[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-24]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23)
சென்ற பதிவான ராம் ராஜா
மந்திர்-ல் பார்த்த கிருஷ்ண பக்தர் ராஜா மதுகர் ஷா அவர்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகை
தான் ராஜ்மஹால். இந்த மாளிகையில் ”சுவர் சார்ந்த சித்திரங்கள்” எனப்படும் mural
சித்திரங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பல இப்போதும் பொலிவுடன் காணப்படுகின்றன.
என்னுடைய எழுத்தில் சொல்வதை விட ஓவியங்கள் சொல்வது
அதிகம். அதனால் இந்த
பகிர்வில் ராஜ்மஹாலில் இருந்த சுவர் சார்ந்த சித்திரங்களை நான் எடுத்த
புகைப்படங்களை கீழே கொடுத்துள்ளேன் ஒரு காணொளியாக.
இந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு
விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி. ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக
அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது. ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது
சந்தேகம். அந்த
காலத்திலேயே நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனதில்
மகிழ்ச்சி.
ராஜ்மஹால் முழுவதையும் தரிசித்த பிறகு ஓர்ச்சா
நதியில் ராஃப்டிங் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் எங்களது துரதிர்ஷடம் பேத்வா நதியின் நடுவே
இருக்கும் ஒரு நான்கு அடி அகலப் பாதை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் கரைபுரண்டு
ஓடிக்கொண்டிருந்தது. அதனால் இப்படி இருக்கும் போது ராஃப்டிங் செய்வது அவ்வளவு உகந்ததல்ல,
ஆபத்து அதிகம் என்று சொல்லி விட்டார்கள் L
இந்த பகுதியில் இருந்த ஓவியமான மாளிகை பற்றிய செய்திகள் படித்து
மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த பகுதியில் ஒரு படையெடுப்பு பற்றி எழுத இருக்கிறேன். காத்திருங்கள்.
மீண்டும் சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
அதிசயிக்கத்தக்க விஷயங்களை
பதிலளிநீக்குஅற்புதமாக தருகிறீர்கள் நண்பரே..
நன்றிகள் பல.
@ மகேந்திரன்: தங்களது உடனடி வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்குஇந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி. ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது. ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது சந்தேகம். அந்த காலத்திலேயே நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி. /
பதிலளிநீக்குஅழகான பதிவு ஓவியத்திற்கு இனிய பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....
பதிலளிநீக்குஓவியங்கள் கண்ணையும் மனதையும் கவர்கிறது.
பதிலளிநீக்குகாணொளியில் நீங்க சேர்த்துள்ள பின்னணி இசை சிறப்பாக இருக்கு.
@ ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும் பகிர்வினையும், காணொளியை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரமா ரவி....
பதிலளிநீக்குஇந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி. ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது. ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது சந்தேகம். அந்த காலத்திலேயே நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி. //
பதிலளிநீக்குஅந்த காலத்தில் நல்ல கட்டட கலைஞ்சர்கள் இருந்ததால் தான் இத்தனை காலத்தை கடந்தும் நாம் பார்ப்பதற்கு இருக்கிறது. இப்போது கட்டும் கட்டங்கள் காலத்தை வெல்லுமா சந்தேகம் தான்.
உங்கள் பதிவின் மூல பல தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி பாஸ்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு: உண்மை அம்மா..... இப்போதைய கட்டிடங்கள் சில வருஷங்கள் நிலைக்குமா என்பதே சந்தேகம்தான் அம்மா....
பதிலளிநீக்குஉங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....
@ K.s.s.Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்குSo sir, chattan boss is near the hidden bridge......
பதிலளிநீக்குதமிழ்மணம்:: 6
பதிலளிநீக்குதங்களின் இந்தப்பதிவும் 2 டன் ஏ.ஸி. யின் குளிர்ந்த காற்று போலவே ஜில்லென்று உள்ளது. வாழ்த்துக்கள்.
vgk
அந்தக் காலத்தில் இயற்கையான வழிகளில் ஏ.சி. வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது இப்போதைய வாசகர்களுக்கு ஆச்சரியமான செய்தி...
