அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
PATIENCE AND SILENCE ARE TWO POWERFUL ENERGIES. PATIENCE MAKES YOU MENTALLY STRONG. SILENCE MAKES YOU EMOTIONALLY STRONG.
******
FORTY PLUS - 6 நவம்பர் 2023:
பொங்கலுக்கு என்ன பருப்பு போடணும்னு சட்டுனு confuse ஆகறது! பயத்தம்பருப்பு தானே??
அம்மா! நீ தண்ணி பாட்டில மூடறதே இல்ல!
ஃப்ரிட்ஜ் கிட்ட எதுக்கு வந்தேன்னு தெரியலையே!!!?
காலைல லெமன் ஹனி குடிக்கிறதுக்காக லெமன எடுத்து சமையல் மேடை மேல வெச்சேன்! அப்புறம் குடிச்சிட்டு பார்த்தா லெமன் அப்படியே இருக்கு!!!?
கோவில்ல தீர்த்தம் வாங்கிக்க கைய நீட்டும் போது சட்டுனு confuse ஆகறது! 'அம்மா தாயே'ன்னு சொல்ற மாதிரி ரெண்டு கையையும் நீட்டறேன்!!?
முகத்துக்கு சோப்பு போட்டேனா! இல்லையா! குளிச்சுட்டு வந்ததும் ஞாபகம்!!?
சாம்பாருக்கு பொடி கொஞ்சமா போட்டுட்டு தேங்காயோடு கொஞ்சமா மிளகாயும் மல்லியும் வறுத்து அரைச்சு விட்டுடலாம்னு நினைச்சுட்டு கடைசில வெறும் தேங்காயை மட்டும் அரைத்து சேர்த்திருக்கிறேன்!!
இப்படி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விஷயத்தில் குழப்பம் வருகிறது! நிறைய மறதி வந்துள்ளது! எரிச்சலும், கோபமும் வேறு வருகிறது!
இதெல்லாம் 40+ ன் அறிகுறிகளா?? இல்லை பொதுவாகவே எல்லோருக்கும் வருகிறதா?
&*&*&*&**&*&*
இரைச்சல் - 7 நவம்பர் 2023:
வெளியே தான் இரைச்சல் என்றால், உள்ளேயோ அதை விட பெரும் இரைச்சல்! விதவிதமான சப்தங்கள்! அதை ரசிக்கவும் முடியவில்லை! விலக்கி வைக்கவும் முடியவில்லை! பெரும் அவஸ்தையாக இருந்தது!
ஒருவழியாக மனதை ஒருமுகப்படுத்தி இறைசிந்தனையில் ஈடுபடுத்தி பின் அதிலும் முழுமையாக இறங்க முடியாமல் இதிலும் அதிலுமாக உலாத்திக் கொண்டு அன்று நேரங்களை கடத்த வேண்டியதாக இருந்தது!
பொதுவாக தொடர் வேலைகள் நம்மை நெருக்கித் தள்ளும் போது கொஞ்ச நேரம் கைய கால நீட்டி அப்பாடான்னு இருக்க மாட்டோமா! என்று தோன்றும்! அதுவே அசையாமல் கொஞ்ச நேரம் அப்படியே இருங்க! என்று ஒருவர் சொல்லும் போது அந்த நிலையை மிகவும் கடினமாக கடத்தித் தள்ள வேண்டியதாக ஏன் இருக்கிறது??
சில நாட்களுக்கு முன் செய்து கொண்ட மருத்துவ பரிசோதனையின் போது தோன்றிய சிந்தனை இது..🙂
நம் மனதும் உடலும் கூட இப்படித்தான்! குதிரைக்கு கடிவாளம் போடுவதைப் போல இரண்டையும் கடிவாளமிட்டு தான் கட்டுப்படுத்த வேண்டும்! நிலை கொள்ளாமல் குதிரை போன்ற வேகத்தில் பயணிக்கும் மனதை கடிவாளமிட்டு அதாவது ஒருமுகப்படுத்த வேண்டும்!
நேற்றைய பொழுதில் நான் எழுதி பகிர்ந்து கொண்ட பதிவுக்கு உங்கள் அன்பான கருத்துகளால் என்னை வழிநடத்திய, உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கூடிய விரைவில் இந்த நிலையை எளிதாகக் கடந்து விடுவேன் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பின் குறிப்பு: எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…
ஆதி, 40 ன் அறிகுறிகள்- எரிச்சல் கோபம். ஒன்றும் பிரச்சனை இல்லை. அமைதியாக அமர்ந்து மூச்சுப்பயிற்சி செய்ங்க. ஏற்கனவே தெரியும் என்றால். இல்லைனா கற்றுக் கொண்டு செய்ங்க. இது நமக்கு ஹார்மோனல் மாற்றங்களினால் வரும் ஒன்று. சரியாகிவிடும் கவலைப்படாதீங்க. மறதிக்கும் சேர்த்து சொல்கிறேன் இதை. மறதி அடுத்த ஸ்டேஜ்தான். ஆனால் அதை மறதி எனமாட்டேன். நம் மனம் வேறு சிந்தனைகள்கள் ஆக்ரமிக்கப்பட்டால் இப்படி ஆகும். மூச்சுப்பயிற்சி தியானம் நல்ல பயிற்சி, ஆதி
பதிலளிநீக்குகீதா
ஆதி, ஏதாவது உடற்பயிற்சி, யோகாசனங்கள் கறறுக் கொண்டு செய்ங்க. தினமும் அதற்காக ஒரு அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் ஒதுக்கினால் நல்ல மாற்றங்கள் வரும். இது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் ஒன்று.
பதிலளிநீக்குபொதுவாகவே நம் சமூகத்தில் உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவை, குடும்பத்திலும் கூட பெண்களுக்கு ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் நாம் அதை மேற்கொண்டால் நல்லது.
முயற்சி செய்து பாருங்க ஆதி. எல்லாம் விரைவில் சரியாகிவிடும். இந்த காலகட்டம் இப்படித்தான் இதைக் கடந்ததும் எல்லாம் சரியாகிவிடும்.
கீதா
குமுதத்தில் முன்னர் 'சஞ்சீவியின் சந்தேகங்கள்' னு ஒரு ஜோக் தொடர் வரும் பார்த்திருக்கிறீர்களோ?
பதிலளிநீக்குஉடல் அயர்வுறும்போது மனமும், மனம் அயர்வுறும்போது உடலும் செயலிழந்துபோய் தப்புத்தப்பாய் நடக்கின்றன!
பதிலளிநீக்கு40 ஐ கடந்த அனுபவ சாலியான கீதா அம்மையார் சொல்வதுபோல் முயற்சி செய்து பாருங்கள், எனக்கு இன்னும் வயசு பத்தாது இந்த விஷயத்தில் அறிவுரை சொல்ல. எனினும் இந்த நிலையிலிருந்து நீங்கள் சீக்கிரம் விடுபட என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகோ.
சரிதான் இதுவும் கடந்து போகும்
பதிலளிநீக்குஃப்ரிட்ஜ் கிட்ட எதுக்கு வந்தேன்னு தெரியலையே என்று விழிப்பது , கையில் வைத்த பொருளை எங்கோ வைத்து விட்டு தேடுவது இது எல்லாம் சகஜம். வேறு சிந்தனைகள் .
பதிலளிநீக்குஅடுத்தவேலையை பற்றிய சிந்தனைகள் மனதில் ஓடி கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.
வேலைகளில் கொஞ்சம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாழ்க வையகம்!..
இதுவும் கடந்து போகும்.
பதிலளிநீக்குஅவசரமும் ,பதட்டமும் , மனம் வேறு சிந்தனைகளில் இருந்தாலும் மறதி வரும்.
அமைதியாக இருப்பதும் மூச்சுப் பயிற்சியும் சில நிமிட தியானமும் கை கொடுக்கும்.
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு