இந்த வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஒன்றில் திருச்சியிலிருந்து கொடைக்கானல் வரை ஒரு நாள் பயணமாய் சென்று வந்தோம். அந்த பயணத்தில் எடுத்த சில புகைப்படங்களை இரண்டு நாட்களாக முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன். முகப்புத்தகத்தில் பார்க்காத மற்ற நண்பர்களுக்காக, இந்த ஞாயிறில் இங்கேயும் ஒரு புகைப்படத் தொகுப்பாக….
வானம் காட்டும் வர்ண ஜாலம்.....
திருச்சியிலிருந்து கொடைக்கானல் பயணிக்கும்போது
நெடுஞ்சாலையில் எடுத்த படம்....
எந்த அசோகர் நட்டு வைத்த மரங்களோ....
சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கும்
மரங்கள்.....
இச்சாலையில் 50 கிலோ மீட்டர் பயணித்தால் குளிர் அடிக்கும்
கொடைக்கானல்.... வாங்க ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்!
எத்தனை எத்தனை மரங்கள்.....
அத்தனைக்கும் தண்ணீர் கொடுத்து எனக்கு மாளலை!
நீயும் கொஞ்சம் உதவி செய்யேன்...
கேட்டுக்கொண்ட அருவிக்கு
ஓடோடி வந்து உதவி செய்தது....
சோவெனப் பொழிந்து
மேகக் கூட்டங்களில் ஒளிந்து கொண்டிருந்த மழை....
”நீங்கள் மட்டும் தான் நடை பழகுவீர்களா?” என்று எங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நடந்த மேகக்
குழந்தைகள்....
உன் மெல்லிதழில் முத்தமிட ஆசை....
நீயும் கொஞ்சம் நெருங்கி வாயேன்....
பூவின் இதழிடம் சொல்கிறதோ?
ஷ்ஷ்ஷ்..... குழந்தை தூங்கறான்.....
“க்ளிக்” சத்தம் கேட்டுச்சு....
தொலைச்சுப்புடுவேன்!
சொல்லாமல் பார்வையாலே சொல்லும் அம்மா.....
”எவ்வளவு முட்டினாலும் இந்த தூண் பாறைகள் வீழாதோ?” என்று கேட்கிறதோ இந்த மேகக்கூட்டம்.....
எதையும் சாப்பிடும் முன்னர் கொஞ்சம் சோதனை செய்து சாப்பிடுவது தான்
நல்லது..... தோ பாருங்க!
நான் சொல்றத சொல்லிட்டேன்! அப்புறம் உங்க இஷ்டம்!
கொடைக்கானல் ஏரி - மேலிருந்து பார்த்தால் நட்சத்திர வடிவில் இருக்கும் எனக்
கேள்வி.....
Lake View
Point-ல் இருந்து பார்த்தபோது
நட்சத்திரத்தின் சில முனைகள் மட்டுமே தெரிந்தது... இன்னும் உயரே போய்ப் பார்க்க
வேண்டுமோ?
”இந்த மனிதர்களின் தொல்லை தாங்க முடியவில்லையே.... நிம்மதியா
இருக்க விட மாட்டேங்கறாங்க!” என்று ஒரு மரத்தின் உச்சாணியில் அமர்ந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று. Close
up Shot படத்தின் ஒரு மூலையில்......
பூ பூக்கும் ஓசை....
அதை கேட்கத்தான் ஆசை....
என்று பூக்களின் அருகிலே அமர்ந்து கொண்டதோ இந்த ஈ....
பூவே உந்தன் உன் பெயர் என்னவோ?
யாரும் சொல்வதற்கு முன் நீயே சொல்லி விடேன்....
ரோசாப் பூ... சின்ன ரோசாப் பூ.....
”என்னைப் படம் பிடிக்கவா இவ்வளவு
தூரம் வந்தீங்க?”
என்னிடம் கேள்வி கேட்டதோ இப்பறவை....
என்ன நண்பர்களே, இந்த வார புகைப்படத் தொகுப்பினை ரசித்தீர்களா? கொடைக்கானல் பயண அனுபவங்கள் பிறிதொரு
சமயத்தில் பதிவாக வந்தாலும் வரலாம் – உங்களுக்கு விருப்பம் இருப்பின்!
மீண்டும் சந்திப்போம்……
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…….


