இந்த வார செய்தி:
முப்பது
வருடங்களுக்கு முன் மும்பையின் பிரசித்த பெற்ற டாடா புற்றுநோய் மருத்துவமனைக்கு
எதிரே ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். மருத்துவமனையின் படிக்கட்டுகளில் மரணத்தின்
வாயிலில் நின்று கொண்டிருக்கும் பல புற்றுநோயாளிகளும் அவர்களுக்கு துணையாக
வந்திருக்கும் உறவினர்களையும் பார்க்கும் போதே அந்த இளைஞருக்கு மனதில் பயங்கர வலி.
”என்ன வாழ்க்கையடா இது...., இங்கிருக்கும் பல நோயாளிகள்
கிராமத்து மக்கள், நோய்க்கு தீர்வு கிடைக்குமா? எந்த மருத்துவரைப் பார்ப்பது,
மருந்து என்ன என்ற ஒரு விவரமும் தெரியாதவர்கள். சாப்பிடவோ, மருந்துக்கோ, செலவு
செய்ய முடியாதவர்கள்.
பார்த்துக்
கொண்டிருந்த இளைஞர், “இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுடன்
வீட்டிற்குத் திரும்பினார். என்ன செய்யலாம் என்ற யோசனை அவரை தூங்கவிடவில்லை.
கடைசியில் ஒரு நல்ல முடிவுக்கு வந்தார். தனக்கு இருந்த உணவகத்தினை வாடகைக்கு
விட்டு அதில் கிடைத்த பணத்தினைக் கொண்டு டாடா மருத்துவமனைக்கு எதிரே இருந்த ஒரு இடத்தில்
தர்மஸ்தாபனம் ஒன்றை துவக்கினார்.
அந்த
ஸ்தாபனம் மூலம் இன்றளவும் டாடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா வரும் ஏழை புற்றுநோயாளிகளுக்கும்
அவர்களது உறவினர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது. ”ஜீவன் ஜோத்” எனும் அந்த ஸ்தாபனம் இன்றளவும் இயங்கிக்
கொண்டிருக்கிறது. அந்த இளைஞருக்கு தற்போது
60 வயது! இன்றைக்கும் அதே புத்துணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் தனது சேவையைத்
தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இலவச
உணவு மட்டுமல்லாது, ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள், நோயாளிகளின்
குழந்தைகளுக்கு உதவி என பலவிதமான திட்டங்களை இந்த நிறுவனம் செய்து
கொண்டிருக்கிறது. அவர் ஆரம்பித்து வைத்த இத் தொண்டில் பலரும் சேர்ந்து கொள்ள,
தொடர்ந்து சேவை நடக்கிறது. இந்த நல்ல மனம்
கொண்டவருக்கு இந்த வாரப் பூங்கொத்து!
-
ஹிந்தியில்
எனக்கு வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
ஒரு ஊருக்கு அறிஞர் ஒருவர் வருகை புரிந்தார்.
கடவுளைப் பற்றி நிரம்ப அறிந்திருந்தவராக அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது நாத்திகவாதி ஒருவர் அவரிடம், “நீங்கள் என்
மூன்று கேள்விகளுக்கும் மட்டும் சரியான விடையளித்துவிட்டால், நீங்கள்
சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி கேள்விகளைக்
கேட்டார்.
1)
கடவுள் இருக்கிறாரா? இருந்தால் காட்டுங்கள்.
2)
சாத்தானை நெருப்பில் இருந்து படைத்ததாக கூறுகிறீர்கள்,
ஆனால் நெருப்பிலேயே எரிக்கப்படுவான் என்கிறீர்கள். இது எப்படி சாத்தியம்?
3)
விதி என்று ஒன்று உண்டா?
இதைக் கேட்ட அறிஞர் அந்த நாத்திகவாதியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.
உடனே அவர், உங்களிடம் எனது கேள்விகளுக்கு பதிலில்லை. அதனால் கோபத்தில் என்னை
அடித்து விட்டீர்கள் என்று சொல்ல, அந்த அறிஞரோ, உங்கள் மூன்று கேள்விகளுக்கும் என்
பதிலைத் தான் கூறினேன் என்றார்.
எப்படி?
கன்னத்தில் அடித்தது வலித்ததா? ஆம்
என்றால் அந்த வலியைக் காண்பியுங்கள். வலியை உணரத்தான் முடியும். காண்பிக்க
முடியாது. கடவுளும் அப்படித்தான். சதையால் ஆன கையால், சதையாலான கன்னத்தில் அடித்தாலும் வலிக்கிறது அல்லவா?
சாத்தானின் முடிவும் அப்படித்தான்.
இன்று உங்களை நான் அடிப்பேன் என்று முன்னமே தெரியுமா? இல்லை... அது தான் விதி என்று முடித்தார் அறிஞர்.
இந்த வார புகைப்படம்:
டாக்டர் ”உள்ளங்கால் புல்தரையில்
பட நடக்கணும்”னு சொன்னாராம்! அதனால இப்படி ஒரு
ஏற்பாடு!
படம் – இணையத்திலிருந்து!
இந்த
வார காணொளி:
செம பல்பு....
இப்படியா பல்பு வாங்குவாங்க!
بتطلع معك...بتطلع معك
Posted by Shasha.ps | شاشة نيوز on Tuesday, January 28, 2014
மெட்ரொ மேனியா:
தில்லி மெட்ரோவில் பயணிக்கும் வேளைகளில் கண்களையும்
காதுகளையும் திறந்து வைத்திருந்தால் பல விதமான விஷயங்கள் பார்க்க/கேட்க முடியும்!
சென்ற ஞாயிறன்று மெட்ரோவில் பயணிக்கும் போது பார்த்த/கேட்ட ஒரு விஷயம்....
இரண்டு மாணவர்கள், இரண்டு மாணவிகள் – இந்த வருடம் தான்
கல்லூரியில் அடி எடுத்து வைக்கிறார்கள்.
மாணவிகளும் மாணவர்களும் பேசிய பேச்சு – நிச்சயம் அவர்களது பெற்றோர்களால்
கேட்க முடியாத அளவிற்கு இருந்தது! நடை, உடை, பாவனை என அனைத்துமே பயங்கரம்! அவர்களுக்குள்
நடந்த சம்பாஷணையின் ஒரு சாம்பிள்:
மாணவன்:”நாளைக்கு என்ன
ட்ரெஸ் போட்டுட்டு வருவே?”
மாணவி: கீழே ஷார்ட்ஸ் மேலுக்கு
பனியன்.
மாணவன்: “அய்யகோ... அந்த ட்ரெஸ்ல மகா
கேவலமா இருப்ப!”
மாணவி: இப்ப
இப்படித் தான் சொல்லுவே... நாளைக்கு ஜொள்ளு விட்டபடி பார்க்கும்போது உன் மூஞ்சில
ஒரு குத்து விடறேன் இரு!”
இது மட்டும் தான் கொஞ்சமாவது பகிரும் அளவு இருந்தது. மற்றவை இன்னும் மோசம்.
பெட்டியில் இருந்த மற்ற பெண்களே முகத்தினைச் சுளிக்கும்படி தான் இருந்தது அவர்கள்
பேச்சு.
இதில் பெரிய வருத்தமே, என்னையும் சேர்த்து யாராலும் அவர்களிடம் ஒன்றும் கேட்க
முடியாதது தான். பேச்சு சுதந்திரம்!
கேட்டால் அங்கே சண்டை தான். கேட்டவர்களை குறை சொல்ல நிறைய பேர் உண்டு!
படித்ததில் பிடித்தது:
பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் தனது
பெற்றோர்களுடன் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். வாகனத்தினை ஓட்டியது அவனது தந்தை. தனது
வாகனத்தை மிகவும் நேசிப்பதால், மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் செலுதினார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களது வாகனத்தினை
ஒரு புத்தம் புதிய வாகனம் முந்திச் சென்றது.
“அப்பா, நம் வாகனத்தினை அந்த வாகனம் முந்திச்
செல்கிறது. நீங்களும் வேகமாக ஓட்டி, அந்த வாகனத்தை முந்திச் செல்லுங்கள்” என்று சொல்ல, தந்தை சொன்னார், மகனே “நம் வாகனம் அந்த வாகனத்தினை முந்திச்
செல்வது கடினம்.”
மகனும்
ஒன்றும் சொல்லாமல் இருந்தான். மீண்டும் வேறொரு வாகனம் இவர்களை முந்திச்செல்ல, மகன்
பொறுமை இழந்து அப்பா வேகமா ஓட்டுங்கப்பா....
ஒவ்வொருத்தரா நம்மை விட வேகமா போறாங்க!” என்று சொல்ல, தந்தை கோபத்துடன் சொன்னார் – “நமக்கு முன்னால் வேகமாக போகும்
வாகனங்களை மட்டும் பார்க்கறியே, நமக்கு பின்னாடி கூட தான் நிறைய வண்டி வருது!
இன்னும் வேகமா ஓட்டினா, நம்ம வண்டி கெட்டுப் போயிடும்”.
இது
கேட்டவுடன் மகன் சொன்னான், “அப்பா, நீங்க கூட தான் என் வகுப்பில் என்னை விட அதிக
மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களைப் போலவே என்னையும் மதிப்பெண் எடுக்க
கட்டாயப்படுத்தறீங்க, என்னை விட குறைவாக மதிப்பெண் எடுப்பவர்களோட என்னை ஒப்பீடு
செய்யலையே... என்னை விட புத்திசாலிகளுடன்
ஒப்பீடு செய்து அவங்களைப் போல நானும் மதிப்பெண் எடுக்கணும் சொல்றீங்களே!” அது மட்டும் சரியா?
அப்பா.... : :(
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நிஜமாகவே உங்கள் பதிவு ப்ரூட் சாலட் தாங்க..பல் சுவையும் இருந்தது.
பதிலளிநீக்குGod Bless You
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெட்டிப்பேச்சு...
நீக்குஅனைத்தும் அருமை. நாத்திகர் ஆத்திகர் உதாரணம் முன்னரே கேள்விப்பட்டுள்ளேன். சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஜீவன் ஜோத்
பதிலளிநீக்குநிறுவனம்போற்றுதலுக்கு உரியது
போற்றுவோம்
நன்றி ஐயா
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதர்மஸ்தாபன இளைஞர் கடவுள்...
பதிலளிநீக்குபுல்தரை ஹா... ஹா...
மகன் சரியான வழிகாட்டி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குRasithen...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி...
நீக்குபல்சுவைப் பதிவாகத் திகழ்கின்றது.. அருமை!..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ
நீக்குமுதல் செய்தி அருமை! ஸ்ரீராமுக்கு பாசிட்டிவ் செய்திகளில் பகிர ஒரு செய்தி...
பதிலளிநீக்குஇற்றைக் கதை வேறு வடிவில் இதே செய்தியைச் சொல்லும் வகையில் படித்ததுண்டு..நல்ல விளக்கம்....உண்மையும் அதுதானே... கடவுள் பற்றி அப்துல்கலாம் அவரது வகுப்பில் பேராசிரியருடன் விவாதித்ததாக ஒருசெய்தி இணையத்தில் பல இடங்களில் வந்தது...நீங்களும், பார்த்திருப்பீர்கள்...
புல் செருப்பு மிக அழகு....
காணொளி ஹஹஹஹ ....எதிர்பார்த்ததுதான் முடிவு....என்றாலும் செம பல்பு!!!
டாப் !...படித்ததில் பிடித்தது...மிகவும் பிடித்தது....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குமெட்ரோ மேனியா...ம்ம்ம் நம் கல்வியின் தரம் எங்கே போய்கொண்டிருக்கின்றது என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கின்றது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஇந்த வார ப்ரூட் சாலட்டை ரசித்து சுவைத்தேன்.
பதிலளிநீக்குத.ம.8
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குஅனைத்தையும் ரசித்தேன். முதல் செய்தி பாஸிட்டிவ்.
பதிலளிநீக்குஉங்கள் தளத்திலும் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குகடவுளின் இருப்பை விளக்க இம்மாதிரிக் கதைகள் நிறையவே. ....! வேறு வழி..? காணொளி ரசிக்க வைத்தபல்ப்.
பதிலளிநீக்குவேறு வழி! :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
ஜீவன் தோத் நெகிழவைத்தது.
பதிலளிநீக்குபுல் தரை ரசிக்க வைத்தது. அனைத்து தகவல்களும் சிறப்புங்க.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குசமூக சேவை செய்பவருக்குப் பாராட்டுகள். நாத்திகர் கதை ஏற்கெனவே படிச்சேன். மற்றவை அருமை. :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
நீக்குசுவை சுவை சுவை.
பதிலளிநீக்குஆணுக்குப் பெண் இளைப்பில்லை.
குட்டிக் கதை அருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஅனைத்தும் சிறப்பு! முதலும் முடிவும் மிகவும் சிறப்பு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஅருமையான ப்ரூட் சலாட்!
ஜீவன் ஜோத் நிறுவனர் போற்றுதற்கு உரியவர்!
அத்தனையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு!
நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஇலவச உணவு வழங்கும் மனிதரை வாழ்த்துவோம்...
பதிலளிநீக்குகாணொளி முன்பே ரசித்ததுதான் என்றாலும் மீண்டும் ரசித்தேன்....
அப்பா - மகன் அருமை...
இந்தகால மாணவர்கள் அனைத்திலும் தேர்ச்சி... படிப்பைத் தவிர...
எல்லாம் அருமை அண்ணா....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஜீவன் ஜோத் நடத்துபவர் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஇன்றைய இளைங்கர்கள்.. :(
செருப்பு - ஆஹா இப்படி பாலோ பண்றாங்களே... :))
நாத்திகர் கதையும், தந்தை மகன் கதையும் ரசித்தேன்
ப்ரூட் சாலட் நல்ல சுவை சகோ.
த.ம.12
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
நீக்கு’ஜீவன் ஜோத்’ செய்யும் தொண்டு நெகிழ வைக்கிறது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குப்ரூட் ஸாலட் ரொம்பவே ருசித்தது. அன்புடன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....
நீக்குஜீவன் ஜோத் ஸ்தாபனம் செய்யும் தோண்டு மிக சிறந்த தொண்டு.
பதிலளிநீக்குகாணொளி அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....
நீக்கு