யூனிலீவர்
தயாரிப்பில் ஒன்றான லக்ஸ் சோப் தெரியாதவர்கள் யார்? பயன்படுத்தாதவர் யார்? இந்த
சோப் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது 1899-ஆம் ஆண்டில் – அதுவும் Sunlight
Flakes என்ற பெயரில் என விக்கிபீடியா தகவல் சொல்கிறது.
பிறகு 1900-ஆம் ஆண்டு லக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லக்ஸ் என்ற சொல்
லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. ஆடம்பரம் என்ற அர்த்தம் தொனிக்கும்
வார்த்தை தான் அது!
முதன்
முதலில் இந்த பெயரில் வந்த சோப் துணி துவைக்கும் சோப் தான்! அதையே சில பெண்கள்
தங்களது சரும சோப்பாக பயன்படுத்தியதால், மேலும் பல முன்னேற்றங்கள் கண்டு லக்ஸ் டாய்லட்
சோப் தயாரிக்கத் துவங்கினார்களாம்! பெரும்பாலும் முன்னணி சினிமா நடிகைகளை மட்டுமே
தங்களது விளம்பரங்களில் நடிக்க வைப்பது அவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது!
சரி
எதுக்கு இன்னிக்கு எதுக்கு இந்த லக்ஸ் விளம்பரம்? “பொக்கிஷம்” பகுதியில்
பதிவுகள் வெளியிட்டு நிறைய நாட்களாகிவிட்டது.
இன்றைய பதிவில் 1948-ஆம் வருடம் வந்த சில விளம்பரங்களைப் பார்க்க போகிறோம்.
முதலில் அந்த வருடம் வந்த லக்ஸ் சோப் விளம்பரம்! கட்டழகி ருக்மணிதேவி விளம்பரம்
செய்த லக்ஸ் டாய்லட் சோப்!
”என் அழகுபடுத்தும்
முறை வெகு சுலபம்” என்கிறார் சௌந்தர்யவதி ருக்மணி தேவி. “நான் தவறாமல்
லக்ஸ் டாய்லட் சோப்பினால் கழுவுகிறேன்
அவ்வளவுதான். அதன் சுறுசுறுப்பான நுரை எனது மேனியைப் பட்டைப்போல் வழவழப்பாகவும் மிருதுவாகவும்
செய்கின்றது. உங்களுடைய மேனியை மலர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள
நீங்கள் லக்ஸ் டாய்லட் சோப் உபயோகியுங்கள்” என்கிறார் ருக்மணி தேவி!
சிறு வயதில் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு பொருளை – அது தபால்
தலையோ, சினிமா நடிகர்களின் படங்களோ, இன்றைய குழந்தைகள் போல WWF மாமிச மலைகளையோ – சேகரித்திருப்போம். எனது கல்லூரி நண்பர் ஒருவர்
தீப்பெட்டிகளை சேகரிப்பார். அணில்
தீப்பெட்டி என்று ஒன்று இருந்திருக்கிறது. அதன் விளம்பரம் கீழே.
பெண்களுக்கான கூந்தல் தைலங்கள் எல்லா நாட்களிலும் இருந்திருக்கிறது.
1948-களில் வந்த விளம்பரத்திலேயே “தற்கால மங்கை வெறும் சமையலறை வாசியாக
இருப்பதில்லை. நாகரீகமாக இருக்க விரும்புகிறாள்” என்று சொல்லி
இருக்கிறார்கள். அப்படி ஒரு விளம்பரம்.....
இப்போது இருக்கும் பற்பசைகள் போலில்லாது அக்காலத்தில்
எல்லாம் பற்பொடி தான்! நான் சிறுவனாக இருந்தபோது கோபால் பல்பொடி, பயரியா பல்பொடி
என்று விளம்பரங்களை பார்த்திருக்கிறேன். இந்த விளம்பரமும் ஒரு பற்பொடி விளம்பரம்
தான்! – நஞ்சன்கூடு பற்பொடி!
சமீபத்தில்
ரேடியோ பற்றி சில பதிவுகள் படித்தேன். வால்வு ரேடியோ - அப்படி 8 வால்வு, 8 பேண்ட்
ரேடியோ ஒன்றின் விளம்பரம்.....
இவளது
டைரியிலிருந்து ஒரு பக்கம் என மைசூர் சில்க் புடவை விளம்பரம்..... அடுத்தவர்கள்
டைரியை படிப்பது நாகரீகமல்ல என்றாலும் இதை படிக்கலாம்!
என்ன
நண்பர்களே, இன்றைய பொக்கிஷப் பகிர்வினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில்
சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
பொக்கிஷங்களை இரசித்தேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குசுவாரஸ்யமான பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅருமை.. பழைமையான விஷயங்களை -
பதிலளிநீக்குவிளம்பரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குஆஹா ஆஹா!!!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குஉண்மையிலேயே இவை பொக்கிஷங்கள் தான் ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குத.ம.2
பதிலளிநீக்குதமிழ மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குsuper.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.
நீக்குஅருமையான பொக்கிஷங்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு"//அடுத்தவர்கள் டைரியை படிப்பது நாகரீகமல்ல என்றாலும் இதை படிக்கலாம்! //"
என்ன ஒரு பெருந்தன்மை!!!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.....
நீக்குபொக்கிஷங்கள் அருமை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஅது அப்பவே சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் தானா? ஹஹஹா..அருமை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
நீக்குசினிமா ஆரம்பித்த காலங்களிலேயே அவர்களை வைத்து விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!
ஆமாம்...கேட்க விட்டுப்போச்சு:(
பதிலளிநீக்குஇந்த ருக்மணி யாரு? எனக்குத் தெரிஞ்ச ஒரே ருக்மணி சினிமா நடிகை லக்ஷ்மியின் அம்மாதான்.
உங்கள் கேள்விக்கு நம்ம ஸ்ரீராம் பதில் தந்தாச்சு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
“பொக்கிஷம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஉண்மையிலேயே பொக்கிஷம் தான். அந்தக் கட்டழகி ருக்மணியின் காந்தக் கண்ணழகில் மயங்கி இனி நானும் லக்ஸ் பயன்படுத்த முடிவெடுத்து விட்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....
நீக்குநடிகை லக்ஷ்மியின் அம்மா குமாரி ருக்மிணியா இவர்?? ஜாடையைப் பார்த்தால் அப்படித் தான் இருக்கு! லக்ஸ் சோப் தூளாகப் பயன்படுத்தி இருக்கேன். முடிஞ்சால் அந்தக் காலத்து தீபாவளி, பொங்கல் மலர்களில் ராசி சில்க்ஸ் விளம்பரத்துக்கு இரு பக்கக் கதை போட்டிருப்பாங்க, அதையும் வெங்கடேஷ் வஸ்திராலயா, (ஹைகோர்ட் எதிரே, ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், அலுவலகத்தின் கீழே இருந்தது, இப்போ இருக்கானு தெரியலை) விளம்பரமும் கிடைச்சால் போடுங்க.
பதிலளிநீக்குகிடைத்தால் அந்த விளம்பரங்களையும் வெளியிடுகிறேன் கீதாம்மா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அதே போல் சன்லைட் சோப்புக்கும் விளம்பரக் கதை வரும். சர்ஃபுக்கு முன்னாடி வீடு வீடாக வந்து துணியை வாங்கி ஊற வைச்சுத் துவைத்துக் காட்டிட்டுப் போவாங்க. ப்ரூக்பான்ட் டீக்கு வீட்டுக்கு வந்தே தேநீர் போட்டுக் கொடுத்துட்டு தேநீர்ப் பொட்டலம் இனாமாகக் கொடுத்தது உண்டு. :))))) இப்படிப் பல மலரும் நினைவுகளை எழுப்பி விட்ட பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....
நீக்குமலரும் நினைவுகளை எழுப்பி விட்டதோ...... பலருக்கும் பிடிக்கலாம் என்பதால் தான் பொக்கிஷம் பகுதியில் வெளியிட்டேன்.....
அருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.
நீக்குஅருமையான பொக்கிஷ பகிர்வு.
பதிலளிநீக்குசிறுவயதில் சிவாகாசியில் இருக்கும் போது அப்பாவுடன் எல்லா தீப்பெட்டி ஆபீஸ்களுக்கும் போய் வித விதமாய் தீப்பெட்டி படங்கள் வாங்கி வந்து ஆலபத்தில் போட்டி போட்டுக் கொண்டு நானும் அண்ணனும் ஒட்டியது நினைவுக்கு வருகிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குநினைவில் நின்றாடும் பொக்கிசங்கள் ! இத்தோடு சேர்த்து சொட்டு நீலம் என்றாலே
பதிலளிநீக்குஅது ரீகன் சொட்டு நீலம் தான் என்ற வாசகம் நினைவில் வந்து போகும் அளவிற்கு
இன்றைய பொக்கிசங்கள் மனத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது .அருமையான
பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குஇந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே பொக்கிஷங்கள்தான். பயோரியா பல்பொடின்னு ஒரு விளம்பரம். சுமார் நாப்பது வருசத்துக்கு முன்னால பாத்தது. அந்த பல்பொடி லக்ஸ் மாதிரியே இன்னமும் மார்கெட்ல கிடைக்கிது. இது எவ்வளவு பெரிய விஷயம்! அதுக்கப்புறம் கேசவர்த்தினி கூந்தல் தைலம். இந்த மாதிரி கால் நூற்றாண்டுக்கு மேலாக சந்தையில் இன்றும் பிரபலமாக இருக்கும் நுகர்வோர் பொருட்களைப் பற்றியும் ஆய்வு செய்து எழுதுங்களேன்.
பதிலளிநீக்குதங்களது நினைவுகளையும் மீட்டெடுத்து விட்டதே இப்பகிர்வு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப்ஜி!
எங்கள் வீட்டு பைண்டிங் புத்தகங்களில் நானும் பார்த்திருக்கிறேன். நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதுளசி மேடம்... உங்கள் சந்தேகத்துக்கு பதில்!!!!
பதிலளிநீக்குhttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF
துளசி டீச்சரின் சந்தேகத்தினை தீர்த்து வைத்தமைக்கு நன்றி ஸ்ரீராம்!
நீக்கு@துளசி, இன்னொருவர் இருக்கிறாரே, ருக்மிணி அருண்டேல்!
பதிலளிநீக்குஒரு காலத்தில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் வருவதையே சினிமா நட்சத்திரங்கள் மிகவும் பெருமையாக நினைத்தார்கள் என்று கூட படித்திருக்கிறேன். கருப்பு-வெள்ளையில் அத்தனை அழகாக படங்கள் இருக்கும்.
அருமையான பொக்கிஷங்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...
நீக்குஉள்ளபடியே பொக்கிஷம்தான்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குபொக்கிஷங்கள் சிறப்பு! எங்கிருந்துதான் பிடித்தீர்கள் இத்தனை? நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குபொக்கிஷங்களை ரசித்தேன் லக்ஸ் என்னும் லத்தீன் மொழிச்சொல்லுக்கு வெளிச்சம் ஒளி என்று சின்ன வயதில் யாரோ சொன்ன நினைவு, என் பள்ளி ஆசிரியர் ஒருவர் lux upon thee என்று ஆட்டோகிராஃப் கையெழுத்திட்டிருக்கிறார்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குஎல்லாமே நிஜமான பொக்கிஷங்கள்தான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குஎங்கிருந்துங்க இந்த பழைய பொக்கிஷங்களை தேடிப்பிடிச்சீங்க... பகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குஎங்கள் நூலகத்தில் பல பழைய தீபாவளி மலர்கள் இருக்கின்றன எழில். அக்காலத்தில் வெளி வந்த படைப்புகளை அவ்வப்போது படிப்பது பிடிக்கும்..... அதனால் எடுத்து வருவேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பொக்கிஷங்கள் ரசிக்கும்படி இருந்தன. தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குlux என்றதும் அதன் மணம்மூக்கை துளைக்கிறது !
பதிலளிநீக்குத ம 10
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குது போலப் பொக்கிஷங்களை இப்போது பார்க்க முடியுமா என்ன. ஸ்ரீராமுக்கு நன்றி. முற்றும் புதிதான முகமாயிருக்கிறதே என்று யோசித்தேன். லக்ஸ் விளம்பரங்களில் வரும் சினிமா நட்சத்திரங்கள் தனிவித மேக் அப்புடன் அழகாகக் காட்சி அளிப்பார்கள்..திப்பெட்டி லேபல்கள் பற்றி முன்பு நான் கூட எழுதி இருந்தேன். எல்லாமே இளம்பருவத்துக் கதைகள் அல்லவா.. மிக நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குபழைய விளம்பரங்களை அழகாய்த் தொகுத்து எங்களுக்கு விருந்தளித்தமைக்கு நன்றி அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
நீக்குஅருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பசுபதி ஐயா.
நீக்குஅடக்கடவுளே.... உங்களின் பதிவின் பின்னோட்டத்தைப் படித்ததும்...
பதிலளிநீக்குநம் வலையுகத்தில் இவ்வளவு “பெரிசுகள்“ இருப்பது எனக்குப் புரிந்துவிட்டது.
மற்றபடி.... அந்த அந்த காலத்திற்குத் தகுந்தார் போல விளம்பரங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது என்பது புரிந்தது நாகராஜ். ஜி.
நீங்களும் நானும் கூட ஒரு காலத்தில் பெருசு தான் ஆகப்போகிறோம் அருணா! :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
arumai
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா முரளி.
நீக்குPazhaya padangal yeppodhu paarththalum rasikkumbadi irukkum
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குஎல்லாமே பொக்கிசங்கள்தாம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு