இந்த வாரம் முதல் தலைநகரில் பார்க்க வேண்டிய ஒரு இடம், சாப்பிட ஒரு உணவு வகை, அறிந்து கொள்ள ஒரு ஹிந்தி சொல் என வெரைட்டியாக கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். சென்ற மூன்று பகுதிகள் பெற்ற நல்ல வரவேற்பை போலவே வரும் பகுதிகளும் பெறும் என்று நம்புகிறேன்.
பார்க்க வேண்டிய ஒரு இடம்: தில்லியின் நேரு பிளேஸ் பகுதியில் அமைந்துள்ளது "The Bahai Mashriqul Adhkar". Lotus Temple என்ற பெயரில் இது மிகப் பிரபலமானது. தாமரை வடிவில் அமைக்கப்பட்ட இந்த அழகிய பிரார்த்தனைக் கூடம் 24.12.1986 அன்று திறக்கப்பட்டது.. நவீன கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் இது கனடா நகரின் Mr. Fariburz Sabha என்கிற கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. இதனை கட்ட ஆறு வருடம் எட்டு மாதம் ஆனது. இருபதாம் நூற்றாண்டின் ”தாஜ் மஹால்” என்று அழைக்கப்படும் இந்த கட்டிடத்தை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் எல்&டி நிறுவனத்தின் ஈ.சிசி. குழுமம் கட்டியது. கட்டுவதற்குத் தேவையான மார்பிள் கற்கள் க்ரீஸ் நகரத்திலிருந்து இத்தாலி நகருக்கு அனுப்பப்பட்டு அங்கே தேவையான அளவுகளில் வெட்டி பிறகு தில்லிக்கு அனுப்பப்பட்டது. வாரத்தின் திங்கள் கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இந்த பிரார்த்தனைக் கூடம் தில்லிக்கு சுற்றுலா வரும் எல்லோராலும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
சாப்பிட வாங்க: தில்லியில் எந்த நடைபாதையானாலும் அதில் கண்டிப்பாக ஒரு “கோல்-கப்பா” கடை இல்லாமல் இருக்காது. தமிழ்நாட்டில் கூட இப்போதெல்லாம் பானி-பூரி எனப்படும் இந்த “கோல்-கப்பா” கிடைக்கிறது என்றாலும் இங்கே கிடைப்பதைப் போல் இருக்காது. நம்ம ஊரு மசால் தோசையை ஒரு சர்தார் செய்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். அதிலும் இங்கு கோதுமை, மைதா, மக்காசோள மாவு போன்றவற்றில் செய்யப்படும் மூன்று நான்கு விதமான கோல் கப்பா கிடைக்கும். ஒரு கோல் கப்பாவை எடுத்து அதன் நடுவில் ஒரு ஓட்டைப்போட்டு அதில் புளித்தண்ணீர் விட்டு கொடுத்துக்கொண்டே இருக்க நாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். அதிலும் இங்குள்ள பெண்கள் வெளியே சென்றால் கோல்-கப்பா சாப்பிடாமல் வீடு திரும்புவதே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரசித்தி பெற்றது.. சாப்பிட்டுவிட்டு கடைசியில் ஒன்று-இரண்டு தொன்னை அந்த புளித்தண்ணீரையும் குடித்துவிட்டு சப்புக்கொட்டிக் கொண்டே வரும் அவர்கள் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். நீங்கள் சாப்பிடும் எண்ணிக்கையை பொருத்து கடைக்காரரிடம் காசு கொடுத்துவிட்டு வர வேண்டியது தான்.
வாரம் ஒரு ஹிந்தி சொல்: அனார் – மாதுளம்பழத்தை ஹிந்தியில் "அனார்" என்று சொல்கிறார்கள். தில்லியில் இது நிறைய கிடைக்கிறது. ஒரு கிலோ மாதுளை சீசனை பொருத்து ரூபாய் 20 முதல் 60 வரை விற்கப்படுகிறது
இன்னும் வரும்…

இந்த பஹாய் கோவிலில் ஈ சி சி இழந்த தொகை மிக மிக அதிகம் ஆனால் அதை வைத்து சில நல்ல வேலைகள் கிடைத்தது.இந்த வேலையில் தரக்கட்டுப்பாடு அக்காலத்தில் எங்கும் கேள்விப்படாத முறையில் செய்தார்கள்,ஆதாவது அந்த கூம்பு வடிவத்துக்கு ஏற்ற முறையில் பிளைவுட்டை அடித்த பிறகு அது சரியான கோணத்தில் இருக்கா என்று பார்க்க டெம்பிளேட் வைத்து டார்ச் லைட் மூலம் அடித்து பார்ப்பார்கலாம்.அந்த சமயத்தில் கம்பெனியில் சென்னையில் இருந்த பழம் பெரும் புலிகள் எல்லாம் வந்து இங்கு இருந்து செய்த வேலை இது.இன்னும் பல விஷயங்கள் இருக்கு இந்த கட்டுமானத்தில்.
பதிலளிநீக்குஅப்ப ”அனார் கலின்னா”?
பதிலளிநீக்குகோல் கப்பா.. எங்கேப்பான்னு தேட விட்டுட்டீங்க..
கோல்கப்பே சாப்பிட தனித்திறமை வேணும்:)
பதிலளிநீக்குதொடரை சிறப்பாக கொண்டு செல்கிறீர்கள்..
அருமை. 3 பிரிவா பிரித்ததும் நல்ல யோசனை
பதிலளிநீக்குஅண்ணாத்தே! கோல்கப்பா பத்தி எழுதினது "அடேங்கப்பா"! நாக்குல தண்ணி ஊறுது.
பதிலளிநீக்குபடிக்க படிக்க தலைநகரை பார்க்க ஆவல் அதிகமாகிறது
பதிலளிநீக்கு