinamani itself releases ad about itself off and on which shows a Tanjore Tamil brahmin in an armchair savouring his cup of morning coffee with his morning daily Dinamani. The ad focusses on traditions.

    So, best of luck to Tamil brahmins of Delhi who will now have their tradition brought to their doorstep every morning.

    பதிலளிநீக்கு
  8. எல்லாருக்கும் என் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. இன்று நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்கும் செல்லலாம் என இருக்கிறேன். சென்றால் அதைப் பற்றியும் பகிர்கிறேன்.//


    சொல்லுங்க மக்கா சொல்லுங்க காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  10. மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. இனி, தினமும் தமிழ் நாளிதழ் உங்கள் கைகளில்..
    கிரேட்..

    பதிலளிநீக்கு
  12. தில் பத்திரிக்கை தினமணி, தில்லியிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்... பதிப்பு தொடக்கத்தலேயே உங்கள் பதிவு செய்திகளும் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  13. ஆஹா..தில்லியில் தினமணியா?
    ஞாயிற்றுக்கிழமை பேப்பர் பாருங்கள் ..குழந்தைகளுக்கும் படிக்க கற்றுக் கொடுங்கள்..தமிழ் இனிமை தினமணி ஞாயிறு தமிழ் அதனினும் இனிமை!!!

    பதிலளிநீக்கு
  14. //தில் பத்திரிக்கை தினமணி//
    அசத்துறீங்களே பத்துஜி! ;-))

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள். தொடரட்டும் சிறப்புக்கள்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துகள் வெங்கட் சார்.
    எனது கட்டுரையையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. உங்களை வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கேன்.
    நேரம் கிடைக்கும் போது
    பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  18. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே
    வை கோ ஐயா சொன்னது போல் உங்கள் பெயரும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  19. @@ வை. கோபாலகிருஷணன்: வாழ்த்தியமைக்கு நன்றி சார். மொத்தத்தில் மூன்று பகிர்வுகள் வெளிவந்து இருந்தது. ஒரு பகிர்வு என்னுடைய பெயரிலேயே வெளியிட்டு இருந்தார்கள். மற்ற இரண்டில் விடுபட்டு இருந்தது. அவர்களுடன் பேசியதில் தவறுக்கு வருந்தினர்...

    @@ C. குமார்: உனது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார்.

    @@ RVS: வாழ்த்தியமைக்கு நன்றி மைனரே... சேப்பாயி எப்படி இருக்கா!

    @@ கலாநேசன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணன். தொடர்பு எண் இன்று மாலை உங்களுக்குத் தனிமடலில் அனுப்புகிறேன்.

    @@ மோகன் குமார்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன். கவலையெல்லாம் ஒன்றும் இல்லை...:)

    @@ சென்னை பித்தன்: வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா... இன்னும் இரண்டு பதிவுகள் இருக்கின்றன. அடுத்து வெளியிடுகின்றேன்.

    @@ சிம்மக்கல்: நன்றி நண்பரே...

    @@ மனோ நாஞ்சில் மனோ: வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...

    @@ எல்லென்: வாழ்த்தியமைக்கு நன்றி திரு எல்லென்.

    @@ ரிஷபன்: வாழ்த்துக்கள் தந்த உங்களுக்கு எனது நன்றி...

    @@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: நன்றி நண்பரே..

    @@ பத்மநாபன்: தில் பத்திரிக்கை... :) உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..

    @@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பூவில் உங்கள் வருகை... முதலில் எனது நன்றி. என் பெண்ணுக்கு அவ்வப்போது தமிழ் சொல்லிக் கொடுத்து வருகிறேன்..

    @@ RVS: இரண்டாவது வருகைக்கும் நன்றி மைனரே..

    @@ எல் கே: நன்றி கார்த்திக்.

    @@ மாதேவி: மிக்க நன்றி சகோ..

    @@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா..

    @@ ஜிஜி: வாழ்த்தியமைக்கு நன்றி சகோ. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    @@ லக்ஷ்மி: வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிம்மா.

    @@ A.R. ராஜகோபாலன்: நன்றி நண்பரே... மூன்றில் ஒரு இடத்தில் என்னுடைய பெயரிலேயே வெளிவந்தது... எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை..... :)))

    என்னுடைய இந்த பகிர்வினைப் படித்து கருத்துரைத்த, வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....