வெள்ளி, 30 ஜூலை, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 13

தலை நகரிலிருந்து – பகுதி 12 பதிவு செய்த பிறகு, அடுத்த பகுதிக்கு இத்தனை இடைவெளியா என்று எனக்கே தோணிடுச்சு. அதனால - இதோ அடுத்த பகுதி.



பார்க்க வேண்டிய இடம்: தில்லி ஹாட் – தில்லியில் இரண்டு இடங்களில் ”தில்லி ஹாட்” இருக்குங்க. இப்போ நாம் பார்க்கப் போறது பீதம்புரா டிவி டவர் அருகில் இருக்கிற தில்லி ஹாட் பத்தி. தில்லில முதலில் ஐ.என்.ஏ பகுதியில் தான் தில்லி ஹாட் ஆரம்பிச்சாங்க. இது இரண்டாவது. இங்கே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர்களின் பொருட்களை விற்கிற கடைகள் இருக்கு. அழகான மண் பொம்மைகள், டெரகோட்டா பொம்மைகள், சணலால் செய்யப்பட்ட கைப்பைகள், உடைகள், மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள், கரண்டிகள், வளையல் ஸ்டாண்ட் போன்ற பலவித பொருட்களை இங்கே நீங்கள் வாங்க முடியும்.



இந்த தில்லி ஹாட்டுக்கு தில்லி மெட்ரோ மூலமும் செல்லலாம். தில்ஷாத் கார்டனிலிருந்து ரிட்டாலா வரை செல்லும் ரெட் லைன்ல இருக்கிற நேதாஜி சுபாஷ் பேலஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி வெளியே வந்தால் 50 மீட்டர் தொலைவிலேயே இருக்கு இந்த தில்லி ஹாட். இங்கே எப்போதும் எதாவது ஒரு விழா நடந்துக்கிட்டே இருக்கும். அதனால வருடத்தின் எந்த நாட்களில் போனாலும் எதாவது ஒரு விழாவில் கலந்துக்கலாம். பாரம்பரிய இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவைகளையும் கேட்டு ரசிக்கலாம். இதன் உள்ளே செல்ல பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு இரண்டு ரூபாயும் வாங்குவாங்க. மெட்ரோ ரெயிலில் போன மாதிரியும் ஆச்சு, ஒரு இடத்தினைப் போய்ப் பார்த்த திருப்தியும் கிடைக்கும்.



சாப்பிட வாங்க: இந்த சீசன்ல எங்க பார்த்தீங்கன்னாலும் மக்காச்சோளம் [ஹிந்தியில் இதன் பெயர் புட்டா (Bhutta)] வைச்சு தணல்ல சுட்டுத் தருவாங்க. மக்காச்சோளத்தின் அளவினைப் பொருத்து அதன் விலை இருக்கும். விக்கறவங்ககிட்ட இருக்கிற சோளத்தில உங்களுக்குப் பிடிச்சத எடுத்துக் கொடுத்தீங்கன்னா, அதை தணலில் சுட்டு, அரை எலுமிச்சம்பழத்தை மசாலா பொடில தொட்டு சோளத்தில அழுத்தி எல்லா பக்கமும் தடவிக் கொடுப்பாங்க. "வாவ் என்ன சுவை!"- ன்னு சொல்லுவீங்க. என்ன ஒரு சின்ன பிரச்சனைன்னா சோளம் சாப்பிடும்போது நிறைய பேருக்கு பல் இடுக்குல மாட்டிக்கும்.

இந்த வார ஹிந்தி: சென்ற பகுதியில் சில காய்கறிகளின் ஹிந்தி பெயர்கள் பார்த்தோம். இந்த வாரம் இன்னும் சில – தக்காளி – டமாட்டர், பீட்ரூட் – சுக்கந்தர் [CHUKANDAR], முட்டைக்கோஸ் – பந்த் கோபி [Bandh Gobi] இல்லைன்னா பத்தா கோபி, குடைமிளகாய் – ஷிம்லா மிர்ச், பச்சை பட்டாணி – மட்டர்; கேரட் – காஜர் [Gajar], முள்ளங்கி – மூலி. அடுத்த பகுதியில இன்னும் கொஞ்சம் காய்கறிகளோட ஹிந்தி பெயர்களை பார்க்கலாம்.

