திங்கள், 18 ஜனவரி, 2010
எங்கே போகிறோம்?
"நீங்கள் ஒரு வேட்பாளர் ஆக வேண்டுமா? அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்குத் தேவைப்படும் ஒரே ஒரு தகுதி, நீங்கள் ஒரு முறையாவது சிறை சென்றிருக்க வேண்டும். அதற்காக சிறை அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வந்தால் போதும். கண்டிப்பாக உங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் உண்டு."
பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் பீகார் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் ஆவதற்கு இதையே ஒரு தகுதியாக அறிவித்துள்ளார் திரு லாலு பிரசாத் யாதவ். நல்ல வேளை, கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை அடைந்தவர்களுக்குத்தான் தேர்தலில் நிற்க சீட்டு என்று சொல்லவில்லை.
ஏற்கனவே அரசியல் ஒரு சாக்கடை என்று நிரூபிக்க ஏகப்பட்ட Accused அரசியல்வாதிகள் இருக்கும் போது இப்படி ஒரு அறிவிப்பு தேவையில்லை. அவர்கள் எல்லோரும் அளிக்கும் ஒரே சமாளிப்பு - "குற்றங்கள் நிருபிக்கப் படாத வரை நாங்கள் குற்றவாளிகள் அல்ல!" என்பது தான்.
வடக்கில் இது போன்ற புதிய "திட்டங்கள்" வெளி வந்து கொண்டு இருக்கும் போது, தெற்கும் தாழ்ந்து விடக்கூடாது என்பதாலேயோ என்னவோ, முன்னாள் பிரதம மந்திரி திரு தேவ கௌடா, கர்நாடக முதல் அமைச்சரைப் பற்றிக் கன்னாபின்னாவென திட்டி இருக்கிறார். பிறகு மற்ற எல்லா அரசியல்வாதிகளைப் போலவே இவரும் "நான் ஏதோ கோபத்தில் சொல்லி விட்டேன்" என்று ஒரு அசிங்கமான சமாளிப்பு நாடகத்தை நடத்துகிறார்.
இப்படியெல்லாம் நமது நாட்டில் அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்றுதான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதிவிட்டுப் போய்விட்டாரோ?
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
Labels:
அரசியல்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ..
பதிலளிநீக்குஅப்பு!கவர்னர் ஆவதற்கு என்ன தகுதி என்று கேட்டுச் சொல்லுங்கப்பு. ஓய்வு பெற்ற பின்பு எப்படியும் கவர்னர் ஆகிடணுமப்பு!
பதிலளிநீக்குiya
பதிலளிநீக்குமுடியல.. டரியல் தாங்கல..
பதிலளிநீக்குஇவர்களுக்காக புதுக்குறளை நாம் எழுதுவோமே ."யாகாவராயினும் நாகாக்க , காவாக்கால், முதல் மந்திரி ஆக்கப்படுவர் நன்மக்களால்." என்று.! இது எப்படி இருக்கு மச்சி.??
பதிலளிநீக்குமந்தவெளி நடராஜன்.