மகப்பேறு மருத்துவமனையின் வரவேற்பு அறையில் காத்திருந்தனர்
அந்த தம்பதி. அவர்களுக்கு முன் சென்றிருந்த பெண் வெளிவர எப்படியும் நேரம்
எடுக்கும். அதற்குள் அந்தத் தம்பதியினரை கவனிப்போம்.
அழகாக அலங்காரம் செய்து, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து
அழகிய உடை அணிந்திருந்த தன் குழந்தையை “கண்ணே, மணியே, முத்தாரமே” என்றெல்லாம் கொஞ்சிக்
கொண்டு இருந்தார் கணவன். மனைவியின்
முகத்தில் நிறைய கவலை ரேகைகள், ஒருவித கலக்கமும் தெரிகிறது.
உள்ளே சென்றிருந்த பெண் வெளியே வந்து விட்டார். அடுத்தது
இவர்கள் தான் என்பதால் உள்ளே சென்ற அவர்களைத் தொடர்ந்து நாமும் செல்வது நாகரிகம் அல்ல! இருந்தாலும் கட்டுரைக்காக கவனி ப்போம்... உள்ளே டாக்டருக்கும் அந்த தம்பதிக்கும் நடந்த உரையாடல்:-
டாக்டர்: ம்...சொல்லுங்க…
பெண்: எப்படிச் சொல்றதுன்னு தெரியல…. இது எங்களுடைய முதல் குழந்தை. பிறந்து பதினோறு மாதம் தான் ஆகிறது. இப்போது நான் திரும்பவும் கர்ப்பம். 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குள் அடுத்த குழந்தை வேண்டாமென நாங்கள் நினைக்கிறோம். முதல் குழந்தைக்கே ஒரு வயது ஆகாத நிலையில் இன்னுமொரு குழந்தை என்றால், என்னால் இருக்கும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு, என் உடலால் இன்னுமொரு பிரசவத்தினைத் தாங்க முடியுமா என்று புரியவில்லை. அதனால் இந்த கர்ப்பத்தினைக் கலைக்கலாம் என முடிவெடுத்து உங்களிடம் வந்திருக்கிறோம்.
டாக்டர்: சரி, வாம்மா, பார்க்கலாம்… [சிறிது நேரத்திற்குப் பின்], "ம்ம்ம்… கொஞ்சம் கஷ்டம் தான். உங்க பிரச்சனை ஒரு குழந்தை ஏற்கனவே இருக்கும்போது அதையும் பார்த்துக்கொண்டு இன்னுமொரு குழந்தையை வயிற்றுக்குள் வளர்த்து பெற முடியாது என்பதுதானே. வயிற்றுக் குழந்தையை இப்போது ஒன்றும் செய்ய முடியாது, அதாவது அதை அழிக்க முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம், ஏற்கனவே பிறந்த இந்த குழந்தையை வேண்டுமானால் அழித்து விடலாம். அது கொஞ்சம் சுலபம்... அப்புறம் நீங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை பிறந்த பின் பொறுமையாக வளர்க்கலாம் இல்லையா!”
தம்பதி: என்ன டாக்டர் சொல்றீங்க! உங்களுக்கு என்ன ஆச்சு! பிறந்த குழந்தையை, என் செல்லத்தை அழிக்க சொல்றீங்க! மூளை குழம்பிப் போச்சா என்ன….
டாக்டர்: உங்களுக்குப் பிறந்த குழந்தை வெளியே இருக்கு. இப்ப கருவுற்றிருக்கும் குழந்தை வயிற்றுனுள் இருக்கிறது. வித்தியாசம் வேறொன்றும் இல்லையே. அதற்கும் வளர்ச்சி இருக்கு. அதை அழிக்கணும்னு சொன்னா எப்படி இருக்கும்னு பாருங்க! ஒரு குழந்தை வயிற்றுக்குள் எப்படி எல்லாம் வளருதுன்னு உங்களுக்குத் தெரியுமா… இந்த காணொளியைப் பாருங்க, புரியும்.
”இந்தக் குழந்தை உருவாகக் காரணம் நீங்க இரண்டும் பேரும் தானே. அதை இப்ப நீங்களே அழிக்கணும்னு சொன்னா எப்படி… வரு முன் காத்திடாமல், வந்த பின்பு இப்படி அழிக்கணும்னு வரீங்களே…. எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படி இருக்கக் கூடாது நீங்க. அதை புரிய வைக்கதான் உங்கள் கிட்ட அப்படி பேசினேன்.
மனதில் ஒரு தெளிவுடன் தம்பதியினர் வெளியேறினர் மகப்பேறு மருத்துவமனையிலிருந்து…. நாமும்
தான்.
என்ன டாக்டர் சொல்வது சரிதானே! வேண்டாம்
எனில் வருமுன் தடுப்பது தானே நல்லது! வந்தபின் அழிக்க யோசிப்பது, கொலைக்குச் சமம்….
மீண்டும் சந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்.
டிஸ்கி-1: இது முகப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் வந்த ஒரு செய்தியைத்
தமிழ்ப்படுத்தி, கொஞ்சம் விஷயங்கள் சேர்த்து எழுதியது.
டிஸ்கி-2: இந்த வருடத்தின் நூறாவது பதிவு!
நூறா? நூத்தி ஒண்ணா இருக்கட்டும். இன்னும் ஒரு வாரம் இருக்கே! அதற்குள் போட முடியாதா என்ன? வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த வருடத்தின் நூறாவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவயிற்றில் உள்ள குழந்தை காப்பாற்றப் பட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
முகப்பக்கத்தில் ஆங்கிலத்தில் வந்த செய்திக்கும், அதை தாங்கள் ஒரு சிறு நீதிக்கதையாக தந்துள்ளதற்கும், கதையில் வரும் டாக்டரம்மாவுக்கும் என் பாராட்டுகள். வாழ்த்துகள், வெங்கட்.
தமிழ்மணம்: 2 யூடான்ஸ் 3 vgk
@ ரேகா ராகவன்: தங்களது உடனடி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....
பதிலளிநீக்கு@ வை. கோபாலகிருஷ்ணன்: உங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....
பதிலளிநீக்குநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்கு@ முத்துலெட்சுமி: வாழ்த்திய நல்ல உள்ளத்திற்கு நன்றி....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
உங்களுக்குப் பிறந்த குழந்தை வெளியே இருக்கு. இப்ப கருவுற்றிருக்கும் குழந்தை வயிற்றுனுள் இருக்கிறது. வித்தியாசம் வேறொன்றும் இல்லையே.//
பதிலளிநீக்குடாக்டர் சொல்வது உண்மை தான் இரண்டும் அவள் செல்லம் தானே! வெளியே உள்ளதை வளர்க்க உள்ளே உள்ளதை அழிப்பது எந்த வகையில் நியாயம்.
நோய்வாய் பட்டு இருந்தால் வேறு வழி இல்லை அதை அழிக்க வேண்டும் என்று டாக்ட்ரே சொல்லி விடுவார், அதையே சில தாய்மார்கள் பாசத்தால் பெற்றுக்கொண்டு அதை வளர்க்க படும் பாடு சொல்லி மாளாது.
மனதில் தெளிவுடன் போனது மகிழ்ச்சி.(வேறு டாக்டரிடம் போகாமல்)
இந்த வருட 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நாட்டுக்குத் தேவையான பதிவு போட்டிருக்கிறீர்கள். இதுதான்யா தொழில் பக்தி என்பது!
பதிலளிநீக்கு(இந்த வருடத்து நூறா! பிடியுங்கள் நூற்றுக்கு நூறு.)
அருமை! அருமை! அருமை!
பதிலளிநீக்குநல்ல நீதிக்கதையைச் சொன்ன, தங்களுக்குப்
பெருமை! பெருமை! பெருமை!
புலவர் சா இராமாநுசம்
இந்த வருடத்தின் நூறாவது பதிவு!
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்!!
அருமை!!
பதிலளிநீக்குநூறுக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநல்லா உறைக்கிற மாதிரி கேட்டுருக்காங்க டாக்டரம்மா.
டாக்டர் : "வெளியில் இருக்கும் பிள்ளையை கொன்னுடலாம்னு " படித்ததும் தலையில் மடார்னு அடித்தது போல இருந்தது .நல்ல டாக்டர்.நல்ல பதிவு.
பதிலளிநீக்குநூறாவது பதிவு.வாழ்த்துகள்.
உங்களுக்கு வந்த செய்தியை அருமையான கதையாக்கி தந்திருக்கீங்க அருமை,வாழ்த்துக்கள் பாஸ்
பதிலளிநீக்குஇந்த வருடத்தின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகுழந்தை காப்பாற்றப்பட்டது
மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
@ கோமதி அரசு: //மனதில் தெளிவுடன் போனது மகிழ்ச்சி.(வேறு டாக்டரிடம் போகாமல்)// அதானே....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றிம்மா....
@ ஈஸ்வரன்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.....
பதிலளிநீக்கு@ புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கவிதையாக ஒரு பாராட்டுரைக்கும் மிக்க நன்றி புலவரே...
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ வேங்கட ஸ்ரீனிவாசன்: நன்றி சீனு....
பதிலளிநீக்கு@ அமைதிச்சாரல்: //நல்லா உறைக்கிற மாதிரி கேட்டுருக்காங்க டாக்டரம்மா.// ஆமாம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்க்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆச்சி....
பதிலளிநீக்கு@ K.s.s.Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....
பதிலளிநீக்கு@ மகேந்திரன்: //குழந்தை காப்பாற்றப்பட்டது
பதிலளிநீக்குமனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.// எனக்கும் நண்பரே....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....
நூறுக்கு வாழ்த்துகள் தல! :-)
பதிலளிநீக்கு@ RVS: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு நன்றி! நல்லுள்ளத்தின் சொந்தக்காரரான மைனருக்கும் தான்!
பதிலளிநீக்குநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்கு@ ராஜி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி!
பதிலளிநீக்குArumaiyana Vizhippunarvu Pathivu. Padikkiravargal Nichayam Intha thavarai seyya maattaargal. SUPER Sir!
பதிலளிநீக்குTamilmanam Vote 9.
@ துரைடேனியல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே...
பதிலளிநீக்கும்ம்ம்ம் நல்ல மசாஜ்.. சாரி.. சாரி.. மெசேஜ்..
பதிலளிநீக்கு100 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபதிவின் கருத்தும் படைப்பும் அருமை
வாழ்த்துக்கள்
த.ம 10
பதிலளிநீக்கு@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்....
பதிலளிநீக்கு@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குநூறுக்கு வாழ்த்துகள். நல்ல பதிவு.
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
பதினொன்றாவது வாரத்துப் பட்டுக் கால்களும் முப்பத்திமூன்றாவது வாரத்து சிருங்காரக் கொட்டாவியும் பார்த்தும் மனம் துணியுமா யாருக்கேனும் அழித்தொழிக்க?!
பதிலளிநீக்குஉள்ளுக்குள் ஒரு மோனதவத்துடன் புன்னகைப்பதும் அங்க அசைவுகளும் சில சிணுங்குவது போல், அழத் துவங்குவது போல், அயர்ந்து உறங்குவது போல்... அப்பப்பா! கையிலெடுத்துக் கொஞ்சமுடியாத ஒரு குறைதான்!
பதிவின் நடை அழகு சகோ... நூறாவது பதிவைப் பார்த்து ஏதேனுமொரு தாயாவது மனம் மாறினால் அந்தப் புண்ணியமும் சேரும் உங்களுக்கு! நீங்கள் சித்தரித்த டாக்டர் அத்தம்பதிக்குக் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும் அருமை.
சமூகத்திற்கான மிகப்பெரிய விழிப்புணர்வு மட்டுமல்ல அறிவுறுத்தலும் செய்திருக்கிறீர்கள். சக சமூகவாதியாக.. மிக்க நன்றி!
பதிலளிநீக்கு100-வது பதிவுக்கு வாழ்த்துகள். விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்கு@ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....
பதிலளிநீக்கு@ நிலாமகள்: தங்களது வருகைக்கும் அருமையானதோர் கருத்துரைக்கும் நூறாவது பதிவிற்கான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ...
பதிலளிநீக்கு//ஏதேனுமொரு தாயாவது மனம் மாறினால் // எதாவது தம்பதி மனம் மாறமாட்டார்களோ என்பதே பதிவிட காரணம்...
@ வே. சுப்ரமணியன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....
பதிலளிநீக்கு@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....
பதிலளிநீக்குவாழ்த்துகள், நூறுக்கும், நூற்றுக்கு நூறு நல்ல ”கரு”த்துடைய பதிவுக்கும்!!
பதிலளிநீக்குசிறு கதைபகிர்வும் எடுத்து ச்சொல்லும் படிப்பினைகளும் அருமை..........பாராட்டுக்கள் .
பதிலளிநீக்குVenkat nice one
பதிலளிநீக்கு@ ஹுசைனம்மா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....
பதிலளிநீக்கு@ நிலாமதி: தங்களது வருகைக்கும் [நீண்ட நாட்கள் கழித்து] கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ Raju Iyer: Thanks Raju...
பதிலளிநீக்குநல்லதொரு கருத்துடன் கூடிய அருமையான பதிவு!
பதிலளிநீக்குஇந்த வருடத்திற்கான நூறாவது பதிவிற்கும் உங்களின் உற்சாகத்திற்கும் சுறுசுறுப்புக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!
@ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மேடம்...
பதிலளிநீக்குநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.மனதை தொட்ட விழிப்புணர்வு பகிர்வு.அணுகுமுறை பக்குன்னு இருக்கு சகோ.
பதிலளிநீக்குநான் மிகவும் குறைவாக தான் உங்களின் பதிவுகளை படிக்கிறேன். ஆனால் எல்லா பதிவுகளும் நன்றாக உள்ளன. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி
பதிலளிநீக்கு@ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ...
பதிலளிநீக்கு@ விஜயராகவன்: நேரம் கிடைக்கும்போது படியுங்கள்... உங்களது வருகையும், கருத்துப் பகிர்வும் என்னைச் சந்தோஷம் கொள்ளச் செய்கிறது....
பதிலளிநீக்கு