தாழம்பூ என்றால்
உடனே என் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாறுபட்ட ஒரு வேடத்தில்
நடித்த “கை கொடுக்கும் கை” படத்தில் வரும் “தாழம்பூவே வாசம் வீசு! தாயின் தாயே கொஞ்சிப்
பேசு!” என்ற இனிய பாடல் தான். இன்றைய பகிர்வினை
இந்த இனிய பாடலுடன் ஆரம்பிப்போமே!
என்ன நண்பர்களே
இனிமையான தாழம்பூ பாடலைப் பார்த்து ரசித்தீர்களா? இனி விஷயத்திற்கு வருகிறேன்.
இன்றைய வலைச்சரத்தில்
நான் தொடுத்திருப்பது தாழம்பூ. இந்தத் தாழம்பூவை
சிவபெருமானுக்கு பூஜை செய்யப் பயன்படுத்துவதில்லை. ஏன் என்றால் அதற்கு ஒரு கதை இருக்கிறது!
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும்
கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும். [நன்றி விக்கிப்பீடியா!]
என்ன கதை படிச்சீங்களா? நல்லா இருந்ததா?
இயற்கை அன்னை எத்தனை எத்தனை வியப்பான விஷயங்களை நமக்குத் தந்திருக்கிறாள். மரங்கள், செடி-கொடிகள், விலங்குகள், பறவைகள், நீர்
நிலைகள் என அள்ளி அள்ளித் தந்திருக்கிறாள். நெய்வேலி நகரில் மா, பலா, புளி, முழு நெல்லிக்காய், அறி நெல்லிக்காய், வேம்பு,
கல்யாணமுருங்கை, முருங்கை, எலுமிச்சை, வாழை என விதம் விதமாய் மரங்கள் சூழ வாழ்ந்து
மரங்களின் அருமையை உணர்ந்தவன்.
இயற்கையைப் போற்றும் பதிவுகள் தமிழில் எழுதுபவர்கள் மிகக் குறைவுதானோ! அப்படி எழுதுபவர்களும் அவ்வப்போது தான் எழுதுகிறார்கள். அப்படிப் பட்ட இயற்கை பற்றிய பகிர்வுகளை, இன்றைய வலைச்சரத்தில் தாழம்பூ சரமாகத் தொடுத்திருக்கிறேன்.
வந்து பார்த்து
இயற்கையை ரசியுங்களேன் நண்பர்களே.
மீண்டும் நாளை சந்திப்போம்!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வாசனை வீசி கமழும் தாழம்பூ சரத்திற்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குமணம் வீசட்டும்...
பதிலளிநீக்குதாழம்பூ வாசனை நல்லா இருந்தது.சென்று ரசித்தாகி விட்டது.இங்கும் எனக்குப் பிடித்த மற்றொரு பாடல். நன்றி.கதை பகிர்விற்கும் நன்றி
பதிலளிநீக்கு@ கோவை நேரம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ ராஜி: வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குதாழம்பூவினைப் பற்றிய ஒரு அழகான உரை. சிவ பூசைக்கு ஆகாதெனச் சாபம் பெற்ற கதை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
@ சீனா: பழனிப் பயணம் முடிந்ததா? பயணம் முடித்து வந்து எனது இன்றைய பகிர்வினைப் படித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குதாழம்பூ பாடம் மிகவும் ரசிக்கத்தக்க பாடல் ஆனால் எனக்கு தாழம்பூ பார்த்தாலே பயமா இருக்கும் அதுக்கும் ஒரு கதை இருக்கு அப்புறமா சொல்றேன்....!
பதிலளிநீக்கு@ MANO நாஞ்சில் மனோ: அட அதுக்கு ஒரு கதை இருக்கா.... சரி சரி... உங்க பக்கத்தில் நேரம் கிடைக்கும் போது பதிவா போடுங்க! பார்த்துடுவோம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ!
மிகவும் ரசிக்கதக்கபாடல் பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஇயற்கை மீதான தங்களது அக்கறையை பாராட்டுகின்றேன் வாசிக்கும்போதே நினைத்தேன் சின்னவயதில் உங்களுக்கு இயற்கையுடன் உறவு இருந்திருக்குமென்று நெய்வேளிபற்றியும் குறிப்பிட்டு இருந்தீர்கள்
பதிலளிநீக்குநன்றி
சிவவழிபாடு கதை!
பதிலளிநீக்குஅறிந்தது ஆனால், மறந்தது!
சா இராமாநுசம்
@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் பாடலை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றிம்மா.
பதிலளிநீக்கு@ ALKAN: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
பதிலளிநீக்கு@ புலவர் சா இராமாநுசம்: தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குவாசம் வீசும் தாழம்பு...
பதிலளிநீக்கு@ குடந்தை அன்புமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
பதிலளிநீக்குகமகமக்குது!
பதிலளிநீக்கு@ சென்னைபித்தன்: வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குvanakkam thiru venkat nagaraaj avargale neengal ovvoru padhivirkkum oru malarin peyar vaiththu ezhudhugindreer arumai vaazhththukkal nandri
பதிலளிநீக்குsurendran
@ விழித்துக்கொள் [சுரேந்திரன்]: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
பதிலளிநீக்குதாழம்பூவின் கதை அருமை. வாழ்த்துகள். Keep it up.
பதிலளிநீக்குவிஜய்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்!
நீக்கு