[செண்பகப் பூ]
”அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி. போதாதற்கு வானத்தைக் கருமேகங்கள் மூடியிருந்தன. இரண்டொரு மழைத்தூறலும் விழுந்தது.அத்தகைய காரிருளில் காவேரி நதியின் ஓரமாக ஜலத்தைக் கிழித்துக் கொண்டு படகு செல்லும் சலசலப்புச் சத்தம் கேட்டது. கொஞ்சம் உற்றுப் பார்த்தோமானால், ஒரு சிறுபடகு கிழக்கேயிருந்து, மேற்கே கரையோரமாகப் போவதைக் காணலாம். படகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதும் மங்கலாய்த் தெரிகிறது. கரையில் நின்ற வண்ணம் ஒருவர், படகைக் கயிற்றினால் இழுத்துக் கொண்டு போவதும் தெரிகிறது.””ஏறக்குறைய நள்ளிரவு ஆன சமயத்தில், X படகை நிறுத்தி மெல்லிய குரலில், ‘Y!, இறங்கு! வந்து விட்டோம்!’ என்றான்”.“X படகை அங்கிருந்த மரத்தின் வேரில் கட்டினான்.””பிறகு இருவரும் கரைமேல் ஏறினார்கள். அங்கே ஒரு நீண்ட மதிற்சுவர் இருந்தது. அந்தச் சுவரில் ஒரு வாசற்படி காணப்பட்டது. அதன் கதவு பூட்டியிருந்தது. X தன் மடியிலிருந்து ஒரு கொத்துச் சாவியை எடுத்து ஒரு சாவியினால் பூட்டைத் திறந்தான்.””இருவரும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள்”.”’கம்’ என்று செண்பகப் பூவின் நறுமணம் வந்தது.”
என்ன வெங்கட்? என்னவோ X – Y படகில் பயணம் செய்கிறார்கள், பயணத்தின்
முடிவில் பூட்டைத் திறந்து உள்ளே போனால் செண்பகப் பூ வாசம் என்று சொல்றீங்க! என்னதான்
சொல்ல நினைக்கிறீங்க? என்று கேட்பவர்களுக்கு…..
மேலே உள்ளது ஒரு
பிரபலமான எழுத்தாளரின் ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. எழுத்தாளரைக் கண்டுபிடிப்பது பிரம்ம சூத்திரம் அல்ல. எழுத்தாளரையும் நாவலையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…
மேலே சொன்னது போலவே
செண்பகப் பூ மணம் கமழும் பயணப் பதிவுகள் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். வந்து பார்த்து ரசியுங்களேன்…..
மீண்டும் நாளை சந்திப்போம்
வேறோரு மலரோடு…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ஒரே நேரத்தில் இரண்டிலும் பதிவுகளா..? கலக்குங்கள்....பயண பதிவுகள் அருமை....
பதிலளிநீக்கு@ கோவை நேரம்: ஒரே நேரத்தில் இரண்டிலும் பதிவுகள்..... :) சில சமயங்களில் இப்படித்தான்!!!!
பதிலளிநீக்குதங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....
கல்கியின் பொன்னியின் செல்வன்
பதிலளிநீக்குசெண்பக்ப்பூவின் மணமாய் கமழ
மனம் நிறைகிறது.. பாராட்டுக்கள்..
@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சரியான விடை இன்று மாலை சொல்கிறேன்.... :)
பதிலளிநீக்குவலைச்சர வாசத்தை தங்கள் வலைப்பூவிலும் மணக்கச் செய்வது
பதிலளிநீக்குஅழகு நண்பரே...
@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....
பதிலளிநீக்குவால்யூம் வால்யூமாகப் படித்தாலும், இந்தக் கேள்விக்கு பதில் அந்த ஆழ்வார்க்கடியானுக்குத் தான் தெரியும்.
பதிலளிநீக்குகரை எல்லாம் செண்பகப்பூ
பதிலளிநீக்குசுஜாதா நினைவில் வருகிறார்...
ஒரு இடத்தில் தினம் எழுதுறதே கஷ்டம். ரெண்டு ப்ளாகிலும் தினமுமா? சொக்கா கண்ணை கட்டுதே
பதிலளிநீக்குவலைச்சர வேலை பளுவிலும் எப்படி பதிவும் போட நேரம் கிடைக்குது
பதிலளிநீக்குகல்கி; பார்த்திபன் கனவு.
பதிலளிநீக்குசரிதான்... பார்த்திபன் கனவு நாவலில் விக்கிரமன் கிரீடத்தை எடுக்கச் செல்லும் சீன் அது. நல்ல ரசனையான ஆசாமி வெங்கட் நீங்கள். செண்பகப் பூ மணம் வீசிய வலைச்சரத்தையும் ரசித்தேன். நன்று.
பதிலளிநீக்குபார்த்திபன் கனவு என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குada ippadiyum!
பதிலளிநீக்குoru nunukkamaa...!
சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி - என்று துவங்கியதுமே புரிந்து விடுகிறதே.
பதிலளிநீக்குசுக்கிலபட்சத்துச் சதுர்த்தி - என்று துவங்கியதுமே புரிந்து விடுகிறதே...
பதிலளிநீக்கு@ வேங்கட ஸ்ரீனிவாசன்: உனது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு!
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி: சுஜாதா இல்லை! கரையெல்லாம் செண்பகப்பூ.... நல்ல நாவல்... பின்பு படமும் ஆக்கப்பட்டது.....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ மோகன்குமார்: //ரெண்டு பிளாகிலும் தினமுமா? சொக்கா கண்ணை கட்டுதே!”
பதிலளிநீக்குஅடடா.... வலைச்சரத்தில் தினமும் வரும். என் பக்கத்தில் நேரம் இருந்தால் :)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
@ லக்ஷ்மி: வலைச்சர பதிவுகள், அழைப்பு கிடைத்த உடன் சிறிது சிறிதாக முன்பே தயாரித்து வைத்தேன். என் பக்கத்தில் நேரம் இருந்தால் தினமும் வரலாம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றிம்மா....
@ கே.பி. ஜனா: தங்களது வருகைக்கும் சரியான பதிலுக்கும் மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கணேஷ்: உங்களை விடவா? :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
@ சென்னைபித்தன்: பார்த்திபன் கனவே தான் சார்! தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ சீனி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சீனி அவர்களே!
பதிலளிநீக்கு@ ஷாஜஹான்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.....
பதிலளிநீக்கு@ அன்பு நண்பர்களே, இன்றைய பதிவினைப் படித்து எழுத்தாளர் யார் எனக் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குமுயற்சி செய்த அனைவருக்கும் பாராட்டுகள்......
அட! பதிலைச் சொல்லுங்க பாஸ்!எம்புட்டு நேரமா வந்து வந்து பாக்கறது.வீட்ல வேலை எல்லாம் அப்படியே நிக்குதுல்ல! :)
பதிலளிநீக்குஎனக்கு தெரியல ஆனால்
பதிலளிநீக்குஇப்போ தெரிஞ்சிகிட்டேன்
இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
@ ராஜி: அடடா.... வேலை நிறைய இருக்கா.... சரி சரி போய் வேலைய பாருங்க! பதில்: எழுத்தாளர் - கல்கி. பார்த்திபன் கனவு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
@ சதீஷ்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு