காந்தள் மலரின்
சில சிறப்புகள் கீழே.
காந்தள் மலர் –
இது தமிழகத்தின் தேசிய மலர்.
காந்தள் மலர் –
குறிஞ்சி நில தெய்வமான முருகப்பெருமானுக்கு உகந்த மலர் இது. ஆறுமுகனுக்கு உகந்த இந்த
மலருக்கும் ஆறு இதழ்கள்!
ஒரு இனிமையான நளவெண்பா
பாடல்:
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்
வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப்
படிவண்டைச் செங்கையால்
காத்தாள்; அக் கைம்மலரைக்
காந்தெளனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!
ஒரு பூந்தோட்டத்தில்
அழகிய பெண்ணொருத்தி, பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். “பூக்களைப் பறிக்காதீர்கள்”
என்று அந்தக் காலத்தில் எழுதி வைக்கவில்லை போலும். அப்படிப் பறித்துக் கொண்டு இருக்கும்
அழகியின் முகம் செந்தாமரை மலர் போல இருக்கிறதே என்றெண்ணி அவளது வதனத்தை மொய்த்ததாம்
வண்டுகள். உடனே அவள், தனது சந்திர பிம்ப வதனத்தினை வண்டுகள் கடித்து விடப் போகிறதே
என தனது செந்நிறமான கையால் தடுக்க, அந்த கை விரல்களைப் பார்த்ததும், காந்தள் மலர் போல
இருக்கிறதே என்றெண்ணி விரல்களை மொய்க்க ஆரம்பித்து விட்டதாம்! என்னே ஒரு கற்பனை!
என்ன நண்பர்களே
காந்தள் மலர் பற்றிய குறிப்பினைப் படித்து ரசித்தீர்களா! இந்த இனிய காந்தள் மலர் போலவே
இன்றைய வலைச்சரத்தில் சில சுவையான பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறேன். இன்றைய பகிர்வுகள்
விழிப்புணர்வினைச் சொல்லும் பகிர்வுகள்.
வலைச்சரத்திற்கு
வந்து இன்றைய மலரான காந்தள் மலரின் அழகினை ரசிக்கலாமே!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
தமிழ் ஈழத்தின் தேசீய மலர் என்று படித்திருக்கிறேன்..
பதிலளிநீக்குஅருமையான காந்தல் மலர்
கற்பனை ரசனையுடன்
பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..
அருமை அன்பரே
பதிலளிநீக்குதமிழகத்தின் தேசிய மலர் என்பது மட்டும்தான் தெரியும். நளவெண்பா பாடல் எப்பொழுதோ படித்தது போல் ஒரு ஞாபகம்.
பதிலளிநீக்குதினமும் தகவல்களை ரசிக்கத் தகுந்தாற் போல்
பகிர்வதற்கு நன்றிகள்
நளவெண்பாப் பாடல் அருமை. வலைச்சரத் தொகுப்பும்தான். அழகாக அறிமுகம் செய்வதுடன் அந்த அறிமுகத்திற்காக இங்கே நீங்கள் எழுதுபவையும் ரசனைக்கு நல்ல தீனியாக இருக்கின்றன.
பதிலளிநீக்குkaanthal malar!
பதிலளிநீக்குazhakaana vilakkam!
அருமையான காந்தள் மலர் விளக்கம் அருமை..
பதிலளிநீக்குஇனிமையான நளவெண்பா பாட்டுக்கு நன்றி.
@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ குணா தமிழ்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவரே.
பதிலளிநீக்கு@ ராஜி: தங்களது வருகைக்கும் பகிர்வினை ரசித்துக் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ராஜி!
பதிலளிநீக்கு@ கணேஷ்: //அழகாக அறிமுகம் செய்வதுடன் அந்த அறிமுகத்திற்காக இங்கே நீங்கள் எழுதுபவையும் ரசனைக்கு நல்ல தீனியாக இருக்கின்றன.//
பதிலளிநீக்குஇந்த வார்த்தைகள் என்னை மகிழ்வித்தன நண்பரே.
தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.
@ சீனி: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றிம்மா.
பதிலளிநீக்குகாந்தள் மலர் பற்றி தெரிந்திருந்தாலும், அந்தக்கவிதையை இன்று தான் தெரிந்து கொண்டேன்..ஜெய்வாபாய் பள்ளியில் இதைப்பயிரிட நான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டது...
பதிலளிநீக்கு@ ஈஸ்வரன்.A: ஓ... இதைப் பயிரிட முயன்றீர்களா? நல்ல விஷயம்.... ஆனால் தோல்வியில் முடிந்து விட்டது எனப் படித்தபோது கஷ்டமாக இருந்தது.....
பதிலளிநீக்குதங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.
kaandhal malar vilakkam nandru
பதிலளிநீக்குsurendran
@ விழித்துக்கொள் [சுரேந்திரன்]: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
@ ரத்னவேல் நடராஜன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குவெண்பாவின் ஈற்றடி முற்று பெறவில்லை.
பதிலளிநீக்குவே’ர்’த்தளைக் காணென்றான் வேந்து. என்றிருக்க வேண்டும்.
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா.
நீக்குகாந்தள்மலர் இலக்கியங்களில்தான்
பதிலளிநீக்குகையாளப்பட்டிருந்தது.நளவெண்பா
பாடலின் உவமையோடு நீங்கள் விளக்கியது நளினமிக்க ரசனையாயிருந்தது
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே. உங்கள் பெயரோடு பதிவு செய்திருக்கலாம்!
நீக்கு