சனி, 22 மார்ச், 2014

ஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள்.....



ஓவியர் கோபுலு அவர்கள் ஆனந்த விகடனில் வரைந்த ஓவியங்கள் காலத்தால் அழியாதவை. நகைச்சுவை உணர்வு அவரது ஓவியங்களில் ததும்பும் அழகை எப்போது வேண்டுமானாலும் ரசிக்க முடியும். அவர் நகைச்சுவைகளுக்கு மட்டுமே ஓவியம் வரைந்திருக்கிறார் என்று நினைத்துவிடக்கூடாது. பல அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார் அவர்.

சமீபத்தில் 1948-ஆம் வருடத்தின் ஆனந்த விகடன் தீபாவளி மலர் கிடைத்தது. அந்த புத்தகத்தில் கோபுலு அவர்கள் ஆறுவிதமான ருதுக்கள் பற்றிய ஓவியங்களை வரைந்திருப்பதைக் கண்டேன். முதலில் ருதுஎன்றால் என்ன என்று பார்த்து விடுவோம் –

கதிரோனின் வழிபாட்டுக்கான மந்திரங்களிலும், இதர வர்ணனைகளிலும் சூரிய சக்தியினால் ஏற்படும் சீதோஷ்ண நிலைகளும் மாறுபாடுகளும் விவரமாக அறியக் கிடக்கின்றன. வருஷத்தில் ஆறு விதமான பருவ மாறுதல்களுக்கும் சூரியனையே காரணமாக்கி, அவைகள் வஸந்த-க்ரீஷ்ம-வர்ஷ-சரத்-ஹேமந்த-சிசிர ருதுக்களென்ற பெயர்களினால் குறிப்பிடப் படுகின்றன

ஒரு ருது என்பது இரண்டு மாதம். இந்த ருதுக்கள் ஒவ்வொன்றிலும் மனித சுபாவங்கள் மாறுபடுகின்றன. ஆறுவித ருதுக்களின் லக்ஷணங்களையும் ஸ்ம்ருதிகளின் வர்ணனைக்கு ஒட்டியவாறு பின்வரும் ஓவியங்களில் கோபுலு அவர்கள் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். பார்க்கலாம் வாருங்கள்!



வஸந்த ருது: ஆஹா! அந்தப் பெயரில் தான் என்ன குளுமை! என்ன இனிமை! பகலும் இரவும் அனவரதமும் இன்பமான நினைவுகளும், அந்த நினைவுகளைப் பயக்கும் எழில் பெற்ற சூழ்நிலைகளுமாக, ஜீவராசிகளை ஆனந்தாம்ருதத்தில் ஆழ்த்தி வைக்கும் காலம் – பூம்பொழில்கள் புஷ்ப ராசிகளினால், வர்ண விசித்திரங்களையும் பரிமள கந்தங்களையும் அள்ளி வீச, பக்ஷி ஜாலங்களும் காதல் விளையாட்டுகளில் ஈடுபட, காதலர் இயற்கையுடன் இணைந்து தம்மை அலங்கரித்துக் கொள்கிறார்கள். மன்மதன் புஷ்ப பாணங்களைத் தொடுக்கிறான். தென்றலும் வெப்பமாய்க் காண, நித்திரையும் கனவாய் முடிய, மனித வர்க்கம் வஸந்த ஸ்பர்சத்தில் தன்னை மறந்து உன்மத்தம் அடைகிறது. 


க்ரீஷ்ம ருது: வெப்பத்தின் உச்சிக்காலம். அக்னி ஜ்வாலைக்கொப்பான கொதிப்புடன் கூடிய, சூர்ய வீக்ஷண்யத்தில் பசுக்களும், எருமைகளும், அரிதாகிவரும் நீர்நிலைகளைத் தேடி அலைகின்றன. பக்ஷிகள் அதிகம் பறப்பதில்லை. பெண் மக்கள் குளிர்ந்த ஸ்னானபானாதிகளில் அதிக இச்சை கொள்கிறார்கள். நீர்க் கரையைத் தேடிச் செல்கிறார்கள். செடி கொடிகளில் தலைதூக்கப் பார்க்கும் இளம் குருத்துகள் உடனுக்குடன் கருகிப் போகின்றன. இரவுகளில் கூடக் காற்றோடு கலந்து வரும் உஷ்ண அலைகளை மாந்தர்கள் சபிக்கிறார்கள்..... ஆதவனின் தாபத்தினால் ஈச்வர சிருஷ்டியிலே ஒன்றுக்கொன்று வைரிகளான ஜீவராசிகள் கூட விரோத பாவத்தை மறந்தவைபோல் காண்கின்றன. 



