அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
THE SECRET TO LIVING WELL AND LONGER IS EAT HALF, WALK DOUBLE, LAUGH TRIPLE AND LOVE WITHOUT MEASURE.
தீபாவளி எண்ணங்கள் - 8 நவம்பர் 2023:
இரண்டு நாட்களாக fm-ல் கூட 80, 90களில் கொண்டாடிய தீபாவளி மெமரீஸ் பற்றி தான் சொல்லிக் கொண்டும், நேயர்களிடம் கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். எல்லோருமே அப்போது களைகட்டிய தீபாவளி ஜோரெல்லாம் இப்போது இல்லை! என்று ஏக்கமாக தான் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்!
உண்மை தான்! எப்போது புதுசு உடுத்திப்போம் என்ற ஆர்வம்! படபடப்புடன் பட்டாசை கொளுத்திப் போட்ட த்ரில்! அக்கம்பக்கத்தினரோடு இனிப்புகளை பரிமாறிக் கொண்ட மகிழ்ச்சி என்று எதுவும் இப்போது இல்லை! ஆனால் வருடந்தோறும் பண்டிகைகள் தவறாது வந்து கொண்டே தான் இருக்கிறது!
நாளைய தலைமுறைக்கு நாம் பின்பற்றிய கலாச்சாரங்களையும், வழக்கங்களையும் பின்பற்ற வழிகாட்ட வேண்டாமா?? என் அம்மா சுந்தரி பின்பற்றிய வழக்கங்களில் சுந்தரியின் மகளாக பாதியாவது நான் இத்தனை வருடங்களாக தவறாது பின்பற்றுகிறேன்!
நாளை எங்கள் மகளுக்கு அவளின் அம்மாவாக நான் ஒரு உதாரணமாக இருக்கணும் இல்லையா!! அவள் செய்கிறாளோ! இல்லையோ! அம்மா செய்வதை கண்ணால் பார்த்த நினைவாவது இருக்கட்டும்!
கடையில் ஆர்டர் கொடுத்து எளிதாக எல்லாமே வாங்கி விடலாம் தான்! உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறி வருகின்ற இந்நாளில் நம்மால் முடிந்ததை ஆரோக்கியமாக பிள்ளைகளுக்கு செய்து கொடுப்போமே!
நாம் ரசித்து உண்ட உணவுகள் எல்லாமே கடையில் வாங்கியது அல்ல! நம் அம்மாவின் வியர்வையில் உருவானது! அதை எதனோடும் ஒப்பிட முடியாது!
நாளை முதல் மூன்று நாட்களுக்கு தீபாவளி பட்சணங்கள் செய்யலாம் என்று யோசித்து அதற்கு தேவையான உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய் பொடி எல்லாவற்றையும் இன்றே செய்து கொள்ளப் போகிறேன். தயிர் ஏடுகளை பாட்டிலில் போட்டு குலுக்கி வெண்ணெயும் எடுத்துக் கொள்ளப் போகிறேன்!
தீபாவளி தயாரிப்புகள்:
தீபாவளி சீரிஸ்!
ஓமப்பொடி! மிக்சருக்காக செய்தது.
தீபாவளி சீரிஸ் - 2:
மாலை மிக்ஸருக்கான பூந்தி தேய்க்கும் வேலை..🙂
தீபாவளி சீரிஸ் - 3
கேரட் மைசூர்பாக்!
புது முயற்சி தான்! இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை மைசூர்பாக் செய்திருக்கிறேன். சட்டென்று ஒரு கரண்டி மாவு போட்டு கிளறி விடுவேன். கடலைமாவுடன் பால் பவுடர் சேர்த்தும் செய்திருக்கிறேன். இம்முறை வாரச்சந்தையில் வாங்கிய ஃப்ரெஷ்ஷான கேரட்டை பார்க்கவும் தோன்றியது..🙂
புது முயற்சி கைகூடுமா! கவுத்து விடுமா! என்று பார்க்கலாம்...🙂 மைசூர்பாக்காக வந்தாலும் அல்வாவாக இருந்தாலும் சாப்பிடப் போவது நாங்கள் தானே..🙂
தீபாவளி சீரிஸ் - 4
கறிவேப்பிலை தேன்குழல் & முள்ளு தேன்குழல்!
2011ஆம் ஆண்டில் வந்த தீபாவளியில் கூட டெல்லியில் இந்த தேன்குழலை செய்து என்னுடைய ப்ளாகில் பகிர்ந்திருந்தேன். டிவியில் வந்த சமையல் புரோகிராம் ஒன்றில் சமையல் நிபுணர் திருமதி ரேவதி சண்முகம் அவர்கள் இந்த ரெசிபியை பகிர்ந்து கொண்டிருந்தார் என நினைவு.
தீபாவளி சீரிஸ் - 5
Kalakand..!
என்னால பரிசோதனையெல்லாம் பண்ணாம இருக்கவே முடியாது..🙂 தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனைப் போல நேற்றைய இனிப்பு முயற்சியில் சற்றே தளர்ந்து போய்விட்டாலும் இன்றைய பரிசோதனைக்கு அதிகாலையிலேயே தயாராகி விட்டேன்..🙂
வடக்கில் உள்ள இனிப்பகங்களில் உள்ள இனிப்புகளில் பெரும்பாலானவை பாலால் செய்யப்பட்டது தான்! அங்கு கிடைக்கும் தரமான எருமைப்பாலால் தயாரிக்கப்பட்டவை! அவை ஒவ்வொன்றும் நிறத்திலும், ஃப்ளேவரிலும், பக்குவத்திலும் மாறுபட்டிருக்கும் அவ்வளவு தான்! அதிலொரு இனிப்பு தான் இந்த கலாகந்த்!
யூட்டியூப் உபயத்தில் சில வீடியோக்களை பார்த்து அதில் என்னுடைய டிப்ஸ்களையும் சேர்த்து செய்திருக்கிறேன்! ஒரு லிட்டர் பாலை சுண்டக்காய்ச்சி குறுக்கி கொண்டும், ஒரு லிட்டர் பாலை திரித்து பனீராக செய்தும், மணத்திற்காக ஏலக்காய், நிறமும், இனிப்பும் சேர்த்து கிளறி செய்துள்ளேன்.
நிஜமாகவே ஸ்வீட் ஸ்டாலில் வாங்கும் கலாகந்துக்கு இணையாக இருந்தது என்று சொல்லலாம்! பக்குவம் பெரிதாக இல்லை என்பதால் beginners கூட முயற்சி செய்யலாம்! ஆனால் பொறுமை தேவை..🙂
தீபாவளி சீரிஸ் - 6
மிக்ஸர்! சாக்லேட் பர்ஃபி! தீபாவளி மருந்து!
மிக்ஸர்!
ஓமப்பொடி மற்றும் பூந்தியுடன் கார்ன்ஃப்ளேக்ஸ், அவல், நிலக்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலையை வறுத்து போட்டு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், சாட் மசாலா சேர்த்து குலுக்கினால் மிக்ஸர் ரெடி!
சாக்லேட் பர்ஃபி!
சமையலில் இன்ட்ரெஸ்ட்டே இல்லாத மகளை இம்முறை ஒரு இனிப்பு செய்யச் சொல்லியிருந்தேன். அவள் செய்த சாக்லேட் பர்ஃபி!
தீபாவளி மருந்து!
தீபாவளி லேகியம் அல்லது மருந்து சொல்லப்படுகிற இதை பிள்ளைபெத்தாள் மருந்து என்றும் சொல்வார்கள். பிரசவம் ஆன பெண்களுக்கு தருவதால் அவர்களின் உடல்நலன் மேம்பட்டு குழந்தைக்கும் மருந்தாகவும் அமையும் என்று சொல்வார்கள்.
இம்முறை இந்த மருந்தில் நான் சேர்த்துள்ள பொருட்களாக மிளகு, சீரகம், தனியா, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், ஓமம், கசகசா, கிராம்பு, ஏலக்காய் , இஞ்சி மற்றும் உலர்ந்த திராட்சை! இவற்றை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து இவற்றுடன் வெல்லம், நெய், நல்லெண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கிளறியிருக்கேன்.
இதை சாப்பிடுவதால் அஜீரணம், பசியின்மை மட்டுமல்ல இருமல், சளிக்கும் ஏற்றது!
இத்துடன் தீபாவளி சீரிஸ் நிறைவு பெறுகிறது! இரவு எண்ணெய் காய்ச்சி வைத்துவிட்டால் ஆச்சு. தொடர்ந்து ரெசிபீஸை பார்த்து வந்தவர்களுக்கு என் நன்றிகள்.
மகளின் கைவண்ணமாக சிறப்பு ரங்கோலி கூட, தீபாவளி சிறப்புடன் முடிந்தது!
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பின் குறிப்பு: எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…
தீபாவளி பட்சணங்கள் கண்ணைக் கவர்கின்றன. கேரட் மைசூர்பாகு நன்றாக வந்திருந்தா? மிக்ஸர் சூப்பர். ஆம், நம் வீட்டு கலாச்சாரங்கள் தடைபடாமல் தொடரவேண்டும், நம் குழந்தைகளுக்கு இது மாதிரி சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்கள் பெரியவர்களான பிறகு தொடர வசதியாக அறிந்து கொள்வதற்காகவாவது இதையெல்லாம் தடை இல்லாமல் செய்ய வேண்டும்.
பதிலளிநீக்குகேரட் மைசூர்பாக் பர்ஃபி போல் கடினமாக இல்லாமல் சாஃப்ட்டாக மாறிவிட்டது சார். கேரட் சேர்த்திருப்பதால் பக்குவம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். முயற்சி தானே! மோசமில்லை! சுவையும் மணமும் ஜோர்.
நீக்குஆமாம்! நாம் செய்தால் தான் அவர்களுக்கும் தெரிய வரும்.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக நன்றி ஸ்ரீராம் சார்.
அந்தக் காலம் போல இல்லை இந்தக் கால பண்டிகைகள். பிரதான காரணம் ஐ டி துறை வேலைகளும், கன்னாபின்னா ஷிப்டுகளும், தூக்கமும்.
பதிலளிநீக்குஉண்மை தான். மாறிப் போன வாழ்க்கை முறையால் எல்லாமே மாறிவிட்டது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
/// உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறி வருகின்ற இந்நாளில்.. ///
பதிலளிநீக்கு/// அம்மாவின் வியர்வையில் உருவானது.. அவற்றை எதனோடும் ஒப்பிட முடியாது!.. ///
சிறப்பான வரிகளுடன் பதிவு அருமை..
வாழ்க நலம்..
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குஅனைத்து இனிப்பு கார வகைகளும் மனதைக் கவர்ந்தன.
பதிலளிநீக்குபார்க்கவும் மிக அழகாக இருக்கின்றன. கேரட் மைசூர்பாக் சாஃப்டா வந்திருக்கும் என்று தோன்றுகிறது. மகளின் முயற்சியும் அருமை.
வெங்கட் வந்திருப்பார் என நினைக்கிறேன். அவரின் கைவண்ணம் என்ன?
உண்மை தான் சார். மைசூர்பாக் பக்குவம் தவறி சாப்ட்டாக வந்துவிட்டது! கேரட்டை குறைத்திருக்கணும் என்று நினைக்கிறேன். :) பரவாயில்லை! ஏலக்காய் எசன்ஸ் சேர்த்ததால் சுவையும் மணமும் ஜோர்.
நீக்கு//வெங்கட் வந்திருப்பார் என நினைக்கிறேன்// விடுமுறை கிடைக்காததால் அவர் வரவில்லை! எங்களுக்கு பழகி விட்டது...:)
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
சிறப்பு
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆதி ஆஹா!! அத்தனையும் சூப்பரோ சூப்பர் போங்க உங்க தீபாவளி சீரீஸ்!!!!
பதிலளிநீக்குஎல்லாமே அருமையா வந்திருக்கு. கேரட் மைசூர் பா ஆஹா நானும் இது செய்ததுண்டு...அது போல பீட் ரூட் போட்டும். தனிச்சுவை. அப்புறம் மில்க் பௌடர் போட்டு, ஹார்லிக்ஸ் போட்டு, கோக்கோ போட்டு!!
அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் போல இருக்கு ஆனா ஸ்வீட்டை கண்ணால கண்டு சமாதானப்படுத்திக்கிறேன். மிக்ஸர் வாவ்!
அடி பொளி! ஆதி!
கீதா
பதிவு குறித்த தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. பூஸ்ட், ஹார்லிக்ஸ், கோக்கோ போட்டா!! இனிப்பகங்களில் தான் சுவைத்திருக்கிறேன். அடுத்த முறை முயற்சி செய்து விடுகிறேன்...:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
ஆதி நானும் அப்படித்தான் புதுசு புதுசா முயற்சி செய்வதில் ரொம்ப விருப்பம் உண்டு. கொத்தமல்லி, புதினா சார் எடுத்து விட்டும் தேன்குழல் செய்ததுண்டு. மகனுக்காக பச்சை, ஆரஞ்சு சிவப்பு என்று பீட் ரூட், கேரட் நல்லா னைஸா அரைச்சுச் சேர்த்து, செய்ததுண்டு. இப்பலாம் ரொம்பக் குறைவாகிடுச்சு. டயட் என்பதால்.
பதிலளிநீக்குஉங்கள் கைவண்ணம் பார்த்து என் கை துறு துறு என்கிறது....செய்யலாமான்னு...,
ரோஷ்ணியின் கோலம் சூப்பர்!! பாராட்டுகள். உங்களுக்கும் பாராட்டுகள் இத்தனையும் செய்து அசத்தியய்துக்கு!
கீதா
புது முயற்சிகள் முன்பெல்லாம் நிறைய செய்ததுண்டு...:) இப்போது குறைந்து விட்டது..:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
பிள்ளை பெத்தாள் மருந்து - ஆமாம் தீபாவளி லேகியம் நான் ஒரு நாட்டு மருந்து க்டையில் அறிந்து கொண்டு அளவுகளைக் குறித்துக் கொண்டு அதன்படி அவரையே தரச் சொல்லி அப்படிச் செய்வதுண்டு. ஏல அரிசி திப்பிலி, அதிமதுரம் சித்தரத்தை எல்லாம் போட்டு...
பதிலளிநீக்குகீதா
நானும் கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி எல்லாமும் சேர்த்து செய்திருக்கிறேன். இப்போது கைவசம் இருப்பதை வைத்து செய்தேன். ஒருமுறை மாத இதழ் ஒன்றில் வந்திருந்ததை கத்தரித்து வைத்திருந்தேன். அதை பார்த்து தான் செய்வேன். 21 பொருட்கள் சேர்த்த லேகியம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
பிள்ளை பெத்தாள் மருந்து, அல்வாவுக்குப் பதிலாக, அல்லது அளவாகச் சாப்பிட்டால் இரண்டு மடங்கு பலன். ஆம். அம்மாக்கள் மக்களுக்கு இது போல் கற்றுக் கொடுப்பது இக்காலத்தில் மிக மிக அவசியம். இல்லையேல் எல்லாம் நெட் வழி தெரிந்து உடலையும் மனதையும் கெடுத்துவிடுவார்கள் புது தலைமுறையினர்.
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆமாம் சார். இன்றைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
THE SECRET TO LIVING WELL AND LONGER IS EAT HALF, WALK DOUBLE, LAUGH TRIPLE AND LOVE WITHOUT MEASURE.//
பதிலளிநீக்குஅருமை.
துளசிதரன்
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
நீக்குதீபாவளி பலகாரங்களை முகநூலில் கண்டு ரசித்தேன் இங்கும் கண்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குரோஷ்ணி செய்த சாக்லேட் பர்ஃபி! அருமை. தீபாவளி லேகியம் அருமை.
பதிவு குறித்த தங்களின் கருத்துகள் கண்டு மகிழ்ந்தேன் அம்மா. நன்றிகள்.
நீக்குநீங்கள் சொல்லியிருப்பது சரிதான். நாம் செய்தால்தான், நம் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்ற ஆசை வரும். எல்லா பட்சணங்களும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களின் கருத்துகள் கண்டு மகிழ்ந்தேன் பானு ஜி. நன்றிகள்.
நீக்குவிதவிதமாக பலகாரங்கள் செய்து அசத்தி விட்டீர்கள். முகநூலிலும் கவனித்தேன். கறிவேப்பிலை தேன்குழல் தில்லிக்குச் சென்று சேர்ந்த விவரம் அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குசாக்லேட் பர்பி, அழகிய ரங்கோலி ஆகியவற்றிற்கு மகளுக்குப் பாராட்டுகள்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிவு குறித்த தங்களின் கருத்துகள் கண்டு மகிழ்ந்தேன். அன்பு நன்றிகள்.
நீக்குபல்சுவையான பலகாரங்களுடன் தீபாவளி கொண்டாட்டம் அருமை.
பதிலளிநீக்குமகளின் கைவண்ணங்கள் சிறப்பு வாழ்த்துகள்.
பதிவு குறித்த தங்களின் கருத்துகள் கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள்.
நீக்குஅழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குதாமதமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிவு குறித்த தங்களின் கருத்துகள் கண்டு மகிழ்ந்தேன் சார். நன்றிகள்.
நீக்கு