வெள்ளி, 15 டிசம்பர், 2023

கெமிஸ்ட்ரி… - சிறுகதை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட வயித்துப் பொழப்பு - சிறுகதை பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



******




நிவி! இந்த கெமிஸ்ட்ரி  கெமிஸ்ட்ரின்னு ஏதோ சொல்றாங்களே! அத பத்தி உனக்கு ஏதாச்சும் நாலேஜ் இருக்காடா??


மடிக்கணினியில் தன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த நிவினிடம் இந்தக் கேள்வியை கேட்டாள் கவிதா!


சட்டென்று அவளை பார்த்த நிவின் அவளிடம்…அதென்ன கவி! அப்படி ஒரு கேள்விய கேட்டுட்ட??


அதுக்கு ஏன்டா இப்படி ஜெர்க் ஆகற??


இல்ல! இந்த ஃபிசிக்ஸ் கெமிஸ்ட்ரி எல்லாம் படிச்சு தானே ஸ்கூல முடிச்சோம்! ஏன் நீ அதெல்லாம் படிக்காமயே வந்துட்டியா என்ன??


அட! அதில்லடா! இந்த  Couplesக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி இருக்குமாம்ல!! அத பத்தி கேட்டா ஒருநிமிஷம் என்னையே படிக்காத தற்குறின்னு சொல்லிட்டியே!!


ஹா..ஹா..ஹா! நீ அதை பத்தி கேட்டியா??


ஆமா.. நீ தான் இப்ப புரிஞ்சுக்காம பேசற!…எனக்கு தான் நீ ஸ்கூல் காலேஜ்லாம் படிக்காம ஏமாத்திட்டியோன்னு தோணுது ..:)) உன்ன எப்படி ஆஃபீஸ்ல வேலைக்கு எடுத்திட்டாங்கன்னு தெரியலையே!?!?


அட!! அதில்ல கவி! சும்மா உன்ன கொஞ்ச நேரம் கலாட்டா பண்ணி பார்க்கலாம்னு தான்…:))


சரி! இப்ப உனக்கு என்ன தெரியணும் சொல்லு?? ஹிஸ்ட்ரின்னா என்னன்னு தெரியணும்! அதானே!


அதைக் கேட்டதும் கோபத்தின் உச்சிக்கு சென்றாள் கவி…. !!


ஆமா! உங்க முன்னோர்லாம் இப்ப எந்த மரத்துல ஏறிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்!!


என்னது!!! என்னோட முன்னோர்லாம் மரத்துல ஏறிட்டு இருக்காங்களா?? என்ன கவி சொல்ற!?!?


ஏன்டா! இங்க ஒரு மனுஷி கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு கதறிட்டு இருக்கேனே! உன் காதுல விழுதா இல்லையா??


ஒண்ணு சொல்வாங்களே! விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்னாங்களாம்! அதுமாதிரி தான் இருக்கு நீ சொல்றது!!


கோபப்படாத கவி! ஏதோ Tongue slipஆகி கெமிஸ்ட்ரிய ஹிஸ்ட்ரின்னு சொல்லிட்டேன்! அதுக்காக என் குடும்பத்தையே மரத்துல ஏத்தி விட்டுட்ட பார்த்தியா!?!?


அது கிடக்குடா! ஒரு ஃப்ளோல அப்படி சொல்லிட்டேன்! கோபிச்சுக்காத…:) அதெல்லாம் என்னோட நிவி பெரிசா எடுத்துக்க மாட்டான்னு தெரியும்…!!


சரி! இப்ப உனக்கு புரிஞ்சிடுச்சுல்ல! சொல்லு பார்க்கலாம்! என்று சொல்லி ட்ராக்கை மாற்றினாள் கவி!!


அதுவா! கெமிஸ்ட்ரில நாம என்ன படிச்சிருக்கோம்! கெமிக்கல்ஸ் ரியாக்ட் ஆகறத பத்தி படிச்சிருக்கோமா??!!


யப்பா சாமி! ஆணியே…….வேணாம்! நா போய் வேற வேலைய பார்க்கிறேன்! உன்கூட பேசினா எனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!!?


இரு கவி! முழுசா சொல்றதுக்குள்ள கிளம்பினா எப்படி?? நம்ம ரெண்டு பேருக்குள்ள கூட கெமிஸ்ட்ரி இருக்குதுன்னு சொல்ல வந்தா…!!


என்னடா சொல்ற! நமக்குள்ள கெமிஸ்ட்ரி இருக்குதா!!


வா! இப்படி பக்கத்துல உட்காரு! அப்புறம் சொல்றேன்!


அதாவது நான் எது சொன்னாலும் நீ ரியாக்ட் ஆகற இல்லையா!! எம் மேல கோபம் வந்தாலும் அட்ஜஸ் பண்ணி போற இல்லையா! அது தான் கெமிஸ்ட்ரி!!!


அதை கேட்டதும் நிவியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே புன்னகையுடன் தலைகுனிந்தாள் கவி!


அமிலமும் அங்கு அமிழ்தானது!!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

8 கருத்துகள்:

  1. ப்ராக்டிகலாக புரிய வைத்து விட்டார் போலும்.    சின்னஞ்சிறு கதையானாலும் இயல்பு.  இது போல நான் அலுவலகத்தில் ஒருமுறை பேசியதுண்டு.  பேசி புரிய வைத்ததுண்டு.  ஆரம்ப காலங்களில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இந்த வார்த்தை சமீபகால trending!!! இயல்பாய் செல்லும் கதை உரையாடல்கள் யதார்த்தம். வாசித்து வரும் போதே நிவினின் பதில், நம் மனதில் தோன்றும் பதிலாக இருக்கும் என்று நினைக்க அதே....ஆமாம் இந்தப் புரிதல்தான் இந்தச் சொல்.

    அதற்கு ஏற்ற இன்றைய வாசகம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. கதை மிக அருமை ஆதி.சின்னசிறு கதை சொல்லவேண்டியதை அழகாய் சொன்ன கதை, சாய்ந்து கொள்ள தோள் அமைவது எல்லோருக்கும் வாய்க்காது, கிடைத்து விட்டால் அதைவிட வேறு ஒன்று வேண்டாம்.
    படமும் மிக பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....