பதிலளிநீக்குஇது தாஜ்மஹாலுக்கு முன்னே கட்டப்பட்டதா அல்லது பின்னால் கட்டப்பட்டதா...........
பதிலளிநீக்குஅருமையான காணொளியின் உடன் அற்புதமான பதிவு அன்பரே
//இந்த பகுதியில் இருந்த ஓவியமான மாளிகை பற்றிய செய்திகள் படித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். //
பதிலளிநீக்குசந்தேகம் வேறா?மிக மகிழ்ந்தேன்.
த.ம.8
படித்தேன் ......
பதிலளிநீக்குஓவியங்கள் அருமை.
பதிலளிநீக்கு//இந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி. ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது. ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது சந்தேகம்.//
பதிலளிநீக்குஅந்த தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து இப்போது பயன்படுத்தினால் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கலாம். பகல் நேரத்து பவர்கட்டினால் எரிச்சலில் இருக்கும் சம்சாரத்திடம் இருந்தும் தப்பிக்கலாம்.
இந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி. ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது. ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது சந்தேகம். அந்த காலத்திலேயே நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி//
பதிலளிநீக்குஆஹா உடம்புக்கு நலம் தரும் ஒரிஜினல் ஜில் காற்று அதிசயம் அதிசயம், இப்போ வந்து இருக்குற ஏசி'யால் ஒரு நன்மையையும் இல்லை...!!!
அழகான தொகுப்புக்கள்
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உள்ளே நின்றால் ஜில்லென்று காற்று பிய்த்துக் கொண்டு போகும். நகர்ந்து போக மனசே வராது.
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் மனசு இழைந்து வேலை செய்திருக்கிறார்கள்.. கடனே என்று செய்யாமல்.
தெரிந்திராத பல இடங்கள் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிரது. நன்றி
பதிலளிநீக்குபார்க்கப் பார்க்கத் திகட்டாத சித்திரங்கள்! அழகிய பதிவு சகோ!
பதிலளிநீக்குகருத்துரை இடுமிடத்தில், செலக்ட் ப்ரொஃபைலில் நேம்/யூஆரெல் இருந்தால் நான் கருத்துரையிட முடியுமென தோன்றுகிறது.
@ Pramod.V.R.: I could not get a photo of Betwa showing the hidden bridge. The ones i have is with either Chattaan or Gopi... So, I used the one with Chattaan... :)
பதிலளிநீக்குThanks for the Comment Pramod....
@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும், பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும், திரட்டிகளில் அளித்த வாக்குகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ கே.பி. ஜனா: ஆமாம்... அக்காலத்திலேயே இத்தனை வசதிகள் இருந்திருக்கிறது - இயற்கையின் துணையோடே வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதுதான் ஆச்சரியம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
@ A.R. ராஜகோபாலன்: எனக்குத் தெரிந்து தாஜ்மஹால் காலத்திற்கு முற்பட்டதாக இருக்கவேண்டும் இந்த ராஜ்மஹால்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
@ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும், பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.....
பதிலளிநீக்கு@ அப்பாஜி: படித்தமைக்கு நன்றி நண்பரே....
பதிலளிநீக்கு@ வேங்கட ஸ்ரீனிவாசன்: உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.....
பதிலளிநீக்கு@ ஈஸ்வரன்: //அந்த தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து இப்போது பயன்படுத்தினால் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கலாம். பகல் நேரத்து பவர்கட்டினால் எரிச்சலில் இருக்கும் சம்சாரத்திடம் இருந்தும் தப்பிக்கலாம்.//
பதிலளிநீக்குஅதானே.... இது நல்ல யோசனை அண்ணாச்சி - அம்மா கிட்ட சொல்லிடுவோமா? :)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ MANO நாஞ்சில் மனோ: //ஆஹா உடம்புக்கு நலம் தரும் ஒரிஜினல் ஜில் காற்று அதிசயம் அதிசயம், இப்போ வந்து இருக்குற ஏசி'யால் ஒரு நன்மையையும் இல்லை...!!!// உண்மை நண்பரே. மாறாக கெடுதல் தான் அதிகம்.....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ....
@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....
பதிலளிநீக்கு@ ரிஷபன்: //ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உள்ளே நின்றால் ஜில்லென்று காற்று பிய்த்துக் கொண்டு போகும். நகர்ந்து போக மனசே வராது.
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் மனசு இழைந்து வேலை செய்திருக்கிறார்கள்.. கடனே என்று செய்யாமல்.// உண்மை. பல சமயங்களில் அங்கே நிற்க முயற்சி செய்திருக்கிறேன் - ஆனால் நிற்க முடியாமல் அத்தனை மக்கள் கூட்டமும் வாகனங்களின் ஓட்டமும் தடுத்து விடும்....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....
பதிலளிநீக்கு@ நிலாமகள்: மின்னஞ்சலில் அனுப்பிய தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ. சில மாற்றங்கள் செய்து இருக்கிறேன்.. கருத்துரை அளிக்க முயற்சி செய்து பாருங்கள்...
பதிலளிநீக்குஅன்புள்ள வெங்கடிற்கு,
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இந்த வலைதளத்தை வாசிக்கிறேன்,
மத்தியபிரதேசம் பகுதி 24-இல் நீங்கள் கொடுத்திருந்த காணொளிகள் அனைத்தும் கண்ணுக்கு குளுமை!! 'ராஃப்டிங்' ஐ நன்கு என்ஜாய் செய்தீர்கள் என்று சொல்லுங்கள்,பேத்வா நதியின் வேகம் பிரமாதம்!!, அந்த காலத்தில் கட்டிடங்கள் அனைத்துமே இயற்கை சூழ்நிலைகளை பாதிக்காமல் அமைத்திருப்பார்கள் என்பதற்கு நீங்கள்
சொன்ன அந்த 'ஏ . சி.' ஒரு உதாரணம் .
இப்படிக்கு
உங்கள் தோழி கலை.
@ கலையரசி: நன்றி கலை.... வெள்ளத்தின் காரணமாக ராஃப்டிங் செய்ய முடியவில்லை... :)
பதிலளிநீக்குஅருமை. உங்களை நேரில் சந்தித்து நிறைய நேரம் பேசியது மகிழ்ச்சி
பதிலளிநீக்கு@ மோகன் குமார்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன். எனக்கும் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபயணக்கட்டுரையே சீரியல் போல இம்புட்டு நீளமா போய்க்கிட்டே இருக்கே சகோ. ஒவ்வொரு இடத்தையும் அனுபவிச்சு ரசிச்சு பார்த்ததை பதிந்து வைக்க நினைப்பதோட எங்களுக்கும் ஒரு தகவல் களஞ்சியமா பகிர்வதற்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குகாணக் கிடைக்காத அரிய ஓவியங்கள்
பதிலளிநீக்குகாணொளியாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 10
@ புதுகைத் தென்றல்: எனக்கே தோன்றியது - ரொம்பவே இழுக்கின்றேனோ என... :) இன்னும் இரண்டு - மூன்று பகுதிகளில் முடிந்துவிடும் சகோ. ஒரு தகவல் சேகரிப்பாக இருக்குமே என்றுதான் பதிந்து வைக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்குதாஜ்மகால் கேள்வி பட்டிருகேன். படிச்சிருக்கேன். ராஜ் மகால் புதுசா இருக்கு. பகிர்வுக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குஐயோ, ரொம்ப இழுக்கறீங்கன்னு சொல்லலை சகோ.
பதிலளிநீக்குபார்ட் பார்ட்டாக பிரித்து பதிந்து வைப்பதால உங்க அனுபவம் அருமையா பதிவாகுது. அதை ரசிச்சுகிட்டு இருக்கோம். தொடருங்கள்.
@ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.
பதிலளிநீக்கு@ புதுகைத் தென்றல்: தப்பாக நினைக்கவில்லை சகோ... வருந்த வேண்டாம்... :)
பதிலளிநீக்குஅருமையான ஓவியங்கள்.
பதிலளிநீக்கு@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி....
பதிலளிநீக்கு