வர்ஷ ருது: நீலகண்டப் பிரபுவின் கண்டத்தை ஞாபகமூட்டியவாறு பிரம்மாண்டமான கருமேகக் கூட்டங்கள் வானமண்டலத்தை முற்றுகை போட்டு மறைத்து, சூர்யரச்மியின் சின்னத்தையே ஒளிக்கப் பார்க்கின்றன. அழகான வானவில், பெரிய சிவதனுஸைப் போன்று முகில்களின் மீது படர்ந்து காண்கிறது. சோவென மழை பொழிகிறது. பளிச் பளிச்சென்று மின் வெட்டுகள்; தொடர்ந்து மிருதங்க த்வனியுடன் இடிகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனிப்படலம் போன்ற மழைத்தாரையின் சொரூபம். மயில்கள் உற்சாகமாகத் தோகை விரித்தாடுகின்றன. தவளைக் கூட்டங்கள் பல சுருதிகளில் சப்திக்கின்றன. மனித இருதயங்களிலும் சூழ்நிலையையொத்த ஒருவித இருள் படர்கின்றது.



சரத் ருது: தயிர்க் கட்டியை நிகர்த்த பூர்ண சந்திரன் தன்மையான தனது கிரணங்களை மேகமற்ற வானத்திலிருந்து பரப்புகிறான். அமிருத வர்ஷம் போன்ற நிலவிலே, ஜனங்களின் உத்ஸாகமும் உழைப்பும் அதிகமாக்க் காண்கிறது. நீர் நிலைகளின் அமைதியும் தெளிந்த நீரோட்டங்களும் ஹம்ஸங்களை அழையாமல் அழைக்கின்றன. கொடிகளிலெல்லாம் புதிய தளிர்கள்! விருக்ஷங்களிலெல்லாம் இளம் கொழுந்துகள். பச்சைக் கிளிகள் கூட்டம் கூட்டமாக வெளிக் கிளம்புகின்றன. அழகிய பெண்கள், முகத்தை நிமிர்த்திச் சந்திரனை பார்க்கும் போது, கவிஞன் கண்களுக்குக் கீழே பல சந்திரன்கள் உதயமாகி விட்டதாக ஒரு கற்பனை தோன்றுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உத்ஸாகமானதொரு பருவம். 



ஹேமந்த ருது: வயல்கள் தோறும் பொன்னை உருக்கி வார்த்துவிட்டது போல், கதிர்கள் விளைச்சல் சுமை தாங்காது தலைசாய்ந்து காட்சி தருகின்றன. உழைப்பின் பலனைச் சேகரிக்கும் ஆனந்தம் தாண்டவமாடுகிறது. குளிர்ந்த இரவுகளுக்கு முன்னோட்டமாகப் பனித் திரை அந்தி சூரியனது கிரணங்களின் தேய்வைத் துரிதப்படுத்துகிறது. மனித இருதயத்தில் தெய்வ பக்திக்குப் பிராதான்யம் கிடைக்கிற பருவம் இது. விளைபொருள்களைக் கொடுத்து நோய் நொடியினின்று ரக்ஷிக்கும் ஈசனுக்குத் தங்கள் பக்தி பூர்வமான நன்றியைச் செலுத்த முன் வருகிறார்கள். பஜனையும் பண்டிகையும் முக்கியத்துவம் அடைகின்றன. உள்ளப் பூரிப்புடன் தான தர்ம சிந்தனைகள் விசேஷமாக இடம் பெறுகின்றன.



சிசிர ருது: பகலில் பனி நீங்க நீங்க, சூர்யனுடைய தேஜஸ் விருத்தியடைகிறது. மரங்களும் செடிகளும் இலை நீங்கிய தோற்றம் பூணுகின்றன. வெப்பத்தில் சிக்கும் மனித உள்ளமும் வறண்டு காண்கிறது. விரக்தியான சிந்தனைகள் வந்தடைகின்றன. வியர்வை நிறைந்த இரவுகள்; உற்சாகம் மங்கிவிட்ட பகல்கள். இலையிழந்த மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதின் சப்தமும் முற்றின கரும்புச் சோலைகளின் தோற்றமும் சாதாரணமான காட்சிகளாகின்றன. எங்குமே வெறித்த வயல்கள், உடைந்த வரப்புகள். சிசிரம் முடிந்ததும் வஸந்தம் வருமென்பதை அறிவிக்க வெளிப்படும் வண்டுகள் மட்டும் ஆங்காங்கே வட்டமிடுகின்றன. அப்போதே மலரும் புதிய பூக்களின் மகரந்தத்தில் அவை சற்றே லயிக்கின்றன.

காலத்தின் மாற்றத்தினை உணர்த்தும் விதமாக திரு கோபுலு அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தீர்களா? அந்த காலங்களை நம் கண் முன்னே கொண்டு வந்துவிட்டதல்லவா அவரது ஓவியம். பார்த்ததும் பிடித்துப் போன இந்த ஓவியங்களை இன்று பொக்கிஷப் பகிர்வாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் மகிழ்ச்சி தானே!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்
வெங்கட்.

நன்றி: ஆனந்த விகடன்........





66 கருத்துகள்:

  1. மீ தி firstu ..படிச்சிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”யாரங்கே! முதலில் வந்த கலைக்கு ஒரு கோப்பை பரிசு கொடுங்கள்!” இது அரச கட்டளை!

      நீக்கு
    2. கோப்பையை நிறைத்து விட வேண்டியது தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  2. படங்கள் ரொம்ப சூப்பர் ...கலரிங் அவ்ளோ அழகா கொடுத்து இருக்காரு ...

    டிரெஸ்ஸிங் அப்போ இருந்தவங்க தாவணி போல போட்டு இருப்பதை பார்க்க முடிகிறது ..அரசர் ராணிக்கள் கால படங்களிலுமே தாவணி போன்ற உடை தான் பார்க்கிறேன்


    சேலை அணிவது எப்போது வந்தது நு தெரியல ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை......

      சேலை அணிவது எப்போது வந்தது தெரியல.... நல்ல டவுட்.... தேடிப் பார்த்துடலாம்!

      நீக்கு
  3. ருதுன்னா நான் என்னவோ நினைச்சுட்டு இருந்தேன். ஹி... ஹி... ஹி... கோபுலுவின் தூரிகை கறுப்பு வெள்ளையில கவிதை பாடிப் பாத்திருக்கேன். கலர்லயும் ஜாலம் பண்ணும்ங்கறது இப்பத்தான் தெரியுது. அருமையான பொக்கிஷம். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க நினைச்சுட்டு இருந்த அர்த்தமும் இருக்கு.... இங்கே சொல்வது வேற ருது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  4. வெங்கட்.., இளவரசி கலைக்கு கோபபையில காப்பி குடுத்தாலே குஷியாயிடும். பரிசா கோப்பையவே தர்றேங்கறீங்களே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோப்பையாவே கொடுத்திட்டா, காப்பி அவங்களாகவே வேணும்போது குடிச்சுப்பாங்க இல்லையா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  5. //தென்றலும் வெப்பமாய்க் காண, நித்திரையும் கனவாய் முடிய, மனித வர்க்கம் வஸந்த ஸ்பர்சத்தில் தன்னை மறந்து உன்மத்தம் அடைகிறது. //

    என்னத்தை வசந்த ருது! போங்க, வெயில் இப்போவே தகிக்கிறதைப் பார்த்தால் க்ரீஷ்ம ருது மாதிரித் தான் இருக்கு. எப்போவுமே வர்ஷ ருதுவாகவும், சரத் ருதுவாகவும் இருந்தால் நல்லா இருக்கும். போனால் போகுதுனு ஹேமந்த ருதுவுக்கும் ஓட்டு! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் இப்பவே திருவரங்கத்தில் தகிப்பது உங்கள் பதிலிலேயே புரிகிறது! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. அதோட மின்வெட்டு வேறே கடுமையா இருக்கு. மின்சாரம் இருந்தால் நெட் சொதப்பல்! கொண்டாட்டம் தான் போங்க! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொண்டாட்டம்.... :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  7. படமும் பதிவும் மிகமிக நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  8. அருமையான விளக்கங்களுடன் அழகிய தூரிகையால் திரு கோபுலுவின் கைகளில் இருந்து வந்த அற்புதமான் ஓவியங்களுடன்!
    இங்கு சிசிர ருது ஆரம்பித்து, வர்ஷ் ருது வராதா?!! எப்போது வரும்?!! என்ற ஏக்கத்துடன் காத்டிருக்கிறோம்!

    சரி இந்த எல்லா ருதுக்களும் இருக்கின்றதா என்ன?

    (கீதா சாம்பசிவம் கூறியுள்ளது போல இதோ இப்போது உங்களுக்கு முதலில் பின்னூட்டம் இட்டு அதை பதிவேற்றம் செய்யும் போது நெட் தகராறு! பின்னர் திரும்பவும்...இப்படியே 15 நிமிடம் போன பின் இதோ இப்போதுதான் ...இது போகும் என்ற நம்பிக்கையில் க்ளிக் ...ஆஹா இப்போதும் தகராறுதான்......இதோ இந்த நெட் தகராறுக்கு ஏதாவது ருது இருக்கிறதா? .)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  9. ஹப்பா ஒருவழியாக சென்றுவிட்டது! மூச்சு வாங்குகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))))) மின்சாரம், நெட் தொல்லை என பல விஷயங்கள் நம்மை படிக்க விடாமல் தடுக்கிறதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  10. தில்லானா மோகனாம்பாள், விகடனில் தொடர்கதையாக வந்தபோது அதை சேர்த்து ரெண்டு வால்யூமாக பைண்ட் செய்து வைத்திருந்தேன். ஒவ்வொரு வாரமும் கோபுலுவின் படங்களை பார்த்துத்தான் ஏ.பி.நாகராஜன் சினிமாவுக்காக நடிக/நடிகையரை தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று எண்ணும் அளவு சித்திரத்திலேயே பாத்திரத்தின் குணம் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகாதேவன் ஐயா...

      நீக்கு
  11. பழைய ஆனந்த விகடனைத் தேடிப் பிடித்து - தகவல்களைப் பதிவிட்ட தங்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  12. ஒவ்வொன்றுக்கும் அருமையான விளக்கங்கள்... ஓவியங்கள் வெகு அருமை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. கீதா சாம்பசிவம் அம்மாவின் கருத்துரை எப்போதும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மின்சாரம் போய் விட்டதே... நல்லாயிருக்கும்ன்னு சொல்ல வந்தேன்... ஹிஹி...

    இந்த கருத்துரை வந்ததா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. தேடினும் கிடைக்காத அற்புதமான ஓவியங்கள்
    மிகச் சிறப்பான விளக்கத்துடன் பதிவாக்கி அனைவரும்
    ரசிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி....

      நீக்கு
  15. ஆறுவகையான ருதுக்களை கண் முன்னே அழகுற நிறுத்திவிட்டார் கோபுலு! தேடி பிடித்து பகிர்ந்தமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  16. கோபுலுவின் ஓவிங்கள் அழகோ அழகு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. கோபுலுவின் ரசிக்கவைக்கும் ஓவியங்களும்
    அதற்கான வர்ணனைகளும் அருமை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  19. என்ன அழகான ஓவியங்கள்... அருமை. நல்லதொரு, ரசிக்கத்தக்க பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  20. அற்புதமான ஓவியங்களை பதிவாக்கி விளக்கம் அளித்தமைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி...

      நீக்கு
  21. பொக்கிஷப் பகிர்வு மிக அருமை.
    காலமாற்றங்களுக்கு ஏற்ற ஓவியங்கள் மிக அழகு.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  22. காணக் கிடைக்காத அற்புத ஓவியங்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  23. அன்பு வெங்கட், கோபுலு என்றைக்கும் ஃபேவரைட். அவர் கோடு கிழித்தாலே காவியம். அதில் ரத்தினங்களைப் பொறுக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். மிக அருமை. ஒவ்வொரு படத்தையும் உற்று உற்று பார்க்கிறேன். ஒவ்வொரு கோணத்திலும் பர்ஃபெக்ஷன். மனம் நிறைந்தது.நன்றி வெங்கட்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  24. காணக் கிடைக்காத அற்புத ஓவியங்கள்.எங்கிருந்து தான் உங்களுக்கு கிடைக்கிறதோ !
    படங்களுடன் விளக்கங்களும் மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      முன்னர் ஒரு பொக்கிஷப் பகிர்வில் சொல்லி இருந்தேன்! :)

      நீக்கு
  25. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா...

      நீக்கு
  26. படங்கள் வரைந்ததுமல்லாமல் விளக்கங்களும் கோபுலுவுடையதா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி....

      நீக்கு
  28. Kreeshma Rudhu padaththai paarththudhan naan FB il oru padam netru varaindhen. Thanks.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. fb-ல் update வந்த மாதிரி தெரியலை சித்தி..... திரும்பவும் பார்க்கிறேன்.

      நீக்கு
  29. கோபுலுவின் ஓவியங்கள் வெகு அற்புதம் அனைத்திலும் ஒரு கலை நயம்

    பதிலளிநீக்கு
  30. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  31. பதில்கள்
    1. ஆஹா... இன்னிக்கு வேலை இல்லையோ....

      பார்த்து, ரசித்து, கருத்தும் சொன்னதற்கு நன்றி ஸ்ரீபதி அண்ணே!

      நீக்கு
  32. இந்த மாதிரி ஒரு அருமையான பதிவை, கண்ணுக்கு விருந்தளிக்கக்கூடிய ஒரு பதிவை பகிர்ந்துக்கொண்டாதற்காக உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! :)

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....