சாலைக்
காட்சிகள் – பகுதி 10
இன்று
சனிக்கிழமை என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை. நேற்றிரவு பெய்த திடீர் மழை காரணமாக
இன்று காலையில் குளிர் சற்றே அதிகமாக இருந்ததாலும் ரஜாய்/போர்வைக்குள்ளிருந்து
வெளியே வர பிடிக்கவில்லை. 09.00 மணி வரை அப்படியே படுத்துக் கிடந்தேன். பிறகு
மெல்ல எழுந்து, தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கி ஆதித்யா சேனல் வைத்தேன். அது தன்
பாட்டுக்கு ஒரு பக்கத்தில் அதன் வேலையை செய்து கொண்டிருக்க, நான் எனது காலை
வேலைகளை முடித்தேன். அப்போது ”பட்டை கோவிந்தன்” என்ற பெயர் காதுகளில் நுழைய சற்றே கவனித்தேன்.
பட உதவி: கூகிள்.
பாஸ்கி, ‘பட்டை கோவிந்தன்’ எனும் பெயர் கொண்ட
கதாபாத்திரத்துடன் கலக்கலாக பேசிக் கொண்டிருந்தார். கொஞ்சம் கவனித்துக் கேட்டபோது எனக்கே ஒரு
காக்டெயில் அருந்திய உணர்வு. அந்த காக்டெயில் எனது சமீபத்திய தமிழகப் பயணத்தின்
போது பார்த்த காட்சி ஒன்றை நினைவுக்குக் கொண்டு வந்தது.
திருவரங்கம் என்றதும் நினைவுக்கு வருவது ஒன்றாம் நம்பர்
பேருந்து தான். திருச்சியில் சாலைகளில் பயணிக்கும் போது நிச்சயம் பல ஒன்றாம்
நம்பர் பேருந்துகளை நீங்கள் பார்த்து விட முடியும். இரவு பகல் என்றில்லாமல்
எப்போதும் பேருந்து வசதி உண்டு. திருவரங்கத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையம்
வரை செல்லும் இந்தப் பேருந்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு
பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் நோக்கி பயணித்துக்
கொண்டிருந்தேன்.
எனக்கு முன் இருக்கையில் ஒரு மனிதர் கையில் ஜூனியர்
விகடன் வைத்து படித்துக் கொண்டிருந்தார். ஒல்லியான தேகம். சராசரியை விட உயரம்
குறைவு. அவர் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்தவர் திருவானைக்கோவில் நிறுத்தம்
வந்தவுடன் இறங்கிவிட, இரண்டு பேர் அமரக் கூடிய இருக்கையில் அவர் மட்டும் தனியே
அமர்ந்திருந்தது அரை டிக்கட் வாங்கும் சிறுவன் அமர்ந்திருந்தது போல இருந்தது.
பட உதவி: கூகிள்.
திருவானைக்கோவில் நிறுத்தத்திலேயே சிலர் பேருந்திற்குள்
வந்தார்கள். அவர்களில் இருவர் நேராக நம்பர் 1 கடையிலிருந்து – அதாங்க நம்ம
டாஸ்மாக் கடையிலிருந்து வருகிறார்கள் போல – நடையிலும் செயல்களிலும் அவர்கள்
அருந்திய சரக்கின் மகத்துவம் பிரதிபலித்தது! ஒருவர் முன் இருக்கையில் அமர்ந்து விட
இரண்டாமவர் எனக்கு முன் இருந்த இருக்கையில் அதாவது நம்ம குச்சி தாத்தாவுடன்
உட்கார்ந்தார். பட்டை கோவிந்தனிடம் இருந்து வந்த சரக்கின் வீச்சத்தில் கொஞ்சம்
மயங்கிய குச்சி தாத்தா சற்றே தலையைத் திருப்பி பட்டை கோவிந்தனைப் பார்த்தார்.
பட உதவி: கூகிள்.
’என்னபா, ஜூவியா
படிக்குற..... என்னா போட்டுருக்குது! இந்த
தேர்தல்ல அம்மா கெலிப்பாங்களா?”
என்றார். பிறகு தானாகவே,
ஆஸ்பத்திரி கிட்ட கடையில வெலை ஜாஸ்திபா. பத்து ரூபாய்க்கு இரண்டு இட்லி தான்
தரான். ராஜ கோபுரத்துக்கிட்ட பத்து ரூபாய்க்கு நாலு!” என்று சொல்லவே
நமது கு.தா. “அம்மா கடை”யிலா? என்று கேட்டார். அட அங்க நல்லாவே இல்லபா. அதுக்கு
பக்கத்திலேயே வேற கடை. பத்து ரூபாய்க்கு நாலு இட்லி, தொட்டுக்க கார சட்னி,
தேங்காய் சட்னி, சாம்பார்னு நல்லா கொடுக்கறாம்பா! நான் அங்க தான்
சாப்பிடறது இப்பல்லாம்!” என்று சொன்னது மட்டுமல்லாது, நம்ம கு.தா. வைத் தொட்டு,
“நீயும் வரீயா, ஒரு நாலு இட்லி சாப்புடுவ, பார்த்தா ரொம்பவே வீக்கா இருக்க!” என்றார்.
பிறகு திடீரென நினைவுக்கு வந்த மாதிரி, “ஆமா அம்மா
கடையான்னு கேட்டயே நீ என்ன அ.தி.மு.க. வா? என்று கேட்க கு.தா.விற்கு பதில் சொல்ல
பயம். ‘அப்ப நீ தி.மு.க. வா? சொல்லு என குரலை உயர்த்திக் கேட்க, எல்லோரும்
அவர்களையே பார்க்க ஆரம்பித்தோம். என்ன பதில் சொல்வது என்று புரியாது முழித்துக்
கொண்டிருக்க, ப. கோ. ஒரு பதிலைச் சொன்னார் – ”நான் குடிமகன்
கட்சி..... எனக்கு யார் சரக்கு
ஊத்தறாங்களோ அவங்க கட்சி” இன்னா சொல்ற என்றார். என்ன பதில் சொன்னாலும் மடக்கி மடக்கி
கேள்வி கேட்கும் பட்டை கோவிந்தனிடம் குச்சி தாத்தா மாட்டிக் கொண்டு விட்டார்.
அதற்குள் பட்டை கோவிந்தனுடன் வந்தவர் தட்டுத் தடுமாறி
கீழே இறங்க, “மாமா பாத்து ஸ்டடியா போ! என்னை பத்திக் கவலைப்படாத... நான் சூதானாமா போயிருவேன்! நாளைக்கு கடையில
சந்திக்கலாம்.... பை பை” என்று சொல்லிவிட்டு, கு.தா. விடம் திரும்பி, ‘மாமா பாவம்.... 100 அடிச்சாலே கிர்ர்னு ஏறிடும் அவருக்கு” என்று தொடர்ந்து பேசிக் கொண்டு வந்தார்.
பட உதவி: கூகிள்.
கு.தா.வின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால்
அவர்களின் அத்தனை உரையாடல்களையும் கேட்க முடிந்தது. ஆனால் எனக்கு ஒரு வருத்தம்.
கு.தா.வின் முகத்தினைப் பார்க்க முடியவில்லையே என..... “ஒரு கேள்வி கேட்டு இப்படி
மாட்டிக்கிட்டேனே.... எனக்கு இது தேவையா?” என்று முகத்தினை சோகமாக வைத்திருப்பாரோ என்று ஒரு எண்ணம்..... ஒரு வேளை நடிகர் வடிவேலு மாதிரி “உனக்கு இது
தேவையா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருப்பாரோ.....
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
எனக்கு ஒரு வருத்தம். கு.தா.வின் முகத்தினைப் பார்க்க முடியவில்லையே என.
பதிலளிநீக்கு>>
போற போக்குல ராஜாவோட காது மட்டுமில்ல கண்ணும் சேர்த்து ஊர் கதை பார்க்க ஆரம்பிக்கப் போகுதா!?
பதிவர்னா கண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்க வேண்டாமா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நேரடியான நகைச்சுவைக்காட்சியும் , பகிர்வும் அருமை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஹா..ஹா..
பதிலளிநீக்குரசனையான பதிவு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குரா.கா.க.கா தனிப் பதிவாகி விட்டதோ! :))
பதிலளிநீக்குஅப்படி யோசிக்கவில்லை! தானாகவே அமைந்து விட்டது போலும்! :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இரசித்தேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.
நீக்குஹா... ஹா... ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமிகவும் ரசித்தோம்! ரொம்பவே அருமையான பதிவு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குத.ம.6
பதிலளிநீக்குதமிழ்மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குபகிர்வு அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குகொஞ்சம் எந்திரிச்சு போய் அன்னாருடைய முக தரிசனத்தை பார்த்திருக்கலாமே??
பதிலளிநீக்குஎந்திரிச்சுப் போக சோம்பேறித்தனம் தான்! :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நல்லாவே மாட்டிக்கிட்டிருக்கார் குச்சி தாத்தா! உங்க காதும் நல்லா வேலை செஞ்சு எங்களுக்கு ஒரு சூப்பர் பதிவை தந்திருக்கிறது! ஹாஹா! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
நீக்குநானும் அதையே தான் நினைத்தேன்
பதிலளிநீக்குசாலடின் ஒரு பகுதி ராஜா காது தனி பதிவாய்டுச்சோ ?
ஆனால் செம காமெடி!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.
நீக்குஇத, இத, இதத்தானய்யா நாம தில்லியில் கண்டு களிக்கும் வாய்ப்பிழக்கிறோம். குவார்ட்டர் கோவிந்தன் ஜிந்தாபாத்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குபயணம் இனிமையாக இருந்தது. நல்ல பதிவு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.
நீக்குVadiveluvin padam indha padhivirku romba poruththam
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குகாணும் காட்சிகளைப் பதிவாக்கும் உங்கள் திறமை பிடித்திருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குஅந்தக் காலத்தில் திண்ணைப்பேச்சு என்று பத்திரிகையில் வரும். அதுபோல சிரிப்போடு சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது தங்களின் இந்தப் பதிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....
நீக்குகுரங்கு சேஷ்டைகளையும் .பட்டை கோவிந்தன்களையும் ரசித்துக் கொண்டே இருக்கலாம் ,டைம் போறதே தெரியாது !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஉங்கள் காது பல விஷயங்களைக் கேட்கிறது. நாங்களும் அவற்றை சுவாரஸ்யமாகப் படிக்கிறோம். தொடரட்டும் உங்கள் சமூகப் பணி! படித்துக் கொண்டே வரும்போது பாவம் குச்சி தாத்தா மாட்டிக்கொண்டு விடுவாரோ என்று பயமாகவே இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...
நீக்கு