வியாழன், 11 ஜனவரி, 2018

கதம்பம் – புடவையின் கதை – கோலத்தட்டு – சொர்க்க வாசல்


ஸ்வீட் மெமரீஸ்: மார்க் தம்பியின் நினைவூட்டல்


இந்தப் புடவை அந்தப் புடவை அல்ல!

முகப்புத்தகத்தில் அவ்வப்போது ஒரு நினைவூட்டல் தருகிறது – இதே நாளில் போன வருடத்தில், 2 வருடத்திற்கு முன்பு என எதையாவது ஒரு பகிர்வை நினைவுபடுத்துகிறது.  அப்படி வந்த ஒரு இற்றை…. என்னவர் பரிசளித்த புடவையைப் பற்றி எழுதியது. பதினாறு வயது அந்த புடவைக்கு! இன்றும் பத்திரமாய் இருக்கு.  மூன்று வருடங்களுக்கு முன்பு ஜனவரி மாதத்தில் எழுதியது!

எனக்கும் ஒரு கதையுண்டு என்று
உடுத்தியதும் எனை இழுத்து
சொல்லாமல் சொல்கிறது
ராமனின் வண்ணங் கொண்ட
என் பிரியமான புடவை!

மணம் புரிந்த பின் என்னவர்
தந்த முதல் பரிசல்லவா! இது!
ஐந்தே நிமிடத்தில் தேர்வு
செய்து வாங்கிய
உலக சாதனை இதற்குண்டு!

பட்டினத்துப் பெயருக்கு மாறாமல்
குமரனாக இருந்த சமயம்
கொங்கு மாநகருக்கு மறுவீடு
சென்ற போது வாங்கியது இது!

ஒருவரையொருவர் புரிந்து
கொள்ளத் துவங்காத நாளில்
பொறுமை காப்பாரோ?
நேரமெடுத்தால் சினம் கொள்வாரோ?
என அறியாத நிலையில்

கையில் வைத்திருந்ததை
பார்த்து, பிடித்திருக்கிறதா?
என வினவ, உடனே
ம்ம்ம்… என்று வாங்கிக்
கொண்ட புடவை இது!!

கோலத்தட்டு!!



சுவாமி மேடையில் போட்டிருக்கும் இந்த கோலத்தட்டுகளை சமீபத்தில் தான் வாங்கினேன். ஒவ்வொன்றும் பத்து ரூபாய் மட்டுமே. முன்பெல்லாம் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் மட்டுமே கிடைத்தது. இப்போது ராஜகோபுரம் அருகே உள்ள கடைகளில் எப்போதுமே கிடைக்கிறது.

பெரிய தட்டுகளை முன்பு குடியிருந்த வீட்டில் வாரத்தில் மூன்று நாளாவது உபயோகித்தேன். இப்போதுள்ள வீட்டில் வாசல் பெரிது. ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடைவெளி உள்ளதால் பெரிதாகவே கோலம் போடலாம். இந்த தட்டுகளை உபயோகிப்பதே இல்லை.
சுவாமி மேடையில் போட மட்டுமே இப்போதெல்லாம் வாங்குகிறேன்.

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல்



வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு ஒரு நாள் [4 ஜனவரி] மாலை சொர்க்க வாசல் படி மிதித்து பெருமாளை பார்க்கலாம் என்ற நப்பாசையில் குடியிருப்புத் தோழி ஒருவருடன் சென்றேன். ராப்பத்தே முடியப் போகிறது. இந்த வருடம் இன்னும் பெருமாளையும் பார்க்கலை. உள்ளூர் என்று சொல்கிறோமே தவிர, வருடத்தில் இரண்டோ அல்லது மூன்று தடவையோ பார்த்தால் பெரிது.

இன்றைய கதைக்கு வருகிறேன். உள்ளே சென்று பார்த்தால் எங்கும் கும்பல். நின்றால் இரவு தான் உள்ளே செல்ல முடியும். ராமானுஜர் சந்நிதிக்கு சென்று தரிசித்து விட்டு, வெள்ளை கோபுரத்தின் வழியே வெளியே சென்று கடைத்தெருவை பார்த்து விட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் பெருமாளை பார்க்க நினைத்தால் அங்கும் முழிபிதுங்கும் கும்பல். தாயாரை பிரதட்சணம் செய்து விட்டு திரும்பினோம்.

வெளியே வரும் போது ஒரு வயதான பெண்மணி கைகளை நீட்டி படிகளில் ஏறி வர உதவி கேட்டார். அவரின் கரம் பற்றி வெளியே வரும் வரை அழைத்து வந்தேன்.

மார்கழி கோலங்கள்:

மார்கழி மாதத்தில் போட்ட சில கோலங்கள் சென்ற கதம்பத்தில் வெளியிட்டு இருந்தேன். அதற்குப் பிறகு போட்ட சில கோலங்கள் இன்றைக்கு….





ஃபோட்டோ கார்னர்:

சமீபத்தில் பார்த்த ஒரு பூச்சி…  இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை விதங்கள்!



வெங்கி’ஸ் கார்னர் – வாட்ஸ் அப்

ஏற்கனவே படித்திருக்கலாம் – இருந்தாலும் இன்னுமொரு முறை படிப்பதில் தவறில்லை!

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன !! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது
😣😣😣😣😣😣😣😣

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது
😌😌😌😌😌😌😌

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦

அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச்சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது  , எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று !!!!

அதற்கு அந்த மரம் கூறிய பதில் :  எனக்குத் தெரியும் நான் வலுவிழந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன் , தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று ,  நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢

கருத்து:   உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்


26 கருத்துகள்:

  1. அழகிய கோலங்களும் இனிய கவிதையுமாக பதிவு கோலாகலம்..

    குருவி கதை நல்ல நீதி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. புடவையின் கதை ஆஹா!!!

    வெங்கட்ஜி அதுக்கப்புறம் ஆதி நிதானமா பார்த்து வாங்கிட கிஃப்ட் பண்ணினீங்களா!! ஹா ஹா ஹாஹா

    கோலங்கள் அழகா இருக்கு...

    வாட்சப்பில் வந்த கதை ஆமாம் மீண்டும் வாசித்தாலும் அழகான கதை...நல்லதொரு படிப்பினை..
    கதம்பம் அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதானம் என்பது அதுவும் ஷாப்பிங் செயவதில் எனக்கு கிடையவே கிடையாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. கவிதை, கோலங்கள், கதை மூன்றும் அருமை.

    //உள்ளூர் என்று சொல்கிறோமே தவிர, வருடத்தில் இரண்டோ அல்லது மூன்று தடவையோ பார்த்தால் பெரிது.//

    என் மனைவியும் இதையேதான் சொல்வார். அவர்கள் அந்த ஊர்தான். அனால் இதுவரை ஒருசில முறைதான் பெருமாளை தரிசிக்க முடிந்ததாக கூறுவார்.

    பொதுவாகவே எந்த கோவில் தெய்வமாக இருந்தாலும் அவர் எப்போது நம்மை காண விரும்புகிறாரோ அப்போதுதான் நமக்கு அவரை தரிசிக்கும் பாக்கியத்தை தருவர் என்று சொல்வார்கள்.

    நாங்கள் 2 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் வந்தபோது பெருமாளை தரிசிக்க வரிசையில் நின்றும், கூட்டம் மற்றும் வெக்கையால் குழந்தை அழ ஆரம்பித்ததால், வரிசையிலிருந்து வெளியேறிவிட்டோம். அன்று எங்களைப் பார்க்க ரங்கநாதர் விரும்பவில்லை போலும். விரைவில் அருள்புரிவார் என்ற நம்பிக்கையில்காத்திருக்கிறோம் .

    என் வலைதளம் www.onlinethinnai.blogspot.com -ற்கு வருகை தரவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது பார்க்க முடியும் என்பது அவர் கையில் - இப்படித்தான் பல கோவில்களுக்குச் சொல்வார்கள் - வைஷ்ணவ் தேவி கோவில் மாதாவிற்கும் இப்படிச் சொல்வதுண்டு.

      உங்கள் தளத்தினை தொடர்கிறேன். இனிமேல் தொடர்ந்து வருவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு
  4. வயதான பெண்மணி கைகளை நீட்டி படிகளில் ஏறி வர உதவி கேட்டார். அவரின் கரம் பற்றி வெளியே வரும் வரை அழைத்து வந்தேன்.
    ////////////////
    அரங்கன் தரிசனம் கண்டீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. கதம்பம் நன்றாக இருக்கிறது. கோலங்கள் மிக அழகாக இருக்கின்றன. குருவி கதை அருமையான கதை. நல்லதொரு பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. பெண்களின் ரசனையே புரிவதில்லை ஆனால் வெங்கட்கொடுத்து வைத்தவர் தான் வாங்கிய புடவையை மனைவி பிடித்தது என்றது மட்டுமல்லாமல் அதை நினைவும்கொள்கிறாரெ வாழ்த்துகள் நலமுடன் வாழ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  7. ஐந்தே நிமிடத்தில் செலக்ட் பண்ணிய புடவையா ? ...
    முந்திய பாக்க ஒரு நிமிடம்
    பார்டர் பார்க்க ஒரு நிமிடம் ...
    பார்டர்+முந்தி ஒத்துப் போகுமா பார்க்க ஒரு நிமிடம்
    விலையைப் பார்க்க ஒரு நிமிடம் ,
    யோசிக்க ஒரு நிமிடம் ......
    ஓகே கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சரியாத்தான் வருது.
    கோலங்கள் அழகு ..
    கதை புதிய கோணத்திலான சிந்தனை ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புடவை பார்க்க நேரக் கணக்கு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  8. எல்லாவற்றையும் ரசித்தேன்.

    ஆண்களுக்கு மனதில் தன் மனைவி இருப்பதால், புடவையைத் தேர்ந்தெடுக்க நேரமாவதில்லை (உண்மையிலேயே சொல்றேன்). பெண்களுக்கு எப்போதும் திருப்தி என்பது இல்லாததுனால, அவங்களுக்கு ரொம்ப நேரமெடுக்கும். நான் இதுவரை புடவை தேர்ந்தெடுக்க 5-10 நிமிடத்துமேல் எப்போதும் ஆனதில்லை. என் ஹஸ்பண்டுக்கும் என் தேர்ந்தெடுப்பில் எப்போதும் நம்பிக்கை இருப்பதால், அவள் இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டாள். எனக்குப் பிடிக்காத வகைகளை (தற்போதைய டிரெண்ட் போன்றவை), அவளையே, பெண்ணின் துணையுடன் வாங்கிக்கொள்ளச் சொல்லிவிடுவேன்.

    ராமானுசனைப் பார்த்தாலே போதாதா? அரங்கனிடம் அவரே அழைத்துச்செல்வாரே.

    குருவி கதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. //உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!///


    மிக சரியான வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு


  10. இந்து நிமிடத்தில் புடவை வாங்கி கொடுத்தவருக்கு கவிதை எழுதிய நீங்கள் இபோது எல்லாம் ஐந்து மணிநேரம் நின்று புடவை எடுத்து தரும் வெங்க்ட்ஜிக்கு காவியம் அல்லவா பாடி இருக்க வேண்டும் எங்கே அந்த காவியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவியம் பாடி இருக்க வேண்டும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. என்ன நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் குருவிக் கதையை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தோன்றுவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜு அருணாச்சலம் ஐயா.

      நீக்கு
  13. குருவிக்கதை எனக்கும் வாட்சப்பில் வந்தது! மற்றவை முகநூலிலும் பார்த்தேன், ரசித்தேன், இங்கேயும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....