திங்கள், 11 ஜூலை, 2011

தாங்காதய்யா தாங்காது…



இன்று [11 ஜூலை] உலக மக்கள் தொகை தினம்.  வருடத்தில் ஒரு நாள் இந்தியாவின் பெருகி வரும் மக்கள் தொகை பற்றி எல்லோரும் பேசிவிட்டு, தில்லியின் விஜய் சௌக்-லிருந்து இந்தியா கேட் வரை பிரபலங்கள் நடந்து அல்லது ஓடி மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டதாய்ச் சொல்லி, வேறு வேலைகளை கவனிக்கச் சென்று விடுவார்கள். 

”நாம் இருவர் நமக்கு இருவர்” என்று சொல்லிக் கொண்டிருந்த இந்திய அரசு சில வருடங்களுக்கு முன் “One is Fun” என்ற வாசகத்தில் சிறிது நாட்கள் திளைத்துவிட்டு, மீண்டும் இப்போது “Small Family Happy Family” என்ற கொள்கைக்கு வந்து விட்டது. 

நான் சிறுவனாக இருந்த போது பார்த்த ஒரு சுகாதார அமைச்சகத்தின் விளம்பரம் இன்னும் நினைவில் இருக்கிறது.  காட்சி இப்படி ஆரம்பிக்கும்.  ஒரு மேஜையின் மீது ஒரு கூடையில் நிறைய தக்காளிகள் இருக்கும்.  பக்கத்தில் ஒரு சிறிய மூடி போட்ட பிளாஸ்டிக் குப்பி.  அந்தக் குப்பியின் மூடியைத் திறந்து அதில்  ஒரு தக்காளியை  வைத்து மூடினால் சுலபமாக மூட வரும்.  இரண்டு தக்காளியை  வைக்கும்போதும் மூடுவதில் கஷ்டம் இருக்காது.  ஆனால் மூன்றாவதாக ஒரு தக்காளியை அந்தக்  குப்பியில் வைக்கும் போது, வைப்பதே கடினமாகத் தான் இருக்கும், அதில் எங்கே அந்த குப்பியை மூடுவது.  பலம் கொண்டு மூடும்போது தக்காளிகள் சிதைந்து போய் விடும்.  இதன் பின்னர் “We Two Ours Two” என்ற வாசகம் வரும்.

மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற நோக்கத்தில் இருந்து மக்கள் தொகை நிலைப்படுத்துதல் என்ற நோக்கம் தான் இப்போது வைத்திருக்கிறார்கள். நமது தாத்தாக்கள் காலங்களில் ஒரு குடும்பத்தில் 7-8 குழந்தைகளுக்கு குறைவில்லாமல் பெற்றிருக்கிறார்கள்.  தற்போது ஒன்றிரண்டில் பெரும்பாலானவர்கள் நிறுத்தி விடுகிறோம்.  அது போன்ற ஒரு கட்டுப்பாடு ஒவ்வொரு குடும்பத்திலும் வைத்திருந்தால் தான் மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது சாத்தியமாகும்.  சென்ற வருடத்தின் இதே தினத்தில் நமது மக்கள் தொகை 119 கோடியாக இருந்தது.  இன்று நமது மக்கள் தொகை சற்றேறக் குறைய 120.23 கோடி.

சில நாட்களுக்கு முன்பு வலைப்பதிவர் அமைதி அப்பா தன்னுடைய வலைப்பூவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்காகக் கொண்டு வந்திருக்கும் ஒரு சில முயற்சிகள் பற்றி ”கு.க. அறுவை சிகிச்சைக்கு கார் பரிசு” என்ற ஒரு இடுகை எழுதி இருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் இம்முயற்சி BIMARU மாநிலங்கள் என்று அழைக்கப்படுகிற மாநிலங்களிலும் தொடரவேண்டும்.

ஒவ்வொரு இந்தியனும் அவனது  திருமணத்திற்குப் பின் "நமக்கு சிறிய குடும்பம் போதும், அதாவது, நான் என் மனைவி, ஒன்றோ இரண்டோ குழந்தைகள் என்ற அளவில் குடும்பம் இருக்கவேண்டும்" என்று சிந்தித்து விட்டால் பெருகும் மக்கள் தொகைக்கு நிச்சயம் ஒரு அணை போட முடியும்.  இல்லையெனில் நமது பூமித் தாயால்  பாரம் தாங்க முடியுமா!

இப்படியே போனால் இன்னும் 60 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை பெருக்கத்தினால் "நாமே இருவர், நமக்கேன் இன்னொருவர்?" என்று விளம்பரப் படுத்தும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. 

நமது நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்….



வெங்கட்.
புது தில்லி.


44 கருத்துகள்:

  1. மிக நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பரே , உங்களின் கட்டளைப் படியே , படித்து கருத்திட்டு வாக்களித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  2. @ A.R.ராஜகோபாலன்: தங்களது கருத்திற்கும் வாக்கிற்கும் மிகுந்த நன்றி அன்பரே....

    பதிலளிநீக்கு
  3. அய்யோ தக்காளி விளம்பரம் பயங்கரமா இருக்கே..

    ஆனா நிஜம்மாவே அந்தக்காலத்துல அதிகமான குழந்தைகள் இருந்ததால் அவர்கள் இன்றைய நிலைமைக்கு ரெண்டு பெற்று அவர்களுடைய பிள்ளைகள் ஒன்று என்று நிறுத்தினாலும் .. தொகை என்னவோ கூடிக்கிட்டே தான் போகும். அதனால் தான் கல்யாணமே வேண்டாம் பிள்ளையே வேண்டாம்ன்னு யாரும் இருந்தா கூட விட்டிடலாம் போல நல்லதுன்னு..
    சீனால ஒரு குழந்தைக்கு மேல பெத்துக்கூடாதுன்னு சட்டம் போட்டு ..நமக்கு முதலிடத்த இதுல மட்டுமாவது குடுக்கலாம்ன்னு பாக்கராங்க..:)

    பதிலளிநீக்கு
  4. @ முத்துலெட்சுமி: தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி. அந்த தக்காளி விளம்பரத்தின் காணொளி கிடைக்குமா என்று தேடினேன் நெட்டில்... கிடைக்கவில்லை. இப்போதே சீனாவில் எத்தனை எத்தனைக் கட்டுப்பாடுகள்.... நாம் சீனாவினை மக்கள்தொகையில் முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.... :(

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நல்ல விழிப்புணர்வு பதிவு வெங்கட்,இந்த மாதிரி ஒவொருவரும் சிந்தித்து பார்த்தால் இந்தியாவின் மக்கள் தொகை தானாகவே கட்டுப்பட்டிற்க்கு வந்துவிடும்..

    பதிலளிநீக்கு
  6. ஜனத்தொகை எவ்வளவு கூடினால் எங்களுக்கென்ன? நாங்கதான் சந்திரனில் 200 ஏக்கர், சில்வரில் (அதுதான்பா வெள்ளி கிரஹம்) 300 ஏக்கர், ரெட்மவுத் - ல் (அதுதான் செவ்வாய் கிரஹம்) 500 ஏக்கரு வாங்கிப் போட்டு வாழையும் தென்னையும் வச்சுட்டோம்ல. சுவிஸ் பேங்க் செக் அக்செப்ட் பண்ணிக்கிறாங்க.

    (வேறென்ன சொல்ல. இப்படி காமெடியாப் பேசி கண்ணீர் விட்டுக்க வேண்டியதுதான்)

    பதிலளிநீக்கு
  7. அந்த தக்காளி விளம்பரம் அருமை!

    வீட்டில் 10 குழந்தைகளுக்கு மேலிருந்தாலும் அத்தனை பேரையும் கட்டுப்பாட்டுடன் நல்மக்களாக வள‌ர்த்த அந்தக் காலம் எங்கே!
    இந்தக் காலத்துக்கு, நீங்கள் சொல்லியுள்ள‌ கட்டுப்பாடு மிக மிக அவசியம்.
    படித்த குடும்பங்கள் அப்படித்தானிருக்கின்றன.படிக்காத பெருவாரியான மக்களுக்கு, அவர்களின் சிந்தனைக்கு போய்ச்சேரும்படியாக பலவித‌ங்களில் வழி முறைகள் எடுக்கப்பட வேன்டும்.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  8. ரைட்டு..
    நானும் பாலோ பண்ணுறேன்..

    பதிலளிநீக்கு
  9. வெங்கட்ஜீ! இந்திய மக்கள் தொகை அதிகமாவதன் காரணங்களாய்ச் சொல்லப்படுபவை பல. அவற்றில் முக்கியமானவை, இன்னும் இந்தியாவின் பல மாநிலங்களில் நடக்கிற பால்ய விவாகம். இன்னொன்று, ஆண் குழந்தைகளின் மீது இருக்கிற மோகம்! ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், ஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமே என்று தவிக்கிறவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    இன்னொரு விஷயம், விளம்பரம் செய்து விழிப்புணர்ச்சியை உருவாக்குவதாகச் சொல்கிற அரசுகள், நடைமுறையில் ஆரம்ப சுகாதார மையங்களின் வசதிகளை பெருக்காமல் வைத்திருப்பதும், மருத்துவர்கள் அங்கே சென்று பணியாற்ற மறுப்பதும் அரசின் குறிக்கோளுக்கு உதவுதாகத் தெரியவில்லை.

    இது குறித்து நிறைய எழுதலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், விழிப்புணர்ச்சி என்பதை ஒரு கடமைக்காக எப்போதோ செய்துவிட்டு நின்றுவிடாமல், நடைமுறைச் சிக்கல்களைக் களைய நிரந்தரமான தீர்வுகளை அரசும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. நல்லவேளை பதிவுக்கு கு.க. வரவில்லை!

    சேட்டை சொன்னது சரியே. ஆண் வாரிசு வேண்டும் என்று விடாமல் முயற்சிப்பவர்கள் அநேகம். என் உறவினர் 4 பெண்களைத் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனாய்ப் பெற்றெடுத்தார்.

    மக்கள் தொகை கட்டுப்பாடு இயற்கையே செய்து கொண்டிருப்பதாய்த்தான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. //நமது நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்//
    இதில் இரண்டாவது கருத்தே கிடையாது!

    பதிலளிநீக்கு
  12. வெங்கட், உங்கள் பணியின் காரணமாக, இந்த விஷயத்தில் கருத்து சொல்ல நீங்கள்தான் சரியான ஆள்!! ஆனால் ஒற்றை குழந்தையாக இருப்பதன் சிக்கல்களை (Only Child Social Behavior Problems) பற்றி ஏதேனும் கருத்து உண்டா? ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு குழந்தை பெற்றால் வருங்காலத் தொடரில் எத்தனை குடும்பங்கள் இருக்கும்? எளிய கணக்குதான்(??!!)

    பதிலளிநீக்கு
  13. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஒவ்வொரு இந்தியனும் இப்படிச் சிந்தித்தால் நல்லது தான். ஆனால்....

    பதிலளிநீக்கு
  14. # சில்வர், ரெட்மவுத்.... நல்லாத்தான் யோசிக்கிறீங்க அண்ணாச்சி.... தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நீங்கள் தான் கடைபிடிக்கிறீர்களே அதனால் தைரியமாகச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  15. @ மனோ சாமிநாதன்: அந்தக்காலத்தில் அத்தனை குழந்தைகள் இருந்தாலும் நல்ல விதமாக வளர்த்தார்கள் என்பது உண்மைதான். இந்தக் காலத்தில் நமக்கு பொறுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. அரசும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்காக அரசியல் நோக்கம் இல்லாமல் நடந்து கொண்டால் தான் நல்லது.

    பதிலளிநீக்கு
  16. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: ரைட்டு.... சரி நல்லது தான்... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  17. @ வேடந்தாங்கல் கருண்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  18. @ சேட்டைக்காரன்: சரியாகச் சொன்னீர்கள் சேட்டை. இன்னமும் ஆண்குழந்தை மேல் இருக்கும் மோகம் படித்தவர்களிடம் கூட இருக்கிறது. ஆண்-பெண் இருவரும் சமம் என்ற எண்ணம் வரவில்லை. அரசும் அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்காமல் நல்ல நோக்கத்துடன் முடிவுகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் கண்டிப்பாக கிராமங்களில் சில வருடங்களாவது பணி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கவேண்டும். பார்க்கலாம் வரும் காலத்திலாவது இந்த அரசியல்வாதிகளும், அரசும் ஏதாவது செய்கிறதா என.... தங்களது வருகைக்கும் நல்ல கருத்திற்கும் நன்றி சேட்டை.

    பதிலளிநீக்கு
  19. @ ரிஷபன்: //நல்லவேளை பதிவுக்கு கு.க. வரவில்லை!// ம்.... அட ஆமாம்...

    உண்மைதான். என்னுடைய தூரத்து உறவினர் ஒருவர் கூட ஐந்து பெண்களுக்குப் பிறகும் முயற்சித்து[!] இரண்டு ஆண்குழந்தைகள் பெற்றார். என்ன சொல்வது இவர்களுக்கு....

    இப்படிச் செய்யாதே என்று அறிவுரை சொல்ல வந்த ஒருவருக்கு அவர் சொன்ன பதில் கேட்ட பிறகு எவரும் அந்நபருக்கு அறிவுரை சொல்ல முடியாது :(

    பதிலளிநீக்கு
  20. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    # எல்.கே.: ம்.... நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  21. @ C. குமார்: நல்ல கருத்து நண்பா. ஒரு குழந்தை என்னும்போது பெற்றோர்களுக்கு அக்குழந்தையை நல்லவழியில் வளர்க்க வேண்டிய கடமை இன்னும் அதிகம்தான். சிறு வயது முதலே நல்ல விதமாய் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி வளர்க்கவேண்டியது அவர்களுடைய கடமை.

    பதிலளிநீக்கு
  22. படித்தவர்களிடம் நகரவாசிகளிடம் சிறிய குடும்பம் குறித்து
    விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன்
    அதை அப்படியே கல்வி அறிவற்றவர்களிடமும்
    கிராமப் புறங்களிலும் கொண்டுசென்றால்
    இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பது
    எனது எண்ணம்.பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. @ ரமணி: விழிப்புணர்வு கிராமப்புறங்களில் எடுத்துச் செல்வது தான் நல்ல தீர்ப்பு... உண்மையான விஷயம் சார். இன்னமும் வட இந்தியாவின் பல கிராமங்களில் சில மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்பதும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இவர்கள் பிந்தங்கக் காரணம். உங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. சீனாவை முந்த போவதை நினைத்தாலே பயமாக இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
  25. @ அமுதா கிருஷ்ணா: பயம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தப் பிரச்சனை உண்மை தான். சில நகரங்களில் இப்போதே மக்கள் தொகை காரணமாக எத்தனை எத்தனை சிக்கல்கள்... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  26. @ அமைதிச்சாரல்: பயமாத்தாங்க இருக்கு.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. எனது பதிவையும் குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி.

    என்னுடைய கருத்தை பலமுறை பல பதிவுகளில் எழுதியுள்ளேன்.

    நிச்சயம் ஒருநாள் எல்லோரும் உணர்வார்கள். சமுக விழிப்புணர்வு குறித்த தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. அதுலயாவது உச்சிக்கு போகலாம்னு பார்த்தா பொறுக்காதே..

    Reverie
    http://reverienreality.blogspot.com/
    இனி தமிழ் மெல்ல வாழும்

    பதிலளிநீக்கு
  29. ஒருநாள் எல்லோரும் உணர்வார்கள்
    << Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
    Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

    பதிலளிநீக்கு
  30. @ கே.பி.ஜனா: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

    @ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

    @ மோகன் குமார்: Thanks Mohan...

    @ அமைதி அப்பா: நன்றி எல்லாம் எதற்கு... நீங்கள் எழுதியது இந்த பதிவு எழுதத் தூண்டுகோல். நானே நன்றி சொல்வது நியாயம்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

    @ Reverie: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @ குகன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. மக்கள்தொகை பெருக்கம் தரும் விளைவுகள் கவலை தருகின்றன. ஆனால், அதற்கான தீர்வாக ஒரு குழந்தை முறை ஒருபோதும் இருக்க முடியாது என்பது என் கருத்து. இரண்டாவது இருக்க வேண்டும். நாளைபின்னே, பெற்றோருக்குப் பிறகு, ஆதரவுதோள் உடன்பிறந்த சகோதரனோ, சகோதரியோ அல்லாது யாராக இருக்க முடியும்?

    என்னுடன் படித்த, வீட்டிற்கு ஒரே குழந்தையான நண்பர்களிடம் பேசும்போது, அவர்கள் அதிகம் வெறுத்த விஷயம் அதுதான். தனிக்குடித்தனங்கள் பெருகிவரும் நிலையில் ஒரே குழந்தை என்பது பெற்றோர்-பிள்ளை இருதரப்பிலும் அதிக அழுத்தத்தையே தரும்.

    மேலும், அது தொடர்ந்தால், சித்தி, அத்தை, மாமா, சித்தப்பா முறைகளே அற்றுப் போகுமே?

    இன்றுதான் செய்திதாளில் படித்தேன். சில சீன மக்களும், இந்த ஒரு குழந்தை திட்டத்திலிருந்து விலக்கு கோருகின்றனராம். ஏனெனில், ஒரே குழந்தையான மகன், ஒரே குழந்தைகளான தம் பெற்றோரையும், அவர்களின் பெற்றோர்களையும், (சில சமயம் மாமனார்-மாமியாரையும், அவர்களது பெற்றோரையும்கூட) சேர்த்துப் பராமரிக்க வேண்டியிருப்பதால் பொருளாதாரச் சுமை அழுத்துகிறதாம். அதனால், விலக்கு தரும்படி வேண்டுகின்றனர்.

    உறவினரொருவர், தன் மகனின் அட்டகாசம் பொறுக்க முடியாமல், பாட்டியிடம் “என்னால ஒண்ணையே சமாளிக்க முடியலை. நீங்கல்லாம் எப்படித்தாம் 10-12ன்னு பெத்து வளத்தீங்களோ?” என்று அலுக்க, பாட்டியோ, “நாங்க பத்து பெறுகிற இடத்தில், நீங்க ஒண்ணே ஒண்ணைப் பெத்து, பத்துக்குப் பண்ற செலவையும், பாசத்தையும் அந்த ஒண்ணுகிட்டயே காட்டுறீங்க. அந்த ஒண்ணு பத்து பண்ற சேட்டையைச் சேத்து பண்ணுது.” என்றார்!!

    கொஞ்சம் கவனமாக கையாளப்படவேண்டிய விவகாரம்தான்!! விழிப்புணர்வு அதிகரிக்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  32. @ ஹுசைனம்மா: தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி. இது கொஞ்சம் கவனமாக கையாளப்பட வேண்டிய விவகாரம் தான்... மக்களும் அரசாங்கமும் சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா.... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மீண்டும் ஒரு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. ஒற்றை குழந்தையுடன் நிறுத்திக்கொள்வதை நானும் எதிர்க்கிறேன். இரண்டோடு நிறுத்துவது நல்லது.
    இரு குழந்தைகள் என்று வரும்போது, ஒரு அப்பா ஒரு அம்மா, இரண்டு பேருக்கு பிறகு, இரண்டு குழந்தைகள் என்ற வகையில் ஒட்டு மொத்த மக்கள் தொகை அதிகரிக்காமல் அப்படியே இருக்கும், தியரிடிகல்லி.

    பதிலளிநீக்கு
  34. @ பந்து: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஒன்றோ, இரண்டோ பரவாயில்லை.... அதற்கு மேல் வேண்டவே வேண்டாம் என்பது தான் நல்லது இல்லையா....

    பதிலளிநீக்கு
  35. நல்ல சமூக சிந்தனையைத்தூண்டும் அருமையான பதிவு தான். மக்கள் அனைவருமே உணர்ந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். அனைவரின் கருத்துக்களும் அருமையாக உள்ளன.

    இந்தியாவின் இன்றைய பலமே, சராசரி வயதில் நிறைய இளைஞர்கள் இருப்பது தான் என்றும் சொல்லுகிறார்கள். யார் யாரோ என்றென்றோ செய்த
    கடும் உழைப்பும் உற்பத்தியுமே இதற்கு காரணமாக இருக்கலாம். டி.வி., கம்ப்யூட்டர், நெட் கனெக்‌ஷன், செல் போன், சொந்த வாகனங்கள் போன்ற பொழுதுபோக்குகள் இல்லாத காலம் அது. அதனாலும் கூட இந்த ஒரே பொழுது போக்கில் அறியாமல், தெரியாமல், பின்விளைவுகளை உணராமல், திட்டமிடாமல் கூட இருந்திருக்கலாம். பாவ புண்ணியம் என்றெல்லாம் கூட நினைத்திருக்கலாம். இன்று ஓரளவு படித்த மக்கள் திட்டமிட்டே எல்லாம் செய்கின்றனர் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. @ வை. கோபாலகிருஷ்ணன்: //இன்று ஓரளவு படித்த மக்கள் திட்டமிட்டே எல்லாம் செய்கின்றனர் என்று நினைக்கிறேன்.// உண்மை. இன்னும் நாட்டின் சில பகுதிகளில் போதிய படிப்பு வசதியோ, விழிப்புணர்வோ இல்லாததும் ஒரு காரணம்.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. நாட்டில் நடக்கும் அட்டூழியங்கள் எல்லாத்துக்கும் இந்தப் பெருகிவரும் மக்கள் தொகைதான் காரணம். இப்படியே விட்டுவச்சால் அந்த 'ஆண்டவனால்' கூட இந்தியாவைக் காப்பாத்த முடியாது:(

    பதிலளிநீக்கு
  38. @ துளசி கோபால்: ”அந்த “ஆண்டவனால்” கூட இந்தியாவைக் காப்பாத்த முடியாது :(”

    சரியாச் சொன்னீங்க துளசி டீச்சர்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....