இன்னும் வரும்…

14 கருத்துகள்:

  1. 4 வருஷமாச்சு டெல்லி வந்து. இன்னும் டெல்லி ஹாட் போகல. :(

    யோகியோட ஃபேவரிட் புட்டா.

    என்னங்க, ஒரே காய்கறிப் பேரா இருக்கு... வீட்ல நீங்க தான் மார்க்கெட் போறதா... ;)

    பதிலளிநீக்கு
  2. @ LK: நன்றி தோழரே.

    @ விக்னேஷ்வரி: //என்னங்க, ஒரே காய்கறிப் பேரா இருக்கு... வீட்ல நீங்க தான் மார்க்கெட் போறதா... ;)//

    மார்க்கெட் போகாமலே தெரிஞ்சுக்கிட்டது..

    [உண்மையை இப்படி எல்லாம் பொதுமக்கள்கிட்ட போட்டு கொடுக்கக்கூடாது... சரியா...]

    பதிலளிநீக்கு
  3. இடைவெளி விட்டு தொடர்ந்தாலும் (சோளம்) பொரிஞ்சிருச்சு.. இந்த பதிவு சுடச் சுட..

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்குங்க. அப்படியே தில்லி ஹாட்லையோ இல்ல காய்கறி கடையிலையோ நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் சேர்த்துச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சுக்கந் தர் எனக்கு இதுவரை தெரியாது..அந்தா அது குடுங்க அவ்ளோதான் :))

    பிதம்புரா ஹாட் இன்னும் போல..

    மக்காச்சோளம் சூப்பரான ஒரு விசயம்.

    பதிலளிநீக்கு
  7. இங்க வந்த ஹிந்தி கற்று கொள்ளலாம் போல

    பதிலளிநீக்கு
  8. வெங்கட், நீ Pitampura-கூட போவாயா? எங்களுடன் மட்டும் வரமாட்டேன் என்பாயே!!!

    சீனு

    பதிலளிநீக்கு
  9. குடைமிளகாய் – ஷிம்லா மிர்ச்

    அதன் பெயர் “கொடை மிளகாய்” அது கொடைக்கானல் (இங்கே சிம்லா) போன்ற மலை பாங்கான இடத்திலிருந்து வருவதால்

    சீனு

    பதிலளிநீக்கு
  10. //மக்காச்சோளம் [ஹிந்தியில் இதன் பெயர் புட்டா (Bhutta)]//
    //முள்ளங்கி – மூலி//

    ”மூலிதேவி” என்று ஒரு ஆண்ட்டி-யை தெரியும். முள்ளங்கி வயலில் பிறந்ததால் அந்த பெயராம். “புட்டா சிங்” – ன்னு ஏன் பெயர் வச்சாங்கன்னு இப்பதான் புரியுது.

    பதிலளிநீக்கு
  11. @ ரிஷபன்: சுடச்சுட பதிவை ரசித்ததற்கும், தங்களது கருத்தினை தெரியப்படுத்தியதற்கும் நன்றி.

    @ கலாநேசன்: தங்களது வருக்கைக்கும், யோசனைக்கும் நன்றி.

    @அமைதிச்சாரல்: நன்றி.

    @ சசிகுமார்: வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @ முத்துலெட்சுமி: வருகைக்கு நன்றி. ஒரு முறை தில்லி ஹாட் சென்று வாருங்கள். :))

    @ சௌந்தர்: வருகைக்கும், எனது வலைப்பூவை தொடர்ந்ததற்கும் நன்றி. நீங்கள் தான் எனது வலைப்பூவை தொடரும் 50-வது நபர் :))

    @ சீனு: இப்ப கூப்பிடு, பீதம்புரா என்ன, உங்க நோய்டாவுக்குக் கூட வருவேன். :))

    @ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி, இன்னும் ”மூலிதேவி”யை நீங்க மறக்கலைன்னு தெரியுது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....