ஸ்வீட் எடு கொண்டாடு – பாலடை பிரதமன்:
கேரள ஸ்பெஷலான இந்த இனிப்பை புத்தாண்டுக்காகச்
செய்தேன். சுடச்சுட எடுத்துக்கோங்க. கோதுமையில் செய்த பாலடைகள், சர்க்கரை, முந்திரி,
திராட்சை கலந்து ரெடிமேடாகக் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பாலில் கலந்து அடுப்பை நிதானமான
தீயில் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து நெய் சிறிதளவு சேர்த்து இறக்கவும். இரண்டு பேருக்கு
என்பதால் பாதி தான் செய்தேன்.
ஆருத்ரா தரிசனம்
ஓம் நமச்சிவாய!!
மார்கழியில் வரும் திருவாதிரை சிறப்பு
வாய்ந்தது. சிவனுக்கு விசேஷமான நாள். களியும், ஏழு காய்களைப் போட்டு கூட்டும் செய்து
நைவேத்தியம் செய்தேன். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்.
இன்று முதல் விடுமுறைக்குப் பின் பள்ளிகளும்
திறப்பு. நேரமின்மையால் கோலம் சுமார் தான். வண்ணம் கொடுத்தப் பின் அவுட்லைன் கூட
கொடுக்கலை. இன்றைய கோலம் கீழே!
போட்டிக்கு புகைப்படம் – புத்தாண்டு கோலங்கள்
புத்தாண்டின் முதல் நாள் மாலை
நேரத்தில் திருவரங்கத்தில் வீதி உலா வந்த போது பார்த்த சில கோலங்கள்….
மார்கழி கோலங்கள்:
மார்கழி மாதத்தில் போட்ட சில
கோலங்கள் சென்ற கதம்பத்தில் வெளியிட்டு இருந்தேன். அதற்குப் பிறகு போட்ட சில
கோலங்கள் இன்றைக்கு….
ரோஷ்ணி’ஸ் கார்னர்:
ரோட்டரி க்ளப்
நடத்திய மாநில அளவிலான ஒரு போட்டிக்கு, பள்ளி சார்பாக பெயர் கொடுத்து, ஓவியம்
வரைந்ததில் பள்ளியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். பள்ளி அளவில் மகள் வரைந்த
ஓவியத்திற்காக ஒரு மெடல், சான்றிதழ் மற்றும் ஒரு Lunch Bag
பரிசாகப் பெற்றிருக்கிறாள். அடுத்த Level போட்டிக்கு செல்ல முடியாத சூழல்.
வெங்கி’ஸ் கார்னர் – நடு சாலையில் தோப்புக்கரணம்:
புத்தாண்டின் முதல் நாளுக்கு முந்தைய இரவு – சுமார் ஒன்பது
மணி இருக்கும். சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு முக்கில் காவல்
துறையினரின் ரோந்து வாகனம் நின்று கொண்டிருந்தது. உயர் அதிகாரி உள்ளே நின்றிருக்க,
இரு காவலர்கள் வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். எதிரே ஒரு இளைஞன் – 18 வயதுக்குள்
இருக்கலாம். தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தான். என்ன தவறு செய்தான் என்பது
தெரியவில்லை! நாங்கள் அவனைக் கவனிப்பது கண்டு அவனுக்கு வெட்கமா இல்லை என்ன
நினைத்தான் எனத் தெரியவில்லை. கால் வலிக்குது என்று சொல்ல, ஒழுங்கு மரியாதையா தோப்புக்கரணம்
போடு, இல்லைன்னா நடக்கறதே வேற என மிரட்டிக் கொண்டிருந்தார் காவல்துறை ஊழியர். சில
சமயங்களில் இளைஞர்களுக்கு இப்படி தண்டனை தருவதும் நல்லது தான்.
முகப்புத்தக நட்பு:
நம்ம மார்க் தம்பி,
அவ்வப்போது, முகப்புத்தக நட்புகள் பற்றி நமக்கு நினைவூட்டுவது நல்ல விஷயம்!
இன்னிக்கு தான் நீங்க Facebook-la Friend ஆனீங்கன்னு
Friendversary காணொளி பதிவு செய்யறாங்க! இந்த வாரம் அப்படி ஒரு Friendversary –
மதுரைத் தமிழனும் நானும் முகப்புத்தகத்தின் மூலம் Friend ஆகி மூன்று வருடம்
ஆகிவிட்டதாம்! முகப்புத்தகத்திற்கு நன்றி!
உங்கள் கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லலாமே!
மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
அழகழகான படங்களுடன் சுவையான பாலட பிரதமனும்..
பதிலளிநீக்குஆகா..
இந்தப் பாக்கெட் இங்கே குவைத்திலும் கிடைக்கின்றது..
அவ்வப்போது செய்வதுண்டு..
வாழ்க்ழ் நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குபாலடைப் பிரதமன் - ரெடி மிக்ஸில் பண்ணுவதைவிட, பாலடா மாத்திரம் வாங்கி, மீதியை நாம் செய்யும்போது இன்னும் சுவையாக இருக்கும்.
பதிலளிநீக்குதிருவாதிரைக் களி, கூட்டு - பார்க்க நன்றாக இருக்கு. பெண் இதனை விரும்பிச் சாப்பிடறாளா?
கோலங்கள் நல்லா இருக்கு. 'வரையும்' திறமையை அங்கிருந்தபடியே சரியான ஆசிரியரைப் பிடித்து, வளருங்கள். வெளியூருக்குச் சென்று போட்டியில் கலந்துகொள்ளணும் என்பது அவசியமில்லை, ஆனால் திறமையைத் தொடர்ந்து வளர்க்கணும் (இன்னும் சிறப்பா வரைய, வாட்டர் கலர், ஆயில் பெயின்டிங் போன்றவை ஆசிரியர் மூலம் இன்னும் நன்றாகச் சிறக்கும்)
இப்படி பாக்கெட் வாங்கி செய்வது கூட இங்கே சாத்தியமில்லை! கிடைப்பதில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
வாழ்த்துக்கள் ..ரோஷ்ணி...
பதிலளிநீக்குகோலங்களும்...சுவையான பதார்த்தங்களும் அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குரோஷினிக் குட்டிக்கு வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகளைக் குவித்திடவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் கோலங்களும், சரி வீதியில் உள்ள கோலங்களும் சரி அழகாக இருக்கின்றன.
பரவாயில்லையே அந்த பனிஷ்மென்ட்...இளைஞருக்கு போலீஸார் கொடுத்தது...
துளசி: அட! எங்கள் ஊர் பாயாசம். பாலடைப் பிரதமன். எங்கள் வீட்டில் நேரடியாகவே செய்வதுண்டு. ஓணத்திற்கும், விஷுவிற்கும். மிக்ஸ் வாங்கியது இல்லை.களி கூட்டு செய்வதில்லை வீட்டில். அதனால் அதன் ருசியும் தெரியாது..
கீதா: இந்த பாலடை மிக்ஸ் கிடைப்பது தெரியும் என்றாலும் இதுவரை வாங்கிச் செய்ததில்லை. வீட்டிலேயே செய்வதால். அரிசி அடை மற்றும் கோதுமை அல்லது மைதா அடை...தேங்காய்பால் 3 பால் எடுத்து வெல்லம் போட்டும் செய்யலாம் நன்றாக இருக்கும் ஆனால் மிக்ஸில் ஏற்கனவே சீனி இருப்பதால் வெல்லம் சேர்த்துச் செய்ய முடியாதுதான்...நா ஊறுது ஆதி. அது போல களியும் கூட்டும். நானும் செய்தேன்...கூட்டின் பெயர் நாங்கள் தாளகம் என்போம். அது வித்தியாசமான ரெசிப்பி இந்தப் பக்கம் செய்வது போல் அல்ல. எபியின் திங்க பதிவில் வரும்...
ஆஹா தாளகம் எப்படிச் செய்வது என எழுத இருக்கிறீர்களா... பார்க்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
சந்திப்பதும் சிந்திப்பதும் தளம் போகும் ரேட்டில் வெங்கட் நாக ராஜுக்கு ஒரு கார்னர்தான் கிடத்ததோ இப்போதெல்லாம்பதிவுகளில் ஏறத்தாழ நான் படிக்கும் அனைவரது தளங்களிலும் சமையல் குறிப்புகள் இடம் பிடிக்கின்றன
பதிலளிநீக்குசமையல் குறிப்புகள் வருவதும் ஒரு விதத்தில் நல்லது தானே... புதியதாய் தெரிந்து கொள்ள முடிகிறதே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
சமையல் குறிப்புக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் பல சமயங்களில் ஒவ்வொருத்தவரின் குறிப்பில் இருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் அதன் மூலம் நம் சமையல் மிகவும் ருசியாக வரும் சின்ன சின்ன விஷயங்களால்தான் உணவின் சுவை கூடும்
நீக்குஉண்மை தான். பெரும்பாலான பதிவுகளிலிருந்து ஏதோ ஒரு விஷயத்தினையாவது தெரிந்து கொள்ள முடிகிறது - அதுவும் நல்லதற்குத் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
ரோஷ்னிக்கு வாழ்த்த்க்கள். கோலங்கள் அனைத்தும் அருமை. ஸ்மைலீஸ் கோலம் போட்டவரின் கற்பனை திறனை பாராட்டவேண்டும். அதை படம் பிடித்து பதிவிட்டதற்கு உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.
நீக்குஎனக்கு பாலடை பிரதமன் பார்சல் பண்ணுங்க.
பதிலளிநீக்குதிருவாதிரை களி அண்ணனையும், என்னையும் விட்டு நீங்க மட்டும் சாப்பிட்டிருக்கீங்க...
மதுரை தமிழன் அண்ணாவை மூணுவருசம் சமாளிச்சதுக்கு உங்களுக்கு அவார்டே கொடுக்கலாம்.
நமக்கு எல்லாம் கொடுக்காம, அம்மாவும் பொண்ணும் மட்டும் சாப்பிட்டு இருக்காங்க! நமக்கு படம் காட்டிட்டாங்க!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
அப்ப அவங்களுக்கு போட்டியாக ஒரு நல்ல டில்லி சமையலாக செய்தது நீங்களும் அசத்திடுங்கள் நாம என்ன அந்தகாலத்து ஆட்களா கிச்சன் பக்கம் போகாமல் இருக்கிறதுக்கு
நீக்குஅப்படியே எனக்கும் ஒரு அவார்ட் கொத்துடுங்க இந்த ராஜிம்மாவை சமாளிக்கிறதுக்கு
நீக்கு//நாம என்ன அந்த காலத்து ஆட்களா கிச்சன் பக்கம் போகாமல் இருக்கிறதுக்கு!// அதானே... :) விரைவில் ஒரு பதிவு போட்டிடலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
சபாஷ் சரியான பதில்! யார் யாருக்கு என்ன அவார்ட் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிடுவோமா ஒரு Committee போட்டு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
தம. சொதப்புது. அப்பாலிக்கா வரேன்
பதிலளிநீக்குபரவாயில்லை. முடிந்த போது வாக்கிட்டால் போதும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
பாலடை பிரதமன் இங்கு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். கோலங்கள் அழகு. ரோஷ்ணிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குரோஷணிக்கு வாழ்த்துக்கள்
தம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குரோஷணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குHats off to Kumari roshni. She should get first position in the next competition.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேதுராமன் கிருஷ்ணன்.
நீக